சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

Gas dispute between Ukraine, EU and Russia threatens to escalate

உக்ரேன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான எரிவாயு பிரச்சினை தீவிரமடைய அச்சுறுத்துகிறது

By Clara Weiss
29 October 2014

Use this version to printSend feedback

வரவிருக்கின்ற குளிர்காலத்திற்கு எரிவாயு வினியோகிப்பது குறித்து உக்ரேன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் கடந்த வாரம் மீண்டும் முறிந்துபோயின. ஆரம்பத்தில் ஓர் உடன்படிக்கை அறிவிக்கப்பட்ட பின்னர், ரஷ்யா பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொண்டது ஏனெனில் உக்ரேனுக்கான எரிவாயு வினியோகங்களுக்கு நிதியியல்ரீதியாக உத்தரவாதமளிக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராய் இல்லை.

அதன் விளைவாக, வரவிருக்கின்ற குளிர்காலத்தில் ரஷ்ய எரிவாயு வெட்டப்படும் ஆபத்து நிலவுகிறது, அவ்வாறானால் அது பல ஐரோப்பிய நாடுகளில் பெரும் பொருளாதார விளைவுகளைக் ஏற்படுத்தும் என்பதுடன் சமூக பதட்டங்களையும் கூர்மைப்படுத்தும். எரிவாயு மீது மாதக்கணக்கில் நீடித்திருக்கும் பிரச்சினையானது, ரஷ்யாவை அழுத்தத்தின் கீழ் கொண்டு வர மற்றும் ஐரோப்பாவில் மாஸ்கோவின் செல்வாக்கைப் பின்னுக்கிழுக்க ஐரோப்பிய ஒன்றியத்தால் திட்டமிட்டு ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மத்தியில், ரஷ்யா உக்ரேனுக்கு எரிவாயு வினியோகங்களை நிறுத்தியது, ஏனெனில் கியேவ் ரஷ்ய நிறுவனம் காஸ்போரோம்க்கு (Gazprom) அதன் நிலுவைத்தொகைகளைச் செலுத்தி இருக்கவில்லை. அப்போதிருந்து, பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன, அவற்றில் புரூசெல்ஸ் மற்றும் கியேவ் மாஸ்கோவிற்கு இறுதி எச்சரிக்கை அளித்திருப்பதுடன், எரிவாயு விலைகளையும் குறைக்க வேண்டுமென முறையிட்டிருந்தன.

கடந்த வாரம் ஆசியான் மாநாட்டுக்கு முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உக்ரேன் அப்போது உடனடியாக ஓர் உடன்படிக்கையை எட்ட வேண்டுமென அறிவித்தன. ரஷ்யா 100 டாலர் விலை குறைப்பை உக்ரேனுக்கு அறிவித்து, 1,000 கியூபிக் மீட்டர் எரிவாயுவிற்கு வெறும் 385 டாலர் கோரியது. இருந்தபோதினும், அதற்கு பிரதியீடாக உக்ரேன் காஸ்போரோம் நிறுவனத்திற்கான அதன் 3.2 பில்லியன் டாலர் நிலுவைத்தொகையைச் செலுத்த வேண்டும் என்றும், இந்த குளிர்கால எரிவாயு வினியோகத்திற்கு முன்தொகை செலுத்த வேண்டுமென்றும் கோரியது. ஆனால் உக்ரேனால் இதை ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலையில், அது புரூசெல்ஸால் எதிர்க்கப்பட்டது.

குளிர்காலத்திற்கு தடையில்லா எரிவாயு வினியோகங்களை உறுதிப்படுத்த தாங்கள் தயாராக இருப்பதாக, காஸ்போரோம் பிரதிநிதிகளும் மற்றும் ரஷ்ய அரசாங்கமும் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டனர். ஆனால் கியேவ்வும் அத்துடன் புரூசெல்ஸூம் நடைமுறைரீதியில் ஒவ்வொரு சமரசத்தையும் நிராகரித்ததுடன், ரஷ்யா மீது கடுமையான பொருளாதார இழப்புகளைத் திணிக்கக்கூடிய, அத்துடன் மொத்த முகமதிப்பையே இழக்கும் அளவுக்கு முறையீடுகளைச் செய்தன.

இன்று ஒரு புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் தொடங்குகின்றன. இதுவரையில், “நிறுத்தும் அல்லது செலுத்தும்" கொள்கை—அதாவது எரிவாயுவை வெட்டுவது அல்லது அதற்கான பணத்தைச் செலுத்துவது எனும் கொள்கை—உடன்படிக்கையில் உள்ளடக்கப்படாது என்பதில் இரண்டு தரப்பும் உடன்பட்டுள்ளன, இருந்தபோதினும் இது சர்வதேச உடன்படிக்கைகளில் ஒரு பொதுவான நடைமுறையாகும். குளிர்காலத்திற்கு முன்னர் உடன்படிக்கை எட்டப்படுமா என்பது தெளிவாக இல்லை.

