சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Ebola in America

அமெரிக்காவில் இபோலா

Andre Damon
16 October 2014

Use this version to printSend feedback

உலக சுகாதார அமைப்பு எதை "கேள்விக்கிடமின்றி நவீனகாலத்தின் படுமோசமான பொது மருத்துவ அவசரகால நெருக்கடி" என்று குறிப்பிட்டதோ, அதற்கான திறமையற்ற, அலட்சியமான மற்றும் பொறுப்பற்ற உத்தியோகபூர்வ அமெரிக்க விடையிறுப்பின் குணாம்சத்தை, அமெரிக்காவில் இபோலா வெடிப்பின் ஒவ்வொரு புதிய அபிவிருத்தியும் கூடுதலாக அம்பலப்படுத்தி வருகிறது.

இறந்துபோன இபோலா நோயாளி தோமஸ் எரிக் டன்கனுக்கு சிகிச்சை அளித்துவந்த டெக்சாஸ் பிரிஸ்பைடீரியன் மருத்துவமனையில் இரண்டாவது தாதிக்கும் அந்நோய் தொற்றியிருப்பதாக புதனன்று அமெரிக்க அதிகாரிகள் அறிவித்தனர். அந்நோய் தாக்கி இருந்த நிலையிலேயே, அவர் டல்லாஸிலிருந்து க்ளேவ்லாந்து சென்று திரும்பி வர, இரண்டுமுறை ஒரு பயணிகள் விமானத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன்பின்னர் விமானத்தில் திரும்பி வருகையில் காய்ச்சல் இருப்பதை அவர் அறிவித்தார்.

லைபீரியாவைத் தாயகமாக கொண்ட டன்கனைக் கவனித்து கொள்ளுமாறு நிர்வாகிகளால் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், தங்களின் முகம் மற்றும் கழுத்து பகுதிகள் வெளியில் தெரிந்த நிலையிலேயே தாதியர் வேலை செய்து வந்ததை அமெரிக்காவின் மிகப்பெரிய தாதியர் சங்கமான தேசிய தாதியர் ஐக்கியம் (National Nurses United) செவ்வாயன்று வெளிப்படுத்தியது. போதிய பாதுகாப்பு சாதனங்கள் இல்லாததை ஈடுகட்ட அவர்களின் உடல்பாகங்களை மருத்துவ துணியால் சுற்றிகொள்ளுமாறு அவர்களுக்கு கூறப்பட்டிருந்தது.

தாதியரின் போராட்டங்களுக்கு இடையே, டன்கன் சில மணிநேரங்கள் இதர நோயாளிகளுடன், அவர்களையும் அந்நோய் தாக்கக்கூடிய சாத்தியக்கூறு இருந்த நிலையில், ஒரு பொது காத்திருப்போர் அறையில் விடப்பட்டிருந்தார். அவரது பரிசோதனை முன்மாதிரிகள் பாதுகாப்பற்ற முறையில், ஒட்டுமொத்த அமைப்புமுறையையுமே பாதிக்கும் சாத்தியக்கூறுடன், மருத்துவமனையின் குழாய் அமைப்புமுறையில் கொண்டு செல்லப்பட்டிருந்தது. போதிய பாதுகாப்பு ஆடைகள் இல்லாமல் டன்கனுக்குச் சிகிச்சை வழங்க நிர்பந்திக்கப்பட்டிருந்த தாதியர், பின்னர் ஏனைய நோயாளிகளைப் பார்க்குமாறு, சாத்தியமான அளவில் அவர்களையும் பாதிக்கும் விதத்தில், அவர்களின் வழக்கமான மருத்துவமனை வேலைகளைச் செய்யுமாறு கூறப்பட்டிருந்தனர்.

இபோலா பரவுவதைத் தடுக்கும் அடிப்படை வழிமுறை மீதான இத்தகைய ஆத்திரமூட்டும் மீறல்கள் எல்லாம் எப்போது நடந்ததென்றால், டன்கனுக்கு அந்நோய் தாக்கியிருக்குமென அவர் குடும்ப உறுப்பினர்களது சந்தேகத்தின்பேரில், இரண்டாவது முறையாக அவர் அவசர ஊர்தியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் நடந்திருந்தது.

