சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : வரலாறு

The beginning of modern physics

நவீன இயற்பியலின் தொடக்கம்

By Henry Allan and Bryan Dyne
9 September 2014

Use this version to printSend feedback

நூலின் பெயர் - மறுமலர்ச்சிபெறும் மேதமை: கலிலியோ கலிலியும் நவீன விஞ்ஞானத்தில் அவரது பாரம்பரியமும், நூலாசிரியர் - டேவிட் வொயிட்ஹவுஸ், ஸ்டெர்லிங் பதிப்பகம், 2009 ($24.95)

பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டேவிட் வொயிட்ஹவுஸால் எழுதப்பட்ட இந்த நூல், இத்தாலிய ஆய்வுகளின் மறுமலர்ச்சிக்கு ஒரு ஆரம்ப பங்களிப்பாகும். சிந்தனைகள், அபிவிருத்திகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளும் இடைக்கால ரோமன் கத்தோலிக்க தேவாலய அமைப்புகளுடனான விஞ்ஞானத்தின் மோதலைத் தீவிரப்படுத்தியிருந்தபோது, அந்த காலக்கட்டத்தின் இத்தாலிய மறுமலர்ச்சி உலகைக் குறித்து அந்நூல் ஒரு பரந்த கண்ணோட்டத்தை அளிக்கிறது. இந்நூலின் பிரதான குவிமையமாக இருப்பது கலிலியோ கலிலியின் வாழ்வும் பணியுமாகும். தேவாலயத்தால் அவருக்கு ஏற்பட்ட இடையூறுகள் அக்காலத்திய பெரும்பாலான முற்போக்கு சிந்தனையாளர்களினது துயரங்களைப் பிரதிபலிக்கிறது.

கலிலியோ அவரது கணிசமானளவிற்கு மேம்படுத்தப்பட்ட தொலைநோக்கியை இரவுநேர வானத்தை நோக்கி திருப்பி, நிலவின் பகுதிகளை வரையத் தொடங்கிய அந்த ஆண்டின் 400வது நினைவாண்டை ஒட்டி இந்நூல் பிரசுரிக்கப்பட்டது. கலிலியோ வாழ்ந்த அந்த காலப்பகுதியை, அவரது வாழ்வை, நண்பர்களை, உடனிருந்தவர்களை, விரோதிகளை, தொந்தரவிற்கு உள்ளாக்கியவர்களைச் சித்தரிக்கும் ஓவியங்கள், புகைப்படங்கள் மற்றும் சித்திரங்கள் அந்நூலில் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன.

மறுமலர்ச்சிபெறும் மேதமை நூல் காட்டுவதைப் போல, “மத-நிராகரிப்பு" மனோபாவத்தில் இருந்தவர்களை நீதி விசாரணைக்குட்படுத்தும், சிறையிலடைக்கும், மற்றும் கொடூரமாக மரணதண்டனை விதிக்கும் ஒரு காலக்கட்டமாக அது இருந்தது. அப்போதிருந்த தேவாலய கோட்பாட்டிற்குச் சவால்விடுப்பவர்களும், குறிப்பாக ஆய்வுகள், பரிசோதனைகள் மற்றும் கணிதசாஸ்திரத்துடன் அவ்விரண்டையும் இணைத்த புதிய நுட்பங்களை அபிவிருத்தி செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களும் அதில் உள்ளடக்கப்பட்டு இருந்தார்கள். ஜியோர்டனோ புரூனோ (Giordano Bruno), ஆண்டொனியோ டி டோமினெஸ் (Antonio de Dominis) மற்றும் கலிலியோவே கூட துன்புறுத்தப்பட்டவர்களில் உள்ளடங்குவர்.

