சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Australia-India uranium deal strengthens economic and strategic ties

ஆஸ்திரேலியா-இந்தியா யுரேனியம் ஒப்பந்தம் பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை பலப்படுத்துகிறது

By Peter Symonds
6 September 2014

Use this version to printSend feedback

ஆஸ்திரேலிய பிரதம மந்திரி டோனி அப்போட் நேற்று, தனது இந்திய வருகையின் போது, இந்தியாவிற்கு யுரேனியம் தாது ஏற்றுமதி செய்வதற்கு அவருடைய இந்திய மதரப்பான நரேந்திர மோடியுடன் ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டார். யுரேனிய ஒப்பந்தம் இருநாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மட்டும் இணைக்கவில்லை, சீனாவிற்கு எதிராக அமெரிக்காவுடன் மற்றும் அதன் ஆசிய பசிபிக் கூட்டாளிகள் உடனான  இந்தியாவின் மூலோபாய ஒழுங்கிற்கு சமிஞ்சை செய்திருக்கிறது.

இந்திய ஆஸ்திரேலிய உறவுகளின் வளரும் முக்கியத்துவத்தை அடிக்கோடிடும் விதமாக மோடியின் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி (BJP) மே மாதம் ஆட்சியை கைப்பற்றிய பிறகு ஒரு முழுமையான சுற்றுப்பயணத்திற்கு ஒப்புக்கொண்ட முதல் வெளிநாட்டு தலைவர் அப்போட் ஆவார். மோடி ஜப்பானிலிருந்து இப்போது தான் திரும்பினார் அங்கு அவரும் பிரதம மந்திரி ஷின்ஜோ அபேவும் ஒரு "சிறப்பு வாய்ந்த, மூலோபாய உலகளாவிய கூட்டணியை" பிரகடனம் செய்தனர். ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவில் முன்னிலை” மற்றும் இந்திய-பசிபிக் முழுவதும் இராணுவத்தை கட்டியெழுப்ப அடிக்கல்லாக இருக்கின்றன. அது சீனாவுக்கு எதிராக திருப்பப்படுகிறது.

முன்னதாக ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் இந்தியாவிற்கு யுரேனிய தாது விற்பனையை தடை செய்திருந்தன ஏனென்றால் புதுதில்லி அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திட்ட ஒரு நாடு இல்லை மேலும் 1998-ல் அணு ஆயுத சோதனை நடத்தியது. இறுதியாக இந்தியாவுடன் அணுசக்தி ஒத்துழைப்பிற்காக 2008-ல் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு இரு தரப்பு ஒப்பந்தம் செயல்படுத்தியதன் மூலம் NPT-யை அமெரிக்கா குழி தோண்டி புதைத்தது. அமெரிக்க ஒப்பந்தம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட மற்றவர்களும் ஒத்த மாதிரியான ஒப்பந்தங்களை கையெழுத்திட வழி செய்தது.

இந்தியாவிற்கு யுரேனிய தாது விற்பதை நியாயப்படுத்தும் முடிவில், “இந்தியா ஒரு முற்றிலும் குறைபாடற்ற ஆயுத பரவல் தடை செயற்பாட்டை கொண்டிருக்கிறது. இந்தியா ஒரு மாதிரி சர்வதேச பிரஜையாக இருந்துக் கொண்டிருக்கிறது. இந்தியா யாரையும் அச்சுறுத்துவதில்லை" என்று அப்போட் அறிவித்தார்.

இந்தியா யாரையும் அச்சுறுத்துவதில்லை என்ற கூற்று சாதாரணமாக பொருத்தமற்றது. 1947-க்கு பிறகு இந்தியா அதன் பிராந்திய போட்டியாளரான பாகிஸ்தானுடன் மூன்று போர்களையும் சீனாவுடன் 1962-ல் ஒரு எல்லைப் போரையும் நடத்தியிருக்கிறது. 2001-2002-ல் இந்தியாவின் கடந்த பாஜக தலைமையிலான அரசாங்கம், இந்திய நாடாளுமன்றத்தின் மீது ஆயுதமேந்திய தீவிரவாதிகளின் ஒரு தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லையில் மூன்று ஆயுதமேந்திய படைப்பிரிவுகள் உள்பட ஒரு அரை மில்லியன் துருப்புகளை குவித்து இந்திய துணைக்கண்டத்தை ஒரு அணுஆயுதப் போரின் விளிம்புக்கு கொண்டு வந்தது.

