சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP holds public meeting on world war threat

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி உலகப் போர் அச்சுறுத்தல் பற்றி பொதுக் கூட்டம் நடத்தியது

By our correspondents
25 August 2014

Use this version to printSend feedback

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோசக) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், அமெரிக்காவின் ஆசியா நோக்கிய “திருப்பமும்” உலகப் போர் அச்சுறுத்தலும் என்ற தொனிப்பொருளில் கடந்த திங்களன்று கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் ஒரு வெற்றிகரமான பொதுக் கூட்டத்தை நடத்தின. சுமார் 80 தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பப் பெண்களும் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

கூட்டத்திற்கு முன்னதாக சோசக மற்றும் ஐவைஎஸ்எஸ்இ உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கொழும்பைச் சூழ விரிவான பிரச்சாரத்தை செந்திருந்தார்கள். “காசா மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்திடு” என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை மற்றும் “சோசலிசமும் ஏகாதிபத்திய யுத்தத்துக்கு எதிரான போராட்டமும்” என்ற அனைத்துலகக் குழுவின் தீர்மானத்தினதும் ஆயிரக்கணக்கான பிரதிகள் தமிழிலும், சிங்களத்திலும் விநியோகிக்கப்பட்டன.


தீபால் ஜெயசேகர

கூட்டத்துக்கு தலைமை வகித்த சோசக துணைச் செயலாளர் தீபால் ஜெயசேகர தெரிவித்ததாவது: “கடந்த நூற்றாண்டில் ஏகாதிபத்திய சக்திகள் மனிதகுலத்தை இரு முறை அழிவுகரமான உலக போர்களுக்குள் தள்ளியுள்ளன. இன்று முதலாம் உலக யுத்தம் வெடித்து 100 ஆண்டுகளின் பின்னரும் இரண்டாம் உலக யுத்தம் தொடங்கி 75 ஆண்டுகளின் பின்னரும், அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்தியங்கள் உலக மக்களை, இம்முறை அனுவாயுதங்களுடன், இன்னொரு அழிவுகரமான உலகப் போரை நோக்கி இழுத்துச் செல்கின்றன.”

சீனாவை இராணுவ ரீதியில் சுற்றி வளைத்து இராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்ட அமெரிக்காவின் “திருப்பம்”, இலங்கை மற்றும் இந்தியா உட்பட பிராந்தியத்தில் எல்லா நாடுகளையும் இந்த பூவிசார் அரசியல் பதட்ட நீர்ச்சுழிக்குள் இழுத்துச் செல்கின்றது, என ஜெயசேகர கூறினார். அமெரிக்காவானது சீனாவுக்கு எதிரான சமபலமாக இந்தியாவை அரவனைத்துக்கொள்ளவதை உக்கிரமாக்கியுள்ள அதேவேளை, சீனாவுடனான தனது உறவுகளை முறித்துக்கொள்ளுமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கின்றது.

கூட்டத்தில் உரையாற்றிய ஐவைஎஸ்எஸ்இ அழைப்பாளர் கபில பெர்னான்டோ, போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் (முசோக) கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் வகிபாகத்தை அம்பலப்படுத்தினார். ஆர்ப்பாட்டங்கள் மூலம் “போதுமான அழுத்தத்தை” கொடுத்தால், அரசாங்கத்தின் கல்வியைத் தனியார்மயமாக்கும் திட்டத்தை நிறுத்த முடியும் எனக் கூறி, அது மாணவர்கள் மத்தியில் ஆபத்தான பிரமைகளை பரப்ப முயற்சிக்கின்றது.

போலி இடது போக்குகளின் ஏகாதிபத்திய-சார்பு திசையமைவையும் பெர்னான்டோ சுட்டிக் காட்டினார். “இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரண்டுக்கும் இந்த யுத்தம் வேண்டும்” என தனது ஜனரல பத்திரிகையில் கூறுவதன் மூலம், காசா மீதான இஸ்ரேலின் படுகொலை யுத்தத்தை முன்னிலை சோசலிசக் கட்சி மூடி மறைக்கின்றது”


விஜே டயஸ்

சோசலிச சமத்துவக் கட்சி பொதுச் செயலாளர் விஜே டயஸ் பிரதான அறிக்கையை முன்வைத்தார். உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப அனைத்துலகக் குழு முன்னெடுத்துள்ள பிரச்சாரத்தின் ஒரு பகுதியே இந்தக் கூட்டம் என அவர் தெரிவித்தார். ஏகாதிபத்திய சக்திகளை போரை நோக்கி தவிர்க்க முடியாமல் உந்தித் தள்ளும், பூகோள முதலாளித்துவத்துக்கும் தேசிய அரசு அமைப்பு முறைக்கும் இடையிலான அடிப்படை முரண்பாடுகளை விளக்குகின்ற, “சோசலிசமும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும்” என்ற அனைத்துலகக் குழுவின் தீர்மானத்தில் இருந்து அவர் மேற்கோள் காட்டினார்.

