சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India and Japan proclaim “special strategic, global partnership”

இந்தியாவும் ஜப்பானும் "சிறப்பு மூலோபாய, உலகளாவிய கூட்டுறவை" வலியுறுத்துகின்றன

By Deepal Jayasekera and Keith Jones
4 September 2014

Use this version to printSend feedback

நேற்று முடிவுற்ற இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியின் ஜப்பானுக்கான ஐந்து நாள் விஜயம், டோக்கியோவுடன் புது டெல்லியின் இராணுவ-மூலோபாய உறவை ஊக்குவிப்பதையும் மற்றும் இந்தியாவின் தள்ளாடும் பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்ட அவசியப்படும் அத்தியாவசிய முதலீடுகளையும் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டிருந்தது.

ஒரு கூட்டு அறிக்கையின்படி, மோடியும் அவரது ஜப்பானிய எதிர்பலமான ஷின்ஜோ அபேயும் "உலகில் கொந்தளிப்பு, பதட்டங்கள் மற்றும் மாற்றங்கள் அதிகரித்துவரும் ஒரு காலக்கட்டத்தில், இந்தியா மற்றும் ஜப்பானுக்கு இடையே ஒரு நெருங்கிய மற்றும் பலமான மூலோபாய கூட்டுறவு தவிர்க்கவியலாததென்ற நம்பிக்கையை அவர்கள் பகிர்ந்து கொள்வதாக உறுதியளித்தார்கள்." அதற்கும் மேலாக, இந்தோ-ஜப்பானிய இராணுவ உறவுகளை "மேம்படுத்துவதும் மற்றும் பலப்படுத்துவதும்" அந்த "நட்புறவை" மேலும் வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய உட்கூறாக இருக்க வேண்டும்.

ஜப்பானிய படைதளவாடங்களை இந்தியா வாங்குவது —நெருங்கிய கூட்டாளிகளின் இராணுவ தகைமைகளைக் கட்டமைக்கும் ஜப்பானின் புதிய கொள்கையின் கீழ் செய்யப்பட்டிருக்கும் முதல் ஏற்பாடாகும் இதுமற்றும் இந்தியா, ஜப்பான், அமெரிக்காவிற்கு இடையே முத்தரப்பு இராணுவ-பாதுகாப்பு கூட்டுறவை அதிகரிப்பது ஆகியவையும் இதில் உள்ளடங்கும். ஆசியாவில் ஜப்பான் நீண்டகாலமாகவே வாஷிங்டனின் மிக முக்கிய இராணுவ-மூலோபாய கூட்டாளியாக இருந்துள்ளது, மேலும் சீனாவைத் தனிமைப்படுத்தும் மற்றும் மூலோபாயரீதியில் சுற்றி வளைக்க நோக்கம் கொண்ட அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" கீழ் அவற்றின் உறவுகள் கணிசமான அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளன.

மோடியின் ஜப்பான் விஜயம் ஒரு மாதகால பரபரப்பான இராஜாங்க நடவடிக்கைகளினூடாக தொடங்கப்பட்டது, அதில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சீனாவிற்கு இடையிலான இராணுவ-மூலோபாய மோதலில் எல்லா முக்கிய அதிகாரங்களின் அரசாங்க அதிகாரிகளையும் இந்தியாவின் புதிய பிரதம மந்திரி சந்திப்பார்.

இன்று, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மற்றொரு பிரதான இராணுவ-மூலோபாய கூட்டாளியான ஆஸ்திரேலியாவின் பிரதம மந்திரி டோனி அபோட், இந்தியாவிற்கு இரண்டு நாள் விஜயமாக வருகிறார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்த மாத மத்தியில் இந்தியாவிற்கு வரவுள்ளார் மற்றும் செப்டம்பர் இறுதியில் மோடி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவைச் சந்திக்க வாஷிங்டனுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி திட்டங்களில் ஜப்பானிய அரசாங்கமும் மற்றும் தனியார் துறையும் 35 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஒன்றுகூட வேலை செய்யுமென்ற அவரது விருந்தினர் அறிவிப்பை ஜப்பானுக்கான மோடியின் விஜயம் குறித்த இந்திய பத்திரிகை செய்திகள் உயர்த்திக் காட்டின. அது உணரப்பட்ட விதத்தில், அது நிச்சயமாக முக்கியமானது தான். ஆனால் சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் இராஜாங்க-மூலோபாய தாக்குதல் மற்றும் பெய்ஜிங்கிற்கு எதிராக அதிகரித்துவரும் ஜப்பானின் சொந்த ஆக்ரோஷ நிலைப்பாட்டின் விளைவாக, இந்தோ-பசிபிக் பிராந்தியமெங்கிலும் அரசுகளுக்கு இடையிலான உறவுகள் வெடிப்பார்ந்த தன்மைகளில் இருக்கும் நிலையில், மோடியினது விஜயத்தின் மிக முக்கிய விளைவு, தெளிவாக, இந்தோ-ஜப்பானிய இராணுவ-மூலோபாய உறவுகளைப் பலப்படுத்தும் நடவடிக்கையாக இருந்தது.