எரிவாயு வினியோகம் ஒரு நீண்டகாலத்திற்கு நிறுத்தப்பட்டால் அது அந்நாட்டில் ஏற்கனவே உள்ள கூர்மையான சமூக மற்றும் பொருளாதார பதட்டங்களை மேற்கொண்டும் தீவிரப்படுத்தும். கடந்த ஆண்டு, ரஷ்ய எரிவாயு வினியோகங்கள் தான் தேவையின் மூன்று கால்பகுதிகளைப் பூர்த்தி செய்தன. உக்ரேனிய எரிவாயு கிடங்குகள் பாதியளவே நிறைந்துள்ள நிலையில், சேமிப்புக்கிடங்குகளில் குளிர்காலம் முழுவதும் வினியோகிக்க போதுமான கையிருப்புகள் இருக்காது.

தனிப்பட்ட குடும்பங்களுக்கு எரிசக்தி வினியோகிப்பதில் கியேவ் ஆட்சி ஏற்கனவே சிரமப்பட்டு வருகிறது. கோடைகாலத்தின் போதே, கியேவ்வின் ஒட்டுமொத்த மாவட்டத்திலும் வெந்நீர் இல்லாமல், சிலநேரங்களில் மின்சாரமும் இல்லாமல் போனது. ஊடக செய்திகளின்படி, இந்த ஆண்டின் இறுதி வாக்கில், அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீத அளவுக்கு சுருங்கும். பல வல்லுனர்களும் அடுத்த ஆண்டுக்குள் ஒரு அரசு திவால்நிலையை அனுமானிக்கிறார்கள்.

குறிப்பாக குளிர்காலத்தில், ரஷ்ய எரிவாயு வினியோகங்கள் நின்றுபோனால், கிழக்கு ஐரோப்பாவின் பல நாடுகளை அது கடுமையாக பாதிக்கும். பின்லாந்து, லித்துவேனியா, எஸ்தோனியா, ஸ்லோவேகியா மற்றும் பல்கேரியா போன்ற நாடுகள் அவற்றின் எரிவாயு தேவையில் 90 சதவீதத்திற்கும் மேலாக ரஷ்ய இறக்குமதியைச் சார்ந்திருக்கின்றன. அனைத்திற்கும் மேலாக, அதன் எரிவாயு தேவையில் ஐந்தில் ஒரு பகுதியை ரஷ்யாவிடமிருந்து பெறும் ஜேர்மனியும் கூட, கடுமையான பொருளாதார பிரச்சினைகளால் பாதிக்கப்படும்.

ஓர் உள்நாட்டு அரசு ஆய்வறிக்கையின் அடிப்படையில், Spiegel Online இவ்வாறு செய்தி அளித்தது: ரஷ்ய எரிவாயுவை நிறுத்திய பின்னர் ஒரு குறுகிய காலகட்டத்திற்குள் அரசாங்கம் ஓர் அவசரகால நெருக்கடியை அறிவிக்க வேண்டியிருக்கும். தொழில்துறை உற்பத்தியின் பாதிப்பு பாரியளவில் இருக்கும், ஏனைய ஆதாரங்களிடமிருந்து வரும் எரிவாயுவின் விலைகள் கூர்மையாக அதிகரிக்கும், ஏன் தனிப்பட்ட குடும்பங்களுக்கான எரிசக்தி வினியோகங்களுக்கும் கூட உத்தரவாதம் இருக்காது.

ரஷ்யா உடனான எரிவாயு பிரச்சினை, மாஸ்கோவ்வுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார யுத்தத்தின் பாகமாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களோ, எரிவாயு வினியோக வெட்டுக்களின் பொருளாதார மற்றும் சமூக விளைவுகளை புட்டின் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைத் தீவிரப்படுத்த பயன்படுத்தி வருகின்றனர்.

ரஷ்ய எரிவாயு வினியோகங்கள் ஐரோப்பிய ஒன்றிய நுகர்வில் மூன்றில் ஒரு பங்கை வகிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான எரிசக்தி ஏற்றுமதி ரஷ்ய பொருளாதாரத்திற்குமே கூட மிகவும் முக்கியமாகும்: எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிகள் அண்ணளவாக ரஷ்ய அரசு வரவு-செலவு திட்டக்கணக்கில் பாதியாகும். ஐரோப்பிய ஒன்றியமே மிக முக்கிய நுகர்வோராக உள்ளது. காஸ்போரோம் நிறுவன விற்பனையின் சுமார் 40 சதவீதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் கணக்கில் வருகிறது, அதையொட்டி அது அரசு வரவு-செலவு திட்டக்கணக்கில் ஒரு கால்பகுதியைச் செலுத்துகிறது.

