சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

US launches air strikes inside Syria

அமெரிக்கா சிரியாவிற்குள் விமானத் தாக்குதல்களை தொடங்குகிறது

By Peter Symonds
23 September 2014

Use this version to printSend feedback

ஈராக்கை ஒட்டியுள்ள சிரியாவின் எல்லை நெடுகிலும் ISISஇன் (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) இலக்குகள் மீதான மற்றும் ரக்கா நகரத்தின் மீதான குண்டுவீச்சுடன், அமெரிக்கா செவ்வாயன்று அதிகாலை சிரியாவிற்குள் பல பேரழிவுகரமான மற்றும் தொடர்ச்சியான விமான தாக்குதல்களை தொடங்கியது. சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிராக அமெரிக்க-ஆதரவிலான ஆட்சிமாற்ற நடவடிக்கையை அதிகரிப்பதற்கு போலிக்காரணமாக இருக்கும் ISIS மீதான இந்த தாக்குதல்கள், மத்திய கிழக்கிலும் மற்றும் அதைக் கடந்தும் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொறுப்பற்ற மற்றும் சட்டவிரோத யுத்தம் விரிவாக்கப்பட்டிருப்பதைக் குறிக்கிறது.

பெண்டகன் பத்திரிகை தொடர்பு செயலர், ரியர் அட்மிரல் ஜோன் கெர்பி அந்த புதிய வான்வழி போரை ஒரு சிறிய அறிக்கையில் அறிவித்திருந்தார். “அமெரிக்க இராணுவமும் மற்றும் கூட்டணி நாடுகளின் படைகளும், போர்விமானங்கள், குண்டுவீசிகள் மற்றும் டோமாஹாக் தரைவழி தாக்கும் ஏவுகணைகள் ஆகியவற்றைப் பிரயோகித்து சிரியாவில் உள்ள ISIL [ISIS] பயங்கரவாதிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை எடுத்து வருவதாக," குறிப்பிட்டார். பொதுமக்களுக்குத் தெரிவிப்பதை அலட்சியப்படுத்தும் விதத்தில், ஜனாதிபதி ஒபாமா எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை; எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

சிரியாவிற்குள் நடத்தப்படும் வான்வழி நடவடிக்கை கடந்த ஆறு வாரங்களில் ஈராக் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்களின் அளவையும் வெகுவாக கடந்திருப்பதாக, பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகளால் வழங்கப்பட்ட விபரங்கள் தெளிவுபடுத்துகின்றன. அமெரிக்க கடற்படை கப்பல்களிலிருந்து ஏவப்பட்ட கப்பற்படை ஏவுகணைகள், அத்துடன் போர்விமானங்கள் மற்றும் டிரோன்களிலிருந்து செலுத்தப்பட்ட குறிப்பிட்ட-இலக்கைத் தாக்கும் குண்டுகள் ஆகியவற்றைப் பிரயோகித்து, முதல் ஒருசில மணிநேரங்களிலேயே குறைந்தபட்சம் 20 இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன. ISISஇன் இராணுவ மையங்கள், ஆயுத வினியோக தளங்கள், கிடங்குகள், முகாம்கள் மற்றும் கட்டிடங்களை அத்தாக்குதல்கள் இலக்கில் வைத்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க கூட்டாளிகளான சவூதி அரேபியா, ஜோர்டான், பஹ்ரெய்ன், கட்டார், மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய குறைந்தபட்சம் நான்கு அரபு நாடுகள் அமெரிக்க போர்விமானங்களுடன் இணைந்து செயல்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உலகில் மிகக் கொடூர கொடுங்கோலாட்சிகளின் மத்தியில் இருக்கும், எதேச்சதிகார மத்திய கிழக்கின் முடியாட்சிகளுடன் அது கூட்டணி சேர்ந்துள்ளது என்ற உண்மையே, வாஷிங்டன் குறிப்பிடும் அதன் புதிய யுத்தத்திற்கு பரந்த ஆதரவு இருக்கிறது என்ற வாதங்களைப் பொய்யாக்கிவிடுகின்றன.

அந்த விமானத் தாக்குதல்கள், அமெரிக்காவிற்கு ஒருபோதும் ஒரு அச்சுறுத்தலாக இருந்திராத ஒரு நாட்டிற்கு எதிரான ஒரு சட்டவிரோத யுத்த நடவடிக்கையாகும். ஒபாமா நிர்வாகம் அந்த குண்டுவீச்சை ஒரு ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் ஆமோதிப்பு கூட இல்லாமல், மற்றும் சிரிய அரசாங்கத்தால் வெளிப்படுத்தப்பட்ட எதிர்ப்பிற்கு எதிராகவும் தொடங்கியது. சிரிய அரசாங்கம் ISISக்கு எதிராக சண்டையிடுவதில் வாஷிங்டனுக்கு ஒத்துழைக்க சம்மதித்திருந்தது. மீண்டுமொருமுறை, அமெரிக்கா ஒரு தூண்டுதலற்ற ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது—இந்த நடவடிக்கையைத் தான் பிரதான குற்றச்சாட்டாக கொண்டு, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய நூரெம்பேர்க் விசாரணைகளில், ஜேர்மன் நாஜி தலைவர்கள் வழக்கிற்கு கொண்டு வரப்பட்டு தண்டிக்கப்பட்டார்கள்.

