சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France’s new government shaken by early ministerial resignation

பிரான்சின் புதிய அரசாங்கம் முந்தைய அமைச்சக இராஜினாமாக்களால் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது

By Anthony Torres
10 September 2014

Use this version to printSend feedback

ஒரு மந்திரியின் இராஜினாமா மற்றும் முன்னாள் முதல் பெண்மணி (first lady) வலெரி திரிவீலரின் ஒரு புத்தக வெளியீடுக்குப் பின்னர், புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம மந்திரி இமானுவேல் வால்ஸின் அரசாங்கம் ஏற்கனவே அதன் முதல் நெருக்கடியை முகங்கொடுத்து வருகிறது, அவ்விரண்டும் அரசாங்கத்தின் முழு பலவீனத்தையும் அம்பலப்படுத்துகின்றன.

எலிசே ஜனாதிபதி மாளிகை வெளிநாட்டு வர்த்தகம், சுற்றுலா மற்றும் வெளிநாடுவாழ் பிரெஞ்சு மக்களுக்கான மந்திரி தோமஸ் தெவெனோவின் இராஜினாமாவை அறிவித்தது, அவர் பிரெஞ்சு வரித்துறை அலுவலகங்களுக்கு "செய்தியனுப்புவதில் மற்றும் பணபட்டுவாடாவில் உள்ள தாமதங்களை" ஒப்புக் கொண்டிருந்தார்.

தெவெனோவிற்கு மாற்றாக டொமினிக் ஸ்ட்ரவுஸ்-கானின் முன்னாள் கூட்டாளியான லோட்-எட்-கரோனி மாவட்டத்தின் ஆளும் சோசலிஸ்ட் கட்சியினது (PS) ஒரு பிராந்திய செயலாளர் மாத்தியாஸ் ஃபெக்ல் நியமிக்கப்பட்டார். ஃபெக்ல் ஏற்கனவே அம்மாவட்டத்தில் முன்னாள் வரவு-செலவு திட்ட மந்திரி ஜெரோம் கௌசாக் (Jérôme Cahuzac) வெற்றி பெறுவதற்கு உழைத்திருந்தார். அப்பதவியில் இருந்தபோது கௌசாக் வரி ஏய்ப்புக்கு எதிராக போராடி வந்ததாக கூறப்பட்டு வந்தது—ஆனால் அவரே வரி ஏய்ப்பு செய்தார் என்பதும், அதிதீவிர-வலது வட்டாரங்களுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார் என்பதும் வெளிப்பட்ட போது வெடித்த ஒரு ஊழல்மோசடிக்கு இடையே, கடந்த ஆண்டு கௌசாக் அவரது பதவியை இராஜினாமா செய்தார்.

ஒற்றுமைக்கான பாதுகாப்பு குழுவின் (GUD) முன்னாள் உறுப்பினர்களுடனான அவரது நிறுவனங்களிலிருந்து கிடைத்த இலாபங்களை கௌசாக் ஒரு இரகசிய சுவிஸ் வங்கிக்கணக்கில் வைத்திருந்தார். இந்த GUD என்பது ஒரு வன்முறையான அதிதீவிர-வலது குழுவாகும், இதன் சில அங்கத்தவர்கள் அப்போது நவ-பாசிச தேசிய முன்னணிக்குள் (FN) சென்றிருந்தார்கள்.

தெவெனோவ் இராஜினாமா செய்த அடுத்தநாள், ஹோலாண்டின் முன்னாள் துணைவியின் நூல் வெளியானது. ஹோலாண்ட் ஏழைகளை விரும்புவதில்லை என்ற திரிவீலரினது குறிப்புகளின் பத்தி தான் மிக பரவலாக மேற்கோளிடப்பட்டது. அப்பெண்மணியின் கருத்துப்படி, ஹோலாண்ட் அவர்களை "பிரியோசனமில்லாதவர்கள்" என்று கூறுவதுடன், அதை கேலிக்குரியதாகவும் கருதுகிறார்.

சோசலிஸ்ட் கட்சி அதிதீவிர வலதுடன் தொடர்பு கொண்டிருக்கிறது என்பதுடன், மக்கள் மீதான அதன் ஒளிவுமறைவற்ற அலட்சியம் பிரெஞ்சு முதலாளித்துவ "இடதின்" அழுகியதன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சோசலிஸ்ட் கட்சியின் போக்கை ஜேர்மனிக்கு இன்னும் விரோதமான ஒரு பணவீக்க கொள்கையை நோக்கி திருப்ப வேண்டுமென பரிந்துரைக்கும் ஆர்னோ மொண்டபூர்க் போன்ற சில மந்திரிகளைத் தூக்கியெறிந்து அரசாங்கம் மாற்றியமைக்கப்பட்ட பின்னரும், சோசலிஸ்ட் கட்சியால் இன்னமும் தன்னைத்தானே ஸ்திரப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஓர் ஆழ்ந்த நெருக்கடி ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தையும் அசைத்து வருகிறது.