உண்மையில் அதை துல்லியமாக  கணிசமான மற்றும் விரைவாக அதிகரிக்கும் இந்தியாவின் இராணுவ திறமைகளை வாஷிங்டன் மற்றும் அதன் கூட்டாளிகள் சீனாவை சுற்றி வளைப்பதின் ஒரு பகுதியாக ஆசியா முழுமையையும் பட்டியலிட விரும்புகின்றன என்பது கண்கூடாக இருக்கிறது.

யுரேனியம் ஒப்பந்தத்தின் கீழ், சிவில் தேவைகளுக்கு அணுஉலை மூலமான மின்சாரம் தயாரிக்கும் 21அணு உலைகள் இயக்குவதற்காக ஆஸ்திரேலிய யுரேனிய தாதுவை பயன்படுத்த உறுதியளித்துள்ளது. 2032-ஆம் ஆண்டுவாக்கில் இந்தியா அதன் அணுஉலை மூலமான மின்சார உற்பத்தியை இரு மடங்காக திட்டமிடுவதால் இன்னும் ஏழு கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எவ்வாறிருப்பினும், யுரேனியம் தாது அமைதி தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற கூற்று ஒரு செப்பிடு வித்தையை உள்ளடக்கியிருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட யுரேனியம் தாது, இந்தியா தன் குறைவான இருப்புக்களை அதன் இராணுவ திட்டத்திற்கு திசை திருப்ப அனுமதிக்கிறது. இந்தியா தற்சமயம் சுமார் 100 அணு ஆயுதங்களை வைத்திருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை, யுரேனியம் ஒப்பந்தத்திற்கு ஒரு சிறப்பான பொருளாதார அம்சங்கள் கண்டிப்பாக இருக்கின்றன. 2011 புகுஷிமா அணுஉலை விபத்து மற்றும் ஜப்பானின் அணுஉலைகள் மூடப்பட்டதை தொடர்ந்து விலைகள் பாதியானதால் ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனங்கள் யுரேனியம் விற்பனையை விரிவுப்படுத்த விரும்புகின்றன.

பைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையில் குறிப்பிட்டவாறு காட்டியபடி,“இந்தியா மற்றும் சீனாவிலிருந்து தேவையின் காரணமாக உலகளாவிய அணுஆயுத தொழிற்துறையில் ஏற்பட்ட ஒரு மீளுயர்வு, 2013-ல் ஆஸ்திரேலியாவின் யுரேனிய ஏற்றுமதி 630 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்களிலிருந்து சுமார் 2019-ல் 1.1 பில்லியன் அவுஸ்ரேலிய டொலர்கள் அளவுக்கு அதிகரிப்பதைப் பார்க்கலாம் என்று ஆஸ்திரேலியா தாதுக்கள் சபை  அனுமானித்திருக்கிறது. உலகிற்கு தெரிந்த யுரேனிய இருப்புகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கு ஆஸ்திரேலியா வைத்திருக்கிறது.

வர்த்தம் மற்றும் முதலீட்டில் இன்னும் பரந்த அளவில் விரிவுபடுத்தும் நோக்கில் அபோட்டின் வருகை அமைந்திருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் ஆஸ்திரேலிய நிலக்கரி மற்றும் ஏனைய பொருட்களுக்கு இந்திய அலைமோதும் தேவைக்கு நடுவே இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் கடந்த வருடம் 15.2 பில்லியன் அவுஸ்ரேலிய டொலர்கள் என்ற அளவிற்கு அதிகரித்து மும்மடங்காகியது. இந்தியா, ஆஸ்திரேலியாவின் ஐந்தாவது பெரிய ஏற்றுமதி சந்தை மற்றும் பத்தாவது ஒட்டுமொத்த வர்த்தக கூட்டாளியாக இருக்கிறது.