மோடியும், அபேயும் மற்றும் அவர்களின் அந்தந்த தரப்பு உதவியாளர்களும் பொதுவிடத்தில் சீனாவைக் குறித்து குறிப்பிடுவதை தவிர்த்திருந்தார்கள். ஆனால் அங்கே ஐயத்திற்கிடமின்றி இந்தியா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான விரிவாக்கப்பட்ட இராணுவ-பாதுகாப்பு உறவுகள் பெய்ஜிங்கிற்கு எதிராக திரும்பி இருந்தது, மேலும் டோக்கியோவுடன் இன்னும் நெருக்கமாக இருப்பதைத் தேர்ந்தெடுத்ததன் மூலமாக, புது டெல்லி இன்னும் அதிகமாக வாஷிங்டனை நோக்கி சாய்ந்துள்ளது.

இரண்டு பிரதம மந்திரிகளும் "பாதுகாப்புத்துறையில் கூட்டுறவு மற்றும் பரிவர்த்தனைகளுக்கான ஒரு புரிந்துணர்வு" ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். “பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களில் கூட்டுறவு உட்பட எங்களின் பாதுகாப்பு கூட்டுறவுக்கு ஒரு புதிய உந்துகையும், திசையையும் அளிக்க நாம் விரும்புகிறோம்," என்று மோடி அறிவித்தார்.

ஜப்பானிய பிரதம மந்திரி நீண்டகாலமாகவே, அதிக ஆக்ரோஷ ஜப்பானிய வெளியுறவு கொள்கையின் பாகமாக இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளுக்கு வலியுறுத்தி வந்துள்ளார், மோடி உடனான அவரது கூட்டு பத்திரிகையாளர் கூட்டத்தில் அவர் இந்தோ-ஜப்பானிய நட்புறவில் இணைந்துள்ள முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார். ஜப்பான் மற்றும் இந்தியா இடையிலான ஒரு கூட்டணியை "உலகில்" வெறெங்கும் இல்லாத "மிகவும் சக்திவாய்ந்த கூட்டணியில் ஒன்றாக" அபே அறிவித்தார், அவர் தொடர்ந்து கூறுகையில், “எங்களின் நட்புறவை ஒரு சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டணியாக உயர்த்துவதற்காக", அவரது அரசாங்கம் இந்தியா உடனான அதன் உறவுகளை "ஒவ்வொரு துறையிலும்” "அடிப்படையிலிருந்து பலப்படுத்தும்" என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

அதன் இராணுவப் படைகளை விரிவாக நவீனப்படுத்துவதன் பாகமாக ஒரு கப்பற்படையை தற்போது அபிவிருத்தி செய்துவரும் ஒரு அணுஆயுத நாடாகிய—இந்தியாவை, அபே நிச்சயமாக ஒரு இராணுவ கூட்டாளியாக்குவதற்கு வாய்ப்பிருப்பதற்காக மதிப்பிடுகிறார். அதேவேளையில் ஜப்பானிய ஏகாதிபத்தியம் சீனாவிற்கு மாற்றீடான ஒரு உற்பத்தி-தொடர் மையமாக இந்தியாவை அபிவிருத்தி செய்யவும் கருதுகிறது.

மோடி, அவரது பங்கிற்கு, மீண்டும் மீண்டும் அபே மீதான அவரது நேசத்தையும் மற்றும் இந்திய ஆளும் மேற்தட்டின் அதன் சொந்த வல்லரசு அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஜப்பானின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி உள்ளார். ஜப்பான் இந்தியாவின் "கிழக்கை நோக்கிய" கொள்கையின் "இதயத்தானத்தில்" இருப்பதாக எடுத்துரைத்த மோடி, இந்தோ-ஜப்பானிய "மூலோபாய மற்றும் உலகளாவிய நட்புறவில்" "சிறப்பு" தகுதியாளராக சேர்வதென்பது வெறுமனே ஒரு "வார்த்தை விளையாட்டல்ல" என்று வலியுறுத்தினார். இந்தியாவின் அபிவிருத்தியில் முக்கியமாக அதன் பொருளாதார மற்றும் அதன் இராணுவ-மூலோபாய விவகாரங்களில் ஜப்பானை அதிகளவில் முக்கிய பாத்திரம் வகிக்க செய்ய திட்டமிடுகிறது.

