சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

Microsoft to cut 18,000 jobs

மைக்ரோசாஃப்ட  18,000வேலைகளை வெட்டுகிறது

By Andre Damon 
18 July 2014

Use this version to printSend feedback

அடுத்த ஆண்டில் 18,000 வேலைகளை வெட்டுவதற்கான திட்டங்களை மென்பொருள் ஜாம்பவனான மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது, இது ஜனவரி மாதத்திலிருந்து பெருமளவிலான பணி நீக்கங்களை அறிவிக்கும் நான்காவது பிரதான தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்த பணி நீக்கங்கள் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 14 சதவீத பணியாளர்களை உள்ளடக்கும் என்பதுடன் அதன் வரலாற்றிலேயே இது மிக அதிகமுமாகும்.

இந்த வேலை இழப்புகள் வால் ஸ்ட்ரீட்டின் வலியுறுத்தலின் விளைவுகளே, மைக்ரோசாஃப்ட், பின்லாந்தின் பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான நோக்கியாவின் 5 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கைபேசிகள் தயாரிப்பு வர்த்தகத்தைக் கையகப்படுத்தியதன் பின்னர் அது இத்தகைய பெருமளவிலான வேலை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுபடுகிறது.

”வால் ஸ்ட்ரீட்டின் கோணத்திலிருந்து பார்த்தால் இது சரியான திசையில் இன்னொரு படிக்கட்டாகும்” என்று FBR Capital Markets பகுப்பாய்வாளரான டானியல் ஐவிஸ் ஓர் ஆராய்ச்சிக் குறிப்பில் தெரிவிக்கிறார். ”இந்த வெட்டுக்கள் பணியாளர்களுக்கு வலி நிறைந்ததாக இருந்தாலும், அவை தேவையாக இருக்கிறது.”

பல ஆண்டுகளாக அமெரிக்காவில் மிகப் பாரம்பரியமான நிறுவனங்களை அழித்து வரும், வால் ஸ்ட்ரீட்டின் பேராசை மிகுந்த விலை குறைப்பிற்கான கோரிக்கை மாதிரியிலிருந்து, அதிக இலாபமீட்டும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தாக்குபிடிக்கின்றன என்பது போன்ற எந்த ஒரு மாயையையும் மைக்ரோசாஃப்டின் இந்த வேலை நீக்கமானது தலைகீழாக மாற்றிவிடுகிறது.

மைக்ரோசாஃப்ட் பெருமளவிலான பணியாளர்களை நீக்கவிருப்பது ஒட்டுமொத்த தொழில்நுட்பத் துறையிலுமே பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும், இதன் விளைவாக ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலை பறிபோவதுடன், துறை முழுவதிலும் சம்பள மற்றும் அனுகூலக் குறைப்புகள் ஏற்படும்.

NASDAQ வில் ஒரு நாளின் முடிவில் மொத்தமாக 2 சதவீத வீழ்ச்சி இருந்தபோதிலும், இந்நிறுவனத்தின் பங்குகள் பங்கிற்கு 44.53 டாலர்கள் உயர்ந்தது.

வேலை நீக்கங்கள் மற்றும் கடந்த வாரத்தில் மைக்ரோசாஃப்ட்டின் பங்கு விலை 5 சதவீத்திற்கு மேல் அதிகரித்து போன்ற புரளிகளுக்கு வால் ஸ்ட்ரீட் மகிழ்ச்சியுடன் பதிலளித்தது. வேலை நீக்க அறிவிப்பின் எதிர்பார்ப்பில் வியாழனன்று முன்னதாகவே பங்குகள் 2.9 சதவீதம் கூடுதலாக உயர்ந்தது.

வியாழன்ன்று அறிவிக்கப்பட்ட வேலை நீக்கங்கள் ஆரம்பகட்ட மதிப்பீட்டை விட மிகவும் பரந்து விரிந்தவை, அவற்றின் எண்ணிக்கை 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையில் இருந்தது. ஒரு பகுப்பாய்வாளரின் கூற்றுப்படி, இந்த வேலை நீக்கமானது 2016 நிதியாண்டிற்கான மைக்ரோசாஃப்ட்டின் இலாபத்தினை ஒரு பங்கிற்கு 30 சதவீதமாக உயர்த்தும்.