“ஏகாதிபத்திய யுத்த அச்சுறுத்தலின் வளர்ச்சி பற்றியும் அதை எதிர்ப்பதற்கான இரண்டாம் அகிலத்தின் தயாரிப்புகள் பற்றியும் கலந்துரையாடுவதற்கு 1907ல் ஜேர்மனியில் ஸ்ருட்கார்டில் நடந்த மாநாட்டின் 107வது ஆண்டு நிறைவில் இந்தக் கூட்டத்தை நாம் நடத்துகின்றோம்” என டயஸ் வலியுறுத்தினார். “ஏகாதிபத்திய போரை எதிர்க்கும் பலம்வாய்ந்த தீர்மானத்தை இந்த காங்கிரஸ் நிறைவேற்றியிருந்தாலும், இரண்டாம் அகிலத்தின் பகுதிகள் 1914ல் போரைப் பிரகடனம் செய்த ஏகாதிபத்திய சக்திகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட பேரினவாத அலையுடன் இணைந்துகொண்டன.

“இந்த துன்பகரமான அனுபவத்தின் படிப்பினைகளை வெளிக்கொணரும் அனைத்துலகக் குழு, அதன் தீர்மானத்தில் வலியுறுத்துவதாது: ‘அனைத்துலகக் குழு போருக்கு எதிரான போராட்டத்தை அதன் அரசியல் வேலைகளின் மையத்தில் வைக்கின்றது. அது ஏகாதிபத்திய வன்முறைகள் மற்றும் இராணுவவாதத்தின் மீள்வருகையை புரட்சிகரமாக எதிர்க்கும் சர்வதேச மையமாக உருவாக வேண்டும்’”.

இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னர் 1938ம் ஆண்டிலேயே நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டது என டயஸ் தெளிவுபடுத்தினார். அதன் ஸ்தாபக ஆவணமான “இடைமருவு வேலைத் திட்டத்தில்”, ஏகாதிபத்திய போர் பற்றி சர்வதேச தொழிலாள வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுத்த லியோன் ட்ரொட்ஸ்கி, உலக சோசலிச அரசுகளின் ஒன்றியத்துக்கான போராட்டத்தின் ஊடாக ஏகாதிபத்திய அமைப்பு முறையை தூக்கி வீசுவதற்கான அரசியல் தயாரிப்புக்கு அழைப்பு விடுத்தார்.

1930களில் லங்கா சம சமாஜக் கட்சியினுள் வேலை செய்த ஒரு ட்ரொட்ஸ்கிசக் குழு, எவ்வாறு ட்ரொட்ஸ்கியின் அழைப்புக்கு பிரதிபலித்தது என்பதை பேச்சாளர் சுருக்கிக் கூறினார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் போர் முயற்சிகளுடன் ஒத்துழைக்குமாறு மாஸ்கோவில் இருந்து வந்த கட்டளைகளை பின்பற்றிய கட்சியின் ஸ்ராலினிச கன்னையை வெளியேற்றியதோடு நான்காம் அகிலத்தின் அனைத்து இந்திய பகுதி ஒன்றை ஸ்தாபிப்பதன் மூலம் முக்கியமான ஆரம்ப நடவடிக்கையை அவர்கள் எடுத்திருந்தனர்.

“பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரிகள் மற்றும் முதலாளித்துவ தேசிய காங்கிரசினதும் கடுமையான ஒடுக்குமுறை மற்றும் ஸ்ராலினிஸ்டுகளின் வேட்டையாடல் நிலைமைகளின் கீழும், இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் வேலைகள் துணைக் கண்டத்தின் பல பாகங்களிலும் தொழிலாள வர்க்கத்தின் பலம்வாய்ந்த பிரதிபலிப்பை ஈர்த்திருந்தன. அது பிராந்தியத்திலும் அதே போல் சர்வதேச ரீதியிலும் சோசலிச இயக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான அங்கமாக இருந்தது.

“லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பின் காரணமாக, இத்தகைய முக்கியமான வரலாற்றுப் படிப்பினைகளை உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் தற்கால சந்ததியினர் பெறமுடியால் போய்விட்டது. அனைத்துலகக் குழு மற்றும் சோசக ஊடாக மட்டுமே இந்த இன்றியமையா படிப்பினைகளை தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் கற்றுக்கொண்டு ஏகாதிபத்திய போரின் காட்டுமிராண்டித் தனத்துக்கு எதிராக அனைத்துலக சோசலிசத்துக்கான போராளிகளாக மாற முடியும்.

சர்வதேச நிலைமைகள் பற்றி கருத்துத் தெரிவித்த டயஸ், காசாவில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் 2,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 40,000 பேர் காயமடைந்துள்ளதோடு 500,000 பேர் இடம்பெயரந்துள்ளனர். இந்த ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள், ஏகாதிபத்திய சக்திகளுக்கும் மாஸ்கோவில் ஸ்ராலினிச அதிகாரத்துவத்துக்கும் இடையில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட “உடன்பாடுகளின்” முழு திவாலைக் காட்டுகின்றது.

