சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India-Pakistan relations rapidly deteriorating

இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் வேகமாக மோசமடைந்து வருகின்றன

By Deepal Jayasekera
1 September 2014

Use this version to printSend feedback

சமீபத்திய வாரங்களில் இந்தியாவிற்கும் அதன் வரலாற்று போட்டி நாடான பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள், குறிப்பாக இப்போதைய இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான இந்திய அரசாங்கம் அவ்விரு நாட்டு வெளியுறவு செயலர்களுக்கு இடையே நடைபெறவிருந்த ஒரு கூட்டத்தை இரத்து செய்த பின்னர் கூர்மையாக மோசமடைந்துள்ளன.

முன்னாள் சமஸ்தானம் ஜம்மு & காஷ்மீரை இந்திய-வசமிருக்கும் மற்றும் பாகிஸ்தான்-வசமிருக்கும் பகுதிகளாக பிரிக்கும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை (LoC) ஒட்டி எல்லை-தாண்டிய துப்பாக்கிச்சூடு கடந்த மாதம் பெரிதும் அதிகரித்திருந்தது. அந்த எல்லை தாண்டிய குண்டுவீச்சில் குறைந்தபட்சம் அரை-டஜன் மக்கள் கொல்லப்பட்டார்கள், அத்துடன் LoCஇன் இருபக்கமும் இருக்கும் கிராமவாசிகளை அது அச்சமூட்டியிருந்தது.

கடந்த வார தொடக்கத்தில், இந்திய அரசாங்கமும் இராணுவ அதிகாரிகளும் பாகிஸ்தானுக்கு எதிராக சரமாரியான அச்சுறுத்தல்களை வெளியிட்டிருந்தார்கள். அவரது காஷ்மீர் பயணத்தின் போது, பாஜக தலைவரும் இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவருமான அமீத் ஷா, அனைத்து எல்லை-தாண்டிய தாக்குதல்களும் நிறுத்தபடவில்லையானால் இந்தியா பாகிஸ்தானுக்கு "தகுந்த பதிலடி" கொடுக்குமென சூளுரைத்தார்.

அங்கே உள்ளூரில் இருந்த இந்திய மற்றும் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான இரண்டு "கொடி மரியாதை சந்திப்புகள்" (flag meetings) கடந்த வாரம் LoCஇன் சோதனைச்சாவடிகளில் நடத்தப்பட்டிருந்தன, அவற்றில் இரண்டாவதொன்று வெள்ளியன்று நடந்திருந்தது. எல்லை-தாண்டிய துப்பாக்கிசூடு மற்றும் திடீர் ஆக்கிரமிப்புகள் அதிகரித்திருப்பதற்கு இரண்டு தரப்பும் ஒன்றையொன்று பொறுப்பாக்கி குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில், அந்த கூட்டங்கள் பதட்டங்களைத் தணிப்பதில் பெரிதாக ஒன்றும் செய்திருக்கவில்லை.

இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி அருண் ஜெட்லி சனியன்று பேசுகையில், 2003ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்பாட்டை பாகிஸ்தான் மீறுவதானது "முற்றிலும் தீவிரமானதும், ஆத்திரமூட்டுவதுமாகும்" என தெரிவித்தார்.

ஆகஸ்ட் 18இல், அதற்கடுத்த வாரம் திட்டமிடப்பட்டிருந்த வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான கூட்டத்தை அது இரத்து செய்வதாக இந்திய அரசாங்கம் அறிவித்தது. இது இந்தியாவிற்கான பாகிஸ்தானிய உயர்மட்ட கமிஷனர் அப்துல் பஷீத்திற்கும் மற்றும் சட்டப்பூர்வமாக-சகித்துக் கொள்ளப்பட்ட இந்திய காஷ்மீர் பிரிவினைவாத குழுக்களின் ஒரு கூட்டணியான அனைத்து கட்சி ஹூரியத் கூட்டத்திற்கும் (APHC) இடையிலான ஒரு சந்திப்பு, இந்திய விவகாரங்களில் "பெரும் தலையீடு செய்வதை" உள்ளடக்கி இருந்ததென்ற அடித்தளத்தில் நியாயப்படுத்தப்பட்டது.

