சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Former French President Nicolas Sarkozy returns to politics

முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி அரசியலுக்குத் திரும்புகிறார்

By Alex Lantier and Stéphane Hugues
22 September 2014

Use this version to printSend feedback

முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி வெள்ளியன்று ஒரு பேஸ்புக் பதிவில், 2012 ஜனாதிபதி தேர்தல்களில் அவரது தோல்விக்குப் பின்னர் மீண்டும் அரசியல் வாழ்க்கைக்கு உத்தியோகபூர்வமாக திரும்புவதாக அறிவித்த பின்னர், ஞாயிறன்று மாலை அவர் France2 சேனலில் ஒரு மணிநேர பிரதான-நேர பேட்டியொன்றை அளித்தார்.

சார்க்கோசி பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் நிலவும் அரசியல் நெருக்கடியின் ஒரு கூர்மையான சித்திரத்தை வரைந்தளித்தார். 2014இல் "பிரான்சில் நிலவும் நெருக்கடி ஐரோப்பாவை பேரிடருக்குள் மூழ்கடிக்க முடியுமென" அவர் எச்சரித்தார்.

2012 தேர்தல்களில் வெற்றி பெற்ற ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம், பிரான்ஸின் பொருளாதார பொறிவை மற்றும் PSஇன் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் யுத்தங்களின் மீது மக்களின் வெடிப்பார்ந்த கோபத்தை முகங்கொடுக்கிறது. நவ-பாசிச தேசிய முன்னணி (FN) கருத்துக்கணிப்புகளில் முன்னேறி வருகிறது, அதேவேளையில் சார்க்கோசியின் வலதுசாரி மக்கள் இயக்கத்திற்கான யூனியன் (UMP) ஊழல் மற்றும் கன்னை மோதல்களில் சிக்கியுள்ளது.

"நான் ஒருபோதும் இதுபோன்ற விரக்தியை, இதுபோன்ற கோபத்தை, இதுபோன்ற முன்னோக்கின்மையை பார்த்ததே இல்லை," என சார்க்கோசி தெரிவித்தார். பிரான்சின் பாரம்பரிய ஆளும் கட்சிகள், PS மற்றும் UMP, மதிப்பிழந்திருப்பதை, மற்றும் FN'இன் முன்னேறி இருப்பதைக் சுட்டிக்காட்டும் விதத்தில், அவர் தொடர்ந்து கூறினார், “இன்று நாம் கொண்டிருக்கும் அல்லது முற்றிலுமாக ஒதுக்கப்பட்டிருக்கும், வருந்தத்தக்க காட்சிபொருளாக இருக்கும் முன்னோக்குகளை மட்டும் நான் விரும்பவில்லை," என்றார்.

அந்த நேர்காணலின் தொனி, பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தில் தீவிரமடைந்துவரும் அச்சத்தை எதிரொலிப்பதாக இருந்தது, அதாவது அரசியல் நிலைமை, சர்வதேச அளவிலும் சரி பிரான்ஸிற்குள்ளேயும் சரி, இரண்டிலும் வேகமாக அதன் கட்டுப்பாட்டை இழந்து வருகிறது. ஹோலாண்ட் முன்னதாகவே இராஜினாமா செய்வாரென அவர் நம்புகிறாரா என சார்க்கோசி கேட்கப்பட்டார்—அத்தகையவொரு சம்பவம், 1958இல் பதவி உருவாக்கப்பட்டதிலிருந்து, 1968 பொது வேலைநிறுத்தத்திற்கு ஓராண்டுக்குப் பின்னர் 1969இல் சார்ல்ஸ் டு கோல் இராஜினாமா செய்த பின்னர், ஒரு பிரெஞ்சு ஜனாதிபதி இராஜினாமா செய்யும் இரண்டாவது சம்பவமாகவே இருக்கக்கூடும்.

சார்க்கோசி பதிலளித்தார், “நான் இயல்பாகவே அவரது பதவிக்காலத்தை அவர் நிறைவு செய்ய வேண்டுமென விரும்புகிறேன். நாம் ஒரு குடியரசில் வாழ்கிறோம் என்பதால், அவர் அவ்விதத்திலேயே நிறைவு செய்வார் என்றும் நான் நம்புகிறேன்." அவர் தொடர்ந்து கூறுகையில், "வன்முறை" மற்றும் "கோபம்" குறித்து பயப்படுவதாக தெரிவித்தார்.

France2 சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளர் Laurent Delahousse பின்னர் வினவுகையில், “பிரான்ஸில் நாம் ஒரு கிளர்ச்சிக்கு-முந்தைய சூழலில் இருக்கிறோமா? பிரான்ஸ் வன்முறைக்குள் பொறிந்து போகுமா?" என்றார்.

