சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US labor force participation rate hits lowest level since 1978

1978 லிருந்து அமெரிக்க தொழிலாளர் பிரிவு உற்பத்திக்கு பங்களிக்கும் விகிதம் மிகவும் குறைந்திருக்கிறது

By Andre Damon 
4 October 2014

Use this version to printSend feedback

தொழிலாளர் பிரிவினரில் அமெரிக்காவில் உழைக்கும் வயதிலுள்ளோரின் பங்களிப்பு 36 வருடங்களில் குறைவான அளவிற்கு சரிந்துள்ளதாக, தொழிலாளர் துறை வெள்ளியன்று வெளியிட்ட மாதாந்த வேலை வாய்ப்பு அறிக்கை தெரிவிக்கிறது.

பொருளாதாரத்தில் 2,48,000 வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக மதிப்பிடப்பட்ட அதேநேரம் உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதத்திலிருந்து 5.9 சதவீதமாக குறைந்திருக்கும் வேளையில், தலைப்புச்செய்தியாக அறிவிக்கப்படும் மேற்தெரிவித்த எண்ணிக்கைகள் மிக அடிப்படை யதார்த்தம் ஒன்றை மறைக்கிறது. 2008 நிதிய சரிவிற்கு ஆறு ஆண்டுகள் கழித்து, தொழிலாளர் சந்தை தேக்க நிலையிலேயே காணப்படுவதுடன், மேலும் அதிக அளவிலான மக்கள் வேலை தேடுவதற்கான நம்பிக்கையையே கைவிட்டுவிட்டனர்.

ஊதியங்கள் குறைந்து வரும் வேளையில், கடந்த மாதம் தொழிலாளர் பிரிவிலிருந்து கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் வெளியேறியதை வேலைவாய்ப்பு அறிக்கை வெளிப்படுத்தியது. தொழிலாளர் பிரிவில் இல்லாத, உழைக்கும் வயதிலுள்ள மக்களின் மொத்த எண்ணிக்கை 92.5 மில்லியன்களாக புதிய மட்டத்தினை எட்டியிருக்கிறது. இது செப்டம்பர் 2013 ல் இருந்து இரண்டு மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது

வேலை கிடைக்காத காரணத்தால், தொழிலாளர் பிரிவிலிருந்து வெளியேறியிருக்கின்றவிடுபட்ட தொழிலாளர்களை” (பிற காரணங்களுக்காக தொழிலாளர் பிரிவில் இல்லாதவர்களுக்கு மாறாக) பொருளாதார கொள்கைகள் நிறுவனம் கண்காணித்து வருகிறது. அவ்வமைப்பின்படி, விடுபட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 6.32 மில்லியன்களை எட்டியிருக்கிறது. அவர்கள் வேலையில்லாதோர் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டால், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் 5.9 சதவீதத்திற்கு மாறாக, அவ்வெண்ணிக்கை 9.6 சதவீதமாக இருக்கும்.

பொருளாதார கொள்கைகள் நிறுவனத்தின் கணக்கீடுகளில் குறிக்கப்பட்டுள்ளவிடுபட்ட தொழிலாளர்கள் தவிர, 27 வாரங்களுக்கு மேலாக தொழிலாளர் பிரிவில் இல்லாத கிட்டத்தட்ட 3 மில்லியன் பேர் உள்ளனர். இவர்கள் அமெரிக்காவில் உத்தியோகபூர்வமாக வேலையில்லாதவர்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள 9.3 மில்லியன் பேரில் மூன்று பங்கினராக உள்ளனர்.

குறுகிய கால அதாவது ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் குறைவான காலகட்ட வேலையின்மை விகிதம் மந்த நிலைக்கு முன்பிருந்த அளவிற்கே திரும்பியிருக்கிறது. ஆறு மாதங்களுக்கும் மேலாக வேலையின்றி இருக்கும் தொழிலாளர்களுக்கு வேலையின்மையின் எண்ணிக்கை, மிகவும் மாற்றமடையாமல், பெரு மந்தநிலையின் எதிர்மறையான விளைவாக காணப்படுகிறது என Rutgers பல்கலைக்கழகத்தின் சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

நீண்டகால மற்றும் கணக்கிலெடுக்கப்படாத வேலையில்லாதோர் எவ்வளவு நீண்ட காலம் அவர்கள் வேலையின்றி இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களுக்கு வேலைகிடைக்கும் திறன் குறைகிறது, அவர்களுக்கு எந்த சமூக உதவியும் கிடைப்பதில்லை, பத்தில் ஒருவருக்கும் குறைவானவர்களுக்கே மத்திய அரசால் நிதியளிக்கப்படுகின்ற வேலை வாய்ப்பு பயிற்சியோ அல்லது வேலை வாய்ப்பிற்கான உதவியோ கிடைக்கிறது.

அமெரிக்க பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற நிலைத்த பரவலான வேலைவாய்ப்பின்மையுடன் ஊதியங்களின் குறைவும் தேக்கமும் இணைந்து வருகின்றது. செப்டம்பரில் தொழிலாளர்களுக்கான சராசரி மணி நேர ஊதியம் ஒரு சென்ட் குறைந்து, இவ்வருடத்தில் இது வரையில் வெறும் 2 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இதுவும் விலையேற்றத்தால் பெருமளவில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது.

