சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Anti-government protests deepen Pakistan’s political crisis

அரசாங்க-எதிர்ப்பு போராட்டங்கள் பாகிஸ்தான் அரசியல் நெருக்கடியை ஆழப்படுத்துகின்றன

By Sampath Perera and K. Ratnayake
2 September 2014

Use this version to printSend feedback

பாகிஸ்தானிய பிரதம மந்திரி நவாஸ் ஷெரீப்பின் இராஜினாமாவைக் கோரிவருகின்ற அரசாங்க-எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கும், கலக-தடுப்பு பொலிஸிற்கும் இடையே வாரயிறுதி வாக்கில் மோதல் ஏற்பட்டதற்குப் பின்னர், பாகிஸ்தானின் அரசியல் நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது.

போராட்டக்காரர்கள் இஸ்லாமாபாத்தில் ஷெரீப்பின் அரசு குடியிருப்பு மற்றும் அதையொட்டி உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றார்கள். பொலிஸ் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டார்கள், 550க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். பொலிஸ் 100க்கும் மேற்பட்டவர்களை கைதும் செய்தது.

பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சி தலைமை நிலையத்தைத் தாக்கியும் மற்றும் சூறையாடியும், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்--இன்சாப்பின் (PTI) போராட்டக்காரர்கள் பதட்டங்களுக்கு எரியூட்டினார்கள், பின்னர் இராணுவ துருப்புகள் வந்ததும் அவ்விடத்திலிருந்து அகன்றார்கள்.

கனடாவிலும் மற்றும் பாகிஸ்தானிலும் இருநாட்டு குடியுரிமை பெற்ற ஒரு சுன்னி மதகுருவான தஹீர் உல்-கத்ரி தலைமையிலான பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் (PAT) மற்றும் PTIஇன் தொடர்ச்சியான போராட்டங்களை எதிர்கொண்டு மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதம மந்திரி கேட்டுக் கொண்டதும், கடந்த வியாழனன்று தலைமை இராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் அரசியல் நெருக்கடிக்குள் களமிறங்கினார்.

விவகாரங்களை இராணுவத்திடம் ஒப்படைப்பதாக அவரைக் குற்றஞ்சாட்டி ஊடகங்கள் மற்றும் அரசியல் எதிர்கட்சிகளிடமிருந்து பரந்த விமர்சனங்கள் வந்ததும், தாம் இராணுவத் தலைவரை தலையீடு செய்ய சொல்லி கோரவில்லை என ஷெரீப் பின்னர் மறுத்திருந்தார். பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்களில் அதன் அதிகாரத்தை வலியுறுத்திய அந்த இராணுவ தலையீடு, பரவலாக ஒரு "மென்மையான ஆட்சிக்கவிழ்ப்பு சதியாக" வர்ணிக்கப்பட்டது.

சனியன்று மீண்டும் போராட்டங்களில் கூடிய கூட்டத்தைக் கலைக்க, உள்துறை மந்திரி நிசார் சௌத்ரி அலி கான் ஒரு ஒடுக்குமுறைக்கு உத்தரவிட்டார். பொலிஸ் கண்ணீர் புகை குண்டுகளை மழையென பொழிந்ததுடன், நிஜமான தோட்டக்களுடனும், ரப்பர் தோட்டாக்களுடனும் துப்பாக்கிச்சூடு நடத்தியது.

