சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: The SEP held meeting at Jaffna against drive to world war

இலங்கை: சோசக யாழ்ப்பாணத்தில் உலக யுத்த முனைப்புக்கு எதிராக கூட்டம் நடத்தியது

By our correspondents
27 September 2014

Use this version to printSend feedback

சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐவைஎஸ்எஸ்ஈ) அமைப்பும், ஏகாதிபத்திய சக்திகள் இன்னொரு பேரழிவுகரமான உலக யுத்தத்தை நோக்கித் தள்ளிச் செல்வதற்கு எதிராக, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடஇலங்கையின் யாழ்ப்பாணத்தில், வெற்றிகரமான கூட்டமொன்றை செப்டம்பர் 7 நடத்தின. நகரின் மத்தியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்தில்அமெரிக்காவின் ஆசியாவை நோக்கிய திருப்பமும் உலகப் போர் அச்சுறுத்தல் என்னும் கருப்பொருளில் இந்தக் கூட்டம் நடந்தது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரிவுகளாக உலகெங்கும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகள், ஏகாதிபத்திய யுத்தத் தயாரிப்புகளுக்கு எதிராக நடாத்திவரும் தொடர் கூட்டங்களின் பாகமாகவே இக் கூட்டம் நடத்தப்பட்டது. முதலாவது கூட்டம் ஆகஸ்ட் 18 கொழும்பில் நடத்தப்பட்டது. கண்டி, காலி, கம்பகா மற்றும் ஹட்டன் போன்ற இடங்களிலும் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

கடந்த மாதம், முதலாம் உலக யுத்தம் வெடித்து 100வது வருடத்தையும் இரண்டாம் உலக யுத்தம் தொடங்கி 75வது வருடத்தையும் குறிக்கின்ற அதே வேளை, இந்த யுத்தத்துக்கு வழிவகுத்த உலகப் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகளுக்கு சமாந்தரமான நிலைமைகளை சர்வதேச தொழிலாள வர்க்கம் எதிர்கொள்கின்ற நிலையில், இக் கூட்டம் ஒரு வராலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

சோசக மற்றும் ஐவைஎஸ்எஸ்ஈ அங்கத்வர்களதும் ஆதரவாளர்களதும் பிரச்சாரத்தின் பயனாக மட்டுமே யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் இருந்து தொழிலாளர்கள், குடும்பப் பெண்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளடங்கலாக சுமார் 50 பேர் கூட்டத்துக்கு வருகை தந்திருந்தனர். சோசக கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தபோதிலும் யாழ்ப்பாணத்தில் உள்ள அதிகமான ஊடகங்கள் கூட்டம் பற்றி மௌனம் காத்தன.

இரண்டு உலக யுத்தங்களில் தொழிலாள வர்க்கத்தினதும் ஒட்டுமொத்த மனித இனத்தினதும் அனுபவங்களையும் மற்றும் தற்போதைய பூகோள முதலாளித்துவத்தின் நெருக்கடி, பிரதானமாக இந்தமுறை அணுவாயுதங்களுடனான மற்றொரு மனிதப் பேரழிவுக்கு வழிவகுப்பது பற்றியும், பிரச்சாரகர்க்கள் யாழ்ப்பாணத்தின் பல புறநகர் பகுதிகளிலும் பல்கலைக்கழக வளாகத்திலும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினர். சோசக அங்கத்தவர்கள் யுத்தம் பற்றி தங்களுக்கு விழிப்பூட்டியதையிட்டும் அதைத் தடுப்பதற்கான மாற்றீடாக சோசலிச வேலைத் திட்டத்துக்காகப் போராடுவது பற்றியும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களும் ஆதரவையும் பாராட்டையும் தெரிவித்தனர்.

பிரச்சாரகர்கள்சோசலிசமும் ஏகாதிபத்திய யுத்தத்துக்கு எதிரான போராட்டம் என்ற அனைத்துலகக் குழுவின் அறிக்கையின் ஆயிரக் கணக்கான பிரதிகளை விநியோகித்தனர். அவர்கள் யுத்தத்துக்கான உந்துதல் பற்றிய உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகளின் நூற்றுக் கணக்கான பிரதிகளை விற்பனை செய்ததோடு பிரதேசங்களில் சுவரொட்டிகளையும் ஒட்டினர்.