பிரான்சுவா ஹோலாண்ட் பதவியிலிருக்கும் காலம், அரசாங்கத்தின் மீது தொழிலாளர்களின் அதிகரித்துவரும் கோபத்தால் குறிக்கப்பட்டிருக்கிறது. Le Figaroஆல் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின்படி, ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி முறையே வெறும் 13 மற்றும் 30 சதவீத செல்வாக்கு விகிதத்தைப் பெற்றிருக்கிறார்கள் என அந்த பத்திரிகை குறிப்பிடுகிறது, இது முந்தைய எந்தவொரு காலத்தைவிடவும் சாதனையளவிற்கு குறைவாகும்.

FNஐ முகங்கொடுத்துள்ள PSஇன் பொறிவு, பிரான்ஸில் ஆளும் வட்டாரங்கள் நிலைகுலைந்து போயிருப்பதை, 2017 ஜனாதிபதி தேர்தல்கள் மீதான ஒரு சமீபத்திய Ifop கருத்துக்கணிப்பு எடுத்துக்காட்டுகிறது. அக்கருத்துக்கணிப்பின்படி, வாக்கெடுப்பில் FNஇன் வேட்பாளராக ஆகக்கூடிய மரீன் லு பென் முதல் சுற்றில் 30 சதவீதத்துடன் முன்னிலையில் வருவார் என்பது மட்டுமல்ல, மாறாக அவர் இரண்டாவது சுற்றில் ஹோலாண்டைச் சந்தித்தால், அப்பெண்மணி அந்த வாக்கெடுப்பில் அவரை 54 சதவீதத்துடன் தோற்கடித்து, பிரான்ஸின் ஜனாதிபதி ஆவார்.

முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி அல்லது அலைன் ஜூப்பே போன்ற வலதுசாரி ஐக்கிய மக்கள் இயக்கத்தின் (UMP) வேட்பாளர்களுக்கு எதிரான இரண்டாவது சுற்று போட்டியில் லு பென் தோற்கக்கூடும் என்பதையும் அந்த கருத்துக்கணிப்பு காட்டுகிறது.

லு பென் Le Mondeக்கு அளித்த ஒரு பேட்டியின் போது, புதிய நாடாளுமன்ற தேர்தல்களுக்கு அவர் அழைப்புவிடுக்க தீர்மானித்தால், ஹோலாண்டின் பிரதம மந்திரியாக ஆவதற்கு அவர் ஏற்கனவே அளித்திருந்த பரிந்துரையை மீண்டும் வலியுறுத்தினார்.

அது ஹோலாண்டுடன் ஒரு கடுமையான மோதலாக இருக்கக்கூடும்,” என்று அனுமானித்த அவர், தொடர்ந்து கூறுகையில், “ஹோலாண்ட், பூங்கொத்துக்களோடு நினைவுவிழா வேண்டுமானால் கொண்டாடுவார். அது மாதிரியானதைத் தான் அவர் விரும்புகிறாரும் கூட. அதுபோலவே தான் நடக்கும், ஏனென்றால் அரசியலமைப்புரீதியாக, அரசாங்கம் தான் நாட்டின் கொள்கையை தீர்மானிக்கிறது, செயல்படுத்துகிறது. இதனால் இந்த குடியரசின் ஜனாதிபதி அடிபணிய வேண்டியிருக்கும் அல்லது இராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். அவர் இரண்டாவது தீர்வை தேர்ந்தெடுப்பார் என்று தான் நான் நம்புகிறேன், ஏனென்றால் நடைமுறைப்படுத்தப்படும் கொள்கை அவரது கொள்கையிலிருந்து தீவிரமாக வேறுபட்டிருக்கும் என்ற உண்மையை அவரால் சகித்துக் கொள்ள முடியாது.”

லு பென் பின்னர் அதைத் தொடர்ந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களை முறையிட்டார். அப்பெண்மணி அதிகாரத்திற்கு வந்தால், "குடியுரிமை வழிமுறைகள் மாற்றப்படும், இங்கிலாந்தில் டேவிட் கேமரூன் செய்ததைப் போல உள்ளே வருவதற்கு பிரான்ஸைக் கடினமானதாக்குவதன் மூலமாக புலம்பெயர்வு நிறுத்தப்படும்.” மேலும் வேலை நியமனம் மற்றும் சமூக செலவினங்கள் போன்ற விடயங்களில் "தேசிய முன்னுரிமை நிறுவப்படும்,” என்பதை லு பென் சுட்டிக்காட்டினார்.

அதுபோன்ற கருத்துக்கள் பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் ஒட்டுமொத்த திவால்நிலைமையை அடிகோடிடுகின்றன. சோசலிஸ்ட் கட்சி மற்றும் UMPக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் கோபம் வெடிக்கும் நிலைக்கு வந்திருக்கையில், மாற்றீடாக அவர்கள், மக்கள்விரோத மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு ஆழமாக விரோதமாக உள்ள வேலைத்திட்டத்தை கொண்ட ஒரு நவ-பாசிச வேட்பாளரை முன்னுக்குக் கொண்டு வருகிறார்கள்.