கலிலியோவின் தந்தை விசென்ஜோ கலிலி ஒரு கணிதவியலாளரும், இசை தத்துவார்த்தவாதியும் ஆவார். அவர் தேவாலயம் மற்றும் அரசு இரண்டினாலும் ஆதரிக்கப்பட்டு வந்த, கிரேக்க தத்துவ சிந்தனை தவறிழைப்பதில்லை என்ற பாரம்பரிய நம்பிக்கைகளுக்கு சவால்விடுத்தார். சான்றாக, இசை இடைவெளி அல்லது இசைக்கருவியின் இரண்டு கம்பியிழைகளுக்கு இடையேயான ஸ்ருதி குறித்த பண்டைய கிரேக்க மெய்யியலாளர் பிதோகரஸின் நீண்டகாலமாக ஏற்கப்பட்டிருந்த நம்பிக்கைகளை நிராகரிக்கும், நடைமுறை பரிசோதனை முறையைக் கண்டறிந்தார். இசைக்கருவியின் கம்பியிழைகளை முறுக்கேற்றுகையில், கம்பியிழைகளை நீட்டுவதற்கு அளிக்கப்படும் பலத்திற்கேற்ப அவற்றின் நீட்சி இரட்டிப்பாகும் என்பது பிதோகரஸ் கருத்தாகும். அது நடைமுறையில் தலைகீழாக இருந்தது, எட்டுக்கட்டை ஸ்வரத்தை உருவாக்கும் போது நீட்சி இரண்டு மடங்காகவில்லை, நான்கு மடங்கானது. வொயிட்ஹவுஸ் விவரிப்பதைப் போல:


கலிலியோ கலிலி

கலிலியோவின் வாழ்வில் அந்த முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. அவரும் அவரது தந்தையும் ஒரு புதிய பண்ணிசையைக் (harmony) கண்டறிந்தார்கள்; ஒரு கம்பியிழை நீட்சியிலிருந்து உருவாக்கப்படும் இசைக்குறிப்புடன் தொடர்புபட்ட ஒரு புதிய கணித விதிகளைக் கண்டறிந்ததுடன், அதை பரிசோதனை மூலமாக செய்தும் காட்டினார்கள். அவர்கள் பண்டைய கிரேக்க வியாக்யானங்களில் இருந்து பதிலைத் தேடவில்லை அல்லது எந்த இசை பண்டிதர்களின் ஆலோசனையைப் பெறவும் முயலவில்லை. இது தான் நவீன விஞ்ஞானத்தின் தொடக்கமாக இருந்தது: அவர்கள் பரிசோதனையை நடத்தியதுடன், இயற்கையிடமே கேள்வியை எழுப்பினார்கள். அது புரட்சிகரமானதாக இருந்தது. விசென்ஜோவினது நடவடிக்கைகள் இயற்பியல் ஆய்வுகளில் அவரது மகனின் வாழ்க்கை போக்கை கட்டவிழ்த்துவிட்டது.”

பொருட்கள் நிறை (mass) சார்ந்தில்லாமல், ஒரே வேகத்தில் பூமியை நோக்கி விழுகின்றன என்பதைக் காட்ட கலிலியோ அவரது வாழ்வில் ஆய்வு நுட்பங்களைப் பிரயோகிக்கத் தொடங்கினார். பொருட்களினது தன்மையால் அல்ல, காற்றுத்தடை காரணமாகவே சில பொருட்கள் மெதுவாக விழுவதாக தெரிந்தது. இது அரிஸ்டாடிலின் கோட்பாட்டை சவாலுக்குட்படுத்தியது. கனமான பொருட்கள் லேசான பொருட்களை விட வேகமாக விழுகின்றன என்பது அவரது வாதமாக இருந்தது. அந்த ஆய்வுகளின் மிக பிரபலமானவை பிசாவில் உள்ள லீனிங் டவரில் நடத்தப்பட்டது, அவர் வெவ்வேறு நிறை கொண்ட இரண்டு ஒரே வடிவ கோளங்களை கையிலிருந்து விடுவித்தார். 100 பவுண்ட் இருந்த ஒன்றும் வெறும் ஒரு பவுண்ட் இருந்த மற்றொன்றுமான அவ்விரு கோளங்களும் ஒரே நேரத்தில் தரையை வந்தடைந்தன.

சுமார் 400 ஆண்டுகளுக்குப் பின்னர், அப்போலோ 15இன் விண்ணியலாளர் டேவிட் ஸ்கோட், ஒரு இறகையும் ஒரு இரும்பு சுத்தியலையும் கையிலிருந்து விடுவித்து, நிலவில் அதேபோன்றவொரு பரிசோதனையை நடத்தினார். இரண்டுமே சந்திரனின் தரையை ஒரே நேரத்தில் தொட்டன. “கலிலியோ கூறியது சரி தான்,” வியப்பில் ஸ்கோட் ஆர்ப்பரித்தார்.