பொலிஸ் வன்முறையை எதிர்த்து PTI மற்றும் PAT ஆதரவாளர்கள் ஞாயிறன்று லாகூர், கராச்சி மற்றும் ஏனைய நகரங்களிலும் போராட்டங்கள் நடத்தினர். இஸ்லாமாபாத்தில் மட்டும் சுமார் 30,000 பொலிஸ் மற்றும் துணை இராணுவப்படைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இராணுவத்தின் கரங்களைப் பலப்படுத்தி நெருக்கடிக்கு இராணுவத்தைப் பிரயோகிப்பதை அடிக்கோடிடும் வகையில், சமீபத்திய அபிவிருத்திகளை விவாதிக்க, ஞாயிறன்று மாலை, தளபதி ஷெரீப் படைத் தளபதிகளின் ஒரு அவசர கூட்டத்திற்கு அழைப்புவிடுத்தார். அக்கூட்டத்திற்குப் பின்னர், அதன் மக்கள்தொடர்புத்துறை அலுவலகம், போராட்டங்களை அடக்க "படைகளைப் பயன்படுத்துவது" மீது அதன் கவலைகளை வெளிப்படுத்தியதோடு, "அந்த நிலைமையை அரசியல்ரீதியாக தீர்க்க" வலியுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டது.

"அரசு சொத்துக்களைப் பாதுகாக்க" பொலிஸ் தாக்குதல் அவசியப்படுவதாக பொலிஸ் தாக்குதலை நியாயப்படுத்திய உள்துறை மந்திரியின் நியாயப்பாடுகளை அந்த அறிக்கை துல்லியமாக நிராகரித்திருந்தது. அது போராட்டக்காரர்கள் மீது இன்னும் கூடுதல் ஒடுக்குமுறை குறித்த பாதுகாப்பு மந்திரி ஹவாஜா முஹம்மத் ஆசிப்பின் அச்சுறுத்தலுக்கும் சவால் விடுத்திருந்தது.

நேற்று தளபதி ஷெரீப் இராணுவத்தின் சேதியை வழங்க பிரதம மந்திரியைச் சந்தித்தார். எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை. ஆனால் பிரபல உருது மொழி துனியா தொலைக்காட்சி உட்பட தனியார் சேனல்கள் குறிப்பிடுகையில், கடந்த தேர்தலில் ஷெரீப்பின் பாகிஸ்தானிய முஸ்லீம் லீக் (PML-N) மோசடி செய்தது மீதான PTIஇன் குற்றச்சாட்டுக்கள் மீது விசாரணை நடத்தப்படும் வரையில், மூன்று மாதங்களுக்கு பிரதம மந்திரி பதவியை இராஜினாமா செய்யுமாறு ஷெரீப்பிற்கு இராணுவ தலைவர் ஆலோசனை வழங்கியதாக குறிப்பிட்டன.

இராணுவத் தலைவர் அதுபோன்ற எந்த முறையீடும் செய்யவில்லையென அரசாங்கம் மறுத்தது. ஒரு நாடாளுமன்ற கூட்டு கூட்டத்திற்குப் பின்னர், அவர் இராஜினாமா செய்யப் போவதும் இல்லை அல்லது மூன்று மாதங்களுக்கு விடுப்பில் செல்லப் போவதும் இல்லையென ஷெரீப் உறுதியாக தெரிவித்தார். இராணுவ மக்கள்தொடர்பு அலுவலகம் ஊடக செய்திகளை ஆதரமற்றவையென வர்ணித்தன. சூழ்நிலை என்னவாக இருந்தாலும், அந்த வதந்தி எழுந்ததே அரசியல் நெருக்கடியின் ஆழத்தையும் மற்றும் இராணுவம் வேகமாக ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

அந்த நாடாளுமன்ற கூட்டத்திற்குப் பின்னர், பாதுகாப்பு மந்திரி ஆசிப் இராணுவத்தை "அரசியல் சார்பற்றதாக" புகழ்ந்ததுடன், அது ஜனநாயகத்திற்கு பொறுப்பேற்றிருப்பதாக குறிப்பிட்டார். இருந்தபோதினும், கான் மற்றும் கத்ரியுடன் விவாதங்கள் நடத்த ஒரு குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்ட இராணுவத்தின் ஆலோசனையை அரசாங்கம் ஏற்குமெனவும் அவர் தெரிவித்தார்.

