சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

IMF points to dangers of stagnation and financial turbulence

சர்வதேச நாணய நிதியம் மந்தநிலைமை மற்றும் நிதியியல் கொந்தளிப்பின் அபாயங்களைப்பற்றி குறிப்பிடுகிறது

By Nick Beams
19 September 2014

Use this version to printSend feedback

அமெரிக்க வட்டிவிகிதங்கள் அதிகரிக்கத் தொடங்கியதும், எழுச்சிபெற்றுவரும் சந்தைகளிலிருந்து மூலதனம் அநேகமாக வெள்ளமென வெளியேறுவதால் தூண்டிவிடப்படும் மற்றொரு நிதியியல் நெருக்கடியின் அபாயங்கள், மற்றும் குறைந்த உலகப்பொருளாதார வளர்ச்சி குறித்த பிரதான பொருளாதார அமைப்புகளின் எச்சரிக்கைகளுடன், சர்வதேச நாணய நிதியமும் தனது கருத்தையும் இணைத்துக் கொண்டிருக்கிறது

நவம்பரில் நடைபெறவுள்ள G20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இந்த வாரயிறுதியில் நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கியாளர்களின் கிரெயின்ஸ் இல் நடைபெறவுள்ள கூட்டத்திற்காக தயாரித்த ஒரு குறிப்பில் சர்வதேச நாணய நிதியம் -IMF- குறிப்பிடுகையில், உலகளாவிய வளர்ச்சி அதன் கடந்த ஏப்ரல் மாத முன்கணிப்பை விட பலவீனமாக இருப்பதாக தெரிவித்தது. அதுஅமெரிக்காவில் ஆச்சரியப்படும் வகையில் மெதுவான முதல் காலாண்டை" மேற்கோளிட்டு காட்டியது, அக்காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் ஒரு சுருக்கத்தை அனுபவித்திருந்தது, இலத்தீன் அமெரிக்காவின் செயற்பாடுகளோ பலவீனமாக இருந்தது, ஜப்பானிலும் இரண்டாவது காலாண்டு சுருங்கியிருந்தது மற்றும் ஐரோப்பாவில் "கீழ்நோக்கிய ஆச்சரியங்கள்" இருந்தன, அங்கே "இரண்டாவது காலாண்டின் நடவடிக்கைகள் மந்தமாகி இருந்தன.”      

மிதமான வார்த்தைகளில் அது, பரந்த "வளர்ச்சி மந்தநிலைமை", குறைந்த பணவீக்கம் மற்றும் சில முன்னேறிய பொருளாதாரங்களில் பணச்சுருக்கத்திற்கான சாத்தியக்கூறுகளையும் கூட அவ்வறிக்கை சுட்டிக்காட்டியது.

ஒரு முக்கிய அவதானிப்பில் அது குறிப்பிடுகையில், “இந்த ஆண்டின் முதல் பாதியில் உலகளாவிய மட்டத்தில் முதலீடு பலவீனமாக" இருந்ததன் விளைவே குறைந்த வளர்ச்சியாகும் என்று குறிப்பிட்டது. பெரும்பாலான முன்னேறிய நாடுகளில் பூஜ்ஜிய அளவிற்கு வட்டிவிகிதங்கள் குறைக்கப்பட்டதற்கு இடையிலும், முதலாளித்துவ பொருளாதாரத்தின் முக்கிய உந்து சக்தியாக விளங்கும் முதலீடு மேற்கொள்ளப்படவில்லை என்பதையே இது குறிப்பிட்டுக் காட்டுகிறது.

பிரதான முன்னேறிய நாடுகளில், குறிப்பாக ஐரோப்பா மற்றும் ஜப்பானில், “நீடித்த சேமிப்பின்மை" அபாயம் இருப்பதை விட்டுவிட முடியாதெனவும் அது குறிப்பிட்டது. ஐரோப்பாவில் மிக குறைந்த வட்டிவிகிதங்களுக்கு இடையிலும் வளர்ச்சி வேகமெடுக்கவில்லை. “நீடித்த சேமிப்பின்மை" பொருளாதரத்தில் முதலீடு பற்றாக்குறையால் மக்களிடையே சேமிப்பு குறைதல்.