ஒரு எரிசக்தி வினியோகஸ்தராக ரஷ்யாவின் நிலைப்பாட்டை போதுமானளவுக்கு குறைப்பதே ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கமாகும், அதன்மூலமாக எரிவாயு வினியோக விலைகள் மற்றும் நிலைப்பாடுகளை, ஐரோப்பிய ஒன்றியமே கட்டளையிட முடியும். ரஷ்ய எரிவாயுவின் ஒரு மிக முக்கிய வாடிக்கையாளராக மற்றும் ஒரு வினியோகபாதை நாடாக உக்ரேனின் பாத்திரமும் குறிப்பாக முக்கியமானதாக உள்ளது.

ஜூனில் இருந்து ரஷ்ய எரிவாயு நிறுத்தப்பட்டதானது, வேண்டுமென்றே உக்ரேனுக்கு புதிய ஆதாரவளங்களிடமிருந்து எரிவாயு வினியோகிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. உக்ரேன் இப்போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமிருந்து, தலைகீழ் ஓட்டம் என்றழைக்கப்படுவதைக் கொண்டு பெருமளவுக்கு எரிவாயுவை இறக்குமதி செய்கிறது. அதாவது உண்மையில் அது ரஷ்யாவிலிருந்து வந்த எரிவாயு தான், ஆனால் ஸ்லோவேகியா, ஹங்கேரி அல்லது பல்கேரியாவுக்கு வினியோகிக்கப்பட்டு, பின்னர் உக்ரேனுக்குக் கொண்டுச் செல்லப்படுகிறது. அக்டோபர் மாத தொடக்கம் வரையில், உக்ரேன் இவ்விதத்தில் 1.7 பில்லியன் கியூபிக் மீட்டர் இறக்குமதி செய்துள்ளது.

எரிவாயு வினியோகிக்கும் இவ்விதமான திட்டங்கள் நீண்டகாலமாகவே பரிசீலனையில் இருந்து வந்தன என்பதோடு, 2013இல் ஐரோப்பிய ஒன்றிய எரிசக்தி கமிஷனர் குந்தர் ஓட்டின்கர் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்) உக்ரேனுக்கு விஜயம் செய்திருந்த போதும் விவாதிக்கப்பட்டன. நோர்வேயின் ஸ்டேட்ஆயில் நிறுவனமும் உக்ரேனுக்கு எரிவாயு வினியோகிக்க பொறுப்பேற்றுள்ளது. அதேநேரத்தில், ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும், ஷெல் வாயு (shale gas) நிதியுதவியை மற்றும் உக்ரேனுக்கு திரவ எரிவாயு இறக்குமதிகளை அதிகரிக்கவும் முன்னுக்கு வந்துள்ளன.

ரஷ்ய எரிசக்தி மீது உக்ரேன் சார்ந்திருப்பதைக் குறைப்பதே, மறுகட்டமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஐரோப்பிய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற நிதியியல் அமைப்புகளின் பல ஆண்டுகால மத்திய மூலோபாய நோக்கமாக இருந்துள்ளது.

இந்த உள்ளடக்கத்தில், அன்றாடம் எதன் வழியாக 6 பில்லியன் கியூபிக் மீட்டர் எரிவாயு கடந்து செல்கிறதோ, உக்ரேனில் உள்ள அந்த எரிவாயு வினியோகப்பாதை அமைப்பு மூலோபாயரீதியில் முக்கியத்துவம் பெறுகிறது. ரஷ்ய தினசரி gazeta.ru செய்தியின்படி, எரிவாயு வழித்தடத்திலிருந்து கிடைக்கும் வருவாய் ஆண்டுக்கு 3 பில்லியன் டாலராகும்.

முன்னர் அரசுடைமையாக இருந்த அதன் எரிவாயு வினியோகப்பாதை அமைப்பில் 49 சதவீதம் உரிமையாக்கிக் கொள்ள, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களை அனுமதித்து ஆகஸ்டில் உக்ரேன் ஒரு சட்டம் நிறைவேற்றியது. முதலீட்டாளர்களுக்கு விரைவில் ஓர் ஒப்பந்தப்புள்ளி அளிக்க அது திட்டமிட்டு வருவதாக கியேவ் ஆட்சி இப்போது அறிவித்துள்ளது. உக்ரேனின் எரிவாயு வினியோகப்பாதை அமைப்பைத் தனியார்மயமாக்குவது, தொடக்கத்திலிருந்தே ஏகாதிபத்திய சக்திகளின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும். 2004 ஆரெஞ்சு புரட்சி என்றழைக்கப்பட்டதன் போதே இந்த பிரச்சினை மீது அங்கே பலமான கருத்துமோதல்கள் இருந்தன.