ஜப்பானிய முதலீட்டிற்கு வழிவகை செய்ய அதன் அதிகாரத்திற்குள் அவரது அரசாங்கம் அனைத்தையும் செய்யும் என்பதை அபேவுக்கும் மற்றும் ஜப்பானிய பெரு வணிகங்களுக்கும் புரிய வைக்க இந்திய பிரதம மந்திரி பெரும் சிரமம் எடுத்திருந்தார். அவரது அரசாங்கம் முதலீட்டாளர்களை "சிவப்பு பட்டையோடு" அல்லது "சிவப்பு கம்பளம்" விரித்து வரவேற்கும் என்ற அவரது தவிப்பை மீண்டும் எடுத்துரைத்தார். மிக முக்கியமாக, இனிமேல் ஜப்பானிய மூலதனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுமென மோடி அறிவித்தார். ஜப்பானிடமிருந்து வரும் முதலீட்டு வரைவுகளுக்கு வேகமாக-ஒப்புதல் வழங்க பிரதம மந்திரி அலுவலகத்தின் கீழ், ஒரு "ஜப்பான்-ப்ளஸ் சிறப்பு நிர்வாக குழு" அமைக்கப்படும் மற்றும் இந்த குழுவில் டோக்கியாவால் நியமிக்கப்பட்ட இரண்டு ஜப்பானிய அதிகாரிகளும் உள்ளடங்கி இருப்பார்கள்.

அதன் சீன-விரோத "முன்னெடுப்பின்" பாகமாக வாஷிங்டன் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பானுக்கு இடையே அதிகரித்த முத்தரப்பு கூட்டுறவுக்கு அழுத்தம் அளித்து வந்துள்ளது. ஜூலையில், அமெரிக்க-இந்திய மலபார் கடற்கரை ஆண்டு ஒத்திகையில் ஜப்பானும் பங்கெடுத்தது, பெய்ஜிங்கை கோபமூட்ட வேண்டாமென அது ஐந்தாண்டுகளாக அந்த ஒத்திகையிலிருந்து ஒதுங்கி இருந்தது. மலபாரில் ஜப்பான் பங்கெடுப்பது தொடருமென்றும், அவர்களின் அரசாங்கம் அவர்களின் வெளியுறவு மந்திரிகள் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு இடையே முத்தரப்பு கூட்டங்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளைப் பரிசீலிக்குமென்றும் மோடி மற்றும் அபே அறிவித்துள்ளனர்.

அந்த சந்திப்பு இந்தோ-ஜப்பானிய உறவுகளை பண்புரீதியில் பலப்படுத்த தொடங்கி இருந்தபோதினும், மோடி மற்றும் அபே இருவருமே அந்த சந்திப்பிற்கு முந்தைய அவர்களின் பிரதான நோக்கங்களில் ஒன்றை தீர்மானிப்பதில் தவறியிருந்தனர். இந்தியா ஜப்பானுடன் ஒரு இராணுவத்திற்கல்லாத அணுசக்தி கூட்டுறவில் கையெழுத்திட நம்பியிருந்தது, ஆனால் மேற்கொண்டு அணுஆயுத சோதனைகளை நிறுத்த பொறுப்பேற்க இந்தியா மறுத்ததை மேற்கோளிட்டு காட்டி, மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளுக்கு மட்டுமே அபே அரசாங்கம் பரிந்துரைத்திருந்தது. அந்நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு மந்திரிகளின் "2+2" சந்திப்புகளை அமைப்புரீதியிலாக்க இந்தியா மறுத்தது, இருந்தபோதினும் இறுதி அறிக்கை அவர்களின் "மூலோபாய நட்புறவை அதிகரிப்பதற்காக" "வெவ்வேறு துறை மந்திரிகள் மற்றும் கேபினெட் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள்" மற்றும் இரண்டு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை செயலர்களுக்கு இடையிலான கூட்டு கூட்டங்களுக்கு வலியுறுத்தி இருந்தது.

மோடி அவரது பதவியேற்பு விழாவிற்கு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருந்த திபெத்திய அரசாங்க தலைவரை அழைத்திருந்தமை மற்றும் இந்திய-சீன எல்லைக்கருகில் உள்கட்டமைப்பு மற்றும் இராணுவ சிப்பாய்களை நிலைநிறுத்தியமை உட்பட அவரது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இதர ஆத்திரமூட்டும் அறிக்கைகளுக்கு அவர்கள் விடையிறுப்பு காட்டியிருந்ததைப் போலவே, சீன அரசாங்கம் மோடியின் ஜப்பானிய விஜயத்திற்கு எச்சரிக்கையோடு விடையிறுப்பு காட்டியிருந்தது.