மைக்ரோசாஃப்ட் நிலையாக இலாபகரமானதாக இருந்து வருகிறது என்ற உண்மை ஒரு பக்கம் இருந்த போதிலும், அமல்படுத்தப்பட்டிருக்கும் இத்தகைய பணி நீக்கங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கில் விற்பனை மற்றும் இலாபத்தினை அதிகரிக்கிறது. 2009 ஆண்டில் இந்த நிறுவனம் 15 பில்லியன் டாலர்களிலிருந்து 2013 ஆண்டில் 21 பில்லியன் டாலர்களாக இதனுடைய இலாபம் இருந்தது.

இவ்வருடம் பணி நீக்கங்களை அறிவிப்பதில் மைக்ரோசாஃப்ட்டானது Hewlett-Packard, Intel மற்றும் IBM உடன் இணைந்து கொள்கிறது. மே மாதம் 50,000 பணியாளர்களை அல்லது அதன் மொத்த பணியாளர்களில் 16 சதவீம் பேரை நீக்கத் திட்டமிட்டிருப்பதாக Hewlett-Packard அறிவித்தது. IBM 12,000 பணியாளர்களை அல்லது 3 சதவீதம் பேரை நீக்க திட்டமிட்டிருக்கிறது.

இந்த 18,000 பேரில் ஏறக்குறைய 12,500 பேர் நோக்கியா குழுமத்தை அல்லது மைக்ரோசாஃப்ட் குழுமத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள், இது நிறுவன ஒன்றிணைப்பு நடவடிக்கையால் உண்டாகும் வேலை நீக்கங்களாகும். மைக்ரோசாட்டின் படி, 1,100 பேர் பின்லாந்தில் பணி நீக்கப்படுவார்கள், அங்குதான் நோக்கியாவின் தலைமை அலுவலகம் அமைந்திருக்கிறது, ஹங்கேரியில் இருக்கும் நோக்கியா தொழிற்சாலையிலிருந்து மேலும் ஒரு 1800 பேர் நீக்கப்படுவார்கள். சன் டீகோவில் பணியாற்றும் பிற பணியாளர்களும் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள்.

மைக்ரோசாஃப்ட் நிறைவேற்று அதிகாரியான சத்யா நாதெல்லா பணி நீக்கம் செய்யப்படுவது பற்றி பணியாளர்களிடம் ஒரு மின் அஞ்சலில் தெரிவித்தார்–  அது ” போலியான இரக்கமுடைய வழக்கமான கலவையாகவும் மற்றும் மற்றும் சரியான தகவலின்றி இவை நடைபெறுவதாக” அதில் குறிப்பிட்டதை ஒரு கருத்துக் கூறுபவர் இது பற்றித் தெரிவித்தார்.

”நமது நோக்கங்களுக்காக சரியான நிறுவனத்தை கட்டமைப்பதற்கான முதல் படி பணியாளர்களை மறு சீரமைப்பு செய்வதே” என்று நாதெல்லா அதில் தெரிவித்தார். உடனடியாக 18,000 பணியாளர்கள் அவர்களது அலுவலகங்களிலிருந்து நீக்கப்படுவார்கள் என்பதை அறிவித்ததுடன், நாதெல்லா ”ஒவ்வொருவரும் தங்களுக்கு தகுதியான மரியாதையுடன் நடத்தப்படுவதை எதிர்பார்க்கலாம்” என்று இறுதியாக அதில் குறிப்பிட்டிருந்தார்.

