சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

UN Security Council resolution on “foreign terrorist fighters” targets democratic rights

"வெளிநாட்டு பயங்கரவாத போராளிகள்" மீதான ஐ.நா பாதுகாப்பு அவை தீர்மானம் ஜனநாயக உரிமைகளை இலக்கில் வைக்கிறது

By Joseph Kishore
25 September 2014

Use this version to printSend feedback

சர்வதேச அளவில் "வெளிநாட்டு பயங்கரவாத போராளிகளின்" நகர்வை இலக்கில் வைத்து, புதனன்று ஐ.நா பாதுகாப்பு அவை சட்டவிபரங்களுடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அது ஈராக் மற்றும் சிரியா இஸ்லாமிக் அரசுக்கு (ISIS) ஒரு விடையிறுப்பாக கொண்டு வரப்பட்டிருந்த போதினும், அத்தீர்மானம் ஒரு புதுப்பிக்கப்பட்ட "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்" பாகமாக, ஜனநாயகவிரோத நடவடிக்கைகளின் ஒரு தொகுப்பை சட்டபூர்வமாக்க நோக்கம் கொண்டிருக்கிறது.

குறிப்பாக, அத்தீர்மானம் செவ்வாயன்று அதிகாலை தொடங்கிய சிரியா மீதான குண்டுவீச்சை அங்கீகரிப்பது குறித்த கருத்தைக் கொண்டிருக்கவில்லை. அமெரிக்கா மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகள், வளைகுடா முடியாட்சிகள் மத்தியிலிருக்கும் அவற்றின் கூட்டாளிகளுடன் சேர்ந்து, ஐநா ஒப்புதலைக் கூட கோராமல்இறுதியாக சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்தை நோக்கி திருப்பிவிடப்பட்ட—புதிய யுத்தத்தைத் தொடங்கி உள்ளன.

புதனன்று காலை, ஜனாதிபதி பராக் ஒபாமா ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவையில் ஒரு யுத்தவெறியூட்டும் உரையில் இந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தினார். மத்திய கிழக்கில் இராணுவ நடவடிக்கையைத் தீவிரப்படுத்துவதற்கு மட்டுமின்றி, ரஷ்யாவிற்கு எதிராக புதிய அச்சுறுத்தல்களை வெளியிட்டும் அவர் அறைகூவல்விடுத்தார்.

பாதுகாப்பு அவை தீர்மானம் 2178, ஒருமனதாக 15-0 என்ற வாக்குகளோடு நிறைவேற்றப்பட்டது. "பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, திட்டமிடுவதற்காக, அல்லது தயார்படுத்திக் கொள்வதற்காக, அல்லது பங்களிப்பதற்காக அல்லது பயங்கரவாத பயிற்சிகள் வழங்குவதற்காக அல்லது பயிற்சிகள் பெறுவதற்காக அவர்கள் குடியிருக்கும் நாட்டை அல்லது தேசியத்தை விட்டு மற்றொரு நாட்டிற்கு செல்லும் தனிநபர்களை, மற்றும் அத்தகையவர்களின் பயணங்களுக்கு மற்றும் அவர்களின் நடவடிக்கைக்கு நிதியுதவி வழங்குபவர்களை நியமிப்பதை, ஒழுங்குபடுத்துவதை, போக்குவரத்து ஏற்பாடுகள் செய்தளிப்பதை மற்றும் ஆயத்தப்படுத்துவதை ஐ.நா சபையில் உள்ள அனைத்து நாடுகளும் தடுக்க வேண்டும் மற்றும் ஒடுக்க வேண்டுமென" அத்தீர்மானம் ஆணையிடுகிறது.