எவ்வாறிருந்த போதினும் அதுபோன்ற சந்திப்புகள், 1998இல் இருந்து 2004 வரையில் புது டெல்லியில் அதிகாரத்திலிருந்த பிஜேபி-தலைமையிலான அரசாங்கம் உட்பட, இந்திய அரசாங்கங்களால் நீண்டகாலமாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்துள்ளன மற்றும் அதற்கு உதவியும் செய்துள்ளன.

இந்திய-பாகிஸ்தான் உறவுகளின் "அடித்தள விதிகளை" மாற்றி எழுதும் ஒரு முயற்சியை உள்ளடக்கியுள்ள இந்தியாவின் நடவடிக்கைகள், இந்திய ஊடகங்களாலும் அரசு அதிகாரிகளாலும் ஆவணங்களில் இல்லாதவாறு பகிரங்கமாக மூடிமறைக்கப்பட்டுள்ளன.

ஓர் இந்திய வெளியுறவு கொள்கை வல்லுனர் சி. ராஜா மோகன் இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் குறிப்பிடுகையில், “இந்திய அணுகுமுறையில் அங்கே ஒரு தொடர்பின்மை இருப்பது முற்றிலும் உண்மை தான்," என்கிறார். “பாகிஸ்தானுடனான சமாதான நிகழ்முறையில் அங்கே ஹூரியத்திற்கு இடமில்லையென மோடி அரசாங்கம் இப்போது கூறி வருகிறது. குறைந்தபட்சமாக கூறுவதானால், டெல்லியின் புதிய அணுகுமுறை ஒரு தைரியமான சூதாட்டமாக இருக்கிறது," என்று குறிப்பிட்டார்.

ஒரு மூத்த அரசு அதிகாரி MailOnlineIndiaக்கு தெரிவிக்கையில், வெளியுறவு செயலர்களுக்கு இடையிலான கூட்டத்தை இரத்து செய்ய எடுக்கப்பட்ட முடிவு "உயர்மட்ட அளவில் எடுக்கப்பட்டிருந்தது", மேலும் பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவுகளுக்கு "புதிய அடித்தள விதிகளை" ஸ்தாபிப்பதே அதன் நோக்கமாகும் என்று தெரிவித்தார். புது டெல்லியின் அதிகாரத்தில் மோடி-தலைமையிலான பிஜேபி-அரசாங்கம் இருக்கையில், அவ்விரு அணுஆயுதமேந்திய அரசுகளுக்கும் இடையே "வழக்கமான வணிக உறவு" இருக்க முடியாதென அவ்வதிகாரி தெரிவித்தார்.

எதிர்கட்சியாக இருந்தபோது, பாகிஸ்தானைக் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம் "சாந்தப்படுத்தி வருவதாக" பிஜேபி சாடியிருந்தது. ஆனால், பல பார்வையாளர்களை ஆச்சரியமூட்டிய விதத்தில் முன்னொருபோதும் இல்லாத சைகையாக, மோடி கடந்த மே மாதம் அவரது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தானிய பிரதம மந்திரி நவாஜ் ஷெரீப்பிற்கு அழைப்புவிடுத்தார்.

மோடியும் ஷெரீப்பும் சந்தித்தோடு அவர்களின் வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்குமென்பதில் உடன்பட்ட பின்னர், அந்நாடுகளுக்கு இடையே துல்லியமாக 2008இல் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "பரந்த சமாதான பேச்சுவார்த்தை" மீண்டும் புத்துயிர் பெறுவது குறித்தும், மற்றும் மோடி பாகிஸ்தானுடன் ஒரு வரலாற்று நல்லிணக்கத்தை வடிவமைத்து வருவது குறித்தும் அங்கே பத்திரிகைகளில் பெரும் அனுமானங்கள் வெளியாயின.

இத்தகைய தேவையற்ற நம்பிக்கைகள் வேகமாக இப்போது சிதைய தொடங்கியுள்ளன.

