சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

Sweden mounts military operation to find alleged Russian submarine

ரஷ்ய நீர்மூழ்கிகப்பலாக கருதப்படுவதைக் கண்டறிய ஸ்வீடன் இராணுவ நடவடிக்கையைத் தொடங்குகிறது

By Jordan Shilton
22 October 2014

Use this version to printSend feedback

கடந்த வெள்ளியிலிருந்து ஸ்வீடன் இராணுவமானது, துருப்புகள், கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்களை உட்படுத்தி ஒரு மிகப்பெரிய நடவடிக்கையை நடத்தி வருகிறது. அந்நடவடிக்கை, தலைநகரான ஸ்டாக்ஹோல்முக்கு அருகே பால்டிக் கடலில், இதுவரையில் அறிவிக்கப்படாத "கடலடி அச்சுறுத்தலுக்கு" விடையிறுப்பாக நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

சனிக்கிழமை வாக்கில், 200க்கும் மேற்பட்ட துருப்புகள், உளவு கப்பல்கள், கண்ணிவெடி நிபுணர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அந்நகரிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பகுதியைத் துளைத்தெடுத்தன, அந்த தேடல் ரஷ்யாவினது ஒரு சிறிய-நீர்மூழ்கிக்கப்பலைத் தேடுவதற்காக நடத்தப்பட்டதாக ஊடக செய்திகள் வாதிட்டிருந்தன. இராணுவ தளபதி ஜோனஸ் விக்ஸ்ட்ரோம், பத்திரிகையாளர் கூட்டத்தில் சனியன்று உரையாற்றுகையில், “நேற்று எங்களுக்கு கிடைத்த தகவல் மிகவும் நம்பகரமானதென இன்னமும் நாங்கள் கருதுகிறோம்," என்றார்.

நீர்மூழ்கிக்கப்பலைக் கண்டுபிடித்து, அதை தரைக்குக் கொண்டு வர படைகளைப் பயன்படுத்தவும் அது தயங்கப் போவதில்லையென ஸ்வீடன் இராணுவம் நேற்று எச்சரித்தது. பயணிகள் விமானங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக அத்தேடல் பகுதியில் 900 மீட்டருக்குக் கீழே பறக்கக்கூடாதென எச்சரித்து, திங்களன்று, அப்பகுதியைச் சுற்றிய கடல் மற்றும் வான்வழிபகுதியை இராணுவம் மூடியது. ஆனால் நேற்று, ஐந்து நாட்கள் தீவிர தேடலுக்குப் பின்னர், ஒரு மங்கலான புகைப்படமும், சந்தேகத்திற்குரிய நடவடிக்கையாக கூறப்பட்ட மூன்று காட்சிகளை வெளிப்படுத்திய ஆதாரங்கள் மட்டுமே கண்டறியப்பட்டிருந்தன.

ஒரு ரஷ்ய நீர்மூழ்கிக்கப்பலின் பிரசன்னம் கண்டுபிடிக்கப்பட்டதா அல்லது முற்றுகையிடப்பட்டதா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் கூறப்படும் அச்சம்பவம், ஸ்வீடன் பாகத்தில் மட்டுமல்லாது, அப்பகுதியில் ஒரு பரந்த இராணுவவாதத்தின் விரிவாக்கத்தை நியாயப்படுத்த சுரண்டப்பட்டு வருகிறது என்பது மட்டும் கேள்விக்கிடமின்றி உள்ளது.

லாட்வியன் வெளியுறவுத்துறை மந்திரி எட்கார்ஸ் ரின்கெவிக்ஸ் திங்களன்று ட்வீட்டரில் எழுதினார், “ஸ்வீடன் கடலெல்லை சம்பவங்களை நெருக்கமாக பின்தொடர்ந்து பார்த்தால், அது ஒட்டுமொத்த பால்டிக் கடல் பிராந்திய பாதுகாப்பினது திருப்புமுனையாக இருக்குமென தெரிகிறது".

எஸ்தோனிய அரசாங்கம் அதன் கடலெல்லையின் கண்காணிப்பை அதிகரித்திருப்பதாக அறிவித்தது.