அத்தீர்மானம் ஐ.நா சாசனம் அத்தியாயம் 7இன் கீழ் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலமாக அனைத்து உறுப்பு நாடுகளும் அதற்கு சட்டபூர்வமாக கட்டுப்படுகின்றன. இராணுவம் அல்லது இராணுவமல்லாத நடவடிக்கையை அங்கீகரிப்பது உட்பட எந்தவொரு "சமாதான மீறல் அல்லது ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கும்" பாதுகாப்பு அவையின் விடையிறுப்பை 7ஆம் சாசனம் வகைப்படுத்துகிறது. இந்த தீர்மானம் வெளிப்படையாக இராணுவ நடவடிக்கையைக் குறிப்பிடவில்லை என்றாலும், இந்த நோக்கம் எதிர்காலத்தில் அதில் கொண்டு வரப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதன் முடிவில், “பயங்கரவாதம்" தொடர்பான வரைவிலக்கணம் தனிப்பட்ட நாடுகள் தீர்மானத்திற்கு விடப்பட்டிருந்தது. பாதுகாப்பு அவையில் அவரது சொந்த கருத்துக்களில், லித்துவேனிய ஜனாதிபதி டாலியா க்ரேபௌஸ்கைய்ட், ஐரோப்பாவில் நிலவும் கிளர்ச்சியைக் குறிப்பிட்டுக் காட்டி, ISIS மட்டுமே இலக்கல்ல என்று வலியிறுத்தினார். இது தெளிவாக உக்ரேனைக் குறிப்பிடுவதாகும், அங்கே இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க மற்றும் ஜேர்மனியால் நிறுவப்பட்ட வலதுசாரி அரசாங்கம், கிழக்கில் உள்ள ரஷ்யாவிற்கு ஆதரவான பிரிவினைவாதிகளை "பயங்கரவாதிகள்" என்று குறிப்பிட்டு வருகிறது. ஆகஸ்டில், க்ரேபௌஸ்கைய்ட் அறிவிக்கையில், உக்ரேன் மோதலில் ரஷ்யா "ஐரோப்பாவிற்கு எதிராக ஒரு யுத்த நிலையில்" இருப்பதாக அறிவித்தார்.

அதேநேரத்தில், “தீவிரவாதத்தை" எதிர்க்கும் போர்வையின்கீழ், எல்லா பிரதான அதிகாரங்களும் அவற்றின் எல்லைகளுக்குள் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. பாதுகாப்பு அவை கூட்டத்திற்கு தனிப்பட்டரீதியில் தலைமை வகித்திருந்த ஒபாமா, அந்த தீர்மானத்தை "வெளிப்படையான பொறுப்புறுதிகள் பின்தொடர வேண்டுமென" கூறியதுடன், அனைத்து நாடுகளும் "அதனதன் சொந்த நாடுகளில் தீவிரவாத சித்தாத்தங்களை எதிர்க்க...உறுதியான நடவடிக்கைகளை" எடுக்குமாறு வலிறுயுறுத்தினார்.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஊடகங்கள், "தாய்மண்ணுக்கு" எதிரான பயங்கரவாத அச்சுறுத்தல்கள் என்று கூறப்படுவதன் மீது ஓர் இடைவிடாத பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில், செய்தி நிகழ்ச்சிகள் கொராசான் குறித்த பீதியூட்டலால் நிறைந்திருக்கிறது. இந்த குழு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஒரு பயங்கரவாத தாக்குதலுக்கான திட்டத்தில் "முன்னேறிய நிலையில்" இருப்பதாக அமெரிக்க இராணுவ அதிகாரிகள் வாதிடுகிறார்கள். இத்தகைய ஆதாரமற்ற அச்சுறுத்தல்களுக்கு விடையிறுப்பாக, புதனன்று, நியூ யோர்க் மற்றும் ஏனைய நகரங்களிலும் பொலிஸ் பிரசன்னம் முடுக்கிவிடப்பட்டது.

பயங்கரவாத அல்லது "தீவிரவாத" அமைப்புகளில் பங்கெடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில் தனிநபர்களின் கடவுச்சீட்டுக்களைப் பறித்து வைக்கும் மற்றும் குடியுரிமையை நீக்கும் நடவடிக்கைகளை, ஏற்கனவே, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பிரிட்டன் உட்பட பல நாடுகள், பரிந்துரைத்துள்ளன அல்லது தொடங்கி நடைமுறைப்பபடுத்தி வருகின்றன. அமெரிக்காவிற்குள்ளேயும் அதேபோன்ற பரிந்துரைகள் மீது விவாதங்கள் நடந்து வருகின்றன.

கடந்த மாதம், அமெரிக்க இதழாளர் ஜேம்ஸ் ஃபோலே ISISஆல் கழுத்தறுத்து கொல்லப்பட்ட பின்னர், பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூன் தொடர்ச்சியான பல நிபந்தனைகளை முன்வைத்தார். கடவுச்சீட்டு பறிப்பு மற்றும் குடியுரிமை நீக்கம் ஆகியவையும் அதில் உள்ளடங்கும். அரசாங்க நடவடிக்கைகள் "அனைத்துவித தீவிரவாதத்தையும்" இலக்கில் வைக்குமென அவர் தெரிவித்தார். “ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, தனிநபர் சுதந்திரம் மற்றும் பரஸ்பர மரியாதை, அத்துடன் வெவ்வேறு நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் மீதான சகிப்புத்தன்மை உட்பட அடிப்படை பிரிட்டிஷ் மதிப்புகளுக்கு வாய்வழி அல்லது நடவடிக்கைசார் எதிர்ப்பை" ஒரு பிரிட்டிஷ் அரசாங்க அமைப்பு தீவிரவாதமாக வரையறுத்துள்ளது—இந்த வரையறையை ஏறத்தாழ எந்தவொரு எதிர்ப்பு குழுவை உள்ளடக்குவதற்கும் பயன்படுத்த முடியும்.

