சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France’s New Anti-capitalist Party orients to Socialist Party critics of Hollande

பிரான்ஸின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி, ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சி விமர்சனங்கர்களின் பக்கம் சாய்கிறது

By Stéphane Hugues and Alex Lantier
20 September 2014

Use this version to printSend feedback

பிரான்ஸின் போலி-இடது புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டை விமர்சிக்கும் சோசலிஸ்ட் கட்சி (PS) "அதிருப்தியாளர்களின்" பக்கம் சாய்வதன் மூலமாக, அந்த அரசாங்கத்தின் கடந்த மாத மந்திரிசபை மாற்றியமைப்புக்கு விடையிறுப்புக் காட்டியுள்ளது. அந்த சோசலிஸ்ட் கட்சியின் பொறிவு தீவிரப்பட்டு வருவதற்கு இடையே, தசாப்தங்களாக NPA அக்கட்சியின் தரப்பில் தான் நோக்குநிலை கொண்டிருந்தது என்ற நிலையில், நிதியியல் மூலதனத்தின் அந்த இழிபெயரெடுத்த கட்சியைச் சுற்றி மையப்பட்ட ஒரு "இடது" கூட்டணியை மறுகட்டமைப்பு செய்ய NPA முனைந்து வருகிறது.

பேர்லின் ஆணைக்கிணங்க ஹோலாண்டும் மற்றும் பிரதம மந்திரி இமானுவெல் வால்ஸூம் மக்கள்விரோத சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள் என்றும், அத்துடன் ஜேர்மனியையும் குற்றஞ்சாட்டியதற்காக இரண்டு மந்திரிகளை ஹோலாண்ட் பதவியிலிருந்து நீக்கிய பின்னர், இந்த மந்திரிசபை மாற்றியமைக்கப்பட்டது. இது, பிரான்ஸ் ஒரு ஆட்சி நெருக்கடியை முகங்கொடுத்திருப்பதாக பரந்த கருத்துக்களை உண்டாக்கியது. இருந்தபோதினும், இந்த கருத்தை NPA மெத்தனமாக நிராகரிப்பதுடன், மாறாக அது, PSஇன் அதிருப்தி உட்கூறுகள், ஒரு நாடாளுமன்ற கலகத்தை நடத்தி ஹோலாண்டிற்கு எதிரான ஒரு எழுச்சிக்கு தலைமை வகிக்க முடியுமென அறிவுறுத்துகிறது.

ஹோலாண்ட்-வால்ஸா அல்லது கட்டுப்பாடற்ற-சந்தை ஏற்கப்பட்டதன் சமரசமற்ற தர்க்கமா," என்ற அதன் சமீபத்திய கட்டுரையில், NPA சுயதிருப்தியோடு எழுதுகிறது, “[நாளிதழ்கள்] Le Figaro மற்றும் Libération செய்துள்ளதைப் போல, இன்று 'ஆட்சியின் நெருக்கடியைக்' குறித்து பேசுவது சற்றே மிகைப்படுத்தலாக இருக்கிறது. பிரான்ஸின் அரசியல் அமைப்புகள் இன்னமும் செயல்பட்டு கொண்டு தான் இருக்கின்றன. அவை உடைவதற்கு, அந்த "அதிருப்தியாளர்கள்" அரசாங்கத்தை துணிச்சலோடு எதிர்க்க வேண்டும், அவ்விதத்தில் வரவு-செலவு திட்டக்கணக்கில் மற்றும் 'வளர்ச்சிக்கான' புதிய சட்டத்தில் அந்த அரசாங்கத்தை சிறுபான்மையாக ஆக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல்களுக்கு முன்னதாக அவர்களின் பதவிகளை அபாயத்திற்குட்படுத்த அவர்கள் தயாராக இல்லையென்றால், நமக்கு ஒன்றும் நடக்காது (இப்போது மட்டும் நடக்கிறதா என்ன?)."

