சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

In wake of Obama speech, UN debate dominated by “terror, war

ஒபாமா உரையை அடுத்து, .நா விவாதம் "பயங்கரவாத," யுத்தத்தால் மேலாதிக்கம் பெற்றது

By Bill Van Auken
26 September 2014

Use this version to printSend feedback

ஈராக் மற்றும் சிரியாவின் அவரது யுத்தத்திற்குப் பின்னால் உலகம் அணிதிரளுமாறு முறையிட்டு, ஐநா பொது அவையில் புதனன்று ஜனாதிபதி பராக் ஒபாமா அளித்த உறுதியான உரையை பின்தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் விவாதத்தில் பிரதான கூட்டணி நாடுகளின் தலைவர்கள் தங்களைத்தாங்களே அமெரிக்க இராணுவவாதத்துடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார்கள்.

மற்ற நாட்டு தலைவர்களும், தங்களின் சொந்த குற்றங்கள் மற்றும் ஒடுக்குமுறையை நியாயப்படுத்த "பயங்கரவாத" உணர்ச்சிப் பிரவாகத்தையே கைப்பற்ற முனைந்தார்கள். இன்னும் சிலர், அவர்களின் சொந்த காரணங்களுக்காக, மத்திய கிழக்கு நெருக்கடிக்கு வாஷிங்டனையே குற்றஞ்சாட்டி, உலக நிலைமை குறித்த ஒபாமாவின் ஆத்திரமான மற்றும் பரந்துபட்ட ஏமாற்றுத்தன குணாம்சத்திற்கு சவால்விடுக்க எழுந்தார்கள்.

வியாழனன்று காலை பேசிய முதல் பேச்சாளர்களில் ஜனாதிபதி ஹாசன் ரௌஹானி முதலாவதாக இருந்தார். அப்பிராந்தியத்தில் அமெரிக்க பாத்திரம் குறித்த அவரது குற்றச்சாட்டை, ரௌஹானி, தெஹ்ரானின் அணுஆயுத திட்டம் மீது நடந்துவரும் பேச்சுவார்த்தைகள் மூலமாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்துக்குள் அவரது அரசாங்கம் ஓரிடத்தைப் பெற முடியுமென்ற நம்பிக்கையை வெளிப்படுத்துவதுடன், இணைத்துக் கொண்டார்.

அப்பிராந்தியத்தில் "தீவிரவாதம்" என்பது "நேற்றைய காலனித்துவத்தின் துணைவிளைவாகும்" மற்றும் "நேற்றைய இனவாதத்திற்கு ஒரு எதிர்வினையாகும்" இது ஈரானிய ஜனாதிபதி குறிப்பிட்டது. “பைத்தியக்காரர்களின் கரங்களில் பிளேடுகளைக்" கொடுப்பதாக, "உளவுத்துறை முகமைகளை" அவர் பெயரிடாமல் குற்றஞ்சாட்டினார்.

அவர் அப்பிராந்தியத்தில் தற்போதைய நெருக்கடிக்கு மூலக்காரணமாக அமெரிக்க போர்களின் தசாப்தத்தை நேரடியாக சுட்டிக்காட்டினார். “மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, மற்றும் காகசஸில் மேற்கின் மூலோபாய மடத்தனம் உலகின் இப்பகுதிகளை பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கான புகலிடமாக மாற்றியுள்ளது," அவர் பொது அவையில் தெரிவித்தார்.

"ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிற்கு எதிரான இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் சிரிய அபிவிருத்திகளில் முறையற்ற குறுக்கீடு ஆகியவை மத்திய கிழக்கின் தவறான மூலோபாய அணுகுமுறைக்கு தெளிவான சான்றுகளாக இருப்பதாக," அவர் தெரிவித்தார். “சமாதானமாக-அல்லாத அணுகுமுறைகள், ஆக்ரோஷம், மற்றும் ஆக்கிரமிப்பு என இவை சாமானிய மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை இலக்கில் வைப்பதுடன், வித்தியாசமான கேடுவிளைவிக்கும் உளவியல் விளைவுகளை மற்றும் நடவடிக்கை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன, அத்தகைய மாற்றங்களே இன்று மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் வன்முறை மற்றும் படுகொலை வடிவத்தில் வெளிப்படுகின்றன, உலகின் ஏனைய பகுதிகளிலிருந்தும் கூட சில குடிமக்கள் அவற்றால் ஈர்க்கப்படுவதாக," அவர் தெரிவித்தார்.