கலிலியோவின் சாதனைகளில் இதர விஞ்ஞான பிரிவுகளுடன் சம்பந்தப்பட்ட பல கண்டுபிடிப்புகளும் கூட உள்ளடங்கும். அவர் வெப்பமானிக்கு (thermometer) முன்னர் இருந்த தெர்மோஸ்கோப்பை (thermoscope) அபிவிருத்தி செய்தார், அது தான் வெப்பத்தை அளவிடுவதற்கான முதல் முயற்சியாக இருந்தது. வெறும் ஒரேயொரு குதிரை வலுவை பயன்படுத்தி வந்த நீர்பாசன முறையில் பயன்படுத்தப்படும் நீரேற்றி எந்திரத்தைக் கண்டறிந்ததற்காக வெனிடியன் செனட் அவருக்கு அதற்கான காப்புரிமையை அளித்து கௌரவித்தது. கருவி-உற்பத்தி வியாபாரத்தில் இருந்த ஒரு நண்பர், ஒரு எளிய திசைக்காட்டியை (compass) அபிவிருத்தி செய்ய உதவினார், அதை ஓரிடத்தின் தூரம் மற்றும் உயரத்தை அளவிடவும், அத்துடன் பீரங்கி குழலை எந்தளவிலான கோணத்தில் உயர்த்தி வைப்பதென்பதை அளவிடவும் பயன்படுத்த முடியும். 1608இல் நெதர்லாந்தில் முதன்முதலாக தயாரிக்கப்பட்ட தொலைநோக்கியை (telescope) கலிலியோ கண்டுபிடிக்கவில்லை என்ற போதினும், நவீன ஆடி-வடிவமைப்பு நுட்பங்களைப் பயன்படுத்தி 20இல் இருந்து 30 மடங்கு அதிகமாக பிம்பங்களைப் பெரிதாக்கி காட்டியதற்காக தனிச்சிறப்பைப் பெறுகிறார்.

ஓபியுஸ் (Ophiuchus) நட்சத்திர மண்டலத்தில் ஒரு புதிய "நட்சத்திரம்" தோன்றிய போது, 1604இல் தொலைநோக்கிகள் மீதான அவரது ஆர்வம் தூண்டிவிடப்பட்டது. முன்னதாக 1572இல் ஒரு புதிய நட்சத்திரம் தோன்றியதைத் தொடர்ந்து இது வந்திருந்தது, அந்த நட்சத்திரம் குறித்து டென்மார்க் விண்ணியலாளர் தைசோ ராஹி (Tycho Brahe) ஆய்வுகள் செய்திருந்தார். அதுபோன்ற நிகழ்வுகள், அரிஸ்டாட்டிலைப் பின்பற்றியவர்களையும் மற்றும் தேவாலயத்தைப் பின்பற்றியவர்களையும் இரண்டு தரப்பினரையுமே சவாலுக்குட்படுத்தியது, அவர்கள் வான்மண்டலங்கள் களங்கமின்றியும் மாற்றமில்லாமலும் இருப்பதாக கூறி வந்தார்கள். எப்போதும் ஆய்வுகளைப் பின்தொடர்வதில் ஒருவராக இருந்து வந்த கலிலியோ, இரவுநேர வானத்தை இன்னும் மேலதிகமாக விரிவாக ஆராய ஒரு வழியைக் காண முனைந்தார்.


இத்தாலியின் புளோரென்ஸில் உள்ள விஞ்ஞான வரலாற்றின் அருங்காட்சியகத்தில் இருக்கும் கலிலியோவினது ஆரம்பகால தொலைநோக்கிகளில் ஒன்று