நிஜமான பொருளாதார நடவடிக்கையை ஊக்குவிக்க தவறியுள்ள அதேவேளையில், குறைந்த வட்டிவிகிதங்கள், அமெரிக்க பெடரல் மற்றும் ஏனைய மத்திய வங்கிகளின் பல்வேறு "பணத்தைப் புழக்கத்தில்விடும்" திட்டங்களின் விளைவாக வட்டிகுறைந்த பணம் பாய்ச்சப்பட்டதுடன் சேர்ந்து, நிதியியல் சந்தைகளை ஊக்குவித்திருக்கின்றன.

எவ்வாறிருந்த போதினும், இது மற்றொரு நிதியியல் நெருக்கடியின் அபாயத்தை மட்டுமே உயர்த்தி உள்ளது. பாதுகாப்பானதாக கருதப்படும் அரசாங்க பத்திரங்கள் மற்றும் ஏனைய நிதியியல் சொத்துக்களின் மீது குறைந்த விகித வருமானங்களால், அபாயத்தில் இறங்குவது அதிகரித்திருப்பதுடன், மத்திய வங்கிகளின் தொடர்ச்சியான பண வினியோகங்களின் காரணமாகநிதியியல் நம்பிக்கைவாதமும்" சேர்ந்திருப்பதால், இவை "தவிர்க்கவியலாமல் திடீர் திருத்தங்களைத் தூண்டிவிடக்கூடும்". “அதிகரித்த புவி-அரசியல்சார் அபாயங்கள்" என்றழைக்கப்படுவதும் அங்கே நிலவுகின்றன, இது உக்ரேன் மீதான ரஷ்யா உடனான மோதல்கள் மற்றும் மத்திய கிழக்கில் விரிவாக்கப்பட்ட அமெரிக்க தலைமையிலான யுத்தம் ஆகியவற்றைக் குறித்த குறிப்புகளாகும்.  

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் வட்டிவிகித கொள்கைகளை "இயல்பாக்குவதுடன்" இணைந்துள்ள ஏனைய அபாயங்களைக் குறித்தும் அது எச்சரித்தது. அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் வட்டிவிகிதங்கள் உயர்கையில், ஒரு சிறிய அளவில் உயர்ந்தாலும் கூட, சொத்து நிர்வாக அமைப்புகளால் "எழுச்சிபெற்றுவரும் சந்தைகளில்" கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையற்ற நிதி திடீரென வெளியேறும் அபாயத்தை இது குறிக்கிறது. இந்த முதலீடுகளின் அளவு இந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உறுபத்தியுடனும் மற்றும் நிதியியல் சந்தைகளுடன் ஒப்பிடுகையில் மிகப் பெரியதாகும். எந்தவொரு திடீர் வெளியேற்றமும் ஒரு பிரதான தாக்கத்தை மற்றும் ஒரு நிதியியல் நெருக்கடியைத் தூண்டிவிடக் கூடும். அதுபோன்றவொரு சம்பவத்தைக் குறித்த அச்சுறுத்தல் கடந்த ஆண்டு மத்தியிலும் மற்றும் மீண்டும் இந்த ஆண்டின் தொடக்கத்திலும் வழங்கப்பட்டது. அப்போது அமெரிக்க வட்டிவிகிதங்கள் உயர்த்தப்படுமென்ற எதிர்பார்ப்பின் விடையிறுப்பாக நிதிகள் வெளியேறி இருந்தன.

இந்த அபாயங்கள் எழுச்சிபெற்றுவரும் சந்தைகளுடன் மட்டும் அடங்கிவிடவில்லை. அமெரிக்க பெருநிறுவன கடன்வழங்குதலில் மற்றும் காப்பீட்டு சந்தைகளில், அத்துடன் பல சிறிய முன்னேறிய நாடுகளில் "வீட்டுச்சந்தை விலை உயர்வுகளில்" "அதீத அபாயத்தை உள்ளடக்கியிருப்பதற்கான" ஆதாரம் அங்கே இருந்ததாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டது.