PS “அதிருப்தியாளர்களின்" மீது ஏராளமான நப்பாசைகளைத் தூண்டிவிடுவதன் மூலமாக, NPA, பிரான்ஸின் தடுமாறிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ ஸ்தாபகத்திற்கு முட்டுக்கொடுக்க முயற்சி செய்து வருகிறது, அந்த "அதிருப்தியாளர்களோ" பிரான்ஸின் மதிப்பிழந்த அரசியல் மேற்தட்டின் தூண்களாக இருக்கிறார்கள். கருத்துக்கணிப்புகளில் ஹோலாண்டுக்கு ஆதரவு 13 சதவீதமாக சரிந்து போயுள்ள நிலையில், PS “அதிருப்தியாளர்களின்" பெரும்பான்மையோ தேசிய சட்டமன்றத்தில் வால்ஸின் பகிரங்கமான கட்டுப்பாடற்ற-சந்தை அரசாங்கத்திற்கு அனுமானித்தவாறே வாக்களித்தார்கள், 31 பேர் வாக்களிப்பைப் புறக்கணித்திருந்தார்கள்.

முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடியை NPA மறுப்பதானது, அரசியல் நிலைமைகளைக் குறித்த அதன் சொந்த வர்ணனைக்கே கூட முரண்பாடாக இருக்கிறது. அது PS முகங்கொடுத்துவரும் நெருக்கடியை கிரீஸின் சமூக-ஜனநாயக PASOK கட்சியின் பொறிவுடன் ஒப்பிடுகிறது—அக்கட்சி பாரிய மக்கள் எதிர்ப்புக்கு இடையே பேரழிவுகரமான சிக்கன நடவடிக்கைகளை பின்தொடர்ந்த பின்னர், கிரீஸின் பிரதான ஆளும் முதலாளித்துவ "இடது" கட்சி என்பதிலிருந்து அது ஒரு சிறிய அரசியல் சக்தியாக ஆகிப்போனது.

இத்தகைய நிலைமைகளின் கீழ், கிரீஸில் PASOK அனுபவித்ததைப் போல, இன்னும் மேலதிகமான பொறிவுக்கு உள்ளாகும் மற்றும் அரசியலில் ஒதுக்கப்படும் என்பது ஒரு நம்பத்தகுந்த அனுமானமாக மாறிவருகிறது ... 1980களில் இருந்து முதலாளித்துவத்திற்கு சேவை செய்து வந்துள்ள ஒட்டுமொத்த அரசியல் எந்திரமும் உலுக்கப்பட்டு வருவதாக,” அது எழுதுகிறது.

எவ்வாறிருந்தபோதினும், பிற்போக்குத்தனமாக "முதலாளித்துவ-எதிப்பாளர்கள்" என்றழைக்கப்படும் NPA ஐ பொறுத்தவரையில், இது முதலாளித்துவ ஆட்சியின் ஒரு நெருக்கடி இல்லை போலும்!

அதை NPA ஒப்புக் கொள்கிறதோ இல்லையோ, ஆனால் புரட்சிகர தாக்கங்களுடன் ஒரு நெருக்கடி அபிவிருத்தி அடைந்து வருகிறது. பூகோளமயப்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும், உக்ரேன் மீது ரஷ்யா உடனான நேட்டோ மோதலில் இருந்து எழுந்த உலகளாவிய யுத்த அச்சுறுத்தல் மற்றும், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவெங்கிலுமான யுத்தங்கள் ஆகியவற்றால் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் அஸ்திவாரமே உலுக்கப்பட்டிருக்கிறது. PS மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியமும் (EU) அவற்றின் சிக்கன கொள்கைகளால் மேலும் அதிகமாக மதிப்பிழந்திருப்பதுடன் சேர்ந்து, ஹோலாண்டோ இலாபங்களை அதிகரிக்கவும் மற்றும் அதிகரித்துவரும் மக்கள் கோபத்தைத் திசைதிருப்பவும்—சிரியா, மாலி, மத்திய ஆபிரிக்க குடியரசு, உக்ரேன், மற்றும் இப்போது ஈராக்கில் என—இராணுவவாதம் மற்றும் யுத்தத்திற்குள் திரும்பி உள்ளார்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அதன் பிற்போக்குத்தனமான தாக்குதலில், பிரெஞ்சு ஏகாதிபத்தியம், NPAஆல் பிரதிநிதித்துவம் செய்யப்படும் செல்வாக்குமிகுந்த குட்டி-முதலாளித்துவ அடுக்குகளின் முழு ஆதரவையும் அனுபவித்து வருகிறது. அவர்கள் லிபியாவில் பிரெஞ்சு தலையீட்டை அங்கீகரித்தார்கள்; சிரியாவில் மேற்கத்திய-ஆதரவிலான எதிர்ப்பு போராளிகளை ஹோலாண்ட் ஆயுதமேந்த செய்ய வேண்டுமென அவர்கள் கோரினார்கள், அவரும் அதை செய்தார். உக்ரேன் நெருக்கடியின் தொடக்கத்திலிருந்தே, கியேவில் ஆட்சிக்கவிழ்ப்பையும் மற்றும் கிழக்கு உக்ரேனில் உள்நாட்டு யுத்தத்தையும் முன்னெடுத்த பாசிச குழுக்களால் தலைமைதாங்கப்பட்ட மைதான் போராட்டங்களை NPA ஆதரித்து வந்தது.