பாதுகாப்பு செயலர் சக் ஹாகெல் மற்றும் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் சுசன் ரைஸ் உட்பட கேபினெட் அதிகாரிகள் புகைப்படமெடுக்க நின்றதனால் வந்த விமர்சனங்களுக்கும் மற்றும் அதிகரித்துவந்த பொதுமக்கள் கவலைகளுக்கும் ஜனாதிபதி ஒபாமா புதனன்று விடையிறுப்பு காட்டினார். அவர் சுருக்கமான மற்றும் சம்பிரதாயமான அறிக்கை ஒன்றை வெளியிட்டதுடன், பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் தெளிவாக என்ன நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது என்று பத்திரிகைகளிடமிருந்து அவர் எந்த கேள்வியையும் முகங்கொடுக்கவில்லை.

ஒபாமாவோ அல்லது வேறு எந்த அரசாங்க அதிகாரியோ கூறும் எதையும் நம்ப முடியாது. அவர்களின் மேலோங்கிய கவலையே மக்களைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதோ அல்லது அவர்களை தைரியப்படுத்தி வைப்பதோ அல்ல, அந்த பேரிடரில் சம்பந்தப்பட்டுள்ள அவர்களது பொறுப்பை மூடிமறைப்பதே அவர்களின் கவலையாக இருக்கிறது.

மருத்துவமனை மற்றும் அரசாங்க அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களில், மருத்துவத்துறை தொழிலாளர்களே முதலில் அறியப்பட்டிருப்பவர்கள், அவர்கள் வாழ்க்கை பொறுப்பற்ற விதத்தில் ஆபத்திற்குட்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தின் மீது காட்டப்படும் அசட்டைத்தனம், ஒட்டுமொத்தமாக மக்களின் ஆரோக்கியத்தைக் குறித்த ஆளும் வர்க்கத்தின் மனோபாவத்தைத் தொகுத்தளிக்கிறது.

பொது மக்களின் மருத்துவ மற்றும் சமூக நிலைமைகளோடு சம்பந்தப்பட்ட விடயங்களில், அமெரிக்காவில் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு முற்றிலும் எந்த கவலையும் இல்லை என்ற உண்மையை ஒரு அவசரகால நெருக்கடி அம்பலப்படுத்தி இருப்பது இது முதல்முறை அல்ல.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு பிரதான அமெரிக்க நகரம் ஹூரிகேன் கத்ரீனா புயலால் நடைமுறையில் அழிக்கப்பட்ட போதே, கடந்தகாலத்தில் மீண்டும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த ஒரு பிராந்தியத்தில் ஒரு பிரதான வெள்ளப்பெருக்கின் தாக்கத்தை எதிர்கொள்ளவோ அல்லது புதிய ஓர்லென்ஸின் தொழிலாள வர்க்க குடிவாசிகளின் வாழ்க்கையைப் பாதுகாக்கவோ எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதை அது அம்பலப்படுத்தியது. அந்த பேரிடரே வறுமையின் அதிர்ச்சியூட்டும் நிலைமைகளையும், மற்றும் சுமார் 2,000 பேர் உயிரிழப்பதற்கு இட்டுச் சென்ற ஒரு சம்பவத்திற்கு அரசாங்கத்தால் காட்டப்பட்ட மிகவும் காலந்தாழ்ந்த, ஒழுங்கமைப்பற்ற மற்றும் நம்பிக்கையற்ற போதுமான அளவுக்கு இல்லாத விடையிறுப்பை கூர்மையாக வெளிப்படுத்திக் காட்டியது.

வெறும் ஐந்தாண்டுகளுக்குப் பின்னர், ஆழ்கடல் ஹாரிசன் எண்ணெய் அகழ்வாலை வெடித்ததால் உண்டான மெக்சிகோ வளைகுடாவின் பாரிய எண்ணெய் கசிவு மீண்டுமொருமுறை பெருநிறுவனங்களின் அலட்சியம் மற்றும் அரசாங்கம் உடந்தையாய் இருந்ததை அம்பலப்படுத்தியது. அது முற்றிலுமாக மனிதர்களால் உண்டாக்கப்பட்ட பேரிடராகும், அரசு கண்காணிப்பு ஆணையங்களால் உதவி செய்யப்பட்ட BP நிறுவனத்தின் பாகத்தில் இருந்த செலவு-குறைப்பு மற்றும் பாதுகாப்பற்ற நடைமுறைகளின் விளைவாக அது ஏற்பட்டது. அந்த பேரிடருக்கு முதலிடத்தில் பொறுப்பான அந்நிறுவனத்திடமே அதை சுத்திகரிக்கும் நடவடிக்கையும் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே அல்லது அப்போதிருந்து, அமெரிக்கா எங்கிலுமான நகரங்களில் எண்ணிலடங்கா ஆலை வெடிப்புகளும், தீவிபத்துக்களும், நிலக்கரி சுரங்க பேரிடர்களும் மற்றும் தொழிற்சாலை விபத்துக்களும் நடந்துள்ளன.

