சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Thirteen years after the September 11 attacks
CIA torture and the “war on terror”

செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் பதிமூன்று ஆண்டுகள்

சிஐஏ சித்திரவதையும், "பங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமும்"

Joseph Kishore
11 September 2014

Use this version to printSend feedback

இன்று செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்களின் பதிமூன்றாம் நினைவுதினத்தைக் குறிக்கிறது. அந்த சம்பவங்களை தொடர்ந்து சில நாட்களிலேயே புஷ் நிர்வாகத்தால் ஒரு "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" அறிவிக்கப்பட்டது, அவ்வாறு அழைக்கப்பட்ட ஒரு யுத்தம் இன்று வரைக்கும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தொடக்கத்திலிருந்தே, அந்த "யுத்தம்" ஒரு பொய்யாகும். அதற்கான சூழ்நிலைகள், பின்புலம் குறித்து ஒருபோதும் ஒரு ஆழமான விசாரணைக்கு உட்படுத்தப்படாமல், அந்த பயங்கரவாத நடவடிக்கைகள், வெளிநாடுகளில் இராணுவ ஆக்கிரமிப்புக்கும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகளைச் சீரழிப்பதற்கும், நீண்டகால தயாரிப்பில், ஒரு நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு போலிக்காரணமாக பயன்படுத்தப்பட்டன.

ஒரு தசாப்தத்திற்கும் அதிக காலத்திற்குப் பின்னர், ஒபாமா நிர்வாகம் இந்த யுத்தத்தை புதிய விதத்தில் வழங்க முனைந்து வருகிறது, அதாவது ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசின் நடவடிக்கைகளைப் பயன்படுத்துகிறது, அந்த அமைப்பே கூட லிபியா மற்றும் சிரியாவில் நடத்திய ஏகாதிபத்திய தலையீடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அமெரிக்கா அளித்த ஆதரவின் ஒரு விளைபொருளாக இருக்கின்ற நிலையில், அதை மத்திய கிழக்கில் ஒரு பாரிய குண்டுவீச்சு நடவடிக்கைக்காக போர் அறிவிப்புக்குக் காரணமாக்கி உள்ளது.

இந்த "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்" ஆழ்ந்த பிற்போக்குத்தனமான மற்றும் ஜனநாயக-விரோத உள்ளம்சம், அமெரிக்க கொள்கையின் ஒரு கருவியாக சித்திரவதைப் பிரயோகிக்கப்படுவதில் வெளிப்படுகிறது. அமெரிக்க அரசாங்கம் மற்றும் அமெரிக்க உளவுத்துறையின் உயர்மட்டங்கள் சித்திரவதையின் மிகவும் காட்டுமிராண்டித்தனமான வடிவங்களுக்குதெளிவாக சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்டம் மற்றும் அமெரிக்க அரசியலமைப்பை மீறிய அந்த நடவடிக்கைகளுக்குஒப்புதல் வழங்கின, மேற்பார்வையிட்டன, மூடிமறைக்க முனைந்தன என்பதையே சமீபத்திய சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன.

CIAஇன் "நீரில்மூழ்கடிக்கும்" விபரங்கள் முதலில் பிரிட்டிஷ் Telegraph பத்திரிகையில் வெளியிடப்பட்டன, செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு திட்டமிடுவதில் சம்பந்தப்பட்டவராக கூறப்பட்ட காலித் ஷேக் மொஹம்மத், ஒசாமா பின் லேடனுக்கு உதவியதாக கூறப்பட்ட அபு ஜூபேதாஹ் மற்றும் 2000ஆம் ஆண்டு USS Cole குண்டுவீச்சை திட்டமிட்டதாக கூறப்பட்ட அப்த் அல் ரஹீம் அல்-நஷீரி ஆகிய குறைந்தபட்சம் மூன்று அமெரிக்க கைதிகள் மீது அந்த முறை பயன்படுத்தப்பட்டது.

