சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama and the financial aristocracy   

ஒபாமாவும் நிதியியல் பிரபுத்துவமும்

Andre Damon
5 September 2014

Use this version to printSend feedback

விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கீ நகரத்தில் ஒரு தொழிற்சங்கம் நடத்திய "தொழிலாளர் விழாவில் (laborfest) பேசியபோது, "மத்திய வர்க்கத்திற்கு உதவுதல்" என்பது குறித்த போலி ஜனரஞ்சக வார்த்தை ஜாலங்கள் நிரம்பிய உரையின் நடுவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவருடைய நிர்வாகத்தின் பொருளாதார கொள்கை மற்றும் அமெரிக்காவில் முதலாளித்துவ அமைப்பு முறையின் அடிப்படை குணாம்சத்தை  வெளிப்படுத்தியுள்ளார்

"பெருவணிக இலாபங்கள் அதிகரித்திருப்பது ஒரு நல்ல விஷயம்" என்று கூறினார். "அமெரிக்க வர்த்தகங்கள் அதை தொடர விரும்புகின்றேன். பங்குச் சந்தை எழுச்சி கண்டு கொண்டிருக்கிறது என்பது ஒரு நல்ல விஷயம். என்றார்.

பங்கு சந்தையின் முடிவற்ற எழுச்சி மற்றும் சாதனை அளவான பெருநிறுவன இலாபங்கள் ஒரு பெரும்பான்மையான மக்களுக்கு பொருளாதார பேரழிவின் ஒரு அளவுகோலாக இருந்திருக்கின்றன என்பதை ஒபாமா சொல்லவில்லை. இது பெரும்பான்மையான மக்களுக்கு தெளிவாகிறது. உண்மையில் ஒபாமா என்ன கருதுகிறார் என்றால், ஆனால் சொல்லவில்லை, அமெரிக்க பெடரல் ரிசர்விடமிருந்து ட்ரில்லியன் கணக்கான குறைந்த வட்டியுடன் கிடைக்கும் டாலருடன் இணைந்த வேலை வாய்ப்புகள், ஊதியங்கள் மற்றும் சமூக திட்டங்கள் மீது ஒரு முழு தாக்குதலின் ஒரு நேரடி விளைவாக பெருநிறுவன நிர்வாகிகள் மற்றும் நிதிய ஊக வணிகர்கள் தங்கள் சொத்து மதிப்புகள்  வானளவாக அதிகரிப்பதை காண்கின்றார்கள் என்பது" ஒரு நல்ல விஷயமாக" இருக்கிறது.         

ஒபாமாவின் வார்த்தைகளை மற்றொரு அமெரிக்க ஆளும் உயரடுக்கு பிரதிநிதி, அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் வார்த்தைகளோடு ஒப்பிடுவது படிப்பனையூட்டுவதாக இருக்கிறது, "நேர்மையற்ற பண பரிமாற்றம் செய்பவர்களின் செயல்பாடுகளை" பகிரங்கமாக குற்றஞ்சாட்ட 1933இல் அவருடைய முதல் பதவியேற்பு உரைக்கான நிகழ்ச்சியை பயன்படுத்திக்கொண்டார். அவர்கள் "மக்கள் கருத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு நிற்கிறார்கள்." "பணப் பரிமாற்றம் செய்பவர்கள் நம்முடைய நாகரிகத்தின் கோயிலில் அவர்களின் உயர்ந்த பதவிகளிலிருந்து ஓடிவிட்டார்கள்" என்ற உண்மையை தன்னுடைய தேர்வு அறிவித்திருக்கிறது என்று ரூஸ்வெல்ட் அறிவித்தார்.

"பழைய நடைமுறையின் தீமைகள் மீண்டும் வருவதற்கு எதிராக இரண்டு பாதுகாப்பு அம்சங்களை ரூஸ்வெல்ட் வற்புறுத்தினார். அவையாவன: ஏனைய மக்களின் பணத்தைக் கொண்டு செய்யப்படும் ஊக வணிகத்துக்கு ஒரு முடிவு இருக்க வேண்டும், அனைத்து வங்கியியல் மற்றும் கடன்கள் மற்றும் முதலீடுகளுக்கு ஒரு கண்டிப்பான கண்காணிப்பு இருக்க வேண்டும்.

