சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

US air strikes in Syria, just the beginning

சிரியாவில் அமெரிக்க விமான தாக்குதல்கள், வெறும் ஆரம்பமே

By Peter Symonds
24 September 2014

Use this version to printSend feedback

சிரியாவிற்குள் நேற்றைய பாரிய விமான தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்த நடவடிக்கைகள் ஒரு நீடித்த போரின் வெறும் ஆரம்பமே என்பதை பெண்டகன் தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்க முப்படை தளபதிகளின் நடவடிக்கைகளுக்கான இயக்குனர் லெப்டினென்ட் ஜெனரல் வில்லியம் மேவில் ஊடகங்களுக்கு கூறுகையில், இந்த தாக்குதல்கள் ISIS (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் அரசு) போராளிகள் குழுக்களுக்கு எதிரான "ஒரு நம்பகமான, நீடித்த, உறுதியான நடவடிக்கையின் தொடக்கமாகும்" என்றார். அந்த நடவடிக்கையின் கால அளவு குறித்து கேட்கப்பட்ட போது, “அது ஆண்டு கணக்கில் இருக்குமென நான் நினைக்கிறேன்," என்றார்.

அந்த விமான தாக்குதல்களின் நோக்கமும் அளவும், ஈராக்கை விட சிரியா தான் தொடக்கத்திலிருந்தே அதன் பிரதான இலக்காக இருக்கிறதென்ற உண்மையை அடிக்கோடிடுகிறது. ஒரு மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரி நியூ யோர்க் டைம்ஸிற்கு கூறுகையில், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் "ஈராக்கிய இஸ்லாமிய அரசுக்கு எதிராக அமெரிக்கா அதன் முந்தைய எல்லா நடவடிக்கைகளின் போது செய்ததைப் போலவே, ஒரே இரவில் எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு குண்டுகளை வீசியதாக" தெரிவித்தார். சிரியா மீது வீசப்பட்ட கப்பற்படை ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் வெறுமனே ISISக்கு எதிராக செலுத்தப்பட்டவை அல்ல, மாறாக அல் கொய்தா துணை அமைப்புகளுக்கு—ஜபாத் அல்-நுஸ்ரா, மற்றும் இதுவரையில் வெளியில் பிரபலமாகாமல் இருந்த "பயங்கரவாத" அமைப்பு குராசானுக்கு (Khorasan)—எதிராகவும் செலுத்தப்பட்டன.

பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த எந்த தகவலையும் லெப்டினன்ட் ஜெனரல் வில்லியம் மேவில் வெளியிடவில்லை என்றபோதினும், சிரியாவிற்குள் இருந்து வந்த முதல் அறிக்கைகள் கணிசமான மரணங்கள் மற்றும் அழிவுகளைச் சுட்டி காட்டின. லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் வடமேற்கு மாகாணமான இட்லிப்பின் ஒரு காணொளியை மேற்கோளிட்டுக் காட்டியது. அந்த காணொளி, குண்டுவீசப்பட்ட வீடுகளின் இடிபாடுகளை குடியிருப்போர் பொறுக்கி எடுத்துக் கொண்டிருப்பதையும், "மேற்கத்திய கூட்டணியின் தாக்குதல்களால் அப்பாவி மக்களின் வீடுகள் தான் பாரியளவில் நாசமாக்கப்பட்டுள்ளன" என்று அரசாங்க-விரோத நடவடிக்கையாளர் ஒருவரின் குரல் கூச்சலிடுவதையும் எடுத்துக்காட்டுகிறது. அப்பகுதியில் வீசப்பட்ட அமெரிக்க ஏவுகணைகளில் ஐந்தில் ஒன்று கஃபார் தார்யான் கிராமத்தின் குடியிருப்பு அண்டைபகுதியைத் தாக்கி, குழந்தைகள் உட்பட இரண்டு டஜன் மக்களைக் கொன்றிருப்பதாக அக்கட்டுரை விவரித்தது.

