சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

Australian government signals purchase of Japanese submarines

ஆஸ்திரேலிய அரசாங்கம் ஜப்பானிய நீர்மூழ்கி கப்பல்களை வாங்க சைகை காட்டுகிறது

By Peter Symonds
10 September 2014

Use this version to printSend feedback

ஆஸ்திரேலியாவிலேயே வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல்களைக் கட்டமைப்பதைக் காட்டிலும், முழுவதும் தயாரிக்கப்பட்ட ஜப்பானிய கப்பல்களை வாங்குவதன் மூலமாக கப்பற்படைக்கான நீர்மூழ்கிகப்பல்களை மாற்றுவதன் மீது நடந்துவந்த இன்று வரையிலான நீண்டகால சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் அதன் பலமான குறிப்பை காட்டியுள்ளது.

அந்த தேர்ந்தெடுப்பு பொருளாதார வார்த்தைகளில் காட்டப்பட்டு வருகின்ற போதினும், அதுபோன்றவொரு முடிவு ஆசியாவில் சீனாவிற்கு எதிராக திருப்பிவிடப்பட்ட அமெரிக்க இராணுவ ஆயத்தப்படுத்தலின் பாகமாக, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை மூலோபாயரீதியில் மிக நெருக்கமாக ஒன்றிணைத்து, நீண்டகால புவிசார்-அரசியல் துணைவிளைவுகளைக் கொண்டிருக்கும்.

நியாயமான விலையில் சிறந்த மற்றும் மிகவும் சக்திவாய்ந்த நீர்மூழ்கி கப்பல்கள்" கிடைப்பது முன்னுரிமையாக ஆகி வருவதாக திங்களன்று பிரதம மந்திரி டோனி அப்போட் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அவர் கூறினார்: “நாம் இங்கே தொழில்துறை கொள்கைகளின் அடிப்படையில் அல்ல, பாதுகாப்பு தேவைகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்க வேண்டும்.” அதே சேதியைத் தொழில்துறை மந்திரி ஐயன் மேக்பார்லேனும் நேற்று மீண்டும் வலியுறுத்தினார். இதுவரையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றபோதினும், அரசாங்கம் "பண மதிப்புக்கு" முன்னுரிமை அளிக்குமென அவர் தெரிவித்தார்.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் பிரதம மந்திரி ஜேய் வெதரில், ஆஸ்திரேலியாவில் நீர்மூழ்கி கப்பல்களின் கட்டமைப்பை வெட்டுவதென்பது அத்திட்டத்தை மையமாக கொண்ட அவரது மாநிலத்தில் ஆயிரக் கணக்கான வேலைகளை அழிக்குமென உடனடியாக சுட்டிக்காட்டி இருந்தார். 12 நீர்மூழ்கி கப்பல்களின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு செலவானது, சுமார் 40 பில்லியன் ஆஸ்திரேலிய டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது, இது ஜப்பானின் சோர்யு ரக கப்பல்கள், அல்லது ஐரோப்பிய மாற்றீடுகளை வாங்கும் விலையை விட சுமார் இரண்டு மடங்கு அதிகமாகும்.

கடந்த மாதத்தில் ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளின் பிரவாகம், அரசாங்கமும் பாதுகாப்பு ஸ்தாபகமும் ஜப்பானிய நீர்மூழ்கி கப்பல்களை வாங்க திரும்பியிருப்பதாக பலமாக குறிப்பிட்டது. ஜூனில் ஜப்பானுக்கு விஜயம் செய்து சோர்யு ரக நீர்மூழ்கி கப்பல்களைப் பார்வையிட்டு வந்த பாதுகாப்பு மந்திரி டேவிட் ஜோன்ஸ்டன், அது "முற்றிலும் வசீகரிக்கக்கூடியதாக" இருப்பதாக அறிவித்தார். அது அதன் ஐரோப்பிய போட்டியாளர்களை விட நீண்ட தூரத்திற்குச் செல்லும் உலகின் மிகப்பெரிய டீசல் என்ஜின் ஏந்திய நீர்மூழ்கி கப்பலாகும்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் நேற்று குறிப்பிட்டது, “சீனாவின் பிராந்திய வலிமை-காட்டும் பாங்கிற்கு இடையே இராணுவ உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கில், ஜூலையில் ஜப்பானிய பிரதம மந்திரி அபே கான்பெர்ராவிற்கு வந்து சென்ற பின்னர், ஜப்பானிய கப்பல்கள் மீது முடிவெடுக்கும் உத்வேகம் அதிகரித்திருப்பதாக பல மூத்த [ஆஸ்திரேலிய] பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.”