அமெரிக்கா உலகின் தலைமைதாங்கும் பொருளாதார சக்தியாக வெளிப்பட்டுக் கொண்டிருந்த ஒரு காலத்தில் ரூஸ்வெல்ட் பேசிக் கொண்டிருந்தார். இத்தகைய சூழ்நிலைகளில், பொருளாதார நெருக்கடி மற்றும் புரட்சிகர எழுச்சிகள் போன்றவைகளுக்கு சமூக சீர்திருத்தங்களுடன் அப்போதைய நிதி மூலதனத்தின் நடவடிக்கைகளில் வரம்புக்குட்பட்ட கட்டுப்பாடுகளை இடம் பெற செய்யும் முயற்சிகள் போன்றவற்றால் அமெரிக்க ஆளும் உயரடுக்கு விடையிறுப்பு செய்தது.

இன்று, அதாவது அமெரிக்க அரசியல் ஆளும்வர்க்கத்தினுள் இருக்கும் ஒருமித்த கருத்தை வானளவு எழும் ஒரு பங்கு சந்தை பிரதிபலிப்பது ஒரு 'நல்ல விஷயம்' என்பது ஒபாமாவின் கருத்தாகும். அதாவது "பழிபாவத்திற்கு அஞ்சாத பணம் மாற்றிகள்" -  வால் ஸ்ட்ரீட் ஊக வணிகர்களின் அப்பட்டமான முறையில் அதிகார கொள்கை. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையும் உழைக்கும் மக்களின் இழப்பில் நிதிய தன்னலக்குழுவை செல்வவளப்படுத்தும் நேரடி நோக்கம் கொண்டுள்ளது.

S&P 500 (Standard and Poor's) முதல் முறையாக 2000 என்ற அளவை கடந்த ஒரு சில நாட்கள் கழித்து ஒபாமா அவருடைய கருத்துக்களை வெளியிட்டார். இந்த அளவை அடைவதற்கான சந்தர்ப்பத்தில், 2008 வீழ்ச்சிக்கு கொண்டு சென்ற நிதியியல் பேரார்வம் அல்லது  டாட்.காம் குமிழிக்கு இடையே 1600 என்ற அளவை பங்கு குறியீடு எப்பொழுதும் தாண்டவில்லை.

சந்தையை தொடர்வதன் மூலம் தமது வணிகத்தை தக்க வைக்க செய்தவர்களுக்கு மத்தியில், மிகப் பெரிய அமெரிக்க பங்கு சந்தை குமிழியாக அனைத்துகாலத்திற்குமான பங்கு மதிப்புகளில் கட்டுக்கடங்காத வளர்ச்சியை தூண்டிக் கொண்டிருக்கிறது என்று எச்சரிக்கைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. சில நடவடிக்கைகளின் அடிப்படையில் தற்போதைய பங்கு சந்தை புத்தூக்கம் ஏற்கனவே நவீன வரலாற்றில் மிகப்பெரியதாக இருக்கிறது என பிரெட் ஆரென்ஸ் MarketWatch இல் எழுதியிருந்தார். நடுத்தர பங்கு இன்று 20 மடங்குகள் வருவாய்க்கு நிகராக இருக்கிறது. 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் [டாட்.காம் குமிழியின் உச்சத்தில் இருந்தது], 16 மடங்கு அதிகமாக இருந்தது. ஆரெண்ன்ஸ் மேலும் குறிப்பிடுகையில், நடுத்தர பங்கு இன்று தலா ஒவ்வொரு பங்கு வருவாய்க்கும் வருடாந்தம் 1.8 மடங்குகளுக்கு வர்த்தகம் செய்கிறது. 2000இல் இது வெறும் 1.4 மடங்குகளாக இருந்தன என்றார்.