நேற்றைய தாக்குதல், மூன்று சுற்று தாக்குதல்களைக் கொண்டிருந்தன. முதலாவது சிரியாவின் மிகப் பெரிய நகரமான அலெப்போவைச் சுற்றிய இலக்குகளை நோக்கி செலுத்தப்பட்ட கப்பற்படை ஏவுகணைகளின் ஒரு சரமாரியான தாக்குதலாகும். இரண்டாவதில், வடக்கு சிரியாவில் ISIS சுற்றுச்சுவர்கள் மற்றும் வாகனங்களை தாக்க, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரெய்ன் மற்றும் ஜோர்டானின் போர் விமானங்களுடன் சேர்ந்து, அமெரிக்க போர்விமானங்களும் டிரோன்களும் ஈடுபட்டிருந்தன. மூன்றாவது சுற்றில், அதிலும் அரபு நாடுகள் சேர்ந்திருந்ததுடன், அது கிழக்கு சிரியாவில் ISIS தளங்களை இலக்கில் வைத்திருந்தது.

ஏவுகணைகளின் முதல் சுற்று ISISக்கு எதிராக செலுத்தப்படவில்லை, மாறாக அலெப்போவுக்கு அருகில் குராசான் இலக்குகளுக்கு எதிராக செலுத்தப்பட்டது என்ற உண்மையே குறிப்பிடத்தக்களவுக்கு முக்கியமானதாகும். அந்த தாக்குதல்களை நியாயப்படுத்துவதில், அமெரிக்க அதிகாரிகள் "ஒரு காலத்தில் அல் கொய்தா வீரர்களாக" இருந்த சிறிய, இரகசிய குழு "ஐரோப்பா அல்லது அமெரிக்க-அடிப்படையிலான இலக்கிற்கு எதிரான ஏதோவொருவித பயங்கரவாத தாக்குதலின் முன்னேறிய கட்டத்தில்" இருக்கிறதென வாதிட்டார்கள்.

ஒரு பயங்கரவாத தாக்குதல் உடனடி நிகழ்வாக இருந்ததற்கு பெண்டகன் செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் ஜோன் கெர்பி எந்தவொரு ஆதாரத்தையும் வழங்கவில்லை. பற்பசை டியூபுக்குள் வெடிப்பார்ந்த சாதனைகளைக் கொண்டு செல்வது மற்றும் திரவவடிவ வெடிப்பு பொருட்களுக்குள் ஆடைகளை முக்கி எடுத்துச் செல்வது உட்பட "கண்டறியவியலா அடுத்த-தலைமுறை குண்டுகளை" சர்வதேச விமானங்களுக்குள் கடத்துவது போன்ற அக்குழுவின் பரிசோதனைகளைக் குறித்து, பெயர்வெளியிட விரும்பாத உளவுவேலை-முறிப்பு அதிகாரிகள் பரபரப்பூட்டும் விபரங்களை ஊடகங்களுக்கு வழங்கினார்கள்.

இந்த புதிய பயங்கரவாத அச்சுறுத்தலானது, மத்திய கிழக்கில் புதிய அமெரிக்க-தலைமையிலான யுத்தத்திற்கு எழும் எதிர்ப்பை மழுங்கடிக்கும் ஒரு கருவியாக, அமெரிக்காவிலும் மற்றும் அதன் கூட்டணி நாடுகளிலும் ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகங்களால் செய்யப்பட்டு வருகின்ற பயமுறுத்தும் மற்றும் சந்தேக சூழலை, மேலதிகமாக தீவிரப்படுத்த சேவை செய்கிறது. அது கூடுதலான பொலிஸ்-அரசு முறைமைகளுக்கும் மற்றும் கருத்து வேறுபாடு கொண்டவர்களை ஒடுக்குவதற்கும் அடித்தளத்தை அமைக்கிறது.