நோக்கியோவின் முன்னாள் நிறைவேற்று அதிகாரியும், உபகரணங்களுக்கான மைக்ரோசாஃப்ட்டின் நிறைவேற்று உதவித் தலைவருமான ஸ்டீஃபன் எலோப் நோக்கியா பணியாளர்களுக்கு தானே சொந்தமாக ஒரு குறிப்பினை எழுதினார். ”அனைவருக்கும் வணக்கம்” என்ற வார்த்தையுடன் தொடங்கிய 1.100 வார்த்தைகள் அடங்கிய அந்த மின் அஞ்சல் மூன்றில் இரண்டு பங்கினரது வேலை நீக்கப்படுகிறது என்பதை ஒரே வாக்கியத்தில் தெரிவித்தது.

மைக்ரோசாஃப்ட் முன்னதாக அதிக அளவிலான வேலை நீக்கங்களை செயல்படுத்தியிருக்கிறது, ஆனால் இந்த அளவுக்கு இல்லை. 2012ல் அது சில நூறு பணியாளர்களை நீக்கியது. மேலும் 2009 ல் 5,800 வேலைகளை அல்லது அதன் பணியாளர்களில் 5 சதவீதம் பேரை குறைத்தது.

அமெரிக்க பொருளாதாரத்தின் விளிம்பு நிலைக்கு மத்தியில் தான் மைக்ரோசாஃப்ட்டின் இத்தகைய பணி நீக்கமும் நடைபெறுகிறது. ஜூன் மாதத்தில் புதிய வீடுகள் கட்டுமானமானது 9.3 சதவீதமாக குறைந்தது, அமெரிக்காவின் தெற்கில் கிட்டத்தட்ட 30 சதவீதம் அளவிலான இந்த சரிவு வரலாறு காணாதது என்று வர்த்தகத்துறை வியாழனன்று தெரிவித்தது.

வரலாறுகாணாத வகையில் பங்கு சந்தை உச்சத்தில் இருந்தாலும்கூட, நாட்டின் பொருளாதாரம் 2014 –ன் முதல் மூன்று மாதங்களில் 2.9 சதவீதத்தை எட்டியிருப்பதாக வர்த்தகத்துறை தெரிவித்திருக்கிறது. கடந்த மாதம்தான், 2014 மற்றும் அதைத் தாண்டிய காலகட்டத்திற்கான பொருளாதார வளர்ச்சிக்கான தன் மதிப்பிடலை Fed மீண்டும் கணக்கிட்டது, நீண்ட கால வளர்ச்சியானது விரும்பத்தகாத வேகத்தில் கிட்டத்தட்ட இரண்டு சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.

இவ்வருடம் அமெரிக்கப் பொருளாதாரம் 1.6 சதவீதம் அளவில் வளர்ச்சியடையும் என Wall Street Journal ஒரு கணெக்கெடுப்பில் மதிப்பிட்டிருக்கிறது, இது ஒரு மாதம் முன்பு மதிப்பிடப்பட்ட 2.2 சதவீதம் மற்றும் இம்மாத தொடக்க மதிப்பீடான 2.8 சதவீதத்திலிருந்து குறைவாகும். கிட்டத்தட்ட ஏழாண்டு கால பொருளாதார வீழ்ச்சியிலிருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு தேவைப்படும் வளர்ச்சி விகிதத்தை சுட்டிக் காட்டி, ”தப்பிக்கும் வேகத்தை மறந்துவிடுங்கள்” என்று Journal முடிவாக தெரிவித்திருந்தது.

அவ்வறிக்கையானது பொருளாதாரத்தை இன்னும் மோசமாக சித்தரிக்கும் பல விவரங்களைக் கொண்டிருந்தது. ‘’அவர்களது கணிப்புகளின் அனுகூலமான மற்றும் எதிர்மறையான அபாயங்கள் குறித்து கேட்ட போது, பதிலளித்தவர்களில் பிரிந்து சென்றனர். இது முன்கூட்டிய ஆறு மாதங்களின் விளைவுகளிலிருந்து கிடைத்திருக்கும் பெரிய மாற்றம். அந்தக் கருத்து கணிப்புகள் ஒவ்வொன்றிலும், 4 பொருளாதார நிபுணர்களில் மூவர் அவர்களது முன்கணிப்புகளில் எதிர்பார்த்ததை விட பொருளாதாரமானது வேகமாக வளருமென்று நினைத்தார்கள்’’.