அவரது தொலைநோக்கியைக் கொண்டு அவர் நிலவின் வெவ்வேறு பகுதிகளையும், கண்ணுக்கு தெரிந்த அதன் கருப்பு மற்றும் வெளிறிய புள்ளிகளையும் படம் வரையத் தொடங்கினார். அவர் அந்த நிலவை அவருக்கு நிதியுதவி அளித்து வந்த துஸ்கானி பிரபுவுக்கு காட்டினார், அவர் பெருமகிழ்ச்சி அடைந்தார். கலிலியோ பின்னர் பிளீயட்ஸ் (Pleiades) நட்சத்திர மண்டலத்தையும், அத்துடன் வியாழன் (Jupiter) கோளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகள் மூலமாக, அவர் ஐஓ (Io), கலிஸ்டோ (Callisto), யுரோப்பா (Europa) மற்றும் கேனிமெட் (Ganymede) ஆகிய வியாழன் கோளின் நான்கு மிகப் பெரிய துணைகோள்களைக் கண்டறிந்துடன், ஏதோவொன்றை பூமியைத் தவிர வேறு பொருட்களும் சுற்றி வருகின்றன என்பதற்கு முதல் ஆதாரத்தை வழங்கினார். இது, வான்வெளி குறித்த கோப்பெர்னிகன் மாதிரியின் ஒரு ஆர்வமிகுந்த ஆதரவாளராக கலிலியோ மாறியிருந்தார் என்பதற்கு ஆதாரமாக இருந்தது.

கோப்பெர்னிகஸால் செய்யப்பட்ட மிகச்சிறந்த விரிவார்ந்த ஆய்வுகளைத் திரும்ப செய்து, வெள்ளி கோளினது (Venus) பகுதிகள் குறித்து கலிலியோ ஆய்வு செய்த போது அதே உணர்வு நிலைப்பெற்றது. வெள்ளி கோளின் வான்மண்டலத்திலிருந்து சூரியவெளிச்சம் பிரதிபலித்த விதத்தை பதிவு செய்த பின்னர், வெள்ளி மற்றும் பூமி இரண்டுமே சூரியனைச் சுற்றினால் மட்டும் தான் அதுபோன்ற வடிவங்கள் ஏற்படக்கூடுமென்பதை அவர் உணர்ந்து கொண்டார். கலிலியோ அவரது ஆய்வுகள் குறித்த ஒரு நூலை பிரசுரித்தார், அது ஐரோப்பா முழுவதிலும் பரவியது.

சூரியபுள்ளிகள் (sunspots) குறித்து பதிவு செய்யப்பட்டவையும் அவரது ஆய்வுகளில் உள்ளடங்கி இருந்தன. தொலைநோக்கியை சூரியனை நோக்கி திருப்பி வைத்து, ஒளி தொலைநோக்கி வழியாக ஒரு வெண்மையான பின்புலத்தில் விழுமாறு வைத்ததன் மூலமாக, சூரியபுள்ளிகள் நிலைப்பாட்டை கலிலியோவால் வரைய முடிந்ததுடன், சூரியனில் அதுபோன்ற கறைகள் இருந்தன என்பதையும், நேரத்திற்கேற்ப அவை மாறின என்பதையும் இரண்டையும் அவரால் தீர்மானிக்க முடிந்தது. இந்த ஆய்வும் மற்றும் பூமி, பிரபஞ்சத்தின் மையத்தில் இல்லை என்ற பரிசோதனைபூர்வமான ஆதாரமும் இரண்டுமே தேவாலயத்தின் கடுங்கோபத்திற்கு ஆளானது.


புனித ஆலயத்தின் முன்னால் கலிலியோ, ஜோசப்-நிக்கோலா ரோபர்ட்-ப்ளேரியால் வரையப்பட்டது

கிரேக்க மெய்யியலாளர் அரிஸ்டாடிலும் சரி வத்திக்கான் தரப்பும் சரி இருவருமே சூரியனை ஒரு துல்லியமான மற்றும் கறையற்ற கோளமாக கருதி வந்தார்கள். நட்சத்திரங்களே கூட வான்சாஸ்திர (வானியல்) வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துவந்த தெய்வீக அம்சங்களாக பார்க்கப்பட்டன. கண்டறியப்பட்ட சூரியபுள்ளிகள் (sunspots) சூரியனின் துணைகோள்களாக இருக்க வேண்டும் என்றும், அவை அதன் மேலிருக்கும் "கறைகள்" இல்லையென்றும் தேவாலய ஆதரவாளர்களால் வாதிடப்பட்டது. சூரியனின் மேற்புறத்தில் சூரியபுள்ளிகள் மட்டும் இல்லை, அவை அவற்றின் வடிவத்தில் மாறிக்கொண்டே இருக்கின்றன என்றும், அவை அந்த கோளத்தில் தோன்றி மறைவதாகவும் கலிலியோ குறிப்பிட்டார். இது ஒரேயொரு முடிவுக்கு மட்டும் தான் இட்டுச் செல்லக்கூடியதாக இருந்தது: சூரியன் ஒரு கறையில்லாத கோளமல்ல என்பதே அது.