அதேநேரத்தில், ஒபாமா நிர்வாகம் அப்பட்டமான சர்வதேச விதிமீறிய ஓர் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்காக அதன் இற்றுப்போன நியாயப்பாடுகளுக்கு முட்டுக்கொடுக்க, அமெரிக்கா மீதான "உடனடி அச்சுறுத்தல்" என்பதை பற்றிக்கொண்டது. .நா பொதுச்செயலாளர் பான் கி-மூனுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ஐ.நாவிற்கான அமெரிக்க தூதர் சமந்தா பௌவர், சிரியா மீதான தாக்குதல்கள் சட்டத்திற்குட்பட்டதே ஏனென்றால் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க கைப்பாவை ஆட்சி முறையிட்டதற்காக அவை நடத்தப்பட்டன என்ற அர்த்தமற்ற வாதத்துடன், குராசான் "பயங்கரவாத அச்சுறுத்தலையும்" சேர்த்துக் கொண்டார்.

அலெப்போவைச் சுற்றிய தாக்குதலுக்கும், குராசானால் முன்னிறுத்தப்பட்ட எந்தவொரு ஆபத்திற்கும் இடையில் இருக்கும் விகிதம் முற்றிலுமாக பொருத்தமற்று இருக்கிறது. ABC News உடன் பேசிய அமெரிக்க அதிகாரிகளின் கருத்துப்படி, அதில் "சுமார் 50 பேர் அல்லது அதற்கு சற்று கூடுதலான போராளிகள்" தான் இருப்பார்கள். செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடாவில் அமெரிக்க கடற்படை வாகனங்களில் இருந்து செலுத்தப்பட்ட 47 டோமாஹாக் கப்பற்படை ஏவுகணைகளில் பெரும்பாலானவை அலெப்போவைச் சுற்றியுள்ள இலக்குகளை நோக்கி செலுத்தப்பட்டவை ஆகும்.

இந்த தாக்குதலின் நிஜமான நோக்கம் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கட்டுரை ஒன்றில் வெளிப்பட்டிருந்தது. அந்த தாக்குதல்கள் முன்கூட்டியே அலெப்போவில் உள்ள மேற்கத்திய-சார்பு சுதந்திர சிரிய இராணுவத்துடன் (FSA) வேலை செய்து நடத்தப்பட்டிருந்ததை அக்கட்டுரை சுட்டிக்காட்டியது. “அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட TOWகள் என்றறியப்பட்ட, ஒளியைக் கொண்டு கண்டறியும் டாங்கி-தகர்ப்பு ஆயுதங்கள், ஆயுத தளவாடங்கள் மற்றும் தொலைதொடர்பு சாதனங்கள் உட்பட", புதிய இராணுவ தளவாடங்களை சிஐஏ சமீபத்தில் FSAக்கு வழங்கியிருப்பதாக அந்த பத்திரிகைக்கு சிரிய எதிர்ப்பு செய்திதொடர்பாளர் ஒபாய் ஷாஹ்பந்தர் தெரிவித்தார்.

அமெரிக்க தாக்குதல்கள் சிரிய இராணுவ தளங்களுக்கு எதிராக நடத்தப்படவில்லை, மாறாக ISIS உட்பட FSAஇன் பல்வேறு இஸ்லாமிய விரோதிகளுக்கு எதிராக FSAஐ பலப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வாதிட்டது. எவ்வாறிருந்தபோதினும், இந்த கடுமையான-போட்டி நிறைந்த பகுதியில் அமெரிக்க போர் விமானங்களின் தலையீடு சிரியாவின் நீடித்த உள்நாட்டு யுத்தத்தில் வாஷிங்டன் நேரடியாக தலையிடுவதையே அர்த்தப்படுத்துகிறது. பிரதான அமெரிக்க இலக்கு ISIS அல்ல, மாறாக சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியாகும். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, சிரிய இராணுவம் சம்பந்தப்படும் எந்தவொரு அச்சுறுத்தலையோ அல்லது சம்பவத்தையோ, வாஷிங்டனால் அந்த ஆட்சிக்கு எதிரான விமான யுத்தத்திற்கு போலிக்காரணமாக திருப்ப முடியும். அத்தகைய ஒரு யுத்தம் தான் கடந்த ஆண்டு திட்டமிடப்பட்டு கடைசி நிமிடத்தில் இரத்து செய்யப்பட்டது.