மக்கள் "மிகைப்படுத்தி" மட்டுமே சிந்திப்பதைக் குறித்து அவர் கவலைப்படுவதாக பதிலளித்த சார்க்கோசி, இடது மற்றும் வலதிலிருந்து மக்களை ஒருங்கிணைத்து கொண்டு வர அவர் விரும்புவதாக தெரிவித்தார். அவர் கூறினார், “இடது மற்றும் வலதிற்கு இடையிலான பிளவானது, மூன்று-நூற்றாண்டு பழைய கம்பளியைப் போல இற்றுப்போய் இருக்கிறது."

ஐரோப்பாவின் பிரதான பொருளாதார சக்தி, ஜேர்மனி உடனான பிரான்சின் தொடர்புகளைக் குறித்தும் Delahousse கேள்வி எழுப்பினார், தற்போது அது அதன் வெளியுறவு கொள்கையை மீள்இராணுவமயமாக்க நகர்ந்து வருகிறது என்பதுடன் அதற்கு எதிராக பிரான்ஸ் இரண்டு உலக யுத்தங்களிலும் சண்டையிட்டுள்ளது. பேர்லின் உடன் சேர்ந்து ஹோலாண்ட் வேலை செய்து தயாரித்த பொருளாதார கொள்கைகளை ஆளும் PSஇன் உட்கூறுகளே தாக்கி வருவதுடன் சேர்ந்து, இந்த உறவுகள் பெருமளவிற்கு சுமையாக மாறி வருகின்றன. FN தலைவர் மரீன் லு பென், யூரோ செலாவணி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரான்ஸ் வெளியேற வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

ஒரு நாடு "அதன் அடையாளத்தை மாற்ற" முடியாது என்று பிரான்ஸைக் குறித்து கூறிய சார்க்கோசி, “ஜேர்மனிதான் தேர்ந்தெடுப்பதற்கான ஒரே வாய்ப்பு என்பதல்ல, இது தான் உண்மை. வாலைப் பிடித்து ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நாடாக பிரான்ஸை நான் பார்க்கவில்லை. நாம் ஒன்றாக சேர்ந்து முன்னேற வேண்டும். யூரோ மண்டலம் வளர்ச்சி இல்லாமல் இயங்க முடியாது. நாம் வளர்ச்சியை உருவாக்க வேண்டும்," என்றார்.

பிரெஞ்சு முதலாளித்துவம் முகங்கொடுத்துவரும் அரசியல் நிலைமை குறித்த அவரது பேரழிவுகரமான கணக்குக்கு இடையிலும், சார்க்கோசி அவரது மதிப்பிழந்த 2007-2012 பதவிகாலத்திய யுத்தங்கள் மற்றும் சிக்கன முறைகளிலிருந்து கணிசமான அளவுக்கு வேறுபட்ட கொள்கைகள் எதுவும் அவரிடம் இல்லையென்பதையும் தெளிவுபடுத்தி இருந்தார். 2012இல் அவரது தோல்வியிலிருந்து அவர் என்ன தீர்மானத்திற்கு வந்திருந்தார் என கேட்கப்பட்ட போது, ஆணையங்களை மேலதிகமாக பிரதிநிதித்துவம் செய்வது மற்றும் "மக்களைத் தீவிரப்படுத்தாதபடிக்கு" பணிவாக பேசுவது போன்ற பொதுவான வெற்றுவார்த்தைகளுடன் பதிலளித்திருந்தார்.

அவரது ஜனாதிபதி பதவிகாலத்தில் ஒரு முக்கிய அம்சமாக இருந்த, FN வாக்காளர் அடித்தளத்திற்கு அவர் வலதுசாரி முறையீடுகள் வழங்குவதைத் தொடருவார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். “இந்த பிரெஞ்சு மக்களுக்கு மீண்டும் நான் மெய்ப்பித்துக் காட்ட விரும்புகிறேன் ... நாம் அவர்களை ஏமாற்றியுள்ளோம், நான் மீண்டும் அவர்களிடையே நம்பிக்கையைக் கொண்டு வர விரும்புகிறேன்," என்றார். ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் உட்பட 26 ஐரோப்பிய நாடுகளுக்கிடையே கட்டுப்பாடற்ற நகர்வை அனுமதிக்கும் சென்கென் ஒப்பந்தங்களை அவர் நீக்க விரும்புவதையும் அவர் சேர்த்துக் கொண்டார். சென்கென் ஒப்பந்தம் இதர ஐரோப்பிய நாடுகளில் வந்திறங்கும் புலம்பெயர்ந்தவர்களை பிரான்ஸிற்குள் பயணிக்க அனுமதிப்பதால், FN சென்கென் ஒப்பந்தத்தைத் தாக்கியுள்ளது.

வலது மற்றும் முதலாளித்துவ "இடதை" ஐக்கியப்படுத்துவது குறித்த அவரது கருத்துக்கள் தெளிவுபடுத்துவதைப் போல, சார்க்கோசி அவரை ஆதரிக்க PS மற்றும் அதன் அரசியல் சுற்றுவட்டத்தில் இருக்கும் உட்கூறுகளை மீண்டும் நியமிக்கவும் ஆலோசித்து வருகிறார். 2007இல் அவர் பதவியேற்ற போது, சார்க்கோசிபேர்னார்ட் குஷ்நெர், எரிக் பெசோன், மார்ட்டின் ஹெர்ஸ்ச், மற்றும் ஃபடெலா அமரா உட்படபல PS பிரபலங்களை உயர்மட்ட பதவிகளில் நிறுத்தி இருந்தார்.

சார்க்கோசி பொது வாழ்க்கைக்குத் திரும்பி வந்திருப்பது பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்தின் திவால்நிலைமையை எடுத்துக்காட்டுகிறது. PS மற்றும் அதன் போலி-இடது ஆதரவாளர்கள் மதிப்பிழந்து வருவதற்கு இடையே, சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, சார்க்கோசியின் அரசியல் மறுபிரவேசத்தை 63 சதவீத மக்கள் எதிர்க்கின்ற நிலையில், அவர் இன்னமும் மிகவும் செல்வாக்கிழந்த நபராகவே இருக்கிறார். இருந்தபோதினும், பிரெஞ்சு நிதியியல் ஸ்தாபகம் மற்றும் அரசியல் மேற்தட்டின் சக்திவாய்ந்த பிரிவுகள் UMPஐ ஸ்திரப்படுத்தும் மற்றும் 2017 ஜனாதிபதி போட்டிக்கு அவரைத் தயார் செய்யும் ஒரு முயற்சியில் தெளிவாக அவரை ஆதரிக்கின்றன.

இதற்கான பிரதான பொறுப்புறுதி, சோசலிஸ்ட் கட்சி மற்றும், இடது முன்னணி மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற அதன் போலி-இடது ஆதரவாளர்களின் பிற்போக்குத்தனமான கொள்கைகளின் மீது தங்கியுள்ளது. அவை ஹோலாண்ட் தேர்ந்தெடுக்கப்படுவதை ஆதரித்தன, அவர் சார்க்கோசி மீதான சில சூடான விமர்சனங்களின் அடிப்படையில் அதிகாரத்திற்கு வந்தார், பின்னர் அவர் இன்னும் பெரிய போர்களுக்கு அழுத்தம் அளித்ததுடன் அவருக்கு முந்தையவரை விட அதிக கடுமையான சிக்கன முறைமைகளைத் திணித்தார். சார்கோசியை விட ஹோலாண்ட் அதிகமாகவே செல்வாக்கிழந்திருப்பதுடன், அவர்கள் சார்க்கோசியை ஏதோ தெய்வாதீனமாக பிரான்ஸைக் காப்பாற்ற திரும்ப வந்திருக்கும் ஒரு மனிதராக சித்தரிப்பதற்கு ஏற்ற நிலைமைகளை உருவாக்கி இருக்கிறார்கள்.

"சார்க்கோசி திரும்ப வருகிறாரா? தேவையில்லை, அவரது அரசியல் இன்னும் இங்கே இருக்கிறது" என்று தலைப்பிட்ட ஒரு சுருக்கமான மற்றும் வெறுப்பூட்டும் குறிப்புடன் NPA சார்க்கோசியின் அறிவிப்புக்கு விடையிறுப்பு காட்டியது. “சார்க்கோசி அவரை பிரபலப்படுத்திக் கொள்ளும் பிரச்சாரத்தை தொடங்கி வருகிறார். அவரது மறுபிரவேசத்தை அவர் அறிவித்து வருகிறார். ஆனால் எதற்காக? 2012இல் அவரது நாசகரமான கொள்கைகள் நிராகரிக்கப்பட்டு, அவர் வெளியேற வேண்டி இருந்தது. துரதிருஷ்டவசமாக அவர் அவரது கொள்கைகளை, அவரது வேலைத்திட்டத்தை நம்மிடையே விட்டுச் சென்றுவிட்டார், அதை ஹோலாண்டும் மற்றும் [தற்போதைய பிரதம மந்திரி இமானுவெல்] வால்ஸூம் உடனடியாக அவர்களுக்கு சொந்தமாக்கி கொண்டார்கள்," என்று அது எழுதியது.