கலிலியோவின் செல்வாக்கும் ரோமில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட விஞ்ஞான கழகமும் அவரது பணிகளைத் தொடர்ந்து பிரசுரிப்பதை உறுதிப்படுத்தியதோடு, தேவாலயம் மற்றும் இதர தொழில்சார் எதிரிகளிடமிருந்தும் அவருக்கு ஓரளவிற்கு பாதுகாப்பை அளித்தன. இருந்தபோதினும், சூரியப்புள்ளிகள் குறித்த பிரச்சினை கலிலியோ மீது மதகுருமார்களிடமிருந்து ஒரு பகிரங்கமான தாக்குதலைத் தூண்டிவிட்டது.

இந்த சர்ச்சை எவ்வாறு கட்டவிழ்ந்ததோ அந்த கதை, கலிலியோ போன்ற விஞ்ஞானிகளை அவமதிக்க தேவாலயமும் மற்றும் அதன் தனிச்சலுகைப்பெற்ற நிர்வாகிகளும் எவ்வாறு விவிலியத்தைப் பயன்படுத்தினார்கள் என்பதற்கு வெறுமனே ஒரேயொரு உதாரணமாகும். கலிலியோவே கூட புனித வேதங்களுக்கு எந்தவிதத்திலும் முரண்பட்டு எதையும் கண்டறிய முடியாதென நம்பியவர் தான், மேலும் திருச்சபை வரலாற்று ஆய்வாளர் கார்டினல் பரோனியஸின் (Cardinal Baronius, 1538-1607) கருத்தையும் மேற்கோளிட்டு இருந்தார். கார்டினல் பரோனியஸின் கருத்து: “புனித ஆத்மாக்கள் நாம் சொர்க்கத்திற்கு எவ்வாறு போவதென்று போதிக்கின்றனவே அல்லாமல், சொர்க்கங்கள் எவ்வாறு அவை போகின்றன என்று போதிப்பதில்லை,” என்பதாகும்.

அவரது உள்ளார்ந்திருந்த பழமைவாதத்துடன், கார்டினல் பெல்லார்மைன் (Bellarmine) கோப்பெர்னிகன் பிரபஞ்சத்ததை சமூக ஒழுங்கமைப்பிற்கு அச்சுறுத்தலாக பார்த்தார். அவரைப் பொறுத்த வரையில் மற்றும் தேவாலயத்தின் உயர்மட்ட பதவியில் இருந்தவர்களை பொறுத்த வரையில், ஜடத்தைக் குறித்த விஞ்ஞானம் அவர்களின் புரிதலுக்கும் -- பல நேரங்களில் அவர்களின் ஆர்வத்திற்கும் அப்பாற்பட்டதாக இருந்தது. வானியல் சாஸ்திர உண்மைகளை சரியாக பெற வேண்டும் என்பதை விடவும், அவர்கள் நிர்வாகத்தைக் குறித்தும் மற்றும் போப்பின் அதிகாரம் குறித்தும் நிறைய கவனத்தில் எடுத்திருந்தார்கள்.”

இறுதியில், கோப்பெர்னிகஸின் கண்ணோட்டங்கள் தவறென்றும், அவர் (கலிலியோ) அத்தகையவர்களை ஆதரிக்கக் கூடாதென்றும் பெல்லார்மைன் மற்றும் விசாரணைக்குழு தலைவர் கார்டினல் அகோஸ்டினோ ஓரெகியால் (Agostino Oreggi) கலிலியோவிற்குக் கூறப்பட்டது. அதற்கும் மேலாக, அவர் எழுதுவதன் மூலமாகவோ அல்லது விவரிப்பதன் மூலமாகவோ எந்த விதத்திலும் கோப்பெர்னிகன் தத்துவத்தைப் போதிக்கக்கூடாதென அவருக்கு உத்தரவிடப்பட்டது.