அப்பிராந்தியத்தில் ஏகாதிபத்தியத்தின் வரலாற்று குற்றங்களை, அதுவும் அவை ஈராக் மற்றும் சிரியாவிற்குள் தற்போதைய தலையீட்டுடன் தொடர்ந்தும் ஆழப்படுத்தப்பட்டு இருக்கின்ற நிலையில், அவற்றை விவரிக்க, “மூலோபாய மடத்தனம்" மற்றும் "தவறான மூலோபாய அணுகுமுறை" போன்ற வார்த்தைகளே விளக்குகின்றன. ஈரானிய முதலாளித்துவத்தின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் ரௌஹானி அரசாங்கம், அதன் அணுசக்தி திட்டத்திற்காக தெஹ்ரானை தண்டிப்பதாக என்ற போலிக்காரணத்தின் மீது திணிக்கப்பட்ட தடைகளை நீக்குவதற்காக, அது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுடன் ஒரு உடன்பாட்டை எட்ட முயன்று வருகிறது.

அதேபோல, அவர் அந்த தடைகளை ஒரு "மூலோபாய தவறு" என்று வர்ணித்தார். அவர் அறிவித்ததாவது: “ஈரானின் அமைதியான அணுசக்தி திட்டத்தைக் குறித்த ஒரு இறுதி உடன்படிக்கையானது, பாதுகாப்பு, சமாதானம் மற்றும் அபிவிருத்தியை நோக்கமாக கொண்ட பலதரப்பு கூட்டுறவிற்கு ஒரு ஆரம்பமாக சேவை செய்ய முடியும்," மேலும் அதுபோன்றவொரு உடன்பாடு, உண்மையென கருதத்தக்க வகையில் மேற்கிற்கு ஈரானிய ஆட்சியை அதன் கூட்டாளியாக்கி, அதன் நலன்களைப் பின்தொடர ஒரு "வரலாற்று வாய்ப்பை" பிரதிநிதித்துவம் செய்யும் என்றார்.

அதுபோன்ற நோக்கங்களை பின்தொடர்வதற்காக, ரௌஹானி பொது அவை விவாதத்திற்கு அப்பாற்பட்டு பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூனையும்—1979இல் ஷாவின் பதவி வெளியேற்றியதற்குப் பின்னர் நடந்த அதுபோன்ற முதல் ஆங்கிலோ-ஈரானிய பேச்சுவார்த்தைஅத்துடன் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் மற்றும் ஜேர்மனியின் வெளியுறவுத்துறை மந்திரி பிரான்க்-வால்டர் ஸ்ரைன்மையரையும் சந்தித்தார்.

கேமரூன் மற்றும் ஹோலாண்ட் இருவருமே ஒபாமாவின் போர்நாடும் உரையை எதிரொலித்ததுடன், அவர்கள் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய தலையீட்டில் முழுமையாக பங்கெடுக்க அவர்களின் உறுதிப்பாட்டையும் உறுதிப்படுத்தினார்கள். ஈராக் மற்றும் சிரியாவை, அத்துடன் அப்பிராந்தியத்தின் பெரும்பகுதியை, முன்னதாக காலனித்துவப்படுத்தி இருந்த அந்த இரண்டு சக்திகளின் தலைவர்கள், சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் நாகரீகத்தின் உலகளாவிய நன்மதிப்புகளின் பாதுகாவலர்களாக தங்களைத்தாங்களே சித்தரிக்கிறார்கள்.