அமெரிக்க நியாயப்படுத்தல்களை முகமதிப்பாக அப்படியே ஒருவர் எடுத்துக் கொண்டாலும் கூட, பிற்போக்குத்தனமான ISIS இஸ்லாமியவாதிகளோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தினது முந்தைய யுத்த குற்றங்களின் ஒரு நேரடி விளைபொருளாக இருக்கிறார்கள். 1980களில் ஆப்கானிஸ்தானில் CIAஇன் இரகசிய போர், 2003இல் ஈராக்கிய படையெடுப்பு, மற்றும் 2011இல் லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி-மாற்றத்திற்கான நடவடிக்கைகள் ஆகியவை அதில் உள்ளடங்கும். உண்மையில், இன்றைய குண்டுவீச்சில் சேர்ந்திருக்கும் இதே கூட்டாளிகள் தான்—சவூதி அரேபியா மற்றும் வளைகுடா அரசுகள்—கடந்த மூன்று ஆண்டுகளாக அசாத்தைக் கவிழ்க்க சிரியாவிற்குள் ISIS மற்றும் இதர இஸ்லாமிய போராளிகளுக்கு நிதியுதவியும், போர் பயிற்சிகளும் மற்றும் ஆயுத உதவிகளும் அளித்து வந்தவர்கள்.

வாஷிங்டனின் விளக்கங்கள் அல்லது சாக்குபோக்குகளின் மீது எவ்வித நம்பகத்தன்மையும் கிடையாது. சவூதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கின் கூட்டாளிகள் சிரியாவிற்கு எதிரான போரில் மும்முரமாக இணைந்திருக்கின்றன ஏனென்றால் அமெரிக்காவினது நோக்கம் ISISஐ அழிப்பதல்ல, மாறாக மத்திய கிழக்கில் ஈரானின் பிரதான கூட்டாளியான அசாத் ஆட்சியைக் கவிழ்ப்பதாகும். ஈரானை அதன் பரம-விரோதியாக கருதும் சவூதி அரேபியா, ஓராண்டுக்கு முன்னர் சிரியாவிற்கு எதிராக ஒபாமா நிர்வாகம் அதன் வான்வழி யுத்த திட்டத்தைக் கடைசி தருணத்தில் இரத்து செய்தபோது, ஒபாமா நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்திருந்தது.

சிரியா மீதான வான்வழி தாக்குதல்கள் குறித்து நிர்வாகத்தின் ஓர் அதிகாரி நியூ யோர்க் டைம்ஸில் கருத்து தெரிவிக்கையில், ISIS-கைவசமிருக்கும் பகுதிகளின் மீதான ஆரம்ப தாக்குதல்களை, சிரிய ஆட்சி சாதகமாக்கிக் கொள்வதற்கு அனுமதிக்காதென தெளிவுபடுத்தினார். “பிராந்தியங்களை அசாத் மீண்டும் உரிமைகோரிப் பெறுவதை எளிமையாக்க எங்களுக்கு திட்டமில்லை," என்று தெரிவித்த அவர், அதற்காக பயன்படுத்தப்படவிருக்கும் முறைகளை வெளிப்படுத்தவில்லை. சிரியாவில் குண்டுவீச்சைத் தொடங்கியுள்ள நிலையில், சிரிய அரசாங்கம் மற்றும் இராணுவத்திற்கு எதிரான வான்வழி போருக்குத் திரும்புவதற்கு, போலிக்காரணமாக ஒரு சம்பவத்தை ஜோடிக்கவும் அமெரிக்கா முற்றிலும் தகைமை பெற்றிருக்கிறது.

அசாத் ஆட்சி பொதுமக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி உள்ளது என்ற குற்றச்சாட்டுக்களை கடந்த வாரங்களில் ஒபாமா நிர்வாகம் புதுப்பித்திருப்பதும் ஏதோ தற்செயலானதல்ல. சிரியா அதன் இரசாயன ஆயுதங்கள் மற்றும் ஆலைகளை மூடிவிட்டது என்ற உண்மைக்கு இடையிலும், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி, எவ்வித ஆதாரமும் இல்லாமல், அது எதிர்ப்புகள் வசமிருக்கும் கிராமங்களுக்கு எதிராக குளோரின் வாயுவைப் பயன்படுத்தி இருப்பதாக இப்போது வாதிடுகிறார். ஓராண்டுக்கு முன்னர், டமாஸ்கஸின் புறநகர் பகுதியான கூத்தாவில் நரம்புகளைத் தாக்கும் விஷவாயு தாக்குதலை அசாத் அரசாங்கம் நடத்தியது என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் (பின்னர் இந்த குற்றச்சாட்டு மதிப்பிழந்து போனது), அமெரிக்கா சிரியா மீது குண்டுவீசும் நிலைப்பாட்டிற்கு வந்திருந்தது.