ஸ்வீடன் இராணுவத்தால் காட்டப்பட்ட "நம்பகரமான ஆதாரம்" ஏதோவிதத்தில் அமெரிக்க இராணுவம் அல்லது உளவுத்துறை சேவைகளுடன் பிணைந்திருக்கலாம் என சந்தேகிக்க அங்கே நிறைய காரணங்கள் உள்ளன. மேலும் உளவுபார்ப்பு பிரிவில் ஸ்டாக்ஹோல்ம் மற்றும் வாஷிங்டனுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு, பால்டிக் மீது அமெரிக்காவின் புதுப்பிக்கப்பட்ட ஒருமுனைப்பு ஆகியவை கடந்த மாதம் ஜனாதிபதி பராக் ஒபாமா எஸ்தோனியாவுக்கு விஜயம் செய்து, ரஷ்யாவுடனான எவ்வித மோதலிலும் வாஷிங்டன் பால்டிக் அரசுகளுக்கு ஆதரவளிக்குமென உறுதியளித்த போது எடுத்துக்காட்டப்பட்டது.

டாலினுக்கு அவர் விஜயம் செய்து இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஒபாமாவும் மற்றும் ஏனைய நேட்டோ தலைவர்களும், கிழக்கு ஐரோப்பாவில் தலையீடு செய்ய தகைமை கொண்ட ஒரு அதிரடி எதிர்நடவடிக்கை படையை ஸ்தாபிக்க மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு தயாராக நேட்டோவின் கிழக்கத்திய கூட்டாளிகள் வசம் ஆயுதங்களை சேமித்து வைக்க, வேல்ஸின் கூட்டு உச்சிமாநாட்டில் ஒரு திட்டத்தை ஏற்றார்கள். ஏற்கனவே கூடுதலாக படைகள் பால்டிக் அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ரஷ்யாவுக்கு எதிரான ஆத்திரமூட்டல்களில் ஸ்வீடனை ஒரு உறுப்பினராக்க மற்றும் ஒரு பங்காளியாக்க வேண்டியதன் அவசியமிருப்பதால் ஸ்வீடனை சமாதானப்படுத்தி, அந்த சமீபத்திய சம்பவத்தை அப்பிராந்தியத்திற்குள் நேட்டோ விரிவாக்கத்திற்கு ஒரு வழிவகையாக சேவை செய்ய வைக்கலாமென்ற நம்பிக்கைகள், ஒரு ரஷ்ய நீர்மூழ்கிக்கப்பல் ஊடுருவியிருப்பதாக அதை உறுதி செய்வதற்கு முன்னரே, வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பிரிட்டனின் Guardian தலையங்கம் இவ்வாறு குறிப்பிட்டது: “நீண்டகால ஓட்டத்தில், ஸ்வீடனின் புவிசார்-மூலோபாய நிலைப்பாட்டின் தர்க்கம், ஏறத்தாழ நேட்டோ அங்கத்துவத்தைத் தவிர்க்கவியலாதபடிக்கு செய்கிறது. கிரிமியா மற்றும் உக்ரேன் படையெடுப்புக்கு பின்னர் இந்தளவுக்கு உடனடியாக வந்துள்ள இந்த ஊடுருவல், அந்த புள்ளியைத் தெளிவாக்க உதவும்."

ஸ்டாக்ஹோல்ம் நடுநிலைமை வகிக்கும் அதன் பாசாங்குத்தனத்தை நீண்டகாலத்திற்கு முன்னரே கைவிட்டுவிட்டது, அத்துடன் சமீபத்திய ஆண்டுகளில் அதன் இராணுவ நடவடிக்கையையும் தீவிரப்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு துருப்புகளையும் மற்றும் 2011 லிபியா குண்டுவீச்சுக்கு ஆதரவாக போர் விமானங்களையும் அனுப்பி உள்ளதுடன், அது பால்டிக்கில் அதன் நடவடிக்கைகளையும் விரிவாக்கி உள்ளது.

சமீபத்திய நடவடிக்கையை அவர் ஸ்வீடனின் அதிகரித்துவரும் இராணுவ பிரசன்னத்திற்குரிய ஒரு சோதனையாக பார்ப்பதாக குறிப்பிட்டு, தலைமை இராணுவ தளபதி ஸ்வெர்கெர் கோரான்சன் நேற்று ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், “நாம் எதையாவது கண்டுபிடிக்கிறோமா இல்லையா என்பதற்கு அப்பாற்பட்டு, இந்த நடவடிக்கையின் மிகமுக்கிய மதிப்பு என்னவென்றால் ஸ்வீடனின் இராணுவ படைகள் செயல்பட்டு வருகின்றன என்பதற்கும், இதுமாதிரியான நடவடிக்கைகள் நமது எல்லைகளை மீறி வருவதாக நாம் கருதும்போது, நாம் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்பதற்கும் ஒரு மிகத்தெளிவான சமிக்ஞையை அனுப்புவதற்காகும்," என்றார்.