ஒரு பிரெஞ்சு சுற்றுலா பயணி, ஏர்வே கூர்டெல், ஒரு அல்ஜீரிய இஸ்லாமிய குழுவின் கரங்களால் கழுத்தறுபட்டு கொல்லப்பட்டதன் விளைவாக, பிரான்ஸ் "துக்கத்தில் மூழ்கியிருப்பதாக" கூறி, ஹோலாண்ட் அவரது உரையைத் தொடங்கினார். பிரெஞ்சு மக்கள் "காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக மனித கௌரவத்தைப் பாதுகாக்கிறார்கள்" என்பதால், அந்த படுகொலை பிரெஞ்சு மக்களுக்கு எதிராக திரும்பி இருந்தது என்றவர் குற்றஞ்சாட்டினார். ஈராக்கிய குண்டுவீச்சில் அமெரிக்காவுடன் சேர்ந்த முதல் பிரதான சக்தியாக பிரான்ஸ் இருந்தது. சிரியாவில் தாக்குதல்கள் நடத்துவதிலிருந்து அது ஒதுங்கி இருந்தபோதினும், இப்போது அதுவும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக பிரெஞ்சு அதிகாரிகள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.

"எல்லைகள் அறியாத பயங்கரவாதத்திற்கு எதிரான" ஒரு யுத்தத்தில் "இராணுவ நடவடிக்கையின் பலத்தை" ஹோலாண்ட் மேலுயர்த்திக் காட்டினார். மாலியில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பாத்திரத்தையும் அவர் பிரஸ்தாபித்தார், அங்கே அது "பயங்கரவாதத்திற்கு எதிரான" சண்டை என்றவொரு போர்வையில் ஆபிரிக்காவில் அதன் நவகாலனித்துவ அபிலாஷைகளைப் பின்தொடர ஐ.நா ஒப்புதல் இல்லாமலேயே ஒரு நீடித்த தலையீட்டை நடத்தி வந்துள்ளது.

"பிரான்ஸ் ஒருபோதும் பயங்கரவாதத்திற்கு அடிபணியாது, ஏனென்றால் அது எங்களின் கடமை, அதற்கு மேலாக, ஏனென்றால் அது எங்களின் மரியாதை," என்று எரிச்சலூட்டும்விதத்தில் வீராவேச பிரகடனத்துடன் அவரது உரையை முடித்தார்.

அதேபோல, கேமரூன் அமெரிக்க தலைமையிலான யுத்தத்தில் இணைய, அவரது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும் அழுத்தமாக தெரிவித்தார், “இந்த பயங்கரவாதிகளை வேட்டையாடஇராணுவ பலம் உட்படநமது வெளிப்படுத்தக்கூடிய அனைத்து வழிவகைகளையும் பயன்படுத்தி, சமரசத்திற்கிடமின்றி" இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் அறிவித்தார்.

அவர் வலியுறுத்துகையில், “அலட்சியம் மற்றும் செயல்படாமல் இருப்பதை மன்னித்த கடந்தகால தவறுகளை நாம் அனுமதிக்கக்கூடாது." 2003இல் ஈராக்கில் பிரிட்டிஷ் பங்களிப்போடு தொடங்கப்பட்ட சூறையாடும் அமெரிக்க போரில் அந்நாட்டு சமூகத்தின் சிதைவு, லிபியாவை உள்நாட்டு போர் மற்றும் குழப்ப நிலையில் விட்டு வைத்த அமெரிக்க-நேட்டோ போர் அல்லது பஷர் அல்-அசாத்தின் சிரிய அரசாங்கத்திற்கு எதிராக இஸ்லாமிய போராளிகளுக்கு மேற்கத்திய ஆயுத உதவிகள் மற்றும் ஆதரவு ஆகியவை இத்தகைய "தவறுகளில்" உள்ளடங்குமா என கேமரூன் தெளிவுபடுத்தவில்லை.

நைஜீரியா, சோமாலியா, லிபியா மற்றும் யேமன் உட்பட, "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" இன்னும் பரந்த செயற்களத்தில் விரிவுபடுத்த வேண்டுமென வாதிடவும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி அவரது உரையைப் பயன்படுத்திக் கொண்டார்.