பெல்லார்மைன் மற்றும் போப் ஐந்தாம் போல் இறந்த பின்னர், எட்டாம் நகர்புற புதிய போப்பாக வந்த கலிலியோவின் முன்னாள் நண்பர் மாஃபியோ பார்பெரினி (Maffeo Barberini), அவருக்கு முந்தையவர்களைவிட சிறப்பாக தேர்ந்தெடுக்கப்படும் போது அவற்றை நிரூபிப்பார் என்ற பெரும் நம்பிக்கையை அப்போதும் கலிலியோ வைத்திருந்தார். அதுவொரு நப்பாசையாக இருந்தது. முந்தைய முறையைவிட இம்முறை இன்னும் அதிக விரோதமான விசாரணைக்குழுவின் முன்னால் நிறுத்தப்பட்டார்.

போப்பாக இருந்த பார்பெரினி "அவருக்கு விரோதமாக இருந்தார்" என வொயிட்ஹவுஸ் ஊகிக்கின்ற போதினும், மிக அடிப்படையான உண்மை என்னவென்றால், அவர் முன்னர் ஆராய்ந்தறிந்ததைப் போல தேவாலய பதவியில் இருந்தவர்கள் ஒட்டுமொத்தமாக "கோப்பெர்னிகன் பிரபஞ்சம் சமூக ஒழுங்கமைப்பை அச்சுறுத்துவதாக" பார்த்தார்கள் என்பது தான். போப், அவரது தனிப்பட்ட தோற்றுவாய்களுக்கு அப்பாற்பட்டு, அவர் நடைமுறையில் இருந்ததைக் காப்பாற்ற இடைக்கால சமூகத்தில் அவர் இருந்த இடத்துடன் பிணைந்திருந்தார்.

புத்தகங்கள் எரிக்கப்படுவதை, மதங்களுக்கு எதிரானவை என்பதற்காக எரிக்கப்படுவதை, மற்றும் விசாரணைக்குழுவின் பலமான பிடியில் ஆயிரக்கணக்கானவர்கள் சகித்துக் கொண்டிருந்த அவமதிப்புகளைச் சித்தரிக்கும் படங்களையும், சித்திரங்களையும் வொயிட்ஹஸினது நூலில் மீண்டும் கொண்டு வரப்பட்டிருப்பது, அந்த புள்ளியைத் தான் பலப்படுத்துகிறது.

மறுமலர்ச்சிபெறும் மேதமை நூல் கலிலியோ எவ்வாறு கோப்பெர்னிகன் முறையைப் பாதுகாத்தார் என்பதை சித்தரிக்கிறது, அதைத்தொடர்ந்து கெப்லர், ரெனெ டெர்கார்டெஸ், மற்றும் ஐசக் நியூட்டனின் கண்டுபிடிப்புகளானது இயற்பியலின் ஆரம்பத்தை மட்டும் ஸ்தாபிக்கவில்லை, மாறாக கலிலியோவின் பெயர் சூட்டப்பட்ட விண்வெளி ஆராய்ச்சி மற்றும் கலிலியோவை முன்னோடியாக கொண்ட தொழில்நுட்பத்தின் மிக அசாதாரணமான முன்னேற்றமான ஹப்பள் விண்வெளி தொலைநோக்கி உட்பட, நவீன விண்வெளி திட்டங்களை விளைவித்திருக்கும் விஞ்ஞான வளர்ச்சிக்கும் இட்டுச் சென்றிருக்கிறது என்பதையும் அந்நூல் விளக்குகிறது.

கைகளால் வரையப்பட்ட அம்மனிதரின் சித்திரத்தையும், அவரது காலத்திய வரலாறையும் மற்றும் மனிதகுலத்திற்காக விஞ்ஞானத்தை பிரசித்தி செய்வித்ததிலும், முன்னேற்றியதிலும் கலிலியோவின் பிரிக்கவியலாத பாத்திரத்தையும் நமக்கு வழங்குவதன் மூலமாக வொயிட்ஹவுஸ் கலிலியன் புரட்சியை தொகுத்தளிக்கிறார்.