ஆகஸ்ட் 12இல், ஜம்மு&காஷ்மீர் பகுதியில் உள்ள லடாக் விஜயத்தின் போது, மோடியே வெளியுறவு செயலர்களின் கூட்டத்தைக் கலைப்பதற்கு களம் அமைத்திருந்தார், இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாநிலத்தில் பாகிஸ்தான் ஒரு "பினாமிப் போரை" நடத்தி வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து, மோடியும் மற்றும் பாரதீய ஜனதா கட்சியும் மிகவும் ஆக்ரோஷமான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றும் அவர்களது நோக்கத்திற்கு தொடர்ந்து சமிக்ஞை காட்டியிருக்கிறார்கள். இந்தியாவை ஒரு நடுநிலையான தலைவராக மற்றும் தெற்காசிய பிராந்திய மேலாதிக்க தலைமையாக காட்டும் கருத்துருவை உயர்த்திப்பிடிப்பது மற்றும் இந்திய இராணுவத்தின் "நவீனமயமாக்க" வேலைத்திட்டத்தை தீவிரப்படுத்துவது ஆகியவை அதில் உள்ளடங்கும்.

இதில் வாஷிங்டனின் இந்தியாவிற்கான ஆதரவிலிருந்து பிஜேபி அரசாங்கம் ஊக்கம் பெற்று வருகிறது. இந்தியாவை கவரும் அதன் நீண்டகால நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதன் மூலமாக, மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒபாமா நிர்வாகம் விடையிறுப்பு காட்டியுள்ளது, இதன்மூலமாக அது சீனாவை மூலோபாயரீதியில் சுற்றி வளைக்கும் மற்றும் தனிமைப்படுத்தும் அதன் உந்துதலில்—"ஆசியாவை நோக்கிய அமெரிக்க முன்னெடுப்பில்"—புது டெல்லியை மிக இறுக்கமாக கட்டிப்போட விரும்புகிறது.

இந்தியாவின் புதிய அரசாங்கம், தற்காப்பு என்று வரும்போது நவாஸ் ஷெரீப் அரசாங்கத்திடமிருந்து விட்டுக்கொடுப்புகளைப் பெற முடியுமென்று கணக்கிட்டு, தற்போது அதை அதிர செய்து கொண்டிருக்கும் மரணகதியிலான நெருக்கடியை வெளிப்படையாகச் சுரண்டவும் முயன்று கொண்டிருக்கிறது. வெளியுறவு மற்றும் தேசிய-பாதுகாப்பு கொள்கையில் பெரும் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான ஷெரீப்பின் முயற்சியால் ஆத்திரமடைந்துள்ள பாகிஸ்தானின் இராணுவ-பாதுகாப்பு ஸ்தாபகத்தின் ஊக்குவிப்புடன், இம்ரான் கான் மற்றும் அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்--இன்சாப்பும் (PTI) மற்றும் வலதுசாரி கனடாவை மையமாக கொண்ட மதகுரு தஹீர்-உல் கத்ரி மற்றும் அவரது பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக்கும் ஷெரீப்பின் 15 மாதகால அரசாங்கத்தின் சட்டபூர்வத்தன்மையைச் சவால் விடுத்து வாரக்கணக்கில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. (பார்க்கவும்: “Pakistani military intervenes in political crisis”)

பாகிஸ்தானுக்கு எதிரான பாரதீய ஜனதா கட்சியின் ஆக்ரோஷமான நிலைப்பாடு, அக்டோபரில் வரவிருக்கின்ற அம்மாநில தேர்தல்களுக்கு முன்னதாக ஜம்மு & காஷ்மீரில் வகுப்புவாத பதட்டங்களை தூண்டுவிடும் அதன் திட்டங்களோடு பொருந்தி இருப்பதாக இந்திய பத்திரிகைகளும் குறிப்பிட்டுள்ளன. பிரிவினைவாத, பாகிஸ்தானிய-சார்பிலான குழுக்கள் தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தக் கூடுமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலைமைகளின் கீழ், அந்த மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையை பெற அது சரியான இடத்திலிருப்பதாக பிஜேபி நம்புகிறது. இது பின்னர் இந்து-மேலாதிக்கவாத வலதின் மற்றும் பிஜேபி தேர்தல் அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தப்பட்டிருந்த ஒரு நீண்டகால இலக்கை அடைய—அதாவது இந்திய ஒன்றியத்திற்குள் ஜம்மு & காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குகின்ற இந்திய அரசியலமைப்பின் 370வது ஷரத்தை நீக்குவதற்கு—அதற்கு உதவக்கூடும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டையுமே ஒரு முக்கிய கூட்டாளிகளாக கருதும் அமெரிக்கா, வெளியுறவு செயலர்களின் பேச்சுவார்த்தை தவிர்க்கப்பட்டதை "துரதிருஷ்டவசமானதென" குறிப்பிட்டுள்ளது. ஆனால் இராஜாங்க அடித்தள விதிகளை மாற்ற முனைந்து வரும் இந்தியாவை விமர்சிப்பதை அது வெளிப்படையாக தவிர்த்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் மரீன் ஹால்ஃப், புது டெல்லி மற்றும் இஸ்லாமாபாத் "இரண்டு தரப்பும் பேச்சுவார்த்தைகளை இரத்து செய்ததற்கு என்ன கூறுகின்றன என்றில்லாமல் ... அவற்றின் இருதரப்பு உறவுகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்குமாறு" வலியுறுத்தினார்.