யுத்த அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள சிரிய அரசாங்கமோ, ISIS மீதான அமெரிக்க தாக்குதல்களில் அதனுடன் ஒத்துழைக்க முற்படுவதன் மூலமாக சூழலைச் சமாளிக்க முயன்று வருகிறது—இந்த பரிந்துரையை வாஷிங்டன் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. சிரியா பிராந்தியத்தின் மீதான நேற்றைய பேரழிவுகரமான தாக்குதலை சட்டவிரோதமானதென கண்டிப்பதற்கு மாறாக, அந்த ஆட்சி அத்தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிவிப்புகள் அளிக்கப்பட்டிருந்ததாக ஊக்குவித்தது. துணை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பென்ஜமின் ரோட்ஸ் ஊடகங்களுக்கு தெரிவித்ததைப் போல, "எங்களின் விமானங்களுக்கு ஓர் அச்சுறுத்தலை முன்னிறுத்த வேண்டாம்" என்ற ஓர் அதட்டலான அச்சுறுத்தலே அமெரிக்காவின் ஒரே அறிவிப்பாக இருந்தது.

அசாத் ஆட்சியின் பிரதான ஆதரவாளர்கள்—ஈரான் மற்றும் ரஷ்யாஅமெரிக்க விமான தாக்குதல்களின் மீது எச்சரிக்கையுடன், நிபந்தனைகுட்பட்ட விமர்சனங்களை வழங்கி உள்ளன. NBC Newsக்கு அளித்த கருத்துக்களில், ஈரானிய ஜனாதிபதி ஹாசன் ரௌஹானி கூறுகையில் அந்த தாக்குதல்கள் ஐ.நா ஒப்புதல் இல்லாமல் அல்லது அசாத் அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் நடத்தப்பட்டதாக குறை கூறினார், ஆனால் அவற்றை நேரடியாக கண்டிக்கவில்லை. ரஷ்ய வெளியுறவு அமைச்சகமும் அதேபோன்ற கருத்துக்களை வெளியிட்டது. சிரியாவில் அமெரிக்க யுத்தம் என்பது மத்திய கிழக்கில் அவற்றின் மூலோபாய நலன்களுக்கு எதிரானது என்பதை அவற்றிற்கு நன்றாக தெரியும் என்றாலும் கூட, இரண்டு அரசாங்கங்களுமே அமெரிக்கா உடன் ஒரு மோதலைத் தவிர்க்க முனைந்து வருகின்றன.

நேற்றைய தாக்குதல்கள் 2003இல் அமெரிக்க தலைமையிலான ஈராக்கிய படையெடுப்பைத் தொடங்கி வைத்த அந்த "அதிரடி ஆக்கிரமிப்பு" குண்டுவீச்சின் மீள்செயல் அல்ல என்று பெண்டகன் அறிவித்தது. ஆனால் சில சமீபத்திய மற்றும் மிக நவீன ஆயுத முறைகளைப் பயன்படுத்தியது உட்பட அமெரிக்கா அதன் இராணுவ பலத்தை வெளிப்படையாக காட்டுவதென்பது அச்சுறுத்துவதையும், பீதியடைய செய்வதையும் நோக்கமாக கொண்டிருந்தது என்பதில் அங்கே எந்த சந்தேகமும் இல்லை. அமெரிக்க இராணுவம் மத்திய கிழக்கிலும் மற்றும் அதைக் கடந்தும் உள்ள அமெரிக்க எதிராளிகளுக்கு தவறுக்கிடமற்ற எச்சரிக்கைகளை வழங்கும் வகையில், அதன் F-22 ராப்டர் இரகசிய போர்விமானங்களை மற்றும் டோமாஹாக் ஏவுகணைகளின் சமீபத்திய ரகங்களைப் பரிசோதிக்க அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியது.