சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Scotland’s No vote and the crisis of the British nation state

ஸ்காட்லாந்தின் பிரிந்துபோக ஆதரிக்காத வாக்குகளும், பிரிட்டிஷ் தேசிய அரசின் நெருக்கடியும்

Statement of the Socialist Equality Party (UK)
20 September 2014

Use this version to printSend feedback

ஸ்காட்லாந்து சுதந்திரம் மீதான வியாழக்கிழமை வெகுஜன வாக்கெடுப்பில் மொத்த வாக்குப்பதிவு 84.6 சதவீதம் பதிவாகி இருந்த நிலையில், அது 44.7 சதவீதத்திற்கு 55.3 சதவீதத்தால் தோற்கடிக்கப்பட்டது.

ஆளும் வட்டாரங்களில் உடனடியான நிம்மதி பெருமூச்சு இருந்தது, அங்கே ஒரு சூழலில், கருத்துக் கணிப்புகளின்படி —ஸ்காட்லாந்து, இங்கிலாந்து மற்றும் வேல்ஸூக்கு இடையிலான 307-ஆண்டுகால ஐக்கியம் உடனே சிதையக்கூடிய அச்சுறுத்தலுடன்— பிரிந்துபோக ஆதரித்தவர்களின் பிரச்சாரம் ஒரு பெரும்பான்மையை பெற்றுவிடுமென காணப்பட்டது. அதுபோன்றவொரு சாத்தியக்கூறு ஒரு புதிய "லெஹ்மென் நிகழ்வுடன்" தொடர்புபடுத்தப்பட்டிருந்ததுஇது 2008 நிதியியல் பொறிவைத் தூண்டிவிட்ட வங்கித்துறை தோல்வி குறித்த குறிப்பாகும். பிரிந்துபோக ஆதரிப்பவர்கள் வெற்றியடைந்தால் அது பிரிட்டனின் ஆளும் மேற்தட்டை எல்லா தரப்பிலும் பலவீனப்படுத்துமென்ற அச்சங்கள் அங்கே இருந்ததுடன், அரசியல்வாதிகள், பொருளியல்வாதிகள், பெருநிறுவன செயலதிகாரிகள் மற்றும் இராணுவ பிரபலங்களிடமிருந்து எச்சரிக்கைகளை அது தூண்டிவிட்டிருந்தது.

சமீபத்திய நாட்களில் பெரும் இழப்புகளால் பாதிக்கப்பட்டிருந்த பின்னர், வெள்ளியன்று காலை பிரிட்டிஷ் பவுண்டும் இங்கிலாந்து பங்குகளும் இரண்டுமே வேகமெடுத்தன. ஸ்காட்டிஷ் தேசிய கட்சியின் (SNP) தலைவர் அலெக்ஸ் சால்மன்ட், பிரிந்துபோக ஆதரிப்பவர்களது பிரச்சார தோல்வியை ஏற்று இராஜினாமா செய்யும் அவரது விருப்பத்தை அறிவித்தார்.

ஆனால் அதேநாளின் மாலை, பங்குகள் மற்றும் ஸ்டேர்லிங்கின் உயர்வு தலைகீழாக திரும்பியிருந்தன, அது பிரிட்டிஷ் தேசிய அரசின் கூர்மையான நெருக்கடி இன்னும் தீர்ந்துவிடவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியது.

"ஒன்றாகி இருப்பதே சிறப்பு" என்ற முகாமின் முதுகெலும்பாக இருந்த பிரதான கட்சிகளினது பிரச்சாரத்திற்கு இடையே, பிரிவினைக்கு எதிராக பெரும்பான்மை கிடைத்திருக்கிறது என்றபோதினும், அது அந்த பிரச்சாரத்தின் காரணமாக ஏற்பட்டதில்லை என்ற உண்மையே முதலாளித்துவத்தை மிகவும் கவலைப்படுத்துவதாக இருந்தது.

அந்த பிரச்சாரம் வெஸ்ட்மின்ஸ்டர் மேற்தட்டை நோக்கிய அதிருப்தி மற்றும் விரோதத்தின் பெரும் அளவை அம்பலப்படுத்தி இருந்தது, அவர்கள் அனைவரும் சட்டவிரோத காலனித்துவ யுத்தங்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருக்கிறார்கள்.