குறைந்த அளவு எண்ணிக்கையிலான தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊக வணிகம் மூலமாக டாட்.காம் குமிழி இயக்கப்படும் அதே வேளையில் தற்போதைய குமிழி மொத்த சந்தையையும் உள்ளடக்கியுள்ளதாக ஆரென்ஸ் அறிவிக்கின்றார். ஜூலையில் நீல் ஈர்வின், நியூயோர்க் டைம்ஸில் எழுதும் போது, ஒரு "ஒவ்வொன்றும் குமிழிகள் குறித்து எச்சரித்தது. அதில் பூகோள நிதியியல் அமைப்புமுறைக்குள் உலக மத்திய வங்கிகள் பொங்கி வழியும் ஒரு பணம் உட்செலுத்தப்படுவதின் மத்தியில் "மிகத்தெளிவான ஒரு சில மலிவான சொத்துக்கள் இருக்கின்றன என்றார்.

இந்த நிலையிலான விவகாரங்கள் தான் ஒபாமா நிர்வாகத்தின் மூலமாக செயல்படுத்தப்படும் கொள்கைகளின் நேரடி விளைவாக இருக்கிறது. முன்னாள் கருவூலச் செயலர் டைமோதி கீத்னர் சமீபத்தில் ஏற்றுக்கொண்டதைப் போல், வங்கி பிணையெடுப்பின் போது அரசாங்கம் ஏறக்குறைய 7ட்ரில்லியன் டாலர்கள் நிதியியல் முறைக்கு கடனாக அளித்தது. இது 30ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான நிதியியல் சொத்துகளை தூக்கி நிறுத்த பயன்படுத்தப்பட்டது. இது அமெரிக்காவின் ஆண்டு வருமானத்தை விட இரண்டு மடங்குஅதிகம். அப்பொழுதிலிருந்து ஏறக்குறைய முழுமையாக ஆறு ஆண்டுகளுக்கு மிக அவசியமாக பூஜ்ய வட்டி வீதத்தை நிர்ணயித்திருக்கும் அதேவேளையில் பெடரல் ரிசர்வ் பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விடும் அதன் கொள்கை மூலமாக 30 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாக கூடுதல் தொகையாக  ஏற்படுத்தியிருக்கிறது.

2008 இல் அமைப்பு ரீதியிலான மற்றும் உயிர்வாழ்வுக்கான நெருக்கடியை முகங்கொடுத்த போது அமெரிக்க ஆளும் உயரடுக்கு ஒரு இரக்கமற்ற வர்க்க கொள்கையுடன் எதிர்கொண்டது. முதலில், மிருகத்தனமாக அதிகரித்த (ஊதிப்பெருத்த) நிதியியல் சொத்துக்களின் மதிப்புகள் சரிவின்போது வீழ்ச்சியடைந்தன, பெடரல் ரிசர்வின் ரொக்க ஒப்படைப்புடன் இணைந்திருந்து மீண்டும் பழைய நிலைக்கு மாற்றமடைந்தது. இரண்டாவதாக, இந்த கற்பனையான சொத்து மதிப்புகள் மக்களின் ஏழ்மை நிலை மூலமாக உத்தரவாதம் அளிக்கப்படும்: ஊதியம் மற்றும் சலுகைகள் குறைப்பு, வேலையை வேகப்படுத்துதல்கள், அத்தியாவசிய சமூக சேவைகளுக்கு குறைப்புகளுடன் நிறுவனங்களின் இலாபத்தொகை மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மேலதிக கொடுப்பனவுகள் என்று பங்கு வருமானங்கள் பெருநிறுவன இலாபங்களுக்குள் செலுத்தப்படுகிறது.

