சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய  USSR

At NATO summit, US and Europe threaten Russia, plan military action against ISIS

நேட்டோ உச்சிமாநாட்டில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ரஷ்யாவை அச்சுறுத்துகின்றன, ISISக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு திட்டமிடுகின்றன

By Jordan Shilton
5 September 2014

Use this version to printSend feedback

வேல்ஸ் நேட்டோ உச்சிமாநாட்டின் முதல் நாளில், ரஷ்யாவிற்கு எதிரான செயல்திட்டங்களும் ஈராக் மற்றும் சிரியாவில் இராணுவ நடவடிக்கைக்கான தயாரிப்புகளும் மேலோங்கி இருந்தன.

உக்ரேனுக்கு 15 மில்லியன் யூரோ நேரடி இராணுவ உதவிகள் வழங்க உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டதாக வியாழனன்று நேட்டோ பொதுச் செயலாளர் ஆண்டர்ஸ் ஃபோக் ராஸ்முஸ்சென் அறிவித்தார். “ஆயுத தளவாடங்களை மேம்படுத்தவும், இராணுவம் மற்றும் கட்டுப்பாட்டை மேம்படுத்தவும், தொலைதொடர்புகளை மேம்படுத்தவும் மற்றும் இணையவழி பாதுகாப்பிற்கும்" உதவியாக இந்த "பரந்த மற்றும் தேவைக்கேற்ற நடவடிக்கைகளின் தொகுப்பு" வடிவமைக்கப்பட்டிருக்கிறது. “அதிதுல்லிய ஆயுதங்களும்" இந்த உதவிகளில் உள்ளடங்கும்.

அதேநேரத்தில், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு புதிய சுற்று தடைகளுக்கு தயாரிப்பு செய்து வருகின்றன, அவை இன்று அறிவிக்கப்படக்கூடும்.

அந்த உச்சிமாநாட்டின் ஆக்ரோஷமான தொனி, பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவால் டைம்ஸ் நாளிதழில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில் வெளிப்பட்டது. ஏகாதிபத்திய அரசுகளின் அவ்விரு தலைவர்களும் நேட்டோவை ஏதோ அச்சுறுத்தல்கள் மற்றும் எதிரிகளால் சுற்றி வளைக்கப்பட்ட ஒரு கூட்டணியாகவும், அதன் நலன்களைப் காப்பாற்றிக் கொள்ள தீர்க்கமான நடவடிக்கை எடுக்க அது தயாராக வேண்டும் என்பதைப் போலவும் சித்தரித்தார்கள். “ரஷ்யா உக்ரேனை நோக்கி துப்பாக்கி ஏந்தியிருக்கிறது, இஸ்லாமிய தீவிரவாதிகளோ அருவருக்கத்தக்க படுகொலைகளை நடத்தி வருகிறார்கள், இந்த நிலையில் நேட்டோ அதன் கூட்டணியைப் பலப்படுத்த வேண்டியது கட்டாயமாகிறது," என அந்த அறிக்கை தொடங்கியது.

"உலகம் பல ஆபத்துக்களையும், உருவாகிவரும் சவால்களையும் முகங்கொடுத்திருக்கும் நேரத்தில் நாம் சந்தித்துள்ளோம். கிழக்கில், கிரிமியாவை சட்டவிரோதமான சுய-பிரகடனத்தோடு இணைந்துக் கொண்டு, உக்ரேன் மண்ணில் அதன் துருப்புகளுடன் ஒரு இறையாண்மை உள்ள நாட்டின் அரசை அச்சுறுத்தி வருவதன் மூலமாக ரஷ்யா அதன் விதிமுறை புத்தகத்தை கிழிந்தெறிந்துள்ளது. தெற்கில், வடக்கு ஆபிரிக்காவலிருந்து மத்திய கிழக்கின் சாஹில் வரையில் அங்கே ஸ்திரமின்மையின் சாயல் இருக்கிறது," என்று அந்த அறிக்கை செல்கிறது.

கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு இரண்டு பகுதிகளிலும் நெருக்கடிகளை உருவாக்குவதில் நேட்டோவின் முன்னணி சக்திகள், அனைத்திற்கும் மேலாக அமெரிக்கா மையப் பாத்திரம் வகித்துள்ளது என்பதை அதுபோன்ற ஒரு அறிவிப்பிலிருந்து ஒருவரால் அனுமானிக்க முடியாமல் போகலாம்.

அமெரிக்காவும் ஜேர்மனியும் கியேவை அவற்றின் செல்வாக்கெல்லையின் கீழ் கொண்டு வரும் ஒரு முயற்சியில், பெப்ரவரியில் உக்ரேனில் ஒரு பாசிச-தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பை ஒழுங்கமைத்திருந்தன. மத்திய கிழக்கில், இப்போது "தீவிரவாதிகள்" மற்றும் "பயங்கரவாதிகள்" என்று கண்டிக்கப்படும் அதே படைகள் தான் கடந்த ஆண்டு சிரியாவில் பஷர் அல்-அசாத் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு ஜனநாயக மாற்றத்திற்காக சண்டையிடும் "போராளிகளாக" அரவணைக்கப்பட்டிருந்தார்கள்.

மாஸ்கோவை நோக்கிய நேட்டோவின் ஆக்ரோஷமான நிலைப்பாட்டைத் தீவிரப்படுத்தும் கேமரூன் மற்றும் ஒபாமாவின் திட்டங்களுக்கு குறுக்கே இதில் எதுவும் தலையிடப்போவதில்லை. இணையற்ற வெறுப்புடன் ஒபாமாவும் கேமரூனும் அறிவிக்கிறார்கள், “ரஷ்யா துப்பாக்கி முனையில் ஜனநாயகத்திற்கான உரிமையைக் கைவிடுமாறு ஒரு இறையாண்மை அரசை நிர்பந்திக்க முயல்கின்ற நிலையில், உக்ரேன் அதன் சொந்த ஜனநாயக எதிர்காலத்தை தீர்மானிக்க நாம் அதை ஆதரிக்க வேண்டும், அத்துடன் உக்ரேனிய தகைமைகளைப் பலப்படுத்துவதற்குரிய நமது முயற்சிகளைத் தொடர வேண்டும்."

கியேவின் "தகைமைகள்" குறித்த குறிப்பானது, இராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பத்தற்கு ஒரு வெளிப்படையான பொறுப்புறுதியாகும். ஒரு கூட்டு விரைவு படையை அபிவிருத்தி செய்வதில் ஏனைய ஆறு நேட்டோ உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து பிரிட்டன் தலைமையேற்கும், அதேவேளையில் இரண்டு நாட்களுக்குள் எவ்விடத்திலும் தலையீடு செய்யக்கூடிய வகையில் 4,000 துருப்புகள் கொண்ட ஒரு அதிரடி எதிர்நடவடிக்கை படை ஸ்தாபிக்கப்பட உள்ளதென கடந்த வாரயிறுதியில் அறிவிக்கப்பட்டது.

அதுபோன்ற நகர்வுகள் ரஷ்யாவை நோக்கமாக கொண்டிருக்கின்றன என்பதற்கு கேமரூனும் ஒபாமாவும் அவர்களின் அறிக்கையில் எவ்வித ஐயத்திற்கும் இடம் வைக்கவில்லை. “கூட்டிணைந்த சுய-பாதுகாப்பிற்குரிய நமது ஷரத்து 5இன் கடமைப்பாடுகளை நாம் எப்போதும் நிலைநிறுத்துவோம் என்பதை ரஷ்யாவிற்குத் தெளிவுபடுத்தி, கிழக்கு ஐரோப்பாவில் ஒரு நிலையான பிரசன்னத்தை உறுதிப்படுத்த நாம் நமது இராணுவத்தைப் பயன்படுத்த வேண்டுமென," அவர்கள் எழுதுகிறார்கள்.