கூட்டத்துக்கு தலமை தாங்கிய சோசக மத்திய குழு அங்கத்தவர் ப. சம்பந்தன் முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளினால் மனிதகுலம் இரண்டு உலக யுத்தங்களைக் கண்ட போதிலும், அந்த முரண்பாடுகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இன்னும் உக்கிரமடைந்து வருகின்றன, எனத் தெரிவித்தார். “அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளிகளும் வளங்களுக்காக உலகை மறு பங்கீடு செய்யும் நோக்குடன் அதை மீண்டும் யுத்துக்குள் தள்ளிச் செல்கின்றன. அவர்கள் இராணுவ ரீதியிலும் ராஜதந்திர ரீதியிலும் சீனாவைச் சுற்றி வளைத்துள்ள அதேவேளை, உக்ரேனில் பாசிச இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு வழிவகுத்த பின்னர், அணு ஆயுதம் கொண்ட ரஷ்யாவுக்கு எதிராக ஆத்திரமூட்டல்களில் ஈடுபட்டுவருகின்றனர், என அவர் கூறினார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கமானது சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுக்கு பின்னால் அணிசேர வேண்டிய அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய ஒபமா நிர்வாகம், இப்போது பெய்ஜிங்கிடம் இருந்து அவரை தூர விலகச் செய்வதற்கு நெருக்குவதற்காக இலங்கை இராணுவத்தின் யுத்தக் குற்றங்களை சுரண்டிக் கொள்கின்றது. எனினும், நிதி உதவிக்காக சீனாவில் தங்கியிருக்கும் அதேவேளை, அமெரிக்காவின் பாதையில் அடியெடுத்து வைக்க சமிக்ஞை செய்வதன் மூலம் இராஜபக்ஷ ஒரு அவநம்பிக்கையான சமநிலைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என சம்பந்தன் விளக்கினார்.

சோசக அரசியல் குழு உறுப்பினர் மற்றும் ஐவைஎஸ்எஸ்இ அழைப்பாளர் கபில பெர்ணான்டோ, முதலாளித்துவ அமைப்பின் -உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்துக்கும் தேசிய அரசு முறைக்கும் இடையிலான- அடிப்படை முரண்பாட்டை குறிப்பிட்டு தனது உரையை தொடங்கினார். அவர் உலகம் பூராவும் உள்ள போலி இடதுகளின் பாத்திரத்தின் படிப்பினைகளையும் வெளிக்கொணர்ந்தார். "உலகில் உள்ள தனது சம தரப்பினரைப் போல், போலி இடது நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரம்பாகு கருணாரட்னவும், அநேக நாடுகளில் அணு ஆயுதங்கள் இருப்பதால் அணு ஆயுத போர் ஒன்று சாத்தியம் இல்லை என்ற மாயையை பரப்பி வருகின்றார். யுத்தம் முதலாளித்துவத்தின் ஒரு விருப்பத்தேர்வு அல்ல, மாறாக அது இலாப அமைப்பின் உள் முரண்பாடுகள் மற்றும் அதன் புறநிலை மாற்றங்களில் இருந்து எழுவதாகும். ட்ரொட்ஸ்கி கூறியது போல், 1914ல் வெடித்த போரானது எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கும் இயலுமை தேசிய அரசுகளுக்கு இல்லை என்பதை அம்பலப்படுத்தியது" என கபில தெளிவுபடுத்தினார்.

தனது பிரதான உரையை தொடங்கிய சோசக அரசியல் குழு உறுப்பினர் எம். அரவிந்தன், அனைத்து முதலாளித்துவ ஊடகங்களும் மௌனம் காக்கின்ற அதே வேளை, அனைத்துலகக் குழு மட்டுமே மூன்றாம் உலக போர் தயாரிப்புகளுக்கு எதிராக ஒரு சர்வதேச வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்கின்றது என குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் வெளிவரும் தினக்குரல் பத்திரிகையை தவிர ஏனைய ஊடகங்கள் சோசக கூட்டம் பற்றி செய்திவெளியிடவில்லை என அவர் சுட்டிக் காட்டினார்.

"தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாத்தல் என்ற போர்வையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் தயாரிப்புகளுக்குப் பின்னால் அணிசேர்ந்துள்ளன," என அரவிந்தன் கூறினார். "தமிழ் முதலாளித்துவத்தின் சிறப்புரிமைகளை பாதுகாப்பதன் பேரில், கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டுக்கு வர முயற்சிக்கும் தமிழ் கூட்டமைப்பு, ஏகாதிபத்திய சக்திகளுக்குப் பின்னால் நிற்பதன் மூலம் தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற மாயையை பரப்பி வருகின்றன."