உக்ரேனின் எரிவாயு வினியோகப்பாதை அமைப்புமுறையின் தனியார்மயமாக்கல், கணிசமானளவுக்கு உக்ரேன் மற்றும் ஐரோப்பிய எரிசக்தி சந்தை மீதான ரஷ்ய செல்வாக்கைத் தடுக்கும். அதேநேரத்தில், உக்ரேன் அதன் பொருளாதாரத்தின் ஒரு முக்கியமான பகுதியின் கட்டுப்பாட்டை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மூலதனத்திற்கு வழங்கும்.

அந்த சட்டம், முன்னதாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த உக்ரேனின் எரிவாயு குழாய்கள் மற்றும் சேமிப்புகிடங்குகளை வெளிநாட்டு நிறுவனங்கள் நிர்வகிக்க, ஒப்பந்தப்புள்ளியில் எடுக்க அல்லது வாடகைக்கு எடுக்க அனுமதிக்கிறது. அத்துடன் கூடுதலாக, உக்ரேனிய அரசாங்கம் எரிவாயு சேமிப்புகிடங்குகளைக் கையாள புதியவொரு நிறுவனத்தையும் ஸ்தாபிக்கலாம், அதில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்கள் 49 சதவீத கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க முடியும்.

ஓர் உக்ரேனிய எரிவாயு வல்லுனர் gazeta.ruக்குத் தெரிவிக்கையில், உக்ரேனிய அரசாங்கம் எரிவாயு வினியோகப்பாதை வலையமைப்பின் உரிமையில் சில சதவீதங்களை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு அச்சட்டம் சாத்தியக்கூறை திறந்துவிட்டுள்ளதாக தெரிவித்தார். முற்றிலும் காலத்திற்கு ஒவ்வாததாக மற்றும் அவசரமாக நவீனமயமாக்க வேண்டிய அவசியத்தில் இருக்கின்ற எரிவாயு வினியோகப்பாதை அமைப்புமுறையில் தங்களின் சொந்த பணத்தை முதலீடு செய்வதன் மூலமாக, முதலீட்டாளர்களால் முக்கிய மூலதனங்களில் அவர்களின் சதவீதத்தை தொடர்ந்து அதிகரித்துக் கொள்ள முடியும்.

ரஷ்யாவிலிருந்து வரும் எரிவாயு வினியோகப்பாதை அமைப்புகளில் மேற்கத்திய முதலீட்டாளர்களின் கட்டுப்பாடு அதிகரித்து வருவதென்பது, ரஷ்ய பொருளாதார செல்வாக்கை பின்னுக்கு தள்ளுவதை நோக்கிய ஒரு படியாகும், அத்துடன் உக்ரேனை மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்குள் ஒருங்கிணைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு நகர்வாகும்.

எரிவாயு வினியோகப்பாதை அமைப்புமுறையின் கட்டுப்பாட்டை பெறும் அதன் முயற்சிக்கு இணைந்த விதத்தில், ஐரோப்பிய ஒன்றியம் Southstream எரிவாயுகுழாய் கட்டுமானத்தைத் தடுக்க அனைத்தையும் முயற்சி வருகிறது, அந்த கட்டுமானத்தைக் கொண்டு ரஷ்யா அதன் எரிவாயுவை கருங்கடல் வழியாக உக்ரேனுக்குள் நுழையாமல் ஐரோப்பாவிற்குள் கொண்டு செல்லலாமென கருதுகிறது. அத்திட்டத்தைக் கிடப்பில் போட ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் பல்கேரியாவை நிர்பந்தித்துள்ளது. எரிசக்தி பிரச்சினைகளின் மீது ஐரோப்பிய ஒன்றியத்தின் இதயதானத்தில் இருப்பது, ஒரு தெற்கு பாதையைக் கட்டமைப்பதாகும். இப்பாதை காஸ்பியன் கடல் வழியாக ஐரோப்பாவுக்கு எரிவாயுவை எடுத்துச்செல்லும் என்பதோடு, எரிசக்தி ஒன்றியம் என்றழைக்கப்படுவதில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் கிரெம்ளினுக்கு எதிர்ப்பாக ஓர் ஒருங்கிணைந்த எரிசக்தி கொள்கையைச் செயல்படுத்தும்.