நேட்டோ உறுப்பு நாடுகளில் நான்கு நாடுகள் மட்டுமே அவற்றினது பொருளாதார வெளியீட்டில் குறைந்தபட்சம் 2 சதவீதத்தை இராணுவத்திற்குச் செலவிடுகின்றன என்பதை எடுத்துக்காட்டி, கேமரூனும் ஒபாமாவும் பாதுகாப்பு செலவினங்கள் குறித்த பிரச்சினையைக் துல்லியமாக எழுப்பி இருந்தார்கள். இது முக்கியமாக ஜேர்மனை நோக்கி திரும்பி இருந்தது, அது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இராணுவத்திற்கென 1.3 சதவீதத்தைச் செலவிடுகிறது.

தீவிரப்படுத்தப்பட்டு வரும் இராணுவவாத நிகழ்ச்சிநிரல் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு பாரியளவில் முரண்பட்டுள்ளது, பெரும்பான்மை மக்களோ யுத்தத்தை எதிர்க்கிறார்கள். இது நேட்டோ கூட்டம் எந்த விதத்தில் நடத்தப்பட்டதோ அதிலிருந்தே துல்லியமாக எடுத்துக்காட்டப்பட்டது, அங்கே தலைவர்கள் பரந்தளவில் திரட்டப்பட்டிருந்த பொலிஸ் மற்றும் இராணுவ படைகளின் பாதுகாப்புடன், வேல்ஸின் நியூபோர்டில் உள்ள செல்டிக் மனோர் வளாகத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த 10 அடி உயர பலமான எஃகு வளையத்திற்குப் பின்னால் குற்றவாளிகளைப் போல கூடி நின்றிருந்தார்கள்.

போலாந்து மற்றும் ஏனைய கிழக்கு ஐரோப்பிய உறுப்பு நாடுகளின் பெயரளவிற்கான முன்முயற்சியில், அந்த உச்சமாநாடு வெடிபொருட்கள், எரிபொருள்களைச் சேமித்து வைப்பதில் மற்றும் ரஷ்யாவின் எல்லையோர இராணுவ தளத்தில் சுழற்சி முறையில் படைகளை நிலைநிறுத்துவதில் உடன்படக்கூடும். இது நேட்டோ-ரஷ்ய கவுன்சிலின் 1997 ஸ்தாபக உடன்பாட்டை உத்தியோகபூர்வமாக உடைக்காமல் இருப்பதற்காக ஆகும், அந்த உடன்பாட்டில் நேட்டோ கிழக்கில் நிரந்தரமாக படை துருப்புகளை நிலைநிறுத்தாது என்பதை அது ஏற்றுக் கொண்டிருந்தது. அதிரடி விடையிறுப்பு படையின் உருவாக்கம் மற்றும் போலாந்திற்கும் பால்டிக் நாடுகளுக்கும் வரும் துருப்புகளை நிலைநிறுத்துவது என்ற அடிப்படையில் பார்த்தால், அதுபோன்ற வாக்குறுதிகள் நடைமுறையில் அர்த்தமற்றவையாக இருக்கின்றன.

அனைத்திற்கும் மேலாக நேட்டோ உறுப்பு நாடுகள் தனித்தனியாக உக்ரேனில் அவற்றின் தலையீடுகளை ஆழப்படுத்தி வருகின்றன. ஜேர்மன் தினசரி Die Welt செய்தியின்படி, உக்ரேனிய இராணுவத்திற்கு உதவிகள் வழங்க பிரிட்டிஷ்-ஜேர்மனின் ஒரு கூட்டு திட்டத்தின் மீது அந்த உச்சிமாநாட்டில் பேச்சுவார்த்தைகள் நடக்கும். C4 நிதி என்றழைக்கப்படுவது உக்ரேனின் இராணுவ மற்றும் கட்டுப்பாட்டு கட்டமைப்புகளை நவீனமயமாக்க கோரும் என்பதுடன், அது பிரிட்டிஷ் மற்றும் ஜேர்மன் அதிகாரிகளால் தலைமை வகிக்கப்படும்.