பிரதம மந்திரியின் வீட்டை நோக்கி பேரணி செல்ல வேண்டாமென்ற கட்சிக் குழுவின் முடிவை இம்ரான் கான் நிராகரித்ததாக குற்றஞ்சாட்ட நேற்று கட்சி தலைவர் ஜாவித் ஹாஸ்மி ஒரு பத்திரிகையாளர் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்த போது, PTIக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் வெளிப்பட்டன. இராணுவம் தான் மோதலைத் தூண்டிவிட்டதென மறைமுகமாக சுட்டிக்காட்டும் விதத்தில், பேரணியைத் தொடருமாறு கானுக்கு "வெளியிலிருந்து" சேதி வந்திருந்தது என ஹாஸ்மி குற்றஞ்சாட்டினார். கான் அந்த குற்றச்சாட்டை மறுத்தார், அதேவேளையில் இராணுவம் PTIக்கோ அல்லது PATக்கோ அது ஆதரவளிக்கவில்லை என்று வாதிட்டது.

PTI மற்றும் PAT இரண்டுமே ஊழலுக்கு எதிரான போராளிகளாக மற்றும் நல்லரசாங்கம், ஜனநாயகம் மற்றும் சமத்துவத்திற்கான போராளிகளாக காட்டிக் கொள்கின்றன. ஷெரீப்பைப் போலவே அதேயளவிற்கு இந்த கட்சிகளும் இராணுவத்தை சார்ந்திருக்கின்றன, இது அவற்றினது கிளர்ச்சியின் ஜனநாயக-விரோத தன்மையில் எடுத்துக்காட்டப்படுகின்றது. பொலிஸ் வன்முறையை எதிர்த்து இராணுவம் ஞாயிறன்று அதன் அறிக்கையை பிரசுரித்த போது, இரண்டு கட்சிகளுமே அதை பாராட்டி இருந்தன.

PML-N மற்றும் எதிர்கட்சிகளும் இராணுவத்தை "அரசியல் சார்பற்றதாகவும்" “ஜனநாயகத்தைத் தாங்கிப் பிடிப்பதாகவும்" புகழ்வதைப் பார்க்கையில், இராணுவம் அதிகாரத்தை ஏற்க வேண்டுமா, அல்லது அதிகாரத்தில் குறைந்தபட்சம் ஒரு பிரதான பங்கு வகிக்க வேண்டுமா என்பதன் மீது பாகிஸ்தானின் அரசியல் ஸ்தாபகத்திற்குள் ஒரு விவாதம் இப்போது நடந்து வருவதை எடுத்துக்காட்டுகிறது. 1947இல் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதில் இருந்து 67 ஆண்டுகளில் பாதிகாலம் அந்நாட்டை இராணுவமே ஆட்சி செய்திருக்கிறது. அது தேசிய வருவாயில் பெரும் பங்கை ஈர்த்திருப்பதுடன், பொருளாதாரத்தின் பெரும்பங்கைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறது.

முன்னதாக PTI மற்றும் PATஇன் முறையீடுகளை ஏளனம் செய்திருந்த மற்றும் இராணுவ தலையீட்டை எதிர்த்திருந்த Dawn நாளிதழ், அரசாங்கம் "அழியாமல் காப்பாற்றுவதற்கான" சாத்தியக்கூறுகள் மீது நேற்று கேள்வியெழுப்பி ஒரு தலையங்கம் பிரசுரித்திருந்தது. அது "ஜனநாயக அமைப்புமுறையைக் காப்பாற்ற அந்நாட்டில் ஜனநாயக சக்திகளின் பின்னால் அணிதிரளுமாறும்", கான் மற்றும் கத்ரிக்கு "பெரும் விட்டுகொடுப்புகளை" வழங்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தி இருந்தது. இது இராணுவத்தின் தலையீட்டிற்கு இணங்குவதற்கு ஒரு சமிக்ஞை செய்கிறது.