துல்லியமான விபரங்கள் இன்னும் முடிவாகவில்லை, ஆனால் அவைஇந்த ஆண்டின் இறுதிக்குள்முடிவாகும் நிலையில் இருக்கின்றன. ஜப்பான் தரப்பிற்கு பலமான விருப்பம் இருக்கிறது,” ஒரு பாதுகாப்பு அதிகாரி அந்த பத்திரிகைக்குத் தெரிவித்தார். அந்த முடிவு குறித்து வாஷிங்டன் நெருக்கமாக கவனம் செலுத்தி வருவதாகவும் அந்த கட்டுரை குறிப்பிடுகிறது.

ஒபாமா நிர்வாகம் அணுஆயுதமேந்தும் நீர்மூழ்கி கப்பல்களை வாங்குமாறு முந்தைய தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு அழுத்தம் அளித்தது, அந்த கப்பல்களுக்கு ஒத்துழைக்க அவசியப்படும் அணுசக்தி உள்கட்டமைப்பு ஆஸ்திரேலியாவிடம் இல்லையென்ற அடித்தளத்தில் அந்த யோசனை நிராகரிக்கப்பட்டது.

இருந்தபோதினும் சோர்யு வாகனங்களை ஆஸ்திரேலியா வாங்குவதை வாஷிங்டன் பலமாக ஆதரித்துள்ளது. கடலடி கப்பற்படையின் ஆசியாவிற்கான அமெரிக்க தலைமை அதிகாரி அட்மிரல் ஸ்டௌர்ட் முன்ஸ்ச் கடந்த மாதம் கூறுகையில், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான அதுபோன்ற கூட்டுறவு "அவர்களுக்குள் எடுக்க வேண்டிய அவர்களின் ஒரு தேசிய முடிவாகும், ஆனால் நாங்கள் நிச்சயமாக அந்த நட்புறவை வரவேற்கிறோம்,” என்றார்.

அந்த கருத்துக்கள் புவிசார்-அரசியல் கணக்கீடுகள் சம்பந்தப்பட்டிருப்பதை அடிக்கோடிடுகின்றன. “கூட்டு தற்காப்பை" அனுமதிக்கும் வகையில் ஜூலையில் அபேயின் அரசாங்கம் செய்திருந்த சர்ச்சைக்குள்ளான அரசியலமைப்பு "மறுவிளக்கம்" உட்பட ஜப்பானை மீள்இராணுவமாக்கும் பிரதம மந்திரி அபேயின் உந்துதலை அமெரிக்கா ஆதரித்துள்ளது; ஊக்குவித்துள்ளது. அதன் விளைவாக, அமெரிக்கா உடன் சேர்ந்து போர் தொடுப்பதிலாகட்டும் மற்றும் அன்னியநாடுகளுக்கு ஆயுதங்கள் விற்பதில் ஆகட்டும், கூட்டணிகள் அமைப்பதற்கு ஜப்பான் மீதிருந்த தடைகளை அபே முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