குறுகிய காலத்தில் ஆளும் உயரடுக்கு மகத்தான செல்வமடைவதை பாதுகாக்கும் இந்த கொள்கை மிகப்பெரிய நிதியியல் நெருக்கடிக்கு மேடை அமைக்கிறது, சில சமயம் மனித வரலாற்றிலேயே மிகப்பெரியதாக இருக்கலாம்

பொருளாதார வாழ்க்கையில் அமெரிக்க ஆளும் உயரடுக்கின் நெருக்கடி அரசியல் உருவாக்கம் அதன் அயல்நாட்டு கொள்கையில் பிரதிபலிக்கிறது. அதே குற்றத்தன்மை, அதே ஒட்டுண்ணித்தனம் இரண்டிலும் வெளிப்பாட்டை  காண்கிறது. அமெரிக்கா மற்றும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகள் போரைத் தூண்ட ஓய்வின்றி வேலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். உக்ரேனில் அது அமைத்திருக்கும் வலதுசாரி அரசாங்கத்திற்கு நேரடியாக ஆயுதம் வழங்க செயல்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ இந்த வாரம் புதிய பொருளாதார தடைகளுக்கு சதி செய்து கொண்டிருக்கிறது. நேட்டோவின் போர் பிரிவு விதி 5இன் ஆதரவுடன் அளவற்ற முடிவற்ற ஆத்திரமூட்டல்களை நடத்த கிழக்கு ஐரோப்பியாவில் இருக்கும் தீவிர வலதுசாரி அரசாங்கங்கள் அனைத்தையும் செய்ய  ஒபாமா நிர்வாகம் விட்டுக்கொடுத்துள்ளது.

அணு ஆயுத அரசுகளுக்கு இடையே போருக்கான சாத்தியக் கூறுக்கான மிகவும் உடனடியான ஒரு உணர்வை அதிகரித்தல், முதலாளித்துவ அமைப்பின் தீவிர நெருக்கடி மற்றும் இந்த அமைப்பு முறையின் உச்சியில் நிற்கும் ஆளும் வர்க்கத்தின் சமூகப் பண்பு ஆகியவற்றை புரிந்து கொள்வதற்கு வெளியே அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் தொடரும் அசாதாரணமான பொறுப்பற்றதன்மையை புரிந்துக்கொள்வது என்பது சாத்தியமற்றதாக இருக்கிறது.

ஒரு சமூக மற்றும் பொருளாதார வெடிமருந்து பீப்பாவை தலைமை தாங்குகிறது என்பதை அமெரிக்க ஆளும் வர்க்கம் நன்றாக அறிந்திருக்கிறது. எனினும் அரசியல்வாதிகள் அல்லது ஊடக விமர்ச்சகர்களின் உத்தியோக பூர்வ பிரகடனங்களில் எங்கும் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அமெரிக்காவிற்குள் உருவாகி கொண்டிருக்கும் மிகப்பரந்த பதட்டங்களை வெளியேற்றவும், அத்துடன் உலகளாவிய வெற்றி என்ற ஒரு கொள்கை மூலமாக நீண்ட கால சரிவின் விளைவுகள் மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடியை எப்படியாயினும் எதிர்கொள்வது என இரண்டுக்கும் ஒரு வழிமுறையாக  போரை ஒரு முயற்சியாக காண்கிறது.

உள்நாட்டிலும் மற்றும் வெளிநாடுகளிலும் ஆளும் வர்க்கத்தின் கொலைகார மற்றும் சமூக அழிவு கொள்கைகள், அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் மில்லியன் கணக்கான மக்களின் பார்வையில் முதலாளித்துவ அமைப்பு ஆழமாக மதிப்பை இழக்க செய்துள்ளது. தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை சமூக உரிமைகளை பாதுகாப்பதில் சர்வாதிகாரத்திற்கான செயல்பாடுகளை எதிர்ப்பதற்கு, உலகப் போரின் அழிவை எதிர்ப்பதற்கு எதிராக கேட்கப்படும் ஒவ்வொரு மகத்தான சமூக கேள்வியும் முதலாளித்துவ அமைப்பிற்கு ஒரு முடிவு கட்ட வேண்டிய தேவை குறித்த அதே அரசியல் கேள்வியை எழுப்புகிறது.