சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Obama prepares to escalate war in the Middle East

மத்திய கிழக்கில் போரைத் தீவிரப்படுத்த ஒபாமா தயாரிப்பு செய்கிறார்

By Patrick Martin
8 September 2014

Use this version to printSend feedback

ஞாயிறன்று காலை ஒளிபரப்பான ஒரு நேர்காணலின்படி, மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ தலையீட்டைப் பெரிதும் தீவிரப்படுத்துவதன் மீது காரணங்களைக் கூறுவதற்கு ஜனாதிபதி ஒபாமா புதனன்று தேசியளவில் வழங்கவுள்ள ஒரு தொலைக்காட்சி உரையைப் பயன்படுத்துவார்.

பாக்தாத்தில் அமெரிக்க-ஆதரவிலான கைப்பாவை ஆட்சியை அச்சுறுத்தி வருகின்ற, மேற்கு மற்றும் வடக்கு ஈராக்கின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றியுள்ள, ISIL என்றும் அறியப்படும், ISIS (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் அரசு) தான் தீவிரத்திற்கான உடனடி இலக்காக இருக்கிறது.

NBCஇன் " Meet the Press” நிகழ்ச்சியில் பேசுகையில், அநேகமாக முன்கூட்டிய ஒத்திகை போல, நேர்காணல் செய்த சக் டோட் வினவிய, “நாடு மீண்டும் யுத்தத்திற்குத் திரும்புவதற்கு நீங்கள் தயாரிப்பு செய்கிறீர்களா?” என்பதற்கு பதிலளித்து ஒபாமா பேசத் தொடங்கினார்.

ஒபாமாவின் விடையிறுப்பு "ஆமாம்" என்று உடன்படுவதாக இருந்தது. அவர் கூறினார், “நாம் ISILஇன் ஒரு அச்சுறுத்தலைக் கையாள்கிறோம் என்பதை புரிய வைக்க, நாட்டை நான் தயார்படுத்தி வருகிறேன். இதை எவ்வாறு செய்ய வேண்டுமென்று நமக்கு தெரியுமென்பதை மனதில் கொள்ளுங்கள். நாம் சில காலங்களாகவே பயங்கரவாத அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகிறோம்,” என்றார்.

பாகிஸ்தான் பழங்குடி பகுதியில் அல் கொய்தா இலக்குகள் மீது டிரோன் மூலமாக செலுத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களையும், அத்துடன் சோமாலியாவில் நடத்தப்பட்ட கடந்த வார தாக்குதலையும் அவர் குறிப்பிட்டுக் காட்டினார். முதலாவது நடவடிக்கையில் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், இரண்டாவதில் இஸ்லாமியவாத அல்-ஷபாப் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்.

டோட் குறிப்பிட்டதைப் போல, நியூ யோர்க்கிலும் வாஷிங்டனிலும் சுமார் 3,000 மக்களைக் கொன்ற செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதலின் 13வது நினைவுதினத்திற்கு முந்தைய நாளில், அந்த தேசியளவிலான தொலைக்காட்சி உரையை ஒபாமா அளிக்க உள்ளார்.

அல் கொய்தாவுடன் ஒப்பிடுகையில், “ISIL ஈராக் மற்றும் சிரியாவில் அதன் பிராந்திய அபிலாஷையின் காரணமாக ஒரு பரந்த அச்சுறுத்தலை முன்னிறுத்துவதாக" NBC பேட்டியாளருக்கு கூறியதன் மூலமாக, ஒபாமா அவரது உரையின் எச்சரிக்கும் மற்றும் யுத்தவெறியூட்டும் குணாம்சத்தை முன்னோட்டமாக வெளிப்படுத்தினார்.

ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து ஆக்கிரமிப்பு செய்யவும், ஈராக் மீது படையெடுத்து ஆக்கிரமிப்பு செய்யவும் மற்றும் அமெரிக்காவிற்குள்ளே ஜனநாயக உரிமைகளின் மீது ஒரு முன்னணி தாக்குதலைத் தொடங்கவும் புஷ் நிர்வாகம் 9/11 தாக்குதல்களைப் போலிக்காரணமாக பயன்படுத்தி இருந்த நிலையில், ISIL “ஒரு பரந்த அச்சுறுத்தலை முன்னிறுத்துகிறது" என்ற அறிவிப்பானது, படுபயங்கர தாக்கங்களைக் கொண்டுள்ளது.