சிஐஏ பயன்படுத்திய நீரில்மூழ்கடிப்பதன் நிலையான வரையறை வெறுமனே அவர்கள் தலைவழியாகவோ அல்லது துணி மீதோ தண்ணீரை ஊற்றுவதல்ல," என ஆதாரசாட்சி ஒருவர் Telegraphக்கு தெரிவித்தார். “அவர்கள் சாகும் தருவாய்க்கு வரும் வரையில் நீரில் அவர்களை அழுத்தி வைத்திருப்பது... இது உண்மையிலேயே சித்திரவதையாகும்," என்று அவர் தெரிவித்திருந்தார். CIAஇன் சித்திரவதை குறித்த செனட் உளவுத்துறை கமிட்டியின் இரகசிய அறிக்கையோடு இன்னமும் பரிச்சயமான, பெயர்வெளியிட விரும்பாத மற்றொரு சாட்சியின் கருத்துப்படி, பயன்படுத்தப்பட்ட அந்த கொடூரமான அணுகுமுறைகள் அம்பலப்படுத்தப்பட்டால் மக்கள் "பெரும் அதிர்ச்சி" அடைவார்கள் என்றார்.

இதைத் தொடர்ந்து திங்களன்று ஜனநாயக கட்சி செனட்டர் டையான் ஃபைய்ன்ஸ்டைனிடமிருந்து ஒரு அறிவிப்பு வந்தது, நவம்பர் இடைதேர்தல்களில் சித்திரவதை மீதான கேள்வி ஒரு பிரச்சினையாகாமல் தடுப்பதற்காக, கடந்த மாதமே வெளிவர வேண்டிய, உளவுத்துறை கமிட்டி அறிக்கையின் ஒரு தொகுப்புரை, இந்த மாத இறுதியில் காங்கிரஸ் கூடுவதற்கு முன்னதாக ஒருவேளை தயாராகாது என அவரது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. CIAஆல் கோரப்பட்ட திருத்தங்கள் மீது அந்த அமைப்புடனான மோதல்களை ஃபைன்ஸ்டைன் சுட்டிக் காட்டினார், ஆனால் அந்த தாமதம் அரசியல்ரீதியாக அனைத்து தரப்பிற்கும் வசதியாக இருக்கிறது.

Telegraphஇல் வெளியான செய்தி அமெரிக்க ஊடகங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன. அது நியூ யோர்க் டைம்ஸிலோ அல்லது வாஷிங்டன் போஸ்ட்டிலோ குறிப்பிடப்படவில்லை அல்லது பிரதான அமெரிக்க தொலைக்காட்சி செய்தி அமைப்புகளாலும் அறிவிக்கப்படவில்லை. அதேவேளையில் ISISஆல் இதழாளர்கள் ஜேம்ஸ் ஃபோலே மற்றும் ஸ்டீவன் சோட்லோஃப் கழுத்தறுக்கப்பட்ட காட்சிகள், அந்நடவடிக்கைகளை "காட்டுமிராண்டித்தனமானது" என்று கூறிய குற்றச்சாட்டுக்களோடு சேர்ந்து, நாடெங்கிலும் பத்திரிகைகளில் மீண்டும் மீண்டும் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் அமெரிக்க அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்கீழ் செயல்பட்டு வரும் சிஐஏ அதிகாரிகளின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்கு அதுபோன்ற எந்த விளம்பரமும் இல்லை.

அதேபோல, செனட் மற்றும் CIAக்கு இடையே இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெடித்த அரசியலமைப்பு நெருக்கடி ஏற்றதாழ முற்றிலுமாக ஊடகங்களால் கைவிடப்பட்டிருந்தன. ஜூலை இறுதியில், CIA சித்திரவதை குறித்த உளவுத்துறை கமிட்டியின் அறிக்கை தொகுக்கப்பட்டு வந்தபோதே செனட் கணினிகளில் இருந்து அந்த அமைப்பால் ஊடுருவி எடுக்கப்பட்டதாக CIAஇன் சொந்த இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகமே முடிவுக்கு வந்தது, இருந்தபோதினும் அமெரிக்க சட்டம் மற்றும் அரசியலமைப்பின் அதிகாரப் பகிர்வு மீதான இந்த வெளிப்படையான மீறல் குறித்து அங்கே ஒன்றுமே வெளிவரவில்லை.

இந்த மௌனம் ஆச்சரியப்படுத்துவதாக இல்லை. இந்த குற்றங்கள் வெளிப்பட்டிருப்பது புஷ் நிர்வாகத்தை மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தையும் குற்றத்தில் சிக்க வைக்கிறது.