அதன் பெரும்பாலான அண்டைநாடுகளுடன் சீனாவின் உறவுகளை அமெரிக்காவும் ஜப்பானும் ஏற்கனவே எரியூட்டியுள்ள நிலைமைகளின் கீழ் மற்றும் சீனாவிற்கு எதிராக அவற்றின் மூலோபாய உந்துதலில் இந்தியாவைக் கட்டிப்போடும் முயற்சியை நோக்கமாக கொண்டுள்ள நிலைமைகளின் கீழ், பெய்ஜிங் தெளிவாக புது டெல்லிக்கு வர்த்தகம் மற்றும் இதர ஊக்குவிப்புகளை அதனால் முடிந்தளவிற்கு சிறப்பாக வழங்க கணக்கிட்டு வருகிறது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்த மாத இறுதியில் புது டெல்லிக்கு விஜயம் செய்கையில் பல கூட்டு வளர்ச்சி திட்டங்களில் இந்தியாவை பங்கெடுக்க செய்ய, அத்துடன் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில் முழு உறுப்பினராக்க தயாரிப்பு செய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் இருந்தபோது அளிக்கப்பட்ட மோடியின் ஒரு கருத்து குறித்து கேட்டப்பட்ட போது, அக்கருத்து ஒரே சீராக மேற்கத்திய ஊடகங்களால் சீனாவிற்கு எதிராக திருப்பிவிடப்பட்டதாக கூறப்பட்டிருந்த நிலையில், அதில் இந்திய பிரதம மந்திரி "மற்றொரு நாட்டின் நிலத்தை அபகரித்தும் மற்றும் மற்ற நாடுகளின் கடலுக்குள் சென்றும் விரிவாக்க" சிந்தித்து வருகிறதென பெயரிடாமல் சில அதிகாரங்களைக் குத்திக் காட்டினார், மோடி என்ன குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லையென சீன வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பின்னர் அவர் மோடியின் முந்தைய அறிக்கைகளை மீண்டும் குறிப்பிட்டுக்காட்டினார், அதில் அவர் "சீனாவும் இந்தியாவும்" “பொதுவான வளர்ச்சியில் மூலோபாய கூட்டாளிகளாகும்" அவற்றின் "அண்டைநாட்டு நட்புறவும் மற்றும் ஒத்துழைப்பும்" “ஒட்டுமொத்த மனிதயினத்திற்கும்" “பெரும் முக்கியத்துவம்" வாய்ந்ததாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.

பல தலையங்கத்தில், சீன அரசால் நடத்தப்படும் Global Times இந்தோ-ஜப்பானிய நட்புறவு பலப்படுவதைக் குறித்த அதன் கவலைகளையும், கோபத்தையும் எதிரொலித்திருந்தது. முதல் ஒன்று மோடியின் "விரிவாக்கவாதம்" குறித்து கண்டனத்தை வெளியிட்டிருந்தது, பின்னர் "ஜப்பான் இந்தியாவிலிருந்து வெகுதூரத்தில் அமைந்திருக்கிறது”, அதேவேளையில் "சீனா ஒரு அண்டைநாடாகும் அதனால் தூர நகர முடியாது" என்று புது டெல்லியை எச்சரித்திருந்தது. Global Timesஇன் இரண்டாவது தலையங்கம் ஜப்பானைத் தாக்கியது. “சீனாவின் மூலோபாய நலன்களை அடிபணிய செய்ய அமெரிக்காவிற்கு தரகு வேலை செய்வதை நிறுத்தும் மற்றும் கட்டுப்பாட்டுன் நடந்து கொள்ளும் ஒரு பகுத்தறிவார்ந்த ஜப்பானை நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று குறிப்பிட்டது.

அமெரிக்கா மற்றும் அதன் ஆசிய கூட்டாளிகளுடன், குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுடன், இன்னும் இறுக்கமாக இந்தியாவைக் கட்டிப்போடுகின்ற விதத்தில், மோடி சீனாவிடமிருந்தும் அத்துடன் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்தும் விட்டுக்கொடுப்புகளை பெற்றெடுக்கும் நம்பிக்கையில், இந்திய "மூலோபாய சுயஅதிகாரத்தை" தக்கவைத்திருப்பதாக காட்டிக் கொள்ள முயன்று வருகிறது. அனைத்திற்கும் மேலாக அமெரிக்க மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் ஆக்ரோஷமான கொள்கை, முன்னொருபோதும் இல்லாதளவிற்கு அபாயகரமாக ஆசியாவில் புவிசார்-அரசியல் அபாயப்பகுதிகளைப் பங்குபோட எல்லா முயற்சிகளையும் செய்து வருகின்ற நிலைமைகளின் கீழ், அது சாத்தியமாகவில்லை என்றால், இதுவொரு மிகவும் அபாயகரமான விளையாட்டாகிவிடும்.