அமெரிக்க ஆளும் வர்க்கமும் மற்றும் ஒபாமா மாதிரியான அதன் அரசியல் முன்னணி ஆட்களும், அமெரிக்க மக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தொல்லைகளாக காண்கிறார்கள். பெருநிறுவனங்களுக்கு முன்பில்லாத இலாபங்களையும், பணக்காரர்கள் மற்றும் பெரும்-பணக்காரர்களுக்கு முன்பில்லாத அளவுக்கு செல்வசெழிப்பையும் உருவாக்கும் வணிகங்களிலிருந்து திசைதிருப்புகிறார்கள்.

அமெரிக்காவினது சமூக உள்கட்டமைப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் போலவே, மருத்துவத் துறையும் தரங்குறைந்து போயுள்ளது, இது மருந்துநிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் சங்கிலித் தொடர் போன்ற மருத்துவமனைகள் ஆகியவற்றின் தசாப்தகால வரவு-செலவு திட்ட வெட்டுக்கள் மற்றும் இலாப-சுரண்டல்களின் விளைவினால் ஆகும்.

இபோலா வெடிப்பு அமெரிக்காவில் ஏற்படக்கூடுமென்பது தசாப்தங்களாக அறியப்பட்டிருந்த போதினும், அதற்கு போதுமான தயாரிப்பு செய்ய எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. எந்த மருந்தும் உற்பத்திக்குக் கொண்டு வரப்படவில்லை. அதற்கு மாறாக, அதிஅவசர மருத்துவ பிரச்சினைகளைச் சரிசெய்ய தேவைப்பட்ட ஆதாரவளங்களோ யுத்தத்திற்கு மற்றும் அன்னிய நாடுகளை ஆக்கிரமிக்க மற்றும் அமெரிக்க நிதியியல் பிரபுத்துவத்தை முன்பில்லாத அளவுக்கு பிரமாண்டமாக செழிப்பாக்க கொடுக்கப்படும் விலையாக திருப்பிவிடப்பட்டுள்ளன.

இந்த வாரத்தின் தொடக்கத்தில், உலக சுகாதார அமைப்பு இயக்குனர்-ஜெனரல் டாக்டர்-மார்கரெட் சான் ஒரு இபோலா எதிர்ப்பு மருந்து அபிவிருத்தி செய்ய தவறியதை குறித்து விவரிக்கையில், “இலாபத்திற்காக உந்தப்பட்ட ஒரு தொழில்துறை, செலவிட இயலாத சந்தைகளுக்கான பொருட்களில் முதலீடு செய்யாது," என்றார்.

அமெரிக்க தேசிய சுகாதாரத்துறை பயிலகத்தின் தலைவர் டாக்டர் பிரான்சிஸ் கொல்லிஸ் Huffington Postக்கு கூறுகையில், மருத்துவத்துறை ஆராய்ச்சிக்கு பல-பில்லியன் டாலர் வெட்டப்படாமல் இருந்திருந்தால், ஒருவேளை இபோலாவுக்கான எதிர்ப்பு மருந்து ஏற்கனவே இருந்திருக்கக்கூடுமென தெரிவித்தார்.