வர்த்தக அமைச்சர் ஆண்ட்ரூ ராப் மற்றும் முப்பது ஆஸ்திரேலிய தலைமை நிறைவேற்று அதிகாரிகள் (CEOs) அபோட் உடன் வந்திருந்தனர். ஒரு விரிவான பொருளாதார கூட்டணி அல்லது 2016-ஆம் ஆண்டுவாக்கில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முடிவு செய்ய விரும்பி அபோட் ஆரம்பித்து வைத்தார். 300 பேர் கொண்ட வலிமையான ஒரு தூதுக் குழு தலைமையில் இந்தியாவில் ஆஸ்திரேலிய வணிக வாரத்தை மேடையேற்றி "உண்மையான வணிக பலன்களை" உறுதி செய்ய ராப் அடுத்த ஜனவரி திரும்பவும் இந்தியா வர இருக்கிறார்.

எவ்வாறிருப்பினும், யுரேனிய ஒப்பந்தம் மூலோபாய உறவுகளுடன் எப்பொழுதும் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. 2008-ன் ஆரம்பத்தில், ஆஸ்திரேலிய பிரதம மந்திரி கெவின் ரூட் இந்தியாவிற்கு யுரேனியம் விற்பதற்கான முந்தைய லிபரல் தேசிய கூட்டணி அரசாங்கத்தின் திட்டங்களை மாற்றினார். அதன்பிறகு குறுகிய காலத்திலேயே ரூட் அரசாங்கமும் ஜனநாயக நாடுகள் என்று அழைக்கப்படும் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகியவற்றால் முன்மொழியப்பட்ட நாற்கர மூலோபாய கூட்டணியில் ஆஸ்திரேலியாவின் ஈடுபாட்டிற்கு முட்டுக்கட்டை போட்டது. பின்னர் சீனா இத்திட்டத்தை கடுமையாக விமர்சித்தது.

2010-ல் ஒரு உட்கட்சி ஆட்சி கவிழ்ப்பில் ரூடின் பதவி நீக்கம், ஒபாமா நிர்வாகம் சீனாவுடன் நேரடியாக அதன் ராஜதந்திர மற்றும் மூலோபாய மோதலை அதிகமாக்கி கொண்டிருந்ததால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்ட பதட்டத்தை தணிக்கும் அதன் முயற்சிகளுக்கு வாஷிங்டன் மீதான விரோதத்துடன் பிணைந்துள்ளது. ரூடியின் இடத்திற்கு பதவியில் அமர்த்தப்பட்ட ஜூலியா கில்லர்டு, “முன்னிலைக்கு” ஆதரவாக அவருடைய முழு ஆதரவையும் தெளிவாக்கினார். 2011 நவம்பரில் ஒபாமா முன்னிலையை அதிகாரபூர்வமாக அறிவிக்க அவருக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் ஒரு வழியாக (as the venue) அளித்தார் அத்துடன் டார்வினில் அமெரிக்க கப்பல்கள் தங்கியிருக்க ஒரு ஒப்பந்தத்திலும் கையைழுத்திட்டார்.

இந்தியாவிற்கு யுரேனியம் விற்கும் தங்கள் அரசாங்கத்தின் விருப்பத்தையும் கில்லார்ட் அறிவித்தார் மேலும் விற்பனை மீதான தொழிலாளர் கட்சியின் தடையை ஒரு முடிவிற்கு கொண்டுவந்ததன் மூலம் அதை புறந்தள்ளினார். கில்லர்ட் அரசாங்கத்தின் முடிவு  ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகளில் தீர்மானிக்கப்பட்டது அது நேற்றைய ஒப்பந்தம் கையெழுத்திடலின் போது உச்சத்தையடைந்தது.