இந்த அரச விவகாரங்கள் மீதான கோபத்தை, புதிய தேசிய எல்லைகள் உருவாக்குவதற்கான ஆதரவுக்குள் திருப்பிடும் முயற்சிகளை ஒரு பெரும்பான்மையினர் நிராகரித்தார்கள் என்பது உழைக்கும் மக்களிடையே நிலவும் கூட்டு-உணர்வின் பலமான அடையாளத்தை மற்றும் பெரு வணிக-சார்பு SNPஇன் மீதிருக்கும் அவநம்பிக்கையை நிரூபணம் செய்கின்றது. எவ்வாறிருந்த போதினும், 2012இல் சுமார் 15 சதவீதமாக இருந்த சுதந்திரத்திற்கான ஆதரவை அதிகரிப்பதில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு பிரிவினரிடையே நிலவிய சமூக மற்றும் அரசியல் அதிருப்தியை பிரிந்துபோக ஆதரிப்பவர்களின் பிரச்சாரத்தால் வெற்றிகரமாக சுரண்ட முடிந்திருந்தது. ஐந்தில் இரண்டுக்கும் அதிகமானவர்கள் பிரிவினைக்கு வாக்களித்திருந்தார்கள், ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய நகரமான கிளாஸ்கோவ் பிரிந்துபோக ஆதரிப்பவர்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பதிவு செய்திருந்தது.

SNP ஒவ்வொன்றுக்கும் பொய்-இடது சக்திகளிடம் —அதாவது ஸ்காட்டிஷ் சோசலிச கட்சி (SSP), டோம்மி ஷெரிடன், சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (SWP) ஆகியவற்றிடம்— கடமைப்பட்டிருக்கிறது. ஸ்காட்டிஷ் பிரிவினைவாதத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிற்போக்குத்தனமான சமூக மற்றும் அரசியல் நலன்களை மூடிமறைப்பதும் மற்றும் அதை போலி-சோசலிச வர்ணங்களில் சித்தரிப்பதுமே அவற்றின் பாத்திரமாகும். இவ்விதத்தில் அவை பிரிந்துபோக ஆதரிப்பவர்களினது பிரச்சாரத்தின் அடிமட்ட-சிப்பாய்களாக செயல்பட்டதுடன், சுதந்திரத்திற்குப்-பிந்தைய ஒரு மிக முற்போக்கான ஸ்காட்லாந்தின் ஒரு பரந்த இயக்கத்தின் பாகமாக SNPஐ புத்துருவாக்கம் செய்து வருகின்றன.

பிரிந்துபோக ஆதரிப்பவர்களின் வாக்குகள் அதிகரித்திருப்பதே ஸ்காட்டிஷ் தேசியவாதத்திற்கு தொழிலாள வர்க்கத்திடமிருந்து கிடைத்திருக்கும் நற்சான்றென இப்போது இந்த பொய்-இடது போக்குகள் வாதிடுகின்றன.

உலகளாவிய உற்பத்தி மற்றும் நிதியியல் சந்தைகளின் பாரிய அபிவிருத்தியானது, மத்திய அரசாங்கத்தைக் கடந்து, பிராந்திய முதலாளித்துவத்தின் ஒரு பிரிவுக்கு பன்னாட்டு பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் உடனான நேரடி உறவுகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்குகிறது. அதனால் தான் பெருநிறுவன வரி வெட்டு என்பது SNPஇன் மைய முறையீடாக இருந்தது. இந்த முதலாளித்துவ கன்னையைச் சுற்றி, அரச நிர்வாகிகள், கல்வித்துறை மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளின் ஒரு மத்தியதர வர்க்க அடுக்குகள் ஈர்க்கப்பட்டுள்ளன, இவை தான் பொய்யான-இடது குழுக்களுக்கு சமூக அடித்தளமாக விளங்குகின்றன.

SSP தலைவர் கோலின் ஃபாக்ஸ், “சுதந்திரம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது" என்பதே வாக்கெடுப்பின் தீர்ப்பாக இருக்கிறதென கூறி, அவர்களின் எதிர்கால போக்கைத் தொகுத்தளித்தார். அவர்கள் ஸ்காட்லாந்தில் தொழிற்கட்சி மற்றும் SNPஇன் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு புதிய "இடது" கட்சியை, அதாவது தேசியவாத கட்சியை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறை விவாதித்து வருகிறார்கள்.