மார்ச் 2002இல் பிடிக்கப்பட்ட ஜூபேதாஹ், நவம்பர் 2002இல் பிடிக்கப்பட்ட அல்-நஷீரி மற்றும் மார்ச் 2003இல் பிடிக்கப்பட்ட மொஹம்மத் ஆகியோரின் சித்திரவதை "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்" பாகமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஜனநாயக-விரோத முறைமைகள் திரண்டுபோயிருப்பதன் ஒரு முக்கிய கட்டமாகும்.

சித்திரவதைக்கு ஒரு போலி-சட்டக் காரணத்தை வழங்க நீதித்துறை வழக்கறிஞர்களால் இரகசிய சுற்றறிக்கைகள் வரையப்படுகின்றன. இது எதில் தங்கியிருக்கிறதென்றால், "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" தலைமை தளபதியான ஜனாதிபதிக்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்கி இருக்கிறது, அது அனைத்து சட்ட மற்றும் அரசியலமைப்பு தடைகளையும் முடிவுக்குக் கொண்டு வந்துவிடுகிறது என்ற வாதத்தில் தங்கியுள்ளது. இந்த வாதங்கள் பின்னர், முடிவில்லா யுத்தங்கள், உள்நாட்டில் உளவுபார்ப்பு, இராணுவ தீர்ப்பாயங்கள், அமெரிக்க பிரஜைகள் மற்றும் அமெரிக்க-பிரஜை அல்லாதவர்கள் மீது வழக்கில்லாமல் காலவரையற்ற காவல் மற்றும் ஏனைய முக்கிய ஜனநாயக உரிமைமீறல்கள் ஆகியவற்றை நியாயப்படுத்த ஒழுங்கு செய்து கொள்ளப்படுகிறது.

சித்திரவதை பற்றிய குறிப்புகள் ஜனாதிபதி சர்வாதிகாரத்தின் சட்டபூர்வ கட்டமைப்பை எடுத்துக்காட்டியதுஇந்த கட்டமைப்பு தேசிய பாதுகாப்பு முகமையின் அதிகாரங்களை விரிவாக்குவதில் மற்றும் அமெரிக்க குடிமக்கள் உட்பட "பயங்கரவாதி" என்று அறிவிக்கப்பட்ட எவரொருவரையும் விசாரணையின்றி படுகொலை செய்வதை நியாயப்படுத்துவதில் ஒபாமா நிர்வாகத்தால் பின்பற்றப்பட்டுள்ளது.

அதிகாரத்திற்கு வந்த பின்னர், ஒபாமா நிர்வாகம் சிஐஏ சித்திரவதையாளர்களையும் மற்றும் அவர்களை வழிநடத்தியவர்களையும் மூடிமறைக்க அதனால் ஆன அனைத்தையும் செய்தது. அவரது 2009 பதவியேற்புக்குப் பின்னர் உடனடியாக, சித்திரவதை திட்டங்கள் நிறுத்தப்பட்டுவிட்டதாக ஒபாமா அறிவித்தார், ஆனால் அதெல்லாம் கணக்கிலேயே வருவதில்லை. “பின்னோக்கி பார்ப்பதை விடவும் முன்னோக்கி பார்ப்பது" அவசியமானதாகும், என்று அவர் அறிவித்தார்.

ஜூபேதாஹ் மற்றும் அல்-நஷீரின் பதிவுசெய்யப்பட்ட (சித்திரவதை உள்ளடங்கிய) மணிக்கணக்கான விசாரணைகள் அழிக்கப்பட்டமைக்காக யாரையும் அது விசாரிக்கப் போவதில்லையென, நவம்பர் 2010இல், நீதித்துறை அறிவித்தது. இந்த ஒளிநாடாக்கள் அநேகமாக ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு. புஷ்ஷூம் உட்பட உயர்மட்ட புஷ் நிர்வாக அதிகாரிகளால் பார்க்கப்பட்டிருந்தன.