NPA வெளிநாடுகள் மீதான ஹோலாண்டின் ஏகாதிபத்திய யுத்த நிகழ்ச்சிநிரலை மட்டும் ஆதரிக்கவில்லை, மாறாக உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அவரது யுத்த நிகழ்ச்சிநிரலையும் ஆதரிக்கிறது.

ஹெகார்ட் ஷ்ரோடரின் ஜேர்மன் சமூக ஜனநாயகக் அரசாங்கத்தின் ஹார்ட்ஸ் IV தாக்குதல்களை சான்றாக காட்டி, NPAஇன் சமீபத்திய கட்டுரை குறிப்பிடுகிறது: “பிரெஞ்சு முதலாளித்துவத்தின் கண்ணோட்டத்தில் (சர்வதேச முதலாளித்துவத்தின் கண்ணோட்டத்திலும் கூட), தொடக்கத்திலிருந்தே ஒரு இடது அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட செயல்பாடு என்னவாக இருந்ததென்றால்: அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், பிரெஞ்சு முதலாளித்துவத்தின் போட்டித்தன்மையின் குறைபாட்டைத் தீர்ப்பதற்காக, [முந்தைய வலதுசாரி ஜனாதிபதி நிக்கோலா] சார்க்கோசியால் வரைந்தளிக்க மட்டுமே முடிந்திருந்த, அந்த அருவருப்பான வேலையை செய்வதாகும். இந்த திட்டத்தை ஹோலாண்ட்-வால்ஸால் முடிக்க முடிகிறதா என்பதைத் தான் பார்க்க வேண்டும்.”

2012 பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல்களில் ஹோலாண்டை NPA அங்கீகரித்த போதே, அது ஹோலாண்டின் வர்க்க-போர் கொள்கைகளை அறிந்திருந்தது என்பதுடன், அவரை இடதுக்கு தள்ளி வர முடியுமென வாதிட்டு அது அவரை ஆதரிக்கவும் செய்தது. தேர்தலின் முதல்சுற்றில் 1.2 சதவீத வாக்குகள் பெற்ற அதன் ஜனாதிபதி வேட்பாளர் பிலிப் புட்டு, இரண்டாவது சுற்றில் ஹோலாண்டிற்கு வாக்களிக்குமாறு அழைப்புவிடுத்தார்: “மே 6இல், நிக்கோலா சார்க்கோசி இரண்டாம் சுற்றில் வெற்றி பெறுவதைத் தடுக்க விரும்பும் எவரையும் நாங்கள் ஆதரிப்போம். நாங்கள் தெளிவாக கூறுகிறோம், நாம் சார்க்கோசிக்கு எதிராக வாக்களிப்பதன் மூலமாக அவரையும் அவரது கும்பலையும் தூக்கியெறிய வேண்டும்,” என்றார்.

இந்த கருத்துக்கள் அந்த சமயத்தில் NPAஇன் பாத்திரம் குறித்த உலக சோசலிச வலைத் தளத்தின் பகுப்பாய்வை உறுதிப்படுத்தியது.

WSWS குறிப்பிடுகையில், “சார்க்கோசியை எதிர்ப்பதற்காகவே ஹோலாண்டுக்கு வாக்களிக்குமாறு வேஷமிடும் NPAஇன் முயற்சி, அரசியல் ரீதியாக மோசமாக நம்பிக்கையின் ஒரு நடவடிக்கையாகும். சமூக திட்டங்களில் நூறு பில்லியன் கணக்கான யூரோக்களை வெட்டுவதும், நேட்டோவில் பிரான்சின் பங்களிப்பைத் தொடர்வதும், கடந்த ஆண்டு லிபியாவில் மற்றும் இப்போது சிரியா யுத்தத்துடன்—மத்திய கிழக்கில் அதன் யுத்த உந்துதலைத் தீவிரப்படுத்துவதும், PSஇன் அடிப்படை வேலைத்திட்டத்தில் இருக்கிறதென்பது அதற்கு நன்றாகவே தெரியும். அது பிற்போக்குத்தனமான PS அரசாங்கத்திற்கு பிரச்சாரம் செய்வதன் மூலமாக தொழிலாள வர்க்கத்தை நிலைநோக்கின்றி செய்ய நோக்கம் கொள்கிறது,” என்று எழுதியது. (பார்க்கவும்: “France’s New Anti-capitalist Party backs Socialist Party candidate in May 6 run-off”)

தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக போலி-இடது கட்சிகள் வலதிற்கு நகர்ந்த இந்த உக்கிரமான மாற்றம், ஒரு சர்வதேச நிகழ்வாகும். அது தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் செல்வாக்குமிகுந்த போலி-இடது சக்திகளுக்கும் இடையே ஆழமடைந்துவரும் வர்க்க இடைவெளியை பிரதிபலிக்கிறது. ஜேர்மனியில் இடது கட்சி (Die Linke) ஜேர்மன் இராணுவவாதத்திற்குத் திரும்புவதை ஆதரித்து வருகிறது, அத்துடன் ஈராக் மற்றும் சிரியாவில் குண்டுவீசுவதில் ஜேர்மன் பங்கெடுப்பதையும் ஊக்குவித்து வருகிறது. பேர்லினில் உள்ள பிராந்திய அரசாங்கம் சமூக ஜனநாயகவாதிகளுடன் சேர்ந்து, பரந்தளவிலான சிக்கன திட்டங்களுக்கு முன்னோடியாக இருந்தது.

பேர்லின் மற்றும் பாரீசின் உயர்மட்ட அதிகாரிகள் உடனான சந்திப்பிற்கு பின்னர், சிஐஏ உடனான ஒரு நிகழ்ச்சிக்காக வாஷிங்டனுக்கு பயணித்துக் கொண்டிருந்த கிரீஸின் போலி-இடது கட்சியான சிரிசாவின் அலெக்சிஸ் சிப்ரஸ், அக்கட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன், சர்வதேச நிதியியல் சந்தைகளுக்கு கிரீஸின் கடன்களை வலுக்கட்டாயமாக வசூலித்து செலுத்திவிடுமென சூளுரைத்துள்ளார். கிரீஸுடனான நேட்டோவின் இராணுவத்தள உடன்படிக்கைகள், சிரிசா அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்பாக இருக்குமெனவும் அது சமிக்ஞை காட்டியுள்ளது. ஏகாதிபத்திய அரசியலின் முக்கிய சக்திகளினது ஆதரவுடன், சிரிசா PASOK அங்கத்தவர்களை நியமித்தும் மற்றும் அதன் வாக்காளர் அடித்தளத்திலிருந்து பெரிதும் கைப்பற்றியும், PASOK மீதான மக்களின் கோபத்திலிருந்து ஆதாயமடைந்துள்ளது.

PS இன் "அதிருப்தியாளர்" அடுக்குகளுடனும், அத்துடன் ஸ்ராலினிச-தலைமையிலான இடது முன்னணியின் பல்வேறு உட்கூறுகளுடனும் சேர்ந்து, சிரிசா பாணியில் ஒரு அழுகிய கூட்டணியைக் கட்டியெழுப்ப, NPA தன்னைத்தானே திருப்பி வருவதாக தெரிகிறது. PSஇன் தரப்பில் சாய்ந்திருக்கும் அதன் நாற்பதாண்டு கால மூலோபாயம் வீழ்ச்சியில் இருக்கிறது. வைக்கோல் பொதி பற்றிக் கொண்டதைப் போல, இந்த இருண்ட வழியின் முடிவில் ஏதோ தீப்பிழம்பு தெரிகிறது: “புதிய [PS] கன்னையினது அதிருப்தியாளர் அமைப்பான "இடது நீடூழி வாழ்க" (Long Live the Left) என்பது, 'அதிருப்தியாளர்களின்' மட்டுப்பாடுகளுக்கு இடையிலும் PS இன் நெருக்கடி முடிந்துவிடவில்லை என்ற உண்மையை எடுத்துக்காட்டுகிறது, அவர்களின் சொந்த கீன்சிய முதலாளித்துவ கண்ணோட்டத்தை அவர்களால் ஒருபோதும் விட்டுவிட முடியாது என்பதும் அதில் உள்ளடங்கும்."