பிரிந்துபோக வேண்டாமென்ற வாக்கு, பிரிட்டன் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்கள் முகங்கொடுத்துவரும் அபாயங்களை எவ்விதத்திலும் குறைத்துவிடவில்லை. அங்கே நடைமுறையில் ஒவ்வொரு பிரச்சினையிலும் ஆளும் மேற்தட்டிற்குள் ஆழ்ந்த பிளவுகள் உள்ளன. “நல்லிணக்கத்திற்கு" திறந்துவிடும் ஒரு காலக்கட்டத்திலிருந்து வெகுதூரம் விலகி, அடுத்த மாதங்கள் ஒவ்வொரு முனையிலிருந்தும் ஒரு கடுமையான போராட்டத்தைக் காணும்.

அவர்களின் தோல்விக்குப் பின்னர், SNPஉம் மற்றும் அதன் பங்காளிகளும் ஒரு முரட்டுத்தனமான போட்டாபோட்டியில் வடக்கு கடல் பிராந்திய எண்ணெய்யின் மீதான வரிகள் உட்பட முக்கிய ஆதாரவளங்கள் மீது கட்டுப்பாட்டைப் பெற, வெஸ்ட்மின்ஸ்டரிடம் இருந்து பெரியளவிற்கு சாத்தியமான விட்டுக்கொடுப்புகளைக் கோரி வருகிறார்கள், அதிலிருந்து தனிப்பட்டரீதியில் பெரும் செல்வந்தர்களாக முடியுமென நம்புகிறார்கள்.

அவர் பங்கிற்கு பிரதம மந்திரி டேவிட் கேமரூன், ஸ்காட்லாந்து அதன் கருத்தைத் தெரித்திருக்கிறது, இப்போது இது "மில்லியன் கணக்கான இங்கிலாந்து மக்களின் குரல்களை" செவிமடுப்பதற்கான நேரமாகும் என்று வலியுறுத்த அந்த வாக்கெடுப்பின் முடிவைப் பயன்படுத்தினார். ஸ்காட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டுமென்ற மூன்று கட்சிகளின் அறைகூவல் "முற்றிலுமாக மதிக்கப்படுமென" உத்திரவாதம் அளித்த போதினும், அவர் "இங்கிலாந்து சட்டங்களுக்கான இங்கிலாந்தின் வாக்குகளை" அறிமுகப்படுத்த அவர் சூளுரைத்தார்—அதாவது இப்போது ஸ்காட்டிஷ் நாடாளுமன்றம் மற்றும் வேல்ஷ் சட்டமன்றம் சம்பந்தப்பட்ட சில குறிப்பிட்ட பிரச்சினைகளின் மீது வாக்களிப்பதற்கு ஸ்காட்டிஷ் மற்றும் வெல்ஷ் MPகளின் உரிமையை நீக்குவதை இது குறிக்கிறது.

தொழிற் கட்சியால் வரையப்பட்ட, மற்றும் ஸ்காட்லாந்திற்கான "உள்நாட்டு சட்டத்துக்கு" ஒரு மாற்றீட்டு பாதையாக முன்மொழியப்பட்ட ஸ்காட்டிஷ் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை விரிவாக்கும் முறைமைகளில், வரியை-மாற்றியமைக்கும் அதிகாரங்களை விரிவாக்குவது மற்றும் ஹோலிரூட் பகுதிக்கு சமூகநலத்தின் சில குறிப்பிட்ட பிரிவுகளைப் விலக்குவது ஆகிய பொறுப்புடைமையும் உள்ளடங்கி உள்ளன. உண்மையில் இந்த நடவடிக்கைகள் ஒவ்வொரு இடத்திலும் தேசிய மற்றும் பிராந்திய போட்டியை ஊக்குவிக்க பயன்படுத்தப்படும் என்பதை கேமரூனின் அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது, “ஆழ்ந்த தூக்கத்திலிருந்து இங்லீஷ் தேசியவாதமெனும் மிருகம்" தட்டி எழுப்பப்பட்டு இருப்பதாக இதை ஒரு விமர்சகர் குறிப்பிடுகிறார்.

அதற்கும் கூடுதலாக, இங்கிலாந்து விவகாரங்களில் வாக்களிப்பதற்கு ஸ்காட்டிஷ் மற்றும் வேல்ஷ் MPகளைத்தான், தொழிற்கட்சி சார்ந்துள்ளது என்ற நிலையில், அவர்களை விலக்கி வைப்பதன் மூலமாக தொழிற் கட்சியை நிரந்தரமாக முடமாக்கலாமென கேமரூன் நம்புகிறார்—கேமரூனின் பரிந்துரைகளை தொழிற் கட்சி தலைவர் எட் மிலிபாண்ட் நிராகரித்துள்ளார்.