ஈராக் மற்றும் சிரியாவில் துன்பத்திலிருக்கும் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்காக ஒரு மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக கூறும் ஒபாமா நிர்வாகத்தின் வாதங்கள், கொடூரமான நகைச்சுவையாகும். ஈராக்கில் 2003 அமெரிக்க படையெடுப்பு ஆழமாக அந்நாட்டை நிலைகுலைத்தது, அதில் நூறாயிரக் கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள், மில்லியன் கணக்கானவர்கள் நாட்டைவிட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டார்கள், அத்துடன் அப்பிராந்தியம் முழுவதிலும் கடுமையான குறுங்குழுவாத பதட்டங்கள் தூண்டிவிடப்பட்டன. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் தூண்டிவிடப்பட்டு எரியூட்டப்பட்ட மூன்றாண்டுகால சிரிய உள்நாட்டு யுத்தம், மற்றுமொரு மனிதாபிமான பேரழிவை உருவாக்கியது.

சமீபத்திய இராணுவ தலையீட்டின் விளைவுகளும் குறைந்த பேரழிவுகளாக இருக்கப் போவதில்லை. ஆயிரக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவார்கள், மில்லியன் கணக்கானவர்கள் வெளியே நிர்பந்திக்கப்படுவார்கள், அத்துடன் எஞ்சியிருக்கும் சிரியாவின் சமூக மற்றும் ஸ்தூல உள்கட்டமைப்புகளும் இடிபாடுகளாக ஆக்கப்படும்.

அதுவே முடிவாக இருக்கப் போவதும் இல்லை. சிரியாவிற்கு எதிரான யுத்தம் என்பது அசாத்தின் ஆதரவாளர்கள்—ஈரான் மற்றும் ரஷ்யா—மற்றும் அத்துடன் சீனாவுடனும் அமெரிக்க இராணுவ மோதல்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. அதன் வரலாற்று பொருளாதார வீழ்ச்சியால் உந்தப்பட்டு, அமெரிக்க ஏகாதிபத்தியம் எரிசக்தி வளம்மிகுந்த மத்திய கிழக்கிலும், மற்றும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும், அதன் மேலாதிக்கத்தை அதிகரிப்பதற்காக, ஓர் உலகளாவிய மோதலுக்கு களம் அமைத்து கொண்டு, ஒரு தொடர்ச்சியான யுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது.

காங்கிரஸ் ஒப்புதலின் ஒரு சாயல் கூட இல்லாமல் அல்லது அமெரிக்க மக்களுக்கு எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் ஒபாமா நிர்வாகம், சிரியா மீதான தாக்குதல்களைத் தொடங்கி உள்ளது. அது நிதியியல் பிரபுத்துவத்தின் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க மேலாதிக்கம் அத்தியாவசியமாக இருக்கிறதென்பதற்காக அதற்காகவே ஒரு யுத்தத்தை நடத்தி வருகிறது. அன்னிய நாடுகளின் மீது இராணுவவாதத்தைத் தொடுப்பதென்பது, உள்நாட்டின் சமூக பதட்டங்களை ஒடுக்க ஒரு பொலிஸ் அரசு எந்திரத்தைக் கட்டமைப்பதுடனும் மற்றும் ஆழமடைந்துவரும் சமூக சமத்துவமின்மையுடனும் கைகோர்த்து செல்கிறது. இராணுவம் மற்றும் பொலிஸிற்கு முடிவில்லாமல் வளங்கள் வாரியிறைக்கப்படுகின்ற அதேவேளையில் அத்தியாவசிய பொதுச் சேவைகள் வெட்டப்பட்டு வருகின்றன.

தீவிரமடைந்துவரும் ஏகாதிபத்திய வன்முறையின் வேகம், புரட்சிகர மேலெழுச்சிகளுக்கு அடித்தளத்தைத் தயாரித்து வருகின்ற அதே பூகோளமயப்பட்ட முதலாளித்துவ நெருக்கடியால் உந்தப்பட்டிருக்கிறது. இந்த காட்டுமிராண்டித்தனமான மற்றும் காலங்கடந்த இலாப அமைப்புமுறைக்கு முடிவு கட்ட, சோசலிச சர்வதேசியவாத முன்னோக்கின் அடிப்படையில், சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் ஓர் ஐக்கியப்பட்ட யுத்த-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே அவசரமான அவசியமாகும்.