அதுபோன்ற பரிந்துரைகள் ரஷ்யா மற்றும் நேட்டோ படைகளுக்கு இடையிலான ஒரு நேரடி மோதலின் அபாயத்தை மட்டுமே உயர்த்தும் என்பதோடு, அது ஒரு போர் வெடிப்பதற்கும் இட்டுச் செல்லக்கூடும்.

உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ பொறோஷென்கோ நேட்டோ மாநாடு நடந்து கொண்டிருக்கையிலேயே ஒரு போர்நிறுத்த திட்டத்திற்கு (அது இன்றிலிருந்து நடைமுறைக்கு வரவிருக்கிறது) வாய்மொழியாக பொறுப்புறுதியை வழங்கியிருந்த போதினும், கியேவின் இராணுவ படைகள் நேற்று மரியுபோல் நகருக்கருகில் பிரிவினைவாத போராளிகளுடன் இரந்தந்தோய்ந்த மோதலில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார்கள். துப்பாக்கி சுடும் சத்தமும், உரத்த வெடிகுண்டுகளும் புறநகரிலிருந்து கேட்டன, மேலும் அந்நகரை நோக்கி பிரிவினைவாதிகள் முன்னேறுவதைத் தடுக்க உக்ரேனிய சிப்பாய்கள் சாலைதடுப்புகளை எழுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஈராக் மற்றும் சிரியாவில் இராணுவ தலையீடுகளைத் தீவிரப்படுத்த நேட்டோ ஒருங்கிணைந்த நடவடிக்கையையும் திட்டமிட்டு வருகிறது. டைம்ஸ் இதழில் அவர்கள் அளித்த கருத்துக்களில் ஒபாமாவும் கேமரூனும் கூறுகையில், “உலகின் ஏனைய பகுதிகளில், குறிப்பாக ஈராக் மற்றும் சிரியாவில்" நடந்துவரும் அபிவிருத்திகள் உள்நாட்டில் எங்கள் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது. மேலும் நேட்டோ என்பது தேவைப்படும் நேரத்தில் ஒருவருக்கொருவர் உதவிக்கு வரும் வெறும் நண்பர்களின் கூட்டணி அல்ல. அது தேசிய சுய-நலனின் அடிப்படையில் அமைந்த ஒரு கூட்டணியும் ஆகும்," என்றார்கள்.

கேமரூன் தனியாக கருத்து தெரிவிக்கையில், ISISக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நேட்டோ கூட்டணியை வலியுறுத்தினார், மேலும் அசாத்தின் அனுமதியில்லாமலேயே சிரியாவின் இலக்குகள் மீது குண்டுவீச அவர் ஆலோசித்து வருவதாகவும் சேர்த்துக் கொண்டார்.

ராஸ்முஸ்சென் அவரது பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவிக்கையில், “இஸ்லாமிக் அரசு மேற்கொண்டும் முன்னேறுவதைத் தடுப்பதில் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கும் கடமைப்பாடு இருப்பதாக நானும் நம்புகிறேன்," என்று தெரிவித்தார். “அங்கே நேட்டோ ஈடுபடக் கோரி எந்த முறையீடும் வரவில்லை," என்று தொடர்ந்த ராஸ்முஸ்சென், ஆனால் ஈராக் அரசாங்கம் அதுபோன்றவொரு முறையீட்டை அளித்தால், அதை நேட்டோ "ஆழ்ந்து பரிசீலிக்குமென" தெரிவித்தார்.

ராஸ்முஸ்செனின் பத்திரிக்கையாளர் கூட்டம் முடிந்து பதினைந்து நிமிடங்களுக்குள் நேட்டோ உதவியைக் கோரிய ஒரு முறையீட்டை வெளியிட்டு, ஈராக்கிய அரசாங்கம் அதற்கு தகுந்தவாறு ஒத்துழைப்பைக் காட்டியது.