ஆளும் மேற்தட்டின் உட்பகை மோதலில் இருந்து எது வெளிவந்தாலும் சரி, அதற்கு தொழிலாள வர்க்கமே விலை கொடுப்பதாக இருக்கும், அவர்கள் அடிமட்டத்தில் வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக நிலைமைகளுக்கான போராட்டத்தில் ஒருவருக்கு எதிராக மற்றவர்கள் நிறுத்தப்படுவார்கள்.

இந்த வெகுஜன வாக்கெடுப்பு பிரச்சாரம் ஓர் ஆழ்ந்த எச்சரிக்கையாக சேவை செய்கிறது. தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச மறுநோக்குநிலை இல்லையென்றால், பிரிட்டிஷ் மற்றும் உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் நெருக்கடி —அனைத்திற்கும் மேலாக தேசிய பிளவுகள் திட்டமிட்டு பேணி வளர்க்கப்படுவதில்—பிற்போக்குத்தனமான வடிவங்களை எடுக்க முடியும்.

சோசலிச சமத்துவ கட்சி மட்டுமே ஓர் அரசியல் மாற்றீட்டை அபிவிருத்தி செய்த ஒரே போக்காக இருக்கிறது. நாம் ஒரு சோசலிச பிரிட்டனுக்கான போராட்டத்தில் முதலாளித்துவத்தின் அனைத்து அடுக்குகளுக்கு எதிராகவும் உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்தும் அடிப்படையில் வாக்கெடுப்பில் பிரிந்துபோக ஆதரிக்க வேண்டாமென்பதற்கு வாக்கிடுமாறு வலியுறுத்தினோம்.

SNP மற்றும் பொய்-இடதால் தூண்டிவிடப்பட்ட தேசியவாதம் ஐரோப்பா மற்றும் சர்வதேசமெங்கிலும் அதேமாதிரியான வலதுசாரி போக்குகளைப் பலப்படுத்துமென நாம் எச்சரித்தோம். அந்த கண்டத்தை சிற்றரசுகளின் ஓர் ஒட்டுவேலையாக மற்றும் இன மண்டலங்களாக பால்கன்மயப்படுத்துவதற்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தை முன்னிறுத்தியது.

நமது பிரச்சாரத்தினூடாக, "ஸ்காட்டிஷ் வெகுஜன வாக்கெடுப்பில் பிரிந்துபோக வேண்டாமென வாக்களிப்போம்—ஒரு சோசலிச பிரிட்டனுக்காக போராடுவோம்" என்ற எமது அறிக்கையின் 10,000 நகல்களை நாம் விற்பனை செய்து, பத்து ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் விவாதித்தோம். தேசியவாதத்தை எதிர்த்த மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை உயர்த்திப் பிடித்த சோசலிஸ்டுகளின் பொதுக்கூட்டத்தில் பலர் அவர்களின் நிம்மதியை வெளிப்படுத்தினார்கள்.

நமது தலையீடு போலி-இடது குழுக்களின் பொய்கள் மற்றும் திரித்தல்களை எதிர்த்து போராடுவதை மையப்படுத்தி இருந்தது. இங்கிலாந்துடனான சாத்தியமான உடைவு என்பது உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் நெருக்கடியிலும் மற்றும் காலங்கடந்த எதிர்விரோத தேசிய அரசுகளுக்குள் பூமியை பிளவுபடுத்துவதற்குள் வேரூன்றி இருப்பதை விவரித்து, நாம் ஒரு புதிய சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தை மற்றும் தலைமையை தொழிலாள வர்க்கம் ஏற்க வேண்டுமென வலியுறுத்தினோம்.

வரவிருக்கின்ற காலகட்டத்தில் இந்த அரசியல் போராட்டம், வெறுமனே பிரிட்டனில் மட்டுமல்ல, மாறாக ஐரோப்பா மற்றும் சர்வதேசமெங்கிலும் உள்ள நமது தோழர்களால் ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்தில் ஆழப்படுத்தப்படும்; ஆழப்படுத்தப்பட வேண்டும்.