புதனன்று எடுத்துரைக்க ஒபாமா எந்தவொரு குறிப்பிட்ட இராணுவ திட்டங்களை தேர்ந்தெடுத்தாலும் சரிஅநேகமாக அந்த உரை அதில் வெளிப்படுத்தப்படுவதைக் காட்டிலும் மூடிமறைப்புகளே கொண்டிருக்கும் என்பதுடன்பெண்டகனோ, குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை தாக்குதல்களுக்கு மட்டுமல்ல, மாறாக அமெரிக்க தரைப்படை துருப்புகளை ஒன்றுதிரட்டுவது உட்பட, ஈராக் மற்றும் சிரியா இரண்டு இடங்களிலும் இராணுவ நடவடிக்கைகளுக்கான சாத்தியக்கூறுகளை ஏற்கனவே வரைந்து வருகிறது.

ஈராக்கில் புதிய அமெரிக்க பாத்திரத்தின் ஒரு மேற்படி விரிவாக்கத்தில், அமெரிக்க போர்விமானங்கள் வெள்ளி மற்றும் சனியன்று மேற்கு மாகாணமான அன்பாரில் இலக்குகளைத் தாக்கியது, இது 2011இல் அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்டதற்குப் பின்னர் முதல்முறையாக நடத்தப்பட்டிருக்கும் நடவடிக்கையாகும். இப்போதும் ஈராக்கிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆனால் சுன்னி போராளிகளின் தாக்குதலின் கீழ் இருக்கும் யூப்ரடஸ் ஆற்றின் ஹடிதா அணைக்கு அருகிலுள்ள ISIS நிலைகள் மீது குண்டுகள் வீசப்பட்டன.

ISIS படைகளைக் கண்காணித்தது மற்றும் வடக்கு ஈராக்கில் ISIS தாக்குதல்களை முறியடித்தது உட்பட கடந்த பல மாதகால அமெரிக்க நடவடிக்கைகள் வெறும் ஆயத்த வேலைகள் மற்றும் தற்காப்பு வேலைகள் மட்டுமே ஆகுமென கூறி, ஒபாமா அமெரிக்க கொள்கையின் திசையைக் காட்டும் மற்றொரு குறிப்பையும்Meet the Press” நிகழ்ச்சியில் அளித்திருந்தார். “அடுத்த கட்டம் சில தாக்குதலோடு இப்போது தொடங்க இருக்கிறது,” என்றவர் தெரிவித்தார்.

செவ்வாயன்று அவர் காங்கிரஸினது தலைவர்களைச் சந்திக்க இருப்பதாகவும், அதற்கடுத்த நாள் "முன்னெடுக்கவிருக்கின்ற நமது உபாயத்தை விவரிக்க" அவர் தொலைக்காட்சியில் உரை நிகழ்த்த இருப்பதாகவும் ஒபாமா தெரிவித்தார்.

 “இது அமெரிக்க தரைப்படை துருப்புகள் குறித்த ஒரு அறிவிப்பாக இருக்காது. இது ஈராக் யுத்தத்திற்கு இணையானதாக இருக்காது,” என்றவர் தெரிவித்தார்.

அமெரிக்க மக்களிடம் பொய்யுரைப்பதில் புஷ் நிர்வாகத்தின் முன்னுதாரணத்தை ஒபாமா பின்தொடர்கிறார். ஈராக்கில் பேரழிவுகரமான ஆயுதங்கள் இருப்பதாகவும், சதாம் ஹூசைனுக்கும் அல் கொய்தாவுக்கும் இடையே தொடர்புகள் இருப்பதாக கருதப்படுவதாகவும் புஷ் பொய்யுரைத்தார். ஒபாமாவோ புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தலையீடு எந்தளவிற்கு இருக்கிறதென்பது குறித்து பொய்யுரைத்து வருகிறார்.