சமீபத்திய மாதங்களில் ரஷ்யாவை உள்ளடக்கிய இராணுவ நடவடிக்கைகளாக கூறப்பட்டவைகளை பகிரங்கப்படுத்துவதில் ஸ்வீடன் வேகம் காட்டியுள்ளது. மார்ச் 2013இல், ரஷ்ய விமானப்படை பால்டிக்கில் ஸ்வீடன் மீது ஒரு வெள்ளோட்ட தாக்குதலை தொடங்கி இருந்ததாகவும், டென்மார்க் போர் விமானங்கள் அருகிலிருந்த இராணுவத்தளத்திலிருந்து விரைந்து வந்தபோதுதான் பின்வாங்கி சென்றதாகவும் ஸ்வீடன் பாதுகாப்புத்துறை ஆதாரங்கள் வாதிட்டன. அந்த சம்பவம், பாதுகாப்பு வரவு-செலவு திட்டக் கணக்கின் பாரிய விரிவாக்கத்திற்கு அழுத்தம் அளிக்கும் ஒரு பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்த, உயர்மட்ட இராணுவ தளபதிகளால் முந்தைய ஆண்டு தொடங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், வலதுசாரி கூட்டணி கட்சிகளின் முன்னாள் அரசாங்கம் பாதுகாப்பு செலவினங்களில் 10 சதவீத அதிகரிப்பை அறிவித்தது. அந்த நகர்வு இப்போது ஆட்சியிலிருக்கும் சமூக ஜனநாயகவாதிகளால் முழுமையாக ஆதரிக்கப்பட்டது. அந்த செலவின உயர்வு, உக்ரேன் நெருக்கடி மீது அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் அவற்றின் ரஷ்ய-விரோத பிரகடனங்களை அதிகரித்தபோது வந்திருந்தது. சமீபத்தில் முடிவுற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஒரு கட்சி கூட இராணுவ செலவினங்களின் அதிகரிப்பை ஒரு பிரதான பிரச்சினையாக எழுப்பி இருக்கவில்லை.

கடந்த மாதம், இரண்டு ரஷ்ய SU24 போர் விமானங்கள் ஸ்வீடனின் வான்எல்லையில் ஊடுருவியதாக கூறப்பட்ட சம்பவத்தை, ஸ்டாக்ஹோல்மில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு ஓர் உத்தியோகபூர்வ எதிர்ப்பை வெளிப்படுத்துவற்கு வெளியேறவிருக்கும் அரசாங்கம் பற்றிக்கொண்டது. அந்த விமானங்கள் ஸ்வீடன் வான்எல்லையில் சுமார் 30 நொடிகள் இருந்ததாக இராணுவ ஆதாரங்கள் தெரிவித்தன.

அரசாங்கம் இராணுவ படைகளின் மீது அதன் முழு நம்பிக்கையை பிரகடனப்படுத்தி உள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க தலைமையிலான முனைவில் இணைவதில் புதிய அரசாங்கம் அதற்கு முன்னர் இருந்த வலதுசாரி அரசாங்கத்தை விட ஆக்ரோஷத்தில் எந்தவிதத்திலும் குறைந்திருக்காது என்பதற்கு, புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு மந்திரி சமூக ஜனநாயகவாதிகளின் பீட்டர் ஹல்ட்குவிஸ்ட் எவ்வித சந்தேகத்தையும் விட்டுவைக்கவில்லை. “விமான ஊடுருவல் உட்பட பால்டிக் கடலில் என்ன நடந்து வருகிறதோ, அது ஒரு புதிய மற்றும் மாறிவிட்ட சூழ்நிலை ஏற்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது," என்று கூறிய அவர், “ரஷ்யா பாரிய இராணுவ முதலீடுகளைச் செய்துள்ளது...அவர்களின் அதிகரித்த பலத்துடன் அவர்கள் கூடுதலாக பயிற்சியெடுத்து வருகிறார்கள், அது பாதுகாப்பு சூழலைப் பாதிக்கிறது," என்றார்.

கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்ய செல்வாக்கை பின்னுக்குத் தள்ளுவதற்காக, பிரதான ஏகாதிபத்திய சக்திகளின், குறிப்பாக அமெரிக்க மற்றும் ஜேர்மனியின், முனைவில் அதன் பாகத்தை வகிக்க ஸ்வீடனின் ஆளும் மேற்தட்டு அதன் முயற்சிகளை வேகமாக விஸ்தரித்து வருகிறது என்பதே யதார்த்தமாக உள்ளது. ஸ்டாக்ஹோல்மின் பாதுகாப்புத்துறை வரவு-செலவு திட்டக் கணக்கில் அதிகரிப்பானது, இராணுவ மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் நேட்டோவுடனான நெருங்கிய ஒத்துழைப்பைப் பின்தொடர்கிறது.