சர்வதேச நாணய நிதியம்  மதிப்பீட்டை வழங்கிய அதேநாளில், பூகோள பொருளாதார ஸ்திரமின்மை பற்றிய மீது மேலதிக அறிகுறிகள் எழுந்தன, இந்த முறை சீனாவிலிருந்து எழுந்தது. வங்கியியல் அமைப்புமுறைக்குள் 80 பில்லியன் டாலரைச் செலுத்தும் புதன்கிழமை தீர்மானத்திற்குப் பின்னர், அந்நாட்டின் மத்திய வங்கி நேற்று 0.2 சதவீதம் அளவுக்கு ஒரு பிரதான உத்தியோகப்பூர்வ வட்டிவிகிதத்தை அறிவித்தது, அதேவேளையில் அந்நாடு முழுவதிலும் சொத்து சந்தைகளில் மேற்கொண்டும் வீழ்ச்சியுறுவதை புதிய புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டின. நிலம்-கட்டிடம் விற்பனைத்துறை மற்றும் கட்டுமானத்துறை சீன பொருளாதாரத்தின் ஒரு பிரதான அம்சமாக இருக்கின்றனசில மதிப்பீடுகளின்படி ஏறத்தாழ 20 சதவீதமாக உள்ளனஅவை மலிவு கடன் வினியோகத்தைச் சார்ந்துள்ளன.    

இந்த இருண்ட  சர்வதேச நாணய நிதிய  ஆய்வறிக்கை, இந்த வாரத்தின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட OECD அமைப்பால் (பொருளாதார அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான அமைப்பு) G20 கூட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட உலக பொருளாதார நிலையின் அதேபோன்ற மதிப்பீட்டை பரந்தளவில் பின்தொடர்ந்து வந்திருக்கிறது.   

அக்டோபர் 2013இல் 3 சதவீதத்திற்கு சற்று குறைவாக வரையறுக்கப்பட்ட  சர்வதேச நாணய நிதியத்தின் அடிப்படை விகிதத்திற்கு (baseline rate) கூடுதலாக 2 சதவீத உலகளாவிய வளர்ச்சி விகித புள்ளிகளை உயர்த்த வேண்டுமென்ற G20 பொறுப்புறுதி மீதான முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதே, உச்சி மாநாட்டிற்கான நிகழ்ச்சிநிரலின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும். இந்த இலக்கை எட்டுவதன்மீது அங்கே எந்த சாத்தியக்கூறும் இருப்பதாக தெரியவில்லை.

அதை பரிந்துரைப்பதற்கான கடமைப்பாடு அந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்திருக்கும் அந்நாட்டின் முக்கிய அதிகாரியின் பொறுப்பு என்ற நிலையில், புதனன்று ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் ஆஸ்திரேலிய நிதிமந்திரி  ஜோய் ஹாக்கி கூறுகையில் அந்த இலக்கை அடைவது "கடினமானதே" என்பதை ஒப்புக் கொண்டார். வேலைகள் மற்றும் வளர்ச்சி மீது ஒரு கவனம்செலுத்தப்படாவிட்டால், சர்வதேச அளவில் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமையின் மட்டங்கள் உயரும் என்பதுடன், “நமது சமூகங்கள் என்ன எதிர்பார்க்கிறதோ அதை வழங்க தவறும் ஒரு சுழற்சியில் போய் நாம் அகப்பட்டுக்கொள்வோம்," என்றார்.  

ஆனால் அந்த பரிந்துரை, நடைமுறைப்படுத்தப்பட்டாலும் கூட, 2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடி தொடங்கியதற்கு முன்னர் மேலோங்கி இருந்த நிலைமைகளுக்குத் திரும்ப முடியும் என்பதை அது அர்த்தப்படுத்தாது. குறைந்த வட்டிவிகிதங்கள் மீதோ அல்லது அரசு செலவுகளை அதிகரிப்பதன் மீதோ தங்கியிருப்பதற்கு மாறாக "கட்டமைப்பு சீர்திருத்தங்கள்" மூலமாக வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்கு அங்கே உடன்பாடு இருப்பதாக ஹாக்கி தெரிவித்தார்.