தொலைக்காட்சி நிலையம் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர், லண்டனை மையமாக கொண்ட Financial Times இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மேற்கத்திய அதிகாரியை மேற்கோளிட்டு எழுதியிருந்தது, அவர் குறிப்பிட்டிருந்தார்: “அரசாங்கம் தொடர்ந்து சீரழிந்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்." அவர் தொடர்ந்து எழுதுகையில், “இது பிரதம மந்திரியின் எதிர்காலத்தின் மீது கேள்விகளை எழுப்புகிறது," என்றார்.

பாகிஸ்தானில் பிரதான அதிகாரத்தை செலுத்தும் அமெரிக்கா, “அரசியல் அமைப்பிற்காக அதீத-அரசியலமைப்பு மாற்றத்தைத் திணிக்கும் எந்தவொரு முயற்சியையும்" எதிர்ப்பதாக ஓர் அறிக்கையில் அறிவித்தது. ஷெரீப் அரசாங்கத்தைக் கவிழ்க்க, குறைந்தபட்சம் தற்போதைக்காவது, நேரடி இராணுவ தலையீட்டை அது ஆதரிக்காதென மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுள்ளது.

மக்களிடையே இராணுவம் மதிப்பிழந்துள்ளது என்பதும், உத்தியோகபூர்வ அரசியல் கட்சிகள் பலவீனமான நிலையில் இருக்கின்றன என்பதும், இதனால் எந்தவொரு ஆட்சிக்கவிழ்ப்பு சதியும் இன்னும் மோசமான அரசியல் நெருக்கடியைக் கட்டவிழ்த்துவிடக் கூடுமென்பதுமே ஒபாமா நிர்வாகத்தின் பிரதான கவலையாக இருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் வாஷிங்டனால் நடத்தப்பட்டு வரும் போர், பாகிஸ்தானின் மேற்கத்திய எல்லையோரங்களில் அமெரிக்க டிரோன் தாக்குதல்கள் மற்றும் அந்நாட்டிற்குள் படிப்படியாக அதிகரிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு அமெரிக்கா அளித்த அழுத்தம் ஆகியவற்றால் தூண்டிவிடப்பட்டு, தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் மத்தியில் அங்கே ஆழ்ந்த அதிருப்தி நிலவுகிறது. வாஷிங்டன் பாகிஸ்தானுக்கு ஆண்டுக்கு 3 பில்லியன் டாலர் வழங்குகிறது, அதில் பெரும் பகுதி இராணுவத்திற்கு செல்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையினால் விளைந்த பொது செலவின தாக்குதல்கள் மற்றும் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பின்மை குறித்து அங்கே உழைக்கும் மக்கள் மத்தியில் கோபம் அதிகரித்து வருகிறது. ஆனால் கான் மற்றும் கத்ரி முழுமையாக இந்த நடவடிக்கைகளை ஆதரிக்கிறார்கள்.

பாகிஸ்தானின் பொருளாதாரம் பலவீனமான நிலையில் இருக்கிறது. வெளிநாட்டுக் கடன் ஊதிப் பெரிதாகி வருகிறது. அரசாங்கம் மின்சார கட்டணத்தை அதிகரிக்க மற்றும் மத்திய வங்கியை மறுசீரமைப்பதற்குரிய நெறிமுறைகளை நடைமுறைப்படுத்த தவறியதற்குப் பின்னர், IMF அதற்கு வழங்க வேண்டிய ஐந்தாவது கடன் தவணையான 6.67 பில்லியன் அமெரிக்க டாலரை நிறுத்தி வைத்தது. அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்கள் வெடிக்கும் என்ற அச்சத்தில் அது மின்சார விலைகளை உயர்த்தவில்லை.

நிகழ்ந்துவரும் அரசியல் நெருக்கடி, இராணுவம் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டை மீறி ஒரு சமூக மேலெழுச்சியை தூண்டிவிடுமோ என ஆளும் வட்டாரங்கள் அஞ்சுகின்றன.