கடந்த ஆண்டு இறுதியில், ஸ்வீடனின் இராணுவ படைகள் பால்டிக் பிரதேசத்தில் நேட்டோவினது Steadfast Jazz செயல்திட்டத்தில் பங்கெடுத்தது, அதில் பல ஆயிரக் கணக்கான துருப்புகள், கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஒரு கற்பனையான எதிரிக்கு எதிராக இராணுவ உபாயங்களில் ஈடுபடுத்தப்பட்டன. நேட்டோவில் உறுப்புநாடாக அல்லாத பின்லாந்துடன் சேர்ந்து, ஸ்வீடனும் பங்குவகித்தமை, அப்போதைய நேட்டோ பொதுச்செயலாளர் ஆண்டர்ஸ் ஃபோக் ராஸ்முஸ்செனால், இராணுவ மற்றும் தற்காப்பு கொள்கையை இன்னும் கூடுதலாக ஒருங்கிணைப்பதில் ஏற்பட்டிருக்கும் ஒரு முக்கிய படியாக புகழப்பட்டது.

புதிய சமூக ஜனநாயக-பசுமை கட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து வெறும் இரண்டு வாரங்களில் நடந்துள்ள சமீபத்திய நடவடிக்கையானது, புதிய நிர்வாகம் இந்த போக்கைத் தொடர திட்டமிடுவதை எடுத்துக்காட்டுகிறது.

பிரதம மந்திரி ஸ்டீவன் லோஃப்வென் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வாரத்திற்குப் பின்னர் Social Europe Journalஇல் வெளியான ஒரு நேர்காணலில், அவர் நேட்டோ உடனான நெருக்கமான கூட்டுறவைக் குறித்த அவரது திட்டங்களை அவிழ்த்துக் காட்டினார். “அட்லாண்டிக் கடந்த ஒரு நல்ல கூட்டுறவென்பது பாதுகாப்பை அதிகரிக்கவும் அத்துடன் அதிக வேலைகளை உருவாக்கவும் முற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நாங்கள் நேட்டோவுடன் ஒரு பலமான கூட்டுறவை ஆதரிக்கிறோம். அது எங்களின் தற்காப்பு தகைமையை பலப்படுத்துவதுடன், இராணுவ ஒத்துழைப்பு வழங்குவதிலும், பெறுவதிலும் எங்களின் திறனை விரிவுபடுத்துகிறது," என்று லோஃப்வென் அறிவித்தார்.

இந்த மூலோபாயத்தை இடது கட்சியும் ஆதரிக்கிறது, அது அக்டோபர் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் வரவு-செலவு திட்டக்கணக்கின் மீதும் மற்றும் ஏனைய முக்கிய விவகாரங்கள் மீதும் வாக்கெடுப்பு நடத்தியதில் அரசாங்கத்தை ஆதரித்தது. இருந்தபோதினும் கூட இதில் லோஃப்வென்னுக்கு ஒரு பெரும்பான்மை கிடைக்காததால், அவர் வலதுசாரி கட்சிகளில் ஒன்றிடமிருந்து ஆதரவைக் கோர வேண்டியிருக்கும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது.

அவரது நேர்காணலில் லோஃப்வென், உக்ரேனிய நெருக்கடியில் முந்தைய அரசாங்கத்தின் உறுதியான அமெரிக்க-ஆதரவு நிலைப்பாட்டை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்குச் சென்றிருந்தார். “அதன் அண்டைநாடுகளை நோக்கிய ரஷ்யாவின் அதிகளவில் ஆக்ரோஷமான நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது, மற்றும் உக்ரேனின் பிராந்திய ஒற்றுமையை மீறுவதை [கூறியவாறே குறிப்பிடப்பட்டது] நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தி உள்ளோம். நாம் ஒற்றுமையான நிலைப்பாட்டையும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் ஆதரிக்கிறோம். ஐரோப்பிய ஒன்றியம் ஒன்றுபட்டு நின்று, உக்ரேனுக்கு ஒரு நீண்டகால அங்கத்துவ முன்னோக்கை வழங்க வேண்டும்," என்று அவர் அறிவித்தார்.