20 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆஸ்திரேலிய-ஜப்பான் நீர்மூழ்கி கப்பல் உடன்படிக்கை இறுதி செய்யப்பட்டால், அது இரண்டாம் உலக யுத்தம் முடிந்ததற்குப் பின்னர் முதல்முறையாக ஜப்பானை ஒரு ஆயுத ஏற்றுமதியாளராக மாற்றும் என்பதுடன் அது ஜப்பானின் ஆயுத தளவாட தொழில்துறைக்கு ஒரு ஊக்குவிப்பையும் வழங்கும். அனைத்திற்கும் மேலாக, அது ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை இன்னும் மிக நெருக்கமாக இணைக்கும், ஏனென்றால் அந்த நீர்மூழ்கி கப்பல்கள் அமெரிக்க ஆயுத எந்திர அமைப்புமுறையைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிக பரந்தளவில், அந்த ஆயுத உடன்படிக்கைசீனாவின் செல்வாக்கைப் பலவீனப்படுத்த மற்றும் அதை இராணுவரீதியில் சுற்றி வளைக்க நோக்கங்கொண்ட ஒரு ஆக்ரோஷமான மூலோபாயமானஒபாமா நிர்வாகத்தினது "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" அச்சாணிகளாக ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை மேற்கொண்டும் ஒருங்கிணைக்கும்.

ஒரு பொருளாதார முற்றுகை மற்றும் கடற்படை முற்றுகை உட்பட சீனாவிற்கு எதிரான பெண்டகனின் யுத்த திட்டங்களுக்குள் அந்த புதிய ஆஸ்திரேலிய நீர்மூழ்கி கப்பல்கள் ஒருங்கிணைக்கப்படும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. “நீர்மூழ்கி கப்பலின் தேர்ந்தெடுப்பு" என்ற தலைப்புடன் ஏப்ரலில் நடந்த உயர்மட்ட கலந்துரையாடலின் அடிப்படையில் ஆஸ்திரேலிய மூலோபாய கொள்கை பயிலகம் (ASPI) நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது, அது ஆஸ்திரேலிய நீர்மூழ்கி கப்பல்கள் மீதிருக்கும் வாய்ப்புகள் குறித்து விபரமாக மீளாய்வு செய்திருந்தது.

ஆஸ்திரேலியாவின் எதிர்கால நீர்மூழ்கி கப்பல் (future submarine – FSM) மீது முக்கியமாக ஆலோசிக்க வேண்டியிருப்பது அமெரிக்க கூட்டணிக்கு அதன் சாத்தியமான பங்களிப்பு குறித்ததாகும் என்று ASPIஇன் பகுப்பாய்வாளர் பென்ஜமின் ஸ்சீர் பகிரங்கமாக விவரித்தார். “FSM மற்றும் அமெரிக்க கூட்டணி நடவடிக்கைகள் குறித்த எந்தவொரு விவாதமும், சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தை (PLA) அமெரிக்க இராணுவம் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலும் மற்றும் அதைக் கடந்தும் மிக தீவிரமாக நீண்டகால மூலோபாய சவாலாக கருதுகிறதென்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்,” என்றார்.

ஜப்பானிய நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதென்பது "புவிசார்-அரசியல் விளைவுகளைச் சுமந்திருப்பதாக" ஒரு கட்டுரையில் சக-பகுப்பாய்வாளர் மார்க் தோம்சன் ஜூலையில் எச்சரித்தார். அவர் தொடர்ந்து எழுதினார்: “ஆஸ்திரேலியாவுக்கு ஜப்பானின் நீர்மூழ்கி கப்பல்களினது ஏற்றுமதி யாரும் இதுவரையில் அனுமானித்ததை விடவும் ஜப்பானின் பாதுகாப்பு நிலைப்பாடுகளை இன்னும் வேகமாக இயல்புநிலைப்படுத்துவதை பிரதிநிதித்துவம் செய்கிறது. அது சீனாவை எச்சரிக்கையூட்டுவதுடன், அமெரிக்கா மற்றும் அமெரிக்க கூட்டாளிகளால் அடக்கப்படுவது குறித்த பெய்ஜிங்கின் அச்சங்களை உயர்த்தும். அத்தகைய தீவிர முதல்-தர மூலோபாய பரிசீலனைகளை மேலோட்டமாகவோ அல்லது நீர்மூழ்கி கப்பல்களை வாங்குவதில் முதலிடத்தில் இருக்கும் காரணங்களை ஏதோவொரு விதத்தில் இரண்டாம் நிலையிலோ வைத்து நிராகரித்து விடக்கூடாது,” என்றார்.