இந்த கருத்தில் இருக்கும் வெறுப்பூட்டும்தன்மை மலைப்பூட்டுகிறது. உண்மையில் PS சார்க்கோசியின் கொள்கைகளை ஏற்று, அவற்றை மேற்கொண்டும் வலதிற்கு நகர்த்தியது, அவர்கள் NPAஇன் ஆதரவை அனுபவித்துக் கொண்டே தான் அதை செய்தார்கள். NPAஇன் 2012 ஜனாதிபதி வேட்பாளர், பிலிப் புட்டு, இரண்டாவது சுற்றில் ஹோலாண்டுக்கு வாக்களிக்குமாறு அழைப்புவிடுத்தார்: “மே 6இல், நிக்கோலா சார்க்கோசி இரண்டாவது சுற்றைப் பெறுவதிலிருந்து தடுக்க விரும்பும் எவரையும் நாங்கள் ஆதரிப்போம். நாங்கள் தெளிவாக கூறுகிறோம், அவருக்கு எதிராக வாக்களிப்பதன் மூலமாக, சார்க்கோசியையும் அவரது ஒட்டுமொத்த கும்பலையும் நாம் தூக்கியெறிய வேண்டும்,” என்றார்.

முதலாளித்துவ "இடதில்" அவரது எதிர்ப்பாளர்கள் அரசியல்ரீதியாக அழுகிப்போய், திவாலாகி இருப்பதன் ஆதாயத்தை சார்க்கோசி அனுபவிக்கின்ற போதினும், அவரது மறுபிரவேசம் இப்போதும் கணிசமான தடைகளை முகங்கொடுக்கிறது, அனைத்திற்கும் மேலாக அவரும் UMPஉம் பல நீதிமன்ற வழக்குகளை முகங்கொடுத்து வருகின்றனர். இந்த வழக்குகளில் உள்ளடங்கி இருப்பவை:

பிக்மாலியோன் மோசடி: அவரது 2012 தேர்தல் பிரச்சாரத்தில் அவர் அரசியலமைப்பு உச்சவரம்பான 22 மில்லியன் யூரோவிற்குக் குறைவாக தான் செலவிட்டார் என முறையிடுவதற்காக, மோசடியான விதத்தில் UMP சார்க்கோசியின் தேர்தல் செலவுகளுக்கான தொகையில் பாதியைச் செலுத்தியது, அதன் மீது ஆதாரங்கள் வெளிப்பட்டதும், UMPஇன் தலைவர் ஜோன்-பிரான்சுவா கொப்பே இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டார்.

பெத்தான்கூர்/அஜிபேர் மோசடி: பில்லியனர் லில்லியான் பெத்தான்கூரிடமிருந்து பிரச்சாரத்திற்காக முறையின்றி சார்க்கோசி நிதியுதவிகளைப் பெற்றாரா என்பதன் மீதான விசாரணையின் உள்ளே நடக்கும் தகவல்களை வழங்கியதற்கு பிரதிபலனாக, நீதியரசர் ஜில்பேர் அஜிபேருக்கு பதவுயர்வு அளித்து, ஓர் உயர்பதவியிலிருக்கும் நீதியரசரை ஊழலில் ஈடுபடுத்தினார் என்பதற்கான ஆதாரத்தை, சார்க்கோசியினது உரையாடல்களின் தொலைபேசி ஊடுருவல் எடுத்துக்காட்டியது.

லகார்ட்-தப்பி மோசடி: தப்பி நிறுவனம், அடிடாஸை LCL வங்கி விற்றதன் மீது 405 மில்லியன் யூரோ நஷ்டஈடு வழங்குவதற்கு இட்டுச் சென்ற வழக்கில், சார்க்கோசியின் நண்பர் பேர்னார்ட் தப்பிக்கு ஆதரவாக அவரது பொருளாதார மந்திரி கிறிஸ்டீன் லகார்டுக்கு அழுத்தம் அளித்ததாக சார்க்கோசி சந்தேகிக்கப்படுகிறார்.

கடாபி மோசடி: லிபியாவில் 2011 நேட்டோ யுத்தத்தில் கொல்லப்பட்ட கடாபிக்கு எதிராக திரும்புவதற்கு முன்னர், 2007 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக லிபிய ஜனாதிபதி மௌம்மர் கடாபியிடமிருந்து 50 மில்லியன் யூரோ வாங்கியதாக சார்க்கோசி சந்தேகிக்கப்படுகிறார்.