வியாழனன்று மதியம் பேசுகையில், ஆஸ்திரேலிய பிரதம மந்திரி டோனி அப்போட், அவரும் ஒபாமா இருக்கும் அதே தரப்பில் இருப்பதைத் தெளிவுபடுத்தினார். ISISஇன் "கொலை ஆக்ரோஷத்தை" அத்துடன் உக்ரேனில் ரஷ்ய "ஆக்கிரமிப்பை" அவர் கண்டித்தார். முன்னதாக, “வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள்" மீது பாயும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய பாதுகாப்பு அவையின் ஒரு சிறப்பு அமர்வில், அபோட் அமெரிக்க தலைமையிலான "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு" அவர் அரசாங்கத்தின் "முழுமையான தயக்கமற்ற" ஆதரவுக்கு உறுதியளித்தார்.

ஈராக் மற்றும் சிரியா போரில் அதன் வரிசையில் நிறுத்த வாஷிங்டன் முயன்று வருகின்ற பழைய அமெரிக்க கூட்டாளிகளில் ஒருவரான எகிப்தின் இராணுவ இரும்புமனிதர் ஜனாதிபதி அப்தெல்-பதாஹ் எல்-சிசி, மேற்கத்திய "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை", அவரை அதிகாரத்திற்குக் கொண்டு வந்த ஆட்சிக்கவிழ்ப்பை மற்றும் அப்போதிருந்து அவர் நடத்தியுள்ள கொடூரமான ஒடுக்குமுறையை நியாயப்படுத்த மற்றும் மூடிமறைப்பதற்காக திருப்புவதில் அவரது உரையைப் பயன்படுத்தினார்.

உலகம் யதார்த்தத்தை உள்வாங்க தொடங்கியுள்ளது மற்றும் தேசிய ஐக்கியத்தை உடைக்க விரும்பிய தீவிரவாதத்திற்கு எதிராக எகிப்தியர்கள் ஏன் கிளர்ந்தெழுந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ள தொடங்கியுள்ளது,” என்றார். அவர் கடந்த ஆண்டு ஜூலையில் இராணுவத்தால் தூக்கியெறியப்பட்ட ஜனாதிபதி மொஹம்மத் முர்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லீம் சகோதரத்துவம் அரசாங்கத்தை குறிப்பிடுகிறார், அதை ISIS உடன் சமப்படுத்துகிறார்.

அந்த ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர், எகிப்திய ஆட்சி ஆயிரக் கணக்கானவர்களை அரசியல் மீறல்களுக்காக மரண தண்டனையோ அல்லது நீண்டகால சிறைதண்டனையோ விதித்துள்ளது மற்றும் பத்து ஆயிரக் கணக்கில் அதிகமானவர்களைக் கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறது. இருந்தும், சட்டம் மற்றும் மனித உரிமைகளுக்காக ஒரு "உள்நாட்டு ஜனநாயக அரசை" கட்டமைத்து வருவதாக அவர் வாதிட்டார்.

வாஷிங்டனின் ஏனைய பிராந்திய கூட்டாளிகள், அந்த பொது அவை விவாதத்தை ஒருவரையொருவர் சாடுவதற்குப் பயன்படுத்தினர். சான்றாக, துருக்கி ஜனாதிபதி ரிசெப் தாயெப் எர்டோகன் தளபதி சிசி பேசியதற்குப் பின்னர் சுமார் இரண்டு மணிநேரம் பேசுகையில், “எகிப்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் தூக்கியெறியப்பட்டார்," என்று அறிவித்தார், அத்துடன் .நா மற்றும் ஜனநாயக நாடுகள் அதற்காக ஒன்றுமே செய்யவில்லை, மேலும் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்துபவர்கள் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள்," என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

சிறிய நாடுகளை "அச்சுறுத்துபவர்களை" எதிர்ப்பதே உலகில் அமெரிக்காவின் பாத்திரமென்ற ஒபாமாவின் ஏமாற்று வாதங்களை சவால் விடுத்தவர்களில், இரண்டு இலத்தீன் அமெரிக்க அரசு தலைவர்களும் இருந்தார்கள், அவர்கள் வெனிசூலாவின் நிக்கோலா மாதுரோ மற்றும் பொலிவியாவின் எவோ மொராலெஸ் ஆவர். இரண்டு அரசாங்கங்களுமே அமெரிக்காவின் குளறுபடி செய்யும் அல்லது ஸ்திரமின்மைப்படுத்தும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முகங்கொடுத்துள்ளன. இரண்டுமே தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்துவரும் கொந்தளிப்பை எதிர்கொண்டு வருகின்றன என்பதுடன், சந்தேகத்திற்கு இடமின்றி ஐ.நா உரையை இடதிலிருந்து எதிர்ப்பைக் காட்ட ஒரு சந்தர்ப்பமாக கண்டன.