அமெரிக்க சிறப்பு நடவடிக்கை படைகளும் மற்றும் போரிடும் "ஆலோசகர்களும்" ஏற்கனவே நூற்றுக்கணக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதுடன், ஈராக்கில் அமெரிக்க இராணுவப் படை துருப்புகள் ஏற்கனவே 1,100ஐ கடந்து சென்றுள்ள நிலையிலும் கூட, ஒபாமா "அம்மண்ணில் இராணுவம் இறங்காதென" வாக்குறுதி அளித்து வருகிறார்.

ISISஇன் அச்சறுத்தலுக்கான எந்தவொரு ஆதாரமும் அங்கே இல்லை என்பதை ஒபாமா ஒப்பு கொண்ட போதினும், புஷ் மற்றும் ஷென்னியால் வழங்கப்பட்ட அதே மாதிரியான இழிவார்ந்த பயமுறுத்தும் தந்திரோபாயங்களையே ஒபாமாவும் பயன்படுத்தினார். “அந்தவொரு அமைப்பை, கணிசமான பகுதிகளைக் கட்டுப்படுத்துவதற்கும், பெரும் ஆதார வளங்கள், பெரும் ஆயுதங்களைக் குவிப்பதற்கும், ஐரோப்பா போன்ற பகுதிகளைச் சேர்ந்த நுழைவு அனுமதி சீட்டுக்களைக் (visa) கொண்ட ஐரோப்பியர்கள் உள்ளடங்கலாக நிறைய வெளிநாட்டு போராளிகளை ஈர்ப்பதற்கும் அனுமதித்தால், பின்னர் சிலகாலம் கழித்து, அவர்கள் அமெரிக்காவிற்குள்ளும் தடையின்றி நுழைய முடியும், அதுவே உள்நாட்டிற்கு ஒரு ஆழ்ந்த அச்சுறுத்தலாகிவிடும்,” என்றவர் அந்த இஸ்லாமிய குழுவைக் குறித்து முறையிட்டார்.

அவர் காங்கிரஸூடன் கலந்தாலோசிக்க இருப்பதாக மற்றும் மத்திய கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்க நிதி ஒதுக்கீட்டை கோர இருப்பதாக அறிவித்ததுடன், அவரது நடவடிக்கைகளுக்கு காங்கிரஸின் ஒப்புதல் அவருக்கு அவசியமென்பதை அவர் மறுத்தார். “அமெரிக்க மக்களைப் பாதுகாக்க தேவையான அதிகாரத்தை நான் பெற்றிருப்பதாக நம்புகிறேன்,” என்றார்.

அவரது புதன்கிழமை இரவு தொலைக்காட்சி உரை "நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதையும், நாம் எதை செய்யவில்லை என்பதையும் காங்கிரஸ் மிக தெளிவாகவும் மற்றும் மிக பிரத்யேகமாகவும் புரிந்து கொள்வதற்கு உதவுமென நான் நினைக்கிறேன். நாம் 100,000 அமெரிக்க துருப்புகளை அனுப்புவதற்கு யோசிக்கவில்லை,” என்றார்.

சுதந்திர சிரிய இராணுவம் போன்ற அமெரிக்க ஆதரவிலான "கிளர்ச்சி" படைகள், சிரியாவில் ISISக்கு ஒரு எதிர்பலத்தை வழங்க கட்டமைக்கப்படுகின்ற அதேவேளையில், ஈராக்கில் வெள்ளை மாளிகையும் பெண்டகனும் ஈராக்கிய இராணுவம் மற்றும் குர்திஷ் பெஷ்மெர்கா படைகளின் தரைவழி தாக்குதலுடன் ISIS மீதான அமெரிக்க குண்டுவீச்சை இணைக்க முடியுமென நம்புகின்றன. சிரியாவில் எப்போது, எவ்வாறு அமெரிக்க இராணுவம் ஒரு நேரடி பாத்திரம் ஏற்கவுள்ளதென்பது இன்னமும் தீர்மானிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

வெள்ளை மாளிகையின் ஒரு பிரதான கவலை என்னவென்றால் சிரியாவில் ISISக்கு எதிரான எந்தவொரு தாக்குதலும் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு மறைமுகமாக உதவுவதாக இருக்கும் என்பதே ஆகும். ஈரான் மற்றும் ரஷ்யாவின் பிரதான கூட்டாளியாக உள்ள அசாத்தை நீக்குவது தான் சிரியாவில் அமெரிக்காவின் குறிக்கோள் என்பதை ஒபாமா அவரது "Meet the Press” நேர்காணலில் அழுத்தந்திருத்தமாய் தெரிவித்திருந்தார்.