இந்திய பிரதம மந்திரி மோடி ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டார், "எங்கள் உறவுமுறையில் அது ஒரு வரலாற்று மைல்கல்” இரு தரப்பு உறவுகளில் "பரஸ்பர நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கையின் ஒரு புதிய மட்டத்தை" பிரதிபலிக்கிறது என்று விவரித்தார். “உலகின் வளர்ந்து வரும் ஜனநாயக வல்லரசு" என்று இந்தியாவையும் ஒப்பந்தம் "பரஸ்பர நம்பிக்கைக்கான ஒரு முக்கிய சமிஞ்சை" என்று விவரித்து அதே அளவுக்கு அப்போட் உணர்ச்சிவசப்பட்டார்

அதே சமயத்தில் 2009-ல் இந்தியாவுடன் ஒரு மூலோபாய பங்காளித்துவத்தை ஏற்படுத்தினார், யுரேனியம் விற்பனை ஒப்பந்தம் ஒன்று இல்லாததை புதுதில்லி நெருக்கமான உறவுகளுக்கு தடையாக பார்த்தது. யுரேனிய தடை குறித்த கில்லார்ட்டின் தலைகீழ் மாற்றம் நெருக்கமான இராணுவ ஒத்துழைப்புக்கு குறிப்பாக இந்தியப் பெருங்கடலில் கடற்படை கூட்டு நடவடிக்கைக்கு கதவை திறந்தது. அடுத்த வருடம் அவர்களின் முதல் கூட்டு கடற்படை பயிற்சியை நடத்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.  

நாற்கரம் என அழைக்கப்படுவதின் முறையான புத்துயிரளிப்பு இல்லையென்ற போதிலும் நெருக்கமான இராணுவ உறவுகளை ஏற்படுத்த ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளை ஒபாமா நிர்வாகம் ஊக்கப்படுத்துகிறது. நாட்டின் அரசியலமைப்பு "கூட்டு தற்காப்பிற்கு" அனுமதிக்க அபே அரசாங்கம் பொருள் விளக்கத்தை திருத்தி இருக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு ஆயுத விற்பனை செய்வதையும் நிகழ்ச்சி நிரலில் சேர்த்திருக்கிறது. அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை முத்தரப்பு கூட்டு கடற்படை பயிற்சிக்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.

ஒபாமாவின் "முன்னிலையின்" ஒரு பகுதியாக, குறிப்பாக கச்சா பொருட்கள் மற்றும் எரிசக்திக்கு சீனா சார்ந்திருக்கும் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலிருந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய பெருங்கடல் பகுதி மூலமான முக்கிய கடல் வழிகளை ஆதிக்கம் செய்யவும் அமெரிக்கா இந்தோ-பசிபிக் முழுவதும் அதன் இராணுவ மேலாதிக்கத்தை பராமரிக்க விரும்புகிறது

ஆயினும், உத்தியோகப்பூர்வ நிகழ்ச்சி பட்டியலில் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அதிகமாக இல்லை, அவரின் வருகையின்போது  ஐயத்திற்கிடமின்றி அவர்கள் நெருக்கமாக விவாதித்தார்கள். அப்போட் அரசாங்கத்தின் கீழ், நவம்பர் 2013 ல் இந்திய பெருங்கடல் பிராந்திய அமைப்பு உச்சிமாநாடு மற்றும் 2014 மார்ச் மாதம் இந்திய பெருங்கடல் கடற்படை கருத்தரங்கு ஆகிய இந்தியா கலந்துக் கொண்ட இரண்டு உயர் மட்ட கூட்டங்களை ஆஸ்திரேலியா நடத்தி இருக்கிறது. பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க மோடி மற்றும் அபோட் திட்டங்களை அறிவித்தார்கள். நெருக்கமான ஒத்துழைப்பின் ஒரு சமிஞ்சையாக, இருதரப்பு வருகையின் ஒரு பகுதியாக நவம்பரில் பிரிஸ்பேன் G20 உச்சி மாநாட்டிற்கு பிறகு 1986-க்கு பிறகு முதன்முறையாக ஆஸ்திரேலியாவிற்கு வரும் ஒரு இந்திய பிரதம மந்திரியாக மோடி இருப்பார்.