சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Seventy-five years since the outbreak of World War II

இரண்டாம் உலக போர் வெடித்ததிலிருந்து எழுபத்தி-ஐந்து ஆண்டுகள்

Barry Grey
1 September 2014

Use this version to printSend feedback

இன்று, செப்டம்பர் 1, 2014, இரண்டாம் உலக போர் வெடித்த 75ஆம் ஆண்டுதினத்தைக் குறிக்கிறது. போலாந்து மீதான ஜேர்மன் படையெடுப்புக்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர், அந்த மூன்றாம் குடியரசுக்கு எதிராக பிரிட்டிஷூம் பிரெஞ்சும் யுத்த பிரகடனங்களை அறிவித்தன.

வார்சோ மீதான நாஜி குண்டுவீச்சுடன் தொடங்கிய அந்த மனித மற்றும் சமூக பேரழிவு ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்காவின் அணுகுண்டுவீச்சுடன் முடிவுக்கு வந்தது. இந்த இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில், 80இல் இருந்து 90 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள், அதற்கு கூடுதலாக நூறு மில்லியன் கணக்கான மக்கள் உடல்ரீதியாகவும், உணர்வுரீதியாகவும் பாதிக்கப்பட்டார்கள்.

5 மில்லியன் போர் கைதிகளின் மரணங்கள் உட்பட மொத்தமாக 22 மில்லியனில் இருந்து 25 மில்லியனுக்கு இடையே இராணுவ மரணங்கள் ஏற்பட்டிருந்தன.

முதலாம் உலக யுத்தத்தை விட இரண்டாம் உலக யுத்தத்தில் மிக அதிகமாக மனித விலை கொடுக்கப்பட்டிருந்தது, முந்தையதில் 9இல் இருந்து 16 மில்லியனுக்கு இடையே உயிர்கள் பறிக்கப்பட்டிருந்தன. முதலாவது உலகளாவிய இரத்தகளரியின் முடிவுக்கும் இரண்டாவது ஒன்று தொடங்கியதற்கும் இடையே வெறும் 21 ஆண்டுகள் தான் இடைவெளி இருந்தது.

முதலாம் உலக யுத்தம் வெடிக்க காரணமான உலக முதலாளித்துவ முரண்பாடுகளிலிருந்து 1917 ரஷ்ய புரட்சி எழுந்தது, மேலும் அந்த யுத்தமே கூட முக்கியமாக ரஷ்ய சோசலிச புரட்சியின் ஒரு விளைவாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருந்ததது.

அதற்கடுத்து வந்த இரண்டு தசாப்தங்களில், சோவியத் ஒன்றியத்திற்குள் எழுந்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் காட்டிக்கொடுப்புகள் மற்றும் சமூக ஜனநாயக கட்சிகளின் துரோகங்களால் சர்வதேச தொழிலாளர் வர்க்கம் ஒரு தொடர்ச்சியான தோல்விகளில் பாதிக்கப்பட்டது. இத்தாலி, ஜேர்மனி மற்றும் ஸ்பெயினில் பாசிசம் வெற்றி பெற்றது.

சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்ற இந்த மாற்றீடுகளைத் தான் மனிதகுலம் முகங்கொடுத்து வருகிறதென லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையிலான நான்காம் அகிலம் எச்சரித்தது. ஒரு புதிய உலக யுத்தத்தை தடுக்கக்கூடிய ஒரே சக்தியாக பாட்டாளி வர்க்க புரட்சி இருந்தது. ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கத்தின் தோல்விகள் அதுபோன்றவொரு யுத்தத்தை தவிர்க்கவியலாததாக மாற்றியிருந்ததென ட்ரொட்ஸ்கி எழுதினார்.