அவர் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின், "சோசலிசமும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும்" என்ற தீர்மானத்தில் இருந்து மேற்கோள் காட்டினார்: 7. இன்னுமொரு ஏகாதிபத்திய இரத்த ஆறு ஓடுவதற்கான சாத்தியம் இருப்பது மட்டுமன்றி, ஒரு புரட்சிகர மார்க்சிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேசத் தொழிலாள வர்க்கம் தலையிடாவிட்டால், அது தவிர்க்க முடியாததாகவும் கூட இருக்கும். 20 ஆம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களும் உலகப் பொருளாதாரத்திற்கும் காலாவதியாகிப் போன தேசிய-அரசு அமைப்பு முறைக்கும் இடையிலான முரண்பாடுகளில் இருந்தே தோன்றியிருந்தன. ஒவ்வொரு ஏகாதிபத்திய சக்தியும் இந்த முரண்பாட்டை உலக மேலாதிக்கத்திற்காக முயற்சிப்பதன் மூலமாகத் தீர்க்க முனைந்தன. ஆனால் கடந்த மூன்று தசாப்த காலங்களின் உற்பத்தியின் பூகோளமயமாக்கமானது, உலகப் பொருளாதாரம் ஒருங்கிணைவு காண்பதில் மேலுமொரு பண்புரீதியான பாய்ச்சலை விளைவித்ததுடன், முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளை தீவிரத்தின் புதியதொரு உச்சத்திற்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

"இரண்டாம் உலகப் போரின் முடிவிலேயே அணு குண்டு பயன்படுத்தப்பட்டது, மூன்றாம் உலக போரின் ஆரம்பத்திலேயே அணு குண்டு பயன்படுத்தப்படும் சாத்தியம் உள்ளது" என்று அவர் எச்சரித்தார். "ஏகாதிபத்திய நாடுகளை விட அங்குள்ள தொழிலாள வர்க்கம் பலம்வாய்ந்தது. அவர்கள் இலாப நோக்கு அமைப்பு முறையை ஒழிக்க சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்படுத்தப்பட வேண்டும்," என அவர் தெரிவித்தார்.

சோசக மற்றும் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதர கட்சிகளும் மட்டுமே இந்த போரை நிறுத்துவதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தை தயார் செய்கின்றன என்று குறிப்பிட்டார். "முதலாம் உலகப் போரின் போது, லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் தலைமையிலான ரஷ்யாவில் போல்ஷ்விக் கட்சி மட்டுமே, போருக்கு மூல காரணமான முதலாளித்துவ அமைப்பு முறையை அக்டோபர் புரட்சியின் மூலம் தூக்கியெறியப் போராடியது, என அவர் சுட்டிக் காட்டினார்.

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் இருந்து சுட்டிக் காட்டி அரவிந்தன் விளக்கியதாவது: "இரண்டாம் உலகப் போரின் போது, லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையிலான நான்காம் அகிலமானது போரை எதிர்த்து, முதலாளித்துவ அமைப்பை தூக்கிவீசப் போராடியது. இந்தியா மற்றும் இலங்கையில், நான்காம் அகிலத்தின் ஒரு பகுதியாக 1942ல் ஸ்தாபிக்கப்பட்ட இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (பிஎல்பீஐ), பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கும் முதலாளித்துவத்துக்கும் எதிராக துணைக்கண்டம் முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டப் போராடியது."

"1950ல் பிஎல்பீஐ தேசியவாத லங்கா சமசமாஜ கட்சியில் கரைத்து விடப்பட்டதோடு, 1964ல் லசசக முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் சேர்ந்துகொண்டதன் மூலம் இலங்கை, இந்தியா மற்றும் உலகம் பூராவுமுள்ள தொழிலாள வர்க்கத்தை காட்டிக் கொடுத்தது. இந்தக் காட்டிக்கொடுப்புக்கு எதிராகவே சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (புகக), நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாக 1968ல் ஸ்தாபிக்கப்பட்டது."

பார்வையாளர்கள் முதலாளித்துவத்தின் நெருக்கடி பற்றி கலந்துரையாட ஆர்வமாக இருந்தனர். சிலர் மத்திய கிழக்கில் அனைத்துலகக் குழுவின் செயற்பாடுகளை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர். இறுதியில் சோசக பிரச்சாரத்திற்காக கூட்டத்தில் 3800 ரூபா நிதியும் சேர்ந்தது.