பல்வேறு PS கன்னைகளுடன் சேர்ந்து ஒரு முற்போக்கான கூட்டணியை அதனால் ஏற்படுத்த முடியுமென்ற NPAஇன் மறைமுகமான வாதம் ஒரு பிற்போக்குத்தனமான மோசடியாகும். PS "அதிருப்தியாளர்களின்" என்ன வேலைத்திட்டத்தை NPA ஊக்குவித்து வருகிறது? முன்னாள் பொருளாதார மந்திரி ஆர்னோ மொண்டபூர்க் கூறுகையில், அவர் ஹோலாண்டின் வரவு-செலவு திட்ட வெட்டுக்களை ஆதரிப்பதாக வலியுறுத்தினார். “நாம் 50 பில்லியன் வெட்டுக்கள் மீது சவால்விடக்கூடாது," அவர் தெரிவித்தார். “மாறாக அவற்றை பிரெஞ்சு மக்களுக்குத் திருப்பி அளிக்க, நாம் அவற்றை சரியான வழியில் பயன்படுத்த வேண்டும்,” என்றார். மொண்டபூர்க்கும்—NPAஐ போலவேபெரும் வங்கி பிணையெடுப்புகளை விரும்புவதுடன், பிரெஞ்சு ஆளும் வர்க்கம் மற்றும் செல்வாக்குமிகுந்த குட்டி-முதலாளித்துவத்தின் முக்கிய பகுதிகளுக்கு நெகிழ்வான கடன்களை செய்ய வேண்டுமென அவர் விரும்புகிறார்.

மொண்டபூர்க்கின் ஜேர்மன்-விரோத உணர்ச்சி பிரவாகமானது, ஜேர்மன் மீள்இராணுவமயமாக்கம் மற்றும், உக்ரேன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் அதன் தலையீட்டுடன், பேர்லின் ஐரோப்பாவின் மீது சவாலுக்கிடமற்ற பொருளாதார மேலாதிக்கத்தை ஸ்தாபிக்கும் சாத்தியக்கூறு குறித்த பிரெஞ்சு முதலாளித்துவத்தின் அதிகரித்துவரும் அச்சத்தை பிரதிபலிக்கிறது.

மொண்டபூர்க் போன்ற சக்திகள் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கு ஒரு மாற்று மூலோபாயத்தை முன்வைக்கின்றன: அதாவது, ஐரோப்பாவிற்குள் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கு இடையே பிளவை அபிவிருத்தி செய்வது, அத்துடன் இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற ஏனைய தெற்கு ஐரோப்பிய அரசாங்கங்களை பிரான்ஸின் தரப்பில் எடுக்க ஒன்றுதிரட்டுவது என்பதே ஆகும். இது அவர்களை, ஒருபுறம் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய ஹோலாண்டின் உறுதியான நிலைநோக்குக்கும், மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோவிலிருந்து பிரான்ஸ் வெளியேற வேண்டுமென அழைப்புவிடுக்கும் நவ-பாசிச தேசிய முன்னணிக்கும் (FN) இடையே ஏதோவொரு இடத்தில் அவர்களைக் கொண்டு வந்து நிறுத்துகிறது.

எவ்வாறிருந்த போதினும், இறுதியாக NPA போன்ற போலி-இடது குழுக்களின் நிலைப்பாடுகள், ஒரு புறநிலை அரசியல் தர்க்கத்தைக் கொண்டுள்ளன. தொழிலாள வர்க்கம் மற்றும் அதன் சர்வதேச ஐக்கியத்திற்கான போராட்டத்திற்கு விரோதமாக, முதலாளித்துவமே நிலைத்திருக்கும் மற்றும் சோசலிசம் நிலைத்துநிற்க இலாயக்கற்றது என்ற முழு நம்பிக்கையுடன், அவர்கள் FN மற்றும் வலதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் ஓர் ஆளும் மேற்தட்டிற்குள் தேசியவாத நிலைப்பாடுகளுடன் தங்களைத்தாங்களே ஒழுங்குப்படுத்தி வருகின்றார்கள். PS மற்றும் EUக்கு எதிராக எழும் சமூக போராட்டங்களில், அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் கடுமையான எதிரிகளாக எழுவார்கள்.