இரண்டாம் உலக யுத்தம் வெடிப்பதற்கு ஓராண்டிற்கு முன்னதாக, ட்ரொட்ஸ்கி, நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தில் வரவிருந்த பிரளயத்தைக் குறித்து எச்சரித்திருந்தார். முதலாளித்துவம் "ஒரு பொருளாதார மற்றும் இராணுவ பேரழிவை நோக்கி கண்களை மூடி சறுக்கி செல்வதாக" அவர் எழுதினார்.

அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிரச்சாரகர்கள் வாதிட்டதைப் போல இரண்டாம் உலக யுத்தம், பாசிசத்திற்கு எதிராக ஒரு "ஜனநாயகத்திற்கான யுத்தமாக" இருக்கவில்லை. அது முதலால் உலக யுத்தம் எதிலிருந்து வெடித்திருந்ததோ, அதாவது, உலக பொருளாதாரத்திற்கும் எதிர்விரோத தேசிய அரசுகளுக்கும் இடையே இருந்த அதன் பிரிவுகளுக்கும் இடையிலான, மற்றும் சமூகமயப்பட்ட உற்பத்திக்கும், உற்பத்தி கருவிகளின் தனியுடைமைக்கும் இடையிலான, முதலாளித்துவத்தின் தீர்க்கவியலாத அடிப்படை முரண்பாட்டிலிருந்து எழுந்திருந்தது.

ஹிட்லரது ஆட்சி ஐரோப்பாவில் யுத்தத்தை தூண்டிவிட்டது. ஆனால் அந்த நாஜி குடியரசு, ஏகாதிபத்தியத்தின் பேரழிவுகரமான மற்றும் குற்றகரமான இயல்பின் மிகவும் உச்சக்கட்ட வெளிப்பாடு மட்டுமே ஆகும். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், இத்தாலி, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட, பெரிய மற்றும் சிறிய, அனைத்து ஏகாதிபத்திய சக்திகளின் ஆளும் வர்க்கங்களும் தங்கள் போட்டியாளர்களின் இழப்பில் உலகை மறுபங்கீடு செய்யவும் மற்றும் மூலப்பொருட்கள், சந்தைகள் மற்றும் மலிவு உழைப்பு ஆதாரங்கள் மீது அவற்றின் கட்டுப்பாட்டை அதிகரிக்கவும் போரில் ஈடுபட்டிருந்தன.

அந்த ஆறு ஆண்டுகால யுத்தத்தின் போக்கில், தோற்றப்பாட்டளவிற்கு ஒட்டுமொத்தமாக ஐரோப்பிய யூதர்களும் இல்லாதொழிக்கப்பட்டமை உள்ளடங்கிய கொடூரங்கள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஹிட்லரின் நிர்மூலமாக்கும் யுத்தத்தின் பாகமாகவே இருந்தது. போலாந்து அதன் மக்கள்தொகையில் 16 சதவீதத்திற்கும் அதிகமாக 5.8 மில்லியன் மக்களை இழந்தது. அவற்றின் மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 10 சதவீத மக்களை இழந்த நாடுகளில் கிரீஸ், லிதுவேனியா மற்றும் லாட்வியா ஆகியவை உள்ளடங்கும்.

போலாந்து, பால்டிக் நாடுகள் மற்றும் ஜேர்மனியில் இருந்த யூதர்களில் 90 சதவீதத்தினர் உட்பட, 1939 மற்றும் 1945க்கு இடையே சுமார் 6 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டார்கள்.

ஆசியாவில், ஜப்பானிய ஏகாதிபத்தியம் பசிபிக்கை கட்டுப்பாட்டில் பெற மற்றும் சீனாவை காலனிமயமாக்க படுபயங்கர நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் ஆகஸ்ட் 1945இல் ஜப்பானை அடிபணியசெய்ய அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பயன்படுத்தப்பட்ட அணுகுமுறைகள் முற்றிலுமாக ஒரு காட்டுமிராண்டித்தனமான குணாம்சத்தை கொண்டிருந்தது. மூன்று நாட்களின் போக்கில், அமெரிக்கா நிராயுதபாணியான மற்றும் இராணுவரீதியில் முக்கியத்துவமற்ற நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் மீது அணுகுண்டுகளை வீசியது. அந்த இரண்டு குண்டுகளினது மரண எண்ணிக்கையே 150,000 பேர்கள் ஆகும்.

இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் நாகரீகமும், காட்டுமிராண்டித்தனமும் என்ற அவரது நூலில் அமெரிக்க வரலாற்றாளர் கப்ரியல் ஜாக்சன் எழுதினார்: “ஆகஸ்ட் 1945இன் அந்த குறிப்பிட்ட சூழலில், அணு குண்டு பயன்படுத்தியமை உளவியல்ரீதியாக மிகவும் சாதாரணமாக இருந்ததையும், நாஜி சர்வாதிகாரி அதை பயன்படுத்தி இருக்கக்கூடிய அதேவிதத்தில் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை நிர்வாகி அந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி இருந்தார் என்பதையும் எடுத்துக்காட்டியது. இவ்விதத்தில், அமெரிக்கா வெவ்வேறு வகையான அரசாங்கங்களின் நடத்தையில் இருக்கும் அறநெறிரீதியிலான வேறுபாடுகள் குறித்து கவலைப்படுபவர்கள் எவருக்கும் பாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை தகர்த்திருந்தது."

அமெரிக்க ஆளும் வர்க்கம் அந்த யுத்தத்தில் அதன் வெற்றியை, உலகில் அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு பாதையைத் திறந்துவிட்டதாக பார்த்தது. ஆனால் அதன் அபிலாஷைகள் சோவியத் ஒன்றியத்தின் இருப்பினாலும், அத்துடன் சீனா மற்றும் இந்தியாவில் இருந்த புரட்சிகள் உட்பட ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவெங்கிலும் பரவியிருந்த காலனித்துவ-எதிர்ப்பு போராட்டங்களாலும் செயல்குலைந்திருந்தது.

அதைத் தொடர்ந்து வந்த யுத்தங்களில் கொரியா, வியட்நாம் மற்றும் பனிப்போருடன் சம்பந்தப்பட்ட பல சிறிய போர்களில்சுமார் 20 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் தூண்டிவிடப்பட்டு 1991இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதுடன், பனிப்போர் முடிவுக்கு வந்ததையும் மற்றும் முதலாளித்துவத்தின் வெற்றியையும் மட்டும் அமெரிக்கா பிரகடனப்படுத்தவில்லை, அது ஒரு "சமாதான வெகுமதிக்கும்" உறுதியளித்தது. ஆனால் அதுபோன்ற எதுவும் நடக்கவில்லை.

அமெரிக்க ஆளும் வர்க்கம் உத்தியோகபூர்வமாக உலகளாவிய மேலாதிக்கத்திற்கான ஒரு கொள்கையை ஏற்றது. அதன்வாயிலாக அதன் பொருளாதார வீழ்ச்சியை சரிக்கட்ட முடியுமென்ற நம்பிக்கையில், அது அதன் இராணுவ பலத்தின் பிரயோகத்தை தீவிரப்படுத்த, "ஒற்றைதுருவச் சூழல்" (unipolar moment) என்று அது எதை அழைத்ததோ அதைக் கைப்பற்றியது. பேர்லின் சுவர் இடிக்கப்பட்டதில் இருந்து 1990களின் இறுதி வரையில், பனாமா, சோமாலியா, ஈராக், ஹைட்டி, சூடான், ஆப்கானிஸ்தான் மற்றும் யூகோஸ்லாவியா உட்பட பல நாடுகளின் மீது அமெரிக்கா படையெடுத்தது; குண்டுவீசியது அல்லது ஆக்கிரமிப்பு செய்தது.