இந்த பேரிடர்கள் ஏதோவொரு நிர்வாகத்தின் திவால்நிலைமையோ அல்லது தோல்வியையோ மட்டும் அம்பலப்படுத்தவில்லை, மாறாக முதலாளித்துவ இலாபநோக்கு அமைப்புமுறையையே அம்பலப்படுத்திக் காட்டுகிறது. மருத்துவ பராமரிப்பு உட்பட அனைத்து சமூக விவகாரங்களையும் இலாபத்திற்கான பெருநிறுவன உந்துதலுக்கும் மற்றும் ஆளும் மேற்தட்டின் பணப்பித்து பேராசைக்கும் அடிபணிய வைத்திருப்பதென்பது, உலகை போட்டி தேசிய அரசுகளுக்குள் பகுத்தறிவின்றி பிளவுபடுத்தி வைத்திருப்பதுடன் சேர்ந்து, பகுத்தறிவார்ந்த மற்றும் சமூகரீதியில் பயனுள்ள அபிவிருத்தியை மற்றும் உற்பத்தி சக்திகளை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதை சாத்தியமில்லாமல் செய்கிறது. மாறாக, அருவருக்கத்தக்க அளவுக்கு ஒருசிலரின் கரங்களில் செல்வவளம் குவிந்திருப்பது, மக்களது அடிப்படை சமூக சேவைகள் நலிவுற்றிருப்பதுடன் மற்றும் அதிகரித்துவரும் வறுமையுடன் சேர்த்துள்ளது.

ஆபிரிக்காவில் இபோலா தொற்றுநோய் பரவி வருவதை மற்றும் அமெரிக்காவிலும் மற்றும் ஏனைய நாடுகளிலும் அதன் பரவலை தடுக்க ஒரு தீவிர நடவடிக்கைக்குத் தேவைப்படுவது என்னவென்றால்:

* அந்த நெருக்கடிக்கான விடையிறுப்பை பெருநிறுவன-மேலாதிக்கம் செலுத்தும் அரசாங்கங்களின் கரங்களிலிருந்து எடுக்க மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ பராமரிப்புத்துறை தொழில்வல்லுனர்களின் ஒரு சர்வதேச குழுவை ஸ்தாபிப்பது. ஓர் உலகளாவிய நடவடிக்கை திட்டத்தை அபிவிருத்தி செய்யக்கூடிய இந்த குழுவுக்கு, ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை வழங்கவும் மற்றும் அந்நோய் பரவாமல் தடுக்கவும் என்னவெல்லாம் தேவைப்படுகிறதோ—அது பல பில்லியன் டாலர்களாக இருந்தாலும் கூட—அவற்றை வழங்குவது.

* முதல்படியாக இபோலாவை வெற்றி கொள்ள ஒரு இபோலா எதிர்ப்பு மருந்தும் மற்றும் வறுமையோடு தொடர்புபட்ட ஏனைய தொற்று வியாதிகளுக்கான மருந்தும் அனைவருக்கும் கிடைக்குமாறு வேகமாக அபிவிருத்தி செய்ய, மருத்துவ பராமரிப்பு தொழில்துறை, மருந்து நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு பெருநிறுவனங்களின் இலாப நலன்களிலிருந்து முற்றிலும் சுதந்திரமான, அரசு-நிதியுதவி வழங்கப்பட்ட ஆராய்ச்சி வேலைத்திட்டம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

இது வெறுமனே ஒரு விஞ்ஞான பணியல்ல, இதுவொரு அரசியல் பிரச்சினையாகும்.

இபோலா வெடிப்பிலிருந்து மற்றும் அதற்கு முந்தைய பல பேரழிவுகளிலிருந்தும் தகுந்த முடிவுகளை எடுப்பது அவசியமாகும். சுரண்டல் அடிப்படையில் இருக்கும் ஒரு சமூகத்தில் உள்ளார்ந்திருக்கும் ஏனைய அனைத்து சமூக தீமைகளோடும் சேர்ந்து, இபோலா நெருக்கடிக்கு ஒரு பகுத்தறிவான மற்றும் மனிதாபிமான விடையிறுப்பை நடைமுறைப்படுத்துவதற்கு, சமூகத்தை தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சோசலிச அடித்தளங்களின் மீது சமூகத்தை மறுஒழுங்கு செய்ய, தொழிலாள வர்க்கத்தின் ஒரு போராட்டம் அவசியமாகும். மருந்துபொருட்களில் இருந்து இலாபமெடுப்பதை இல்லாதொழிப்பதும் மற்றும் உயர்தரமான மருத்துவ கவனிப்பை ஒரு சமூக உரிமையாக வழங்குவதும் இதில் உள்ளடங்குகிறது.