ஈராக்கில் புதுப்பிக்கப்பட்ட தலையீட்டிற்கு ஒத்துழைக்க ஏகாதிபத்திய சக்திகளின் அமெரிக்க தலைமையிலான பத்து நாடுகள் "கூட்டணி" உருவாக்கப்பட்டதற்கு ஒபாமா வாழ்த்து தெரிவித்தார். இந்த கூட்டணியால் உருவாக்கப்படும் முதல் தரைப்படை துருப்புகள் கனடாவினால் அனுப்பப்பட்ட ஒரு சிறிய "இராணுவ ஆலோசகர்களின்" குழுவின் வடிவத்தில் உருவாகியிருந்தது, அதேவேளையில் ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை வான்வழி ஆதரவை வழங்குகின்றன.

ஒபாமா நிர்வாகம் தொடர்ந்து குடியரசு கட்சியின் வலதுசாரி எதிர்ப்பாளர்களின் அழுத்தத்தின் கீழ் இருக்கிறது, அவர்கள் சிரியாவில் ISIS இலக்குகள் மீதான உடனடி தாக்குதல்கள் உட்பட மிக வேகமாக தீவிரப்படுத்துவதற்கு கோரி வருகிறார்கள்.

செனட் சிறுபான்மை தலைவர் மிட்ச் மெக்கொனெல் கூறுகையில், ஈராக் மற்றும் சிரியா இரண்டு இடங்களிலும் இராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டங்களை முன்வைக்குமாறு ஒபாமாவிற்கு அழைப்புவிடுக்க, செவ்வாயன்று வெள்ளை மாளிகை கூட்டத்தில் அவர் பங்கெடுக்க இருப்பதாக தெரிவித்தார்.

குடியரசுக் கட்சியின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஹென்றி கிசிஞ்சர் Times of Londonக்கு அளித்த ஒரு பேட்டியில், ISIS மீது "ஒரு முழு அளவிலான தாக்குதலைத் தொடங்குமாறு" ஒபாமாவை வலியுறுத்தினார், விமான தாக்குதல்களில் "சிரியா மற்றும் ஈராக்கிற்கு இடையே எந்தவித பாரபட்சமும் இருக்கக் கூடாது" என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், “அவர்களோடு சண்டையிடுவதில் இனியும் அங்கே எந்தவித கருத்து வேறுபாடும் இருக்க முடியாது,” என்றார்.

வியட்நாமில் நடந்த எண்ணற்ற போர் குற்றங்களுக்கும், அத்துடன் சிலியில் 1973 சிஐஏ-ஆதரவிலான இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் நடந்த அதேபோன்ற அட்டூழியங்களுக்கும் வடிவமைப்பாளராக இருந்த 91 வயதான கிசிஞ்சர், ஒரு அரை நூற்றாண்டிற்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயவாதிகளில் ஒரு முக்கிய பிரபலமாக இருந்துள்ளார். அவரது, உலக ஒழுங்கமைப்பு (World Order) எனும் சமீபத்திய புத்தகம் ஞாயிறன்று வாஷிங்டன் போஸ்டில் மிகவும் உடன்பாட்டுடன் மீளாய்வு செய்யப்பட்டிருந்தது, அதை செய்தவர் வேறு யாருமல்ல ஹிலாரி கிளிண்டன் தான், அவர் எழுதினார், “கிசிஞ்சர் ஒரு நல்ல நண்பர், நான் வெளியுறவுத்துறை செயலராக இருந்த போது அவரது ஆலோசனைகளை சார்ந்திருந்தேன்,” என்று குறிப்பிட்டார்.