வால்ஸ் அரசாங்கம், அது படுமோசமாக மதிப்பிழந்திருப்பதற்கு இடையே, தேசிய நாடாளுமன்றத்தில் உள்ள தற்போதைய PS பெரும்பான்மையைக் கொண்டு அதிகாரத்தில் நிலைக்க முடியுமென அது கணக்கிட்டு வருகிறது. அது பிழைப்பதென்பது மொண்டபூர்க்கைச் சுற்றியுள்ள PS பிரிவுகளின் ஆதரவையும், அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் கோபத்தை நசுக்க ஊழல்மிகுந்த போலி-இடது கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சக்தியையும் சார்ந்திருக்கிறது.

இக்கட்சிகள் 2012 ஜனாதிபதி தேர்தல்களில் ஹோலாண்டுக்கு வாக்களிக்குமாறு அழைப்புவிடுத்தும் மற்றும் இடதை நோக்கி ஹோலாண்ட் நிர்வாகத்திற்கு அழுத்தமளிப்பது சுலபமானதென்று வாதிட்டும், அவர் வெற்றி பெறுவதற்கு உதவின. உண்மையில், ஹோலாண்ட் இரக்கமின்றி சிக்கன கொள்கைகளைப் நடைமுறைப்படுத்துவார் என்பது இந்த போலி-இடது கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும்.

தொழிலாள வர்க்கம் குறித்த ஹோலாண்டின் தனிப்பட்ட ஏளனத்தை திரிவீலர் பகிரங்கப்படுத்துவது என்பது புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற போலி-இடது கட்சிகளின் அரசியல் நேர்மையின்மையை அடிக்கோடிடுகிறது. உழைக்கும் மக்கள் குறித்த ஹோலாண்டின் அவமதிப்பைப் பகிர்ந்து கொள்ளும் குட்டி முதலாளித்துவ அடுக்குகளில் இருந்து பெரிதும் உள்வாங்கியிருக்கும் போலி-இடது முற்றிலும் முரணாக என்னவெல்லாம் வாதங்களை முன்னெடுத்தாலும், சோசலிஸ்ட் கட்சி ஒரு இடது-சாரி கட்சியல்ல.

ஹோலாண்ட் அவரது உரைகளில், “நிதிதான் எனது விரோதி" என்றும், அவர் பணக்காரர்களுக்கு 75 சதவீதம் வரிவிதிப்பதாகவும் கூறியது அனைத்தும் ஆத்திரமூட்டும் பொய்களாகும். ஆனால் அந்த பொய்களை ஒரு காலத்திற்கு முன்னெடுக்க முடிகிறது மற்றும் காப்பாற்றி வைக்க முடிகிறதென்றால் அது சோசலிஸ்ட் கட்சிக்கான இடதிலிருந்து வரும் எதிர்ப்பின் வெளிப்பாட்டை போலி-இடது தடுத்துவிட்டன என்பதனால் மட்டுமே ஆகும்.

PS தொழிலாள வர்க்கத்திற்கும் சோசலிசத்திற்கும் விரோதமாக இருக்கிறது. உண்மையில், சோசலிசத்தைக் குறிக்கும் எந்தவொரு குறிப்பையும் எடுத்துவிடுவதற்காக, Socialist Party என்ற அதன் பெயரை மாற்றுமாறு வால்ஸ் முன்னதாக பரிந்துரைத்திருந்தார். 2009இல் அவர் அறிவித்தார், “நாம் PSஇன் செயல்பாட்டை அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரையில் மாற்ற வேண்டும், பெயர் முதற்கொண்டு ஒவ்வொன்றையும் மாற்றி நம்மையும் கடந்து எடுத்துச் செல்ல வேண்டும், ஏனென்றால் சோசலிசம் என்ற சொல்லே காலங்கடந்த ஒன்றாகிவிட்டது; அது நம்மை 19ஆம் நூற்றாண்டு கருத்துருக்களுக்குப் பின்னால் எடுத்துச் செல்கிறது,” என்றார்.

உண்மையில், நிதியியல் மூலதனத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கு அவசியமான கொள்கைகளை திணிப்பதில் தகைமை பெற்றிருப்பதாக, முதலாளித்துவத்திற்கு தன்னைத்தானே PS காட்டிக் கொள்ள விரும்புகிறது. வால்ஸ் அரசாங்கம் இப்போது ஒரு பகிரங்கமான வலதுசாரி அரசாங்கமாக இருப்பதுடன், தொழிலாள வர்க்கத்தை வறுமையாக்க பொறுப்பான ஒரு ஒட்டுண்ணித்தனமான நிதியியல் பிரபுத்துவத்தை பிரதிநிதித்துவம் செய்து வருகிறது.