நுகர்வோர் நிதியம் குறித்து கடந்த மாதம் வெளியிடப்பட்ட மத்திய ரிசர்வின் புதிய கணக்கெடுப்பின்படி, 2007 க்கும் 2013 க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஒரு பொதுவான அமெரிக்க குடும்ப வருமானம் 12 சதவீதம் குறைந்திருக்கிறது. நடுத்தர அமெரிக்க குடும்பமானது வருடத்திற்கு 2007 ல் சம்பாதித்ததை விட, தற்போது 6,400 டாலர்கள் குறைவாக ஈட்டுகிறது. இச்சரிவின் 5 சதவீதம் மேற்கூறிய 2010 க்கும் 2013 க்கும் இடைப்பட்டமீட்பு சமயத்தில் ஏற்பட்டது.

செப்டம்பர் மாதம் உத்தியோகபூர்வ வேலை வாய்ப்பு அதிகரிப்பில், சேவைத் துறையில் கவனம் செலுத்தப்பட்டது, அதில் முக்கியமாக குறைந்த ஊதிய தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். தொழில்முறை மற்றும் வணிக சேவைகள் துறையில் தற்காலிக நிறுவனங்களில் பணியாளர்களையும் சேர்த்து, 81,000 வேலைவாய்ப்புகளை அதிகரித்தது, இது மற்ற எந்த துறையையும் விட அதிகம். இதனையடுத்து சில்லறை துறையில் 35,000 வேலைவாய்ப்புகள் சேர்க்கப்பட்டன மேலும், பொழுதுபோக்கு மற்றும் விருந்தோம்பல் துறை 32,000 வேலைவாய்ப்புகளை சேர்த்தது.

வெள்ளியன்று வேலைவாய்ப்பு அறிக்கை மீதான கருத்தில் New York Times, “உத்யோகபூர்வ வேலையின்மை விகிதம் குறைந்தால், கூலிகள் உயரும் என்ற கூலி உயர்வு விகிதத்திற்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் இடையிலான வழக்கமான தொடர்பானது சமீபத்திய வருடங்களில் மொத்தமாக மாறிவிட்டது என்றுபுதிரை விவரிக்க விரும்பியது.

உண்மையில், இது ஒன்றும் அதிக புதிரானதல்ல. உத்யோகபூர்வ வேலையின்மை விகிதமானது- தொழிலாளர் சந்தையின் யதார்த்த நிலையின் ஓர் புறநிலை அளவீடாக இருக்கும் நிலை நின்றிருக்கிறது. இது, தொழிலாளர் பிரிவிலிருந்து வெளியேறியிருக்கின்ற பணியாளர்களின் பரந்த அளவிலானசேமப்படை (reserve army) என்று சொல்லப்படுகிறது. ஆனால் வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடியதாக இருந்திருந்தால், அப்பிரிவினர் மறுபடியும் மீள இணைந்துகொள்ளலாம். இந்த செயல்பாடுகள், பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வூதியமளித்து வெளியேற்றிவிட்டு, எளிதாக வேறு ஆட்களை வைத்துக் கொள்ள முடியும் என்பதால், குறைந்த ஊதியங்கள் மற்றும் மோசமான நிலைமைகளை ஒப்புக்கொள்ள பணியாளர்களைக் கட்டாயப்படுத்துகிறது.

சாதாரண மக்கள் ஆபத்தான பொருளாதார நிலைமைகளை எதிர்கொள்கிற போதிலும், வியாழன் அன்று இல்லினோய் இவான்ஸ்டனில் இருக்கும் வடமேற்கு பல்க்லைக்கழகத்தில், ஜனாதிபதி பாரக் ஒபாமா தனது உரையில் பொருளாதாரமீட்பினை மேம்படுத்தி கூறினார். ”நான் பதவியேற்றபோது இருந்ததை விட, இன்று நமது பொருளாதாரம் வலிமையாக இருக்கிறது என்பது மறுக்கமுடியாதது என்றார். மேலும், ”நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட திறமையான தீர்மானங்களின் விளைவுதான் விபரிக்கப்படும் இந்த திருப்பம் என்றும் கூறினார்.

ஒபாமா குறிப்பிட்டதில் உண்மையான ஒன்று என்றால், அது அவரது கொள்கைகளுக்கும் பொருளாதார நிலைமைக்கும் இடையிலான தொடர்பு மட்டும்தான். சமூக செலவினங்களையும் அரசு ஊழியர்களையும் குறைத்திருக்கிறது. அவரது பதவிக் காலத்தில் 6,68,000 அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒபாமாவின் வெள்ளை மாளிகை தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் ஆதாயங்களைக் குறைக்க நிறுவனங்களை ஊக்கப்படுத்தியிருக்கிறது. வெள்ளை மாளிகை வாகன உற்பத்தியாளர்களுக்கு அரசு உதவி வழங்குவதற்காக ஊதிய குறைப்புகளை ஒரு முன் நிபந்தனையாக்கியது உள்ளிட்டவாகன மறுசீரமைப்புகள் அதில் உள்ளடங்கும்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், மத்திய அரசால் நீட்டிக்கப்பட்ட வேலையின்மை ஊதியத்தை துண்டிப்பதற்கு ஒபாமா தலைமை தாங்கியிருக்கிறார், இதனால் 3 மில்லியன்களுக்கும் அதிகமான நீண்டகால வேலையில்லாத மக்கள் எந்தவித நிதி உதவிகளும் இன்றி பாதிக்கப்பட்டார்கள்.

அமெரிக்க பொருளாதாரத்தின் ஆதிக்கம்செலுத்தும் குணாதிசயங்களான பாரிய நீண்டகால வேலையின்மை, ஊதியங்களை குறைத்தல் மற்றும் அமெரிக்காவில் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு செல்வக்குவிப்பு போன்றவற்றுக்கு இக்கொள்கைகள் பங்களிப்பு செய்துள்ளன.