பின்னர் 2012இல், பரிசீலனையில் இருக்கும் இரண்டு வழக்குகளை மட்டும் கைவிட இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்தது. அதில் ஓர் ஆப்கானிஸ்தான் கைதியின் மற்றும் ஓர் ஈராக்கிய கைதியின் கொடூரமான சித்திரவதை உள்ளடங்கி இருந்தது. முதலாவதில், அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான கிளர்ச்சியின் பாகமாக இருந்தார் என்று கூறப்பட்ட குல் ரஷ்மான், இவர் ஒரு சிஐஏ சிறைச்சாலையில் உறையும் அளவிற்கான வெப்பநிலையில் ஒரு கட்டிட சுவரில் கட்டப்பட்டிருந்த நிலையில் இறந்து போனார், இரண்டாவது, மனாடெல் அல்-ஜமாதி 2003இல் CIAஇன் கைகளில் இறந்த பின்னர் அவரது சடலம் பனிக்கட்டியில் வைத்து மூடப்பட்ட நிலையில் புகைப்படமாக்கப்பட்டது.

இறுதியாக, செனட்டை சிஐஏ உளவுபார்த்தமை வெளிப்பட்டதற்கு விடையிறுப்பாக CIAக்கு எதிராக எந்தவொரு குற்றவியல் குற்றச்சாட்டுக்களும் கொண்டு வரப்படாதென இந்த ஆண்டின் தொடக்கத்தில் நீதித்துறை அறிவித்தது.

சிஐஏ சித்திரவதை தொடர்பாக ஒரேயொருவர் மீது வழக்கு தொடரப்பட்டது, அவர் முன்னாள் சிஐஏ அதிகாரியான ஜோன் சி. கிரிகோ, இவர் தான் 2007இல் நீரில்மூழ்கடித்தல் குறித்து முதன்முதலில் பகிரங்கமாக பேசியவர். கிரிகோ உளவுபார்ப்பு சட்டத்தின்கீழ் 2012இல் ஒபாமா நிர்வாகத்தால் குற்றப்பதிவுக்கு ஆளானார், அத்துடன் உளவுத்துறை அடையாள பாதுகாப்பு சட்டத்தை மீறியதற்காக குற்றவாளியாக வழக்கின் முன்னால் நிறுத்தப்பட்டார். தற்போது அவர் 30 மாத சிறைதண்டனையை அனுபவித்து வருகிறார்.

இத்தகைய சம்பவங்களில் இருந்து ஒரு இராணுவ-உளவுத்துறை அமைப்புத்தான் வெளிப்படுகிறது, அது சம்பிரதாயமாக ஜனநாயகத்தின் வலைகளுக்குப் பின்னால், எந்தவொரு விளைவுகளும் இல்லாமல் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அரசின் பல்வேறு அமைப்புகளும் மற்றும் பிரதான அரசியல் கட்சிகளும் இந்த எந்திரத்தின் மற்றும் அது சேவை செய்யும் நிதியியல் பிரபுத்துவத்தின் பிரதிநிதிகளாக செயல்படுகின்றன. பெரிய ஊடகங்களோ பணம் அளிக்கும் அனுதாபிகள் மற்றும் பிரச்சாரகர்களை உள்ளடக்கி உள்ளன, அவர்கள் அவற்றை சட்டபூர்வமாக அரசியல் மற்றும் சித்தாந்த கட்டமைப்பை உருவாக்க முனைந்து கொண்டே இத்தகைய குற்றங்களை மூடிமறைக்க உதவி வருகிறார்கள்.

இத்தகைய எல்லா நடவடிக்கைகளினது அடிப்படை இலக்கு, "பயங்கரவாதம்" அல்ல, மாறாக உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி அமெரிக்க நிதியியல் பிரபுத்துவத்தினது கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்புத்தான் அவற்றின் இலக்காகும். அறிவொளி சட்ட வல்லுனரும் மெய்யியலாளருமான சீசர் பெக்காரியா "அரக்கர்களுக்கு சமமான" ஒரு நடவடிக்கையென்று எதை குறிப்பிட்டாரோ அந்த காட்டுமிராண்டித்தனமான சித்திரவதை நடவடிக்கை, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சமூக கண்ணோட்டத்தையும், பிற்போக்குத்தனமான சாரத்தையும் வெளிப்படுத்துகின்றன, அத்துடன் அதன் பொருளாதார அமைப்புமுறையைப் பாதுகாப்பதில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அது பயன்படுத்தி வரும் அணுகுமுறைகளையும் வெளிப்படுத்துகின்றன.