வாஷிங்டன் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களை "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தைப்" பிரகடனப்படுத்த பற்றிக்கொண்டது, அது உலகெங்கிலும் இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு மூடிமறைப்பேயன்றி வேறொன்றுமில்லை. அது அதன் உலகளாவிய நலன்களுக்கு ஒரு தடையாக இருக்கும் எந்தவொரு நபரையோ, குழுவையோ அல்லது நாட்டையோ தாக்கும் உரிமையை தனக்குத்தானே வழங்கிக்கொண்டு, ஒரு முன்கூட்டி தாக்கும் யுத்தக் கொள்கையை (policy of preventive war) ஏற்றது.

2008இல் வெடித்த உலக முதலாளித்துவத்தின் உடைவானது, உலகின் ஒரு புதிய பிளவுக்கு ஏகாதிபத்திய சக்திகளின் உந்துதலை தீவிரப்படுத்தியது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கின் கொடூரமான யுத்தங்களை, லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான யுத்தங்கள் பின்தொடர்ந்தன. இப்போது, அமெரிக்கா ஈராக்கில் ஒரு புதிய யுத்தத்தைத் தொடங்கியுள்ளதுடன், சிரியாவில் குண்டுவீசவும் தயாரிப்பு செய்து வருகிறது.

அதிகரித்துவரும் சமூகப் பதட்டங்கள் மற்றும் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் கீழ், ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்கள் கியேவில் அமெரிக்கா மற்றும் ஜேர்மனால் ஒத்து ஊதப்பட்டு பாசிச-தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதியால் தூண்டிவிடப்பட்ட உக்ரேனிய மோதலை பொறுப்பற்ற விதத்தில், மிகஅதிகளவில் அணுஆயுத தளவாடங்களைக் கொண்டுள்ள உலகின் இரண்டாவது நாடான ரஷ்யாவிற்கும் மற்றும் நேட்டோவிற்கும் இடையே ஒரு பகிரங்க யுத்தத்தைக் கொண்டுவரும் ஒரு புள்ளிக்கு அழுத்தம் அளித்து வருகின்றன.

ஐரோப்பாவில் அமெரிக்க-தலைமையிலான அத்துமீறல், ரஷ்யாவை அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் ஒரு அரை-காலனியாக்குவதற்காக மற்றும் அதை சுற்றி வளைப்பதற்காக, அதற்கெதிரான இராணுவ நடவடிக்கைகளில் உக்ரேனை ஒரு இராணுவத் தளமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இரண்டாம் உலக யுத்தம் தொடங்கிய 75ஆம் நினைவாண்டு தினத்திற்கு முந்தைய நாள், ரஷ்யாவிற்கு எதிராக ஆத்திரமூட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்த, ஐரோப்பிய அராசங்க மற்றும் இராணுவ தலைவர்கள் ஒன்றுகூடினார்கள். வாரயிறுதியில் நடத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு மாஸ்கோ மீதான தடைகளை அதிகரிக்க உறுதியேற்றது, அதேவேளையில் நேட்டோ தலைவர்கள் அமெரிக்க-தலைமையிலான ஏகாதிபத்திய இராணுவ கூட்டணிக்குள் உக்ரேன் இணைவதற்கு அழைப்புவிடுத்தார்கள்.

ஒரு நேட்டோ அங்கத்துவ நாடான லித்துவேனியாவின் அமெரிக்க-ஆதரவிலான வலதுசாரி ஜனாதிபதி டாலியா கிரெபௌஸ்கைய்ட், ரஷ்யா ஏற்கனவே உக்ரேனுடனும், ஒட்டுமொத்த ஐரோப்பா உடனும் போரில் ஈடுபட்டிருக்கிறது என்று சனியன்று பிரகடனம் செய்தார்.