கான்பெர்ரா மற்றும் டோக்கியோ, வாஷிங்டனின் ஆதரவுடன், ஒரு நீர்மூழ்கி கப்பல் உடன்படிக்கையை இறுதி செய்வதாக தெரிகிறது என்ற உண்மை தீவிரமடைந்துவரும் சீனா உடனான அமெரிக்க-தலைமையிலான மோதலின் மற்றுமொரு அறிகுறியாகும். 2020 வாக்கில், பெண்டகன் அதன் கடற்படை மற்றும் விமானப்படை உடைமைகளில் 60 சதவீதத்தை ஆசிய-பசிபிக்கில் கொண்டிருக்க திட்டமிடுகிறது. கடலுக்கடியிலான சாதனங்களில் 30 அதிரடி அணுஆயுத நீர்மூழ்கி கப்பல்கள், 8 பெருந்தொலைவுக்கு பாயும் அணுஆயுதமேந்திய ஏவுகணை நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் 2 அணுஆயுத ஏவுகணை தாங்கிய ரோந்து நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளடங்கும், அத்துடன் 11,000 நீர்மூழ்கி கப்பல் அதிகாரிகளும் உள்ளடங்குவார்கள்.

ஸ்சீர் குறிப்பிட்டார்: “எதிர்தரப்பில், அணுஆயுத நீர்மூழ்கி கப்பல்களைச் செயல்படுத்துவதில் PLA கடற்படை இன்னமும் மிகவும் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது, அதன் பழங்காலத்திய படகுகள் ஒப்பீட்டளவில் எளிதில் கண்டறியக்கூடியவையாகவும், மற்றும் அதன் நீர்மூழ்கிகப்பல்-எதிர்ப்பு போர் தகைமைகள் மட்டுப்படுத்தப்பட்ட விதத்திலும் உள்ளன.”

ஆஸ்திரேலிய அரசியல் ஸ்தாபகத்திற்குள், எதிர்கட்சியான தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் பிற்போக்குத்தனமான தேசியவாத வார்த்தைகளில் ஜப்பானிய நீர்மூழ்கி கப்பல்கள் வாங்குவதைக் கண்டித்துள்ளன. தெற்கு ஆஸ்திரேலியாவில் நேற்று ஆஸ்திரேலிய நீர்மூழ்கி கப்பல் நிறுவன தொழிலாளர்களிடையே தொழிற்கட்சி தலைவர் பில் சார்டென் உரையாற்றுகையில், தேசிய பாதுகாப்பை அரசாங்கம் "ஒப்பந்தமுறையில் வெளியில் கொடுப்பதைக்" குற்றஞ்சாட்டியதுடன், ஜப்பானிய நீர்மூழ்கி கப்பல்களை ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு மற்றும் வேலைகளை அச்சுறுத்தும் தரங்குறைந்த "அந்நாட்டு தயாரிப்புகளாக" முத்திரை குத்தினார்.

சீனாவிற்கு எதிரான அமெரிக்கா யுத்த தயாரிப்புகளுக்குள் ஆஸ்திரேலியா ஒருங்கிணைவதை எதிர்க்காமல், தொழிற்கட்சி தெளிவாக அதை ஆதரிக்கிறது. முந்தைய தொழிற்கட்சி அரசாங்கமோ, நவம்பர் 2011இல் ஒபாமா அவரது "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை" உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தை களமாக்கி கொடுத்தது, ஆஸ்திரேலிய இராணுவ தளங்களை அமெரிக்க படைகள் பயன்படுத்துவதற்குத் திறந்துவிடும் ஓர் உடன்படிக்கையிலும் அது கையெழுத்திட்டதுஅந்த நிகழ்முறை தற்போதைய கூட்டணி அரசாங்கத்தின் கீழ் விரிவாக்கப்பட்டிருக்கிறது. வேலைகள் பாதுகாப்பைப் பொறுத்த வரையில், தொழிற்கட்சியும் தொழிற்சங்கங்களும் மிக சமீபத்தில் ஒட்டுமொத்த வாகன தொழில்துறையின் முன்கூட்டிய மூடல்கள் உட்பட ஆஸ்திரேலியாவில் உற்பத்தியை சீரழிப்பதற்கு தலைமை தாங்கியுள்ளன.