மிகத் தெளிவாக இந்த மாத இறுதியில், இந்தியாவின் பிரதம மந்திரியாக மோடியினது முதல் அமெரிக்க விஜயமாக இருக்கக்கூடிய நியூ யோர்க் மற்றும் வாஷிங்டன் விஜயத்திற்கு முன்னதாக, ஒபாமா நிர்வாகம் அவரை வெறுப்பூட்டி அபாயத்திற்குட்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.

எவ்வாறிருந்த போதினும், இந்தோ-பாகிஸ்தான் பதட்டங்கள் அதிகரிப்பது வாஷிங்டன் விரும்பாத ஒரு அபிவிருத்தியாகும். அது ஆப்கானிஸ்தானை மூலோபாயரீதியிலும், அரசியல்ரீதியிலும் மறுதகவமைக்கும் அமெரிக்க முயற்சியை இன்னும் சிக்கலுக்கு உள்ளாக்குகிறது, ஏனென்றால் எண்ணெய் வளம் மிகுந்த மத்திய ஆசியாவெங்கிலும் அமெரிக்க அதிகாரத்தைத் தக்க வைக்கவும், அத்துடன் சீனா மற்றும் ரஷ்யாவை அச்சுறுத்துவதற்கும் ஆப்கான் இராணுவ தளங்களைத் தக்கவைத்துக் கொண்டே, அதேவேளையில் அந்நாட்டிலிருந்து அதன் துருப்புகளை அதனால் திரும்ப எடுக்க முடியும்.

இஸ்லாமாபாத் திண்டாடி வருவதால், ஆப்கான் பாதுகாப்பு படைகளுக்கு பயிற்சி அளிப்பதில் இந்தியா வகிக்கும் பாத்திரம் உட்பட காபூலில் அதிகரித்துவரும் இந்தியாவின் செல்வாக்கைப் பலமாக அது ஆதரிக்கிறது.

காஷ்மீர் பிரச்சினையை "சர்வதேசமயமாக்க" இஸ்லாமாபாத்திற்கு உதவும் என்பது உட்பட மோடி அரசாங்கத்தின் ஆத்திரமூட்டும் நிலைப்பாடு திரும்பதாக்குமென சில இந்திய வெளியுறவு கொள்கை நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை—அந்த சம்பவங்கள் வேகமாக கட்டுப்பாட்டை மீறக்கூடுமென்ற கவலையின்றி—பெரும்பாலான இந்திய ஊடகங்கள் வரவேற்றுள்ளன. இந்தோ-பாகிஸ்தான் உறவுகள் பெரிதும் வெடிப்பார்ந்துள்ளன என்பது மட்டுமல்ல, இரண்டு நாடுகளிலுமே வகுப்புவாத உறவுகள் மற்றும் உள்நாட்டு அதிகார சண்டைகளுடனும் பிணைந்துள்ளன. யுரேஷியாவெங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் மூலோபாய மேலாதிக்கத்தை வலியுறுத்த அழுத்தம் அளிப்பது, நாடுகளுக்கு இடையிலான அனைத்து உறவுகளையும் மிக அபாயகரமாக ஸ்திரமின்மைப்படுத்தி வருகிறது.