நவ-பழைமைவாத வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளரும், போலாந்தின் வெளியுறவு மந்திரியின் மனைவியுமான ஆன் அப்லெபௌம், “ஐரோப்பாவில் யுத்தமென்பது ஒரு மிரட்சியூட்டும் சிந்தனையல்ல" என்ற தலைப்பிட்டு ஞாயிறன்று ஒரு கட்டுரை பிரசுரித்தார். “ஆகவே முழு யுத்தத்திற்கு தயாராவதென்பது மிரட்சியூட்டுவதாகுமா? அவ்வாறு செய்யாமல் இருப்பது சிறுபிள்ளைத்தனம் ஆகாதா?" என்ற கேள்வியோடு அந்த கட்டுரையை முடிக்கிறார்.

இதற்கிடையே, ஒபாமா நிர்வாகத்தினது "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" என்றழைக்கப்படுவதன் பதாகையின் கீழ், அமெரிக்க ஏகாதிபத்தியம் சீனாவை ஒரு காலனித்துவ அந்தஸ்திற்குக் குறைக்கும் நோக்கில் ஒரு அத்துமீறலை நடத்திக் கொண்டிருக்கிறது. சீனாவைத் தனிமைப்படுத்தவும் மற்றும் அதை இராணுவரீதியில் சுற்றி வளைப்பதற்குமான உந்துதலில் இருக்கும் தர்க்கம், ஒட்டுமொத்தமாக யுத்தம் என்பதாகும்.

நான்காம் அகிலத்தின் 1938 ஸ்தாபக வேலைத்திட்டத்தில், ட்ரொட்ஸ்கி எழுதினார்: “அதிகரித்துவரும் முதலாளித்துவ சிதைவின் பதட்டங்களின் கீழ், ஏகாதிபத்திய குரோதங்கள் உச்சகட்டமாக ஒரு முட்டுச்சந்தை அடைகின்றன, அதில் நடக்கும் தனித்தனியான மோதல்களும் மற்றும் இரத்தந்தோய்ந்த உள்நாட்டு குழப்பங்களும் (எத்தியோப்பியா, ஸ்பெயின், தூர கிழக்கு, மத்திய ஐரோப்பா) தவிர்க்கவியலாமல் உலகளவில் ஒரு மோதலுக்குள் வந்தே தீரும்."

எத்தியோப்பியா மற்றும் ஸ்பெயின் என்பதற்கு பதிலாக ஈராக் மற்றும் சிரியா என்று மாற்றிவிட்டால், 76 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த வரிகள் இன்றைய உலக அரசியல் நிலைமைக்கு இரத்தினச் சுருக்கமாக ஒரு சுருக்கவுரையை வழங்குகின்றன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, ஜூன் 9இல் வெளியிட்ட "சோசலிசமும், ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிரான போராட்டமும்" என்ற அதன் அறிக்கையில் அறிவித்ததைப் போல, “ஒரு புரட்சிகர மார்க்சிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கம் தலையிடவில்லை என்றால், இன்னுமொரு ஏகாதிபத்திய இரத்த ஆறு ஓடுவது சாத்தியம் என்பது மட்டுமல்ல தவிர்க்கமுடியாததாகவும் கூட இருக்கிறது.”

வரலாற்றின் படிப்பினைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். உலகப் போருக்கான ஏகாதிபத்திய உந்துதலை சோசலிச புரட்சியைத் தவிர வேறு எதனாலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த ஏகாதிபத்திய அமைப்புமுறை மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக திரும்பியதும், ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தால் வழிநடத்தப்பட்டதும், தொழிலாள வர்க்கத்தை அடித்தளமாக கொண்டதுமான யுத்தத்திற்கு எதிரான ஒரு பாரிய இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அத்தியாவசியமானதாகும்.

நாம் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்புவிடுக்கிறோம். மற்றொரு உலக யுத்தத்தைத் தடுப்பதற்கு அவசியமான தலைமையை வழங்க, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவில் மற்றும் அதன் தேசிய பகுதிகளான சோசலிச சமத்துவ கட்சிகளில் இணைந்து, அவற்றைக் கட்டியெழுப்புங்கள்.