"கட்டமைப்பு சீர்திருத்தங்கள்" என்பது பெருநிறுவன வரிகளில் குறைப்பு மற்றும் பெரிய வியாபாரங்களுக்கு இதர விட்டுகொடுப்புகள் ஆகியவற்றுடன், குறைந்த ஊதியங்கள் மற்றும் குறைந்த பாதுகாப்பான வேலைவாய்ப்பு நிலைமைகள் மூலமாக பெரும் "வளைந்துகொடுக்கும்தன்மையை" ஊக்குவிக்க எஞ்சியிருக்கும் தொழிலாளர் சந்தை நெறிமுறைகளைத் தளர்த்துவதைக் குறிக்கும் ஒரு குறிச்சொல்லாகும்.

அபாய காரணிகள் மற்றும் எழுச்சிபெற்றுவரும் சந்தைகளிலிருந்து திடீர் வெளியேற்றத்தின் சாத்தியக்கூறுகளை போதுமானளவிற்கு கணக்கில் எடுக்க தவறியமை உட்பட, நிதியியல் அமைப்புமுறையின் உடனடி பிரச்சினைகளை சர்வதேச நாணய நிதிய ம் மற்றும் இதர அமைப்புகளும் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் Deutsche Bank மூலோபாயவாதி ஜிம் ரெய்ட்டின் ஒரு சமீபத்திய விரிவான அறிக்கை நீண்டகால அபிவிருத்திகளின் மீது கவனத்தைத் திசை திருப்பி இருந்தது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக பூகோளமயப்பட்ட பொருளாதாரம் முழுவதும் ஒருபோதும் தளர்ந்துவிட  அனுமதிக்காதவாறு மிகை இருப்புகளுடன் "ஒரு குமிழி மாற்றி ஒரு குமிழியென" சுழன்று கொண்டிருப்பதாக அவர் எழுதினார். “அதற்கு மாறாக ஆக்ரோஷமான கொள்கை விடையிறுப்புகள், ஒரு நிகழ்வுபோக்கினூடாக புதிய குமிழிகளுக்குள் சுழல ஊக்குவித்துள்ளது", அந்த நிகழ்வுபோக்கு நவீன நிதியியல் அமைப்புமுறையை சாத்தியமானளவிற்கு தொடர்ந்து நகர்த்தி வந்துள்ளது.“

"மிகத் தெளிவாக, அங்கே எப்போதுமே வரலாற்றினூடாக உருவான குமிழிகளும் இருந்திருக்கின்றன, ஆனால் ஒரு குமிழியின் வெடிப்பு அடுத்ததன் உருவாக்கத்திற்கு நேரடியாக இட்டுச் சென்றுள்ள, கடந்த 20 ஆண்டுகளைப் போன்றவொரு காலக்கட்டம் இருந்திருக்கிறதா?" 

சமீபத்திய  குமிழி அரசு பத்திரங்களில் இருக்கிறது, இது இரண்டு தசாப்தங்களில் நடத்தப்பட்ட நெருக்கடி நிர்வாகத்தின் ஒரு விளைபொருளாகும், மேலும் இப்போது அது கடன்களைச் சுமந்திருக்கும் நிதியியல் அமைப்புமுறையைக் காப்பாற்றி வைப்பதற்கு ஒரு பிரதான அவசியமான நிலைமையாக மாறியுள்ளது.

எவ்வாறிருந்த போதினும், ரெய்டின் கருத்துப்படி, “கடன் கொடுக்கும் இறுதி போக்கிடமான" அரசாங்கங்கள் மற்றும் மத்திய வங்கிகளின் "கரங்களில் இப்போது அது வந்திருக்கும் நிலையில், இந்த குமிழி செல்வதற்கு அங்கே எந்த இடமும் விட்டு வைக்கப்படவில்லை என்பது தான் கவலையாக இருக்கிறது".

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு புதிய நிதியியல் நெருக்கடிக்கான நிலைமைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில் மத்திய வங்கிகளும் அரசாங்கங்களும் கடந்த காலத்தில் அவை வகித்ததைப் போல நிதியியல் சந்தைகளை ஸ்திரப்படுத்துவதில் ஒரு பாத்திரம் வகிக்க முடியாது, ஏனென்றால் அவை அந்த குமிழியை உருவாக்குவதில் தாமே மிக ஆழமாக சிக்கி இருக்கின்றன.