மாதுரோ அவைக்குத் தெரிவித்தார், “ஏகாதிபத்திய சக்திகளின் பாகத்திலிருந்து மற்றும் அமெரிக்க பேரரசுடன் இணைந்த சக்திகளிடமிருந்து வெனிசூலா அச்சுறுத்தலை, ஒரு நிரந்தரமான சூழ்ச்சியை சகித்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது, அவை மீண்டும் மீண்டும் ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன." அவர் 2002இல் கருக்கலைப்பு செய்யப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு மற்றும் அவரது அரசாங்கத்தை வீழ்த்தக் கோரிய வலதுசாரி போராட்டங்களால் தூண்டிவிடப்பட்ட அந்நாட்டின் சமீபத்திய மேலெழுச்சிகளுக்கு, வாஷிங்டனை பொறுப்பாக்கி குற்றஞ்சாட்டினார்.

மத்திய கிழக்கின் வன்முறைக்காகவும் அவர் வாஷிங்டனைக் குற்றஞ்சாட்டினார். “சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்காக, ஒன்றரை ஆண்டுகளாக அந்நாட்டிற்கு எதிராக நேட்டோ மற்றும் அதன் கூட்டாளிகளால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை" அவர் கண்டித்தார்.

அவரது பங்கிற்கு, மொராலெஸ் கூறுகையில், “ஈராக்கில் தற்போதைய நெருக்கடியைத் தூண்டிவிட்டுள்ள, அமெரிக்க ஈராக்கிய தலையீட்டுக்கு பொலிவியா கண்டனம் தெரிவிப்பதுடன் அதை நிராகரிக்கிறது," என்றார். “ஈராக் பெரும் எண்ணிக்கையிலான பாரிய பேரழிவு ஆயுதங்களை வைத்திருந்ததாக" வாஷிங்டன் கூறியதையும், “அந்த தந்திரம் ஏகாதிபத்திய வரலாறில் மிகப்பெரிய பொய்களில் ஒன்றாக திரும்பியதையும்" அவர் நினைவூட்டினார்.

மொராலெஸ் தொடர்ந்து கூறினார், ஈராக்கிய யுத்தத்தின் படிப்பினைகள் என்னவென்றால் "அமெரிக்கா எங்கெல்லாம் தலையீடு செய்கிறதோ அங்கே அது பேரழிவு, வெறுப்பு, அவலம் மற்றும் மரணங்களை விட்டுச் செல்கிறது, ஆனால் யுத்தங்களில் இருந்து இலாபமடைபவர்களின் கரங்களில், அதாவது பன்னாட்டு ஆயுத தொழில்துறைகள் மற்றும் பெட்ரோலிய தொழில்துறைகளின் கரங்களில், அது செல்வங்களை ஒப்படைக்கிறது," என்றார்.

"ஒவ்வொரு ஆண்டும் இங்கே திரு. ஒபாமா உலக மக்களுக்கு யுத்தத்தின், இறுமாப்பின் மற்றும் அச்சுறுத்தலின் ஓர் உரையை வழங்குகிறார். இதுவும் ஒரு தீவிரவாத வெறித்தனத்தின் உரை தான்," என்று கூறி பொலிவிய ஜனாதிபதி நிறைவு செய்தார்.

பொது அவையில் அளிக்கப்பட்ட பெரும்பாலான உரைகள் குறைந்தபட்சம் பாதி வெறுமையாக, வெளிப்படையாக ஐ.நாவினது பலவீனத்தின் வெளிப்பாடாக இருக்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம் பகிரங்கமாக அறிவித்துள்ள "முன்கூட்டிய" கொள்கையை, அதாவது ஆக்கிரமிப்பு, யுத்தத்தைப் பின்பற்றி வருகின்ற நிலையில், .நாவினது ஸ்தாபக சாசனமோ ஒரு விலாசமற்ற கடிதமாக மாறியுள்ளது.