மத்திய கிழக்கு மற்றும் ஆசியா உட்பட உலகம் பூராவுமான போருக்குப் பிந்திய இத்தகைய உடன்பாடுகள், புரட்சிகர சோசலிச இலக்கை நோக்கி திசையமைவு கொண்டிருந்த உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராக குறி வைக்கப்பட்டிருந்தன. பாலஸ்தீனத்திலும் மற்றும் இலங்கை உட்பட இந்திய துணைக் கண்டத்திலும் கடந்த 66 ஆண்டுகளும் தொழிலாள வர்க்கத்துக்கும் கிராமப்புற வறியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் சமூகப் பேரழிவையே கொண்டுவந்துள்ளன.

யுத்தத்துக்கான ஏகாதிபத்தியங்களின் உந்துதலை மூடி மறைக்க உதவுவதில் நவ சம சமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி போன்ற போலி இடதுகளின் பாத்திரத்தை டயஸ் சுட்டிக்காட்டினார். ஏகாதிபத்திய சக்திகளை ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளின் பாதுகாவலர்களாக சித்தரிக்க இத்தகைய குழுக்கள் முயற்சிக்கின்றன. இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான போர்க் குற்ற குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவளிக்கும் சாக்கில், கொழும்புக்கும் பெய்ஜிங்குக்கும் இடையிலான உறவை முறிக்க முயற்சிக்கும் அமெரிக்க ஆதரவிலான யுஎன்எச்ஆர்சி தீர்மானத்தை அவை ஆதரிக்கின்றன. அவ்வாறு செய்வதன் மூலம் அவை போர்க் காலத்தில் அமெரிக்க ஆதரவிலான அரசாங்கமொன்றுடன் ஒத்துழைப்பதற்கான தமது தயார் நிலையை சமிக்ஞை செய்துள்ளன.

“இது ஒரு சர்வதேச நிகழ்வாகும்” என பேச்சாளர் விளக்கினார். “உலகம் பூராவும் உள்ள அவர்களது சமதரப்பினர், அவை ஆஸ்திரேலியாவில் சோசலிச மாற்றீடு அமைப்பாக இருந்தாலும் சரி அல்லது பிரான்சில் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி என்றாலும் சரி ஒரே பாதையையே பின்பற்றுகின்றன. ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக உரிமைகள் மீதான முன்னெப்போதுமில்லாத தாக்குதல்கள், அதே போல், அனுவாயுதப் போர் அச்சுறுத்தல் நிலைமைகளின் எதிரில் உழைக்கும் மக்களையும் இளைஞர்களையும் அரசியல் நிராயுதபாணிகளாக்குவதே அவர்களின் பாத்திரமாகும்.

“இந்த சகல போலி இடதுகளுக்கும் எதிராக, ஒடுக்கப்பட்ட மக்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டி ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தை வர்க்கப் போராட்டத்தின் மையத்திற்கு கொண்டுவருவதன் பேரில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக ஐக்கியப்படுத்தும் பணியை அனைத்துலகக் குழு பொறுப்பேற்றுள்ளது. எமது இயக்கமானது ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்துக்கு மாற்றீடாக சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தைச் சூழ தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஐக்கியப்படுத்த நனவுபூர்வமாக போராடுகின்றது.“

சிங்கள பௌத்த பேரினவாத பொதுபல சேனா போன்ற பாசிச சக்திகள் தொடர்பாக சோசக இன் நிலைப்பாடு பற்றிய ஒரு கேள்விக்கு பதிலளித்த டயஸ், முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடியினால் புரட்சிகர போராட்டங்களுக்குள் தள்ளப்படும் தொழிலாள வர்க்கம் மற்றும் வறியவர்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கே பொதுபல சேனா போன்ற அமைப்புகள் ஆளும் வர்க்கத்தால் முன்னிலைப்படுத்தப்படுகின்றன என்றார். இத்தகைய குழுக்கள் முதலாளித்துவத்தின் கீழேயே அவநம்பிக்கைக்குள் தள்ளப்படும் குட்டி முதலாளித்துவ தட்டினரை உள்ளடக்கியுள்ளன.

“பொதுபல சேனாவின் முஸ்லிம்-விரோத பிரச்சாரமானது முதலாளித்துவ அரசாங்கங்களால் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட 30 ஆண்டுகால நீண்ட போரின் போது உருவாக்கப்பட்ட தமிழர்-விரோத மனநிலையில் இருந்து உத்வேகம் பெற்றவை ஆகும்” என டயஸ் விளக்கினார். “இத்தகைய பாசிச அச்சுறுத்தல்களை எதிர்ப்பதற்கு பொருத்தமான ஒரே வேலைத்திட்டம் சோசலிச வேலைத் திட்டம் மட்டுமே ஆகும். அதுவே சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்களை முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்காக அணிதிரட்டுவதற்கான அடித்தளமாகும்.“