அரசு உளவுவேலை அதிகாரங்களைப் பலப்படுத்த மற்றும், கடந்த ஆண்டு அம்பலப்படுத்தப்பட்ட சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான தேசிய பாதுகாப்பு முகமை (NSA) வேலைதிட்டங்கள் மீதிருக்கும் பொதுமக்களின் கோபத்தை வேறுபக்கம் திருப்பிவிட, ISISஐ பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியின் பாகமாகவும் இந்த ஐ.நா தீர்மானம் அமைந்திருக்கிறது. பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்த அவரது கருத்துக்களில் ஒபாமா, அந்த தீர்மானம் "வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளின் பயணங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்வது உட்பட நாடுகளுக்கு இடையே கூட்டுறவைப் பலப்படுத்துமென" தெரிவித்தார்.

புதனன்று Foreign Policyஇல் வெளியான ஒரு கட்டுரை, அந்த தீர்மானத்தின் பின்னாலிருக்கும் உள்நோக்கத்தின் ஒரு பகுதியை வெளிப்படுத்தி இருந்தது. “இஸ்லாமிக் அரசு மின்னணு உளவுவேலையை மீண்டும் மதிப்புடையதாக ஆக்குகிறது" என்ற தலைப்பின்கீழ், கட்டுரையாளர் கோலும் லின்ச் இவ்வாறு குறிப்பிடுகிறார்: அந்த தீர்மானம் "சந்தேகத்திற்குரிய உள்ளூர் ஜிஹாதிஸ்டுகளின் பயணம் மற்றும் இதர நடவடிக்கைகளைக் கண்காணிக்க மற்றும் ஒடுக்க, அரசாங்கங்கள் அமலாக்க ஆணையங்களுக்கு பரந்த அதிகாரத்தை வழங்க வேண்டியதிருக்கும்."

NSA உளவுவேலை மீதான காங்கிரஸ் சட்டமசோதா முடக்கப்பட்டுள்ளதாக அந்த கட்டுரை குறிப்பிடுகிறது. அந்த சட்டமசோதா சிறிய தடைகளை உள்ளடக்கி இருந்தாலும் உளவுவேலையைத் தொடர்வதை அனுமதிக்கிறது. அதற்கும்மேலாக, லின்ச் குறிப்பிடுகிறார், “பிரான்ஸ் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் விவாதம், அந்த கண்டத்தின் மீதான உளவுபார்ப்பு குறித்த விவாதங்கள் இனியும் NSAஇன் பாரிய மின்னணு உளவுவேலை மீதே நிலைத்திருக்க வேண்டியதில்லை என்ற கோணத்தைப் பிரதிபலிக்கிறது, NSAஇன் உளவுவேலைகளைக் குறித்து எட்வார்ட் ஸ்னோவ்டென் அந்த முகமையின் உள்ஆவணங்களை கசியவிட்டு அம்பலப்படுத்தினார்."

அந்த Foreign Policy கட்டுரை மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆண்ட்ரியா ப்ராசோவை மேற்கோளிடுகிறது. விசாரணைக்கு உட்படாத மீறல்களைச் சாத்தியப்படுத்துவதுடன், .நா தீர்மானம் "மூர்க்கமாக" இருக்கிறது என்றவர் கூறுகிறார். “[சந்தேகத்திற்குரியவர்களின்] பயணிக்கும் உரிமையை தடுக்கும் நிகழ்முறை எது என்பதை அது எங்கேயும் எடுத்துக்காட்டவில்லை," என்று அப்பெண்மணி தெரிவிக்கிறார். அனைத்திற்கும் மேலாக, சில வகைப்பாடுகள் "மக்களின் நடவடிக்கைகளுக்காக அல்ல, மாறாக அவர்களின் சிந்தனை மற்றும் அவர்களின் நம்பிக்கைக்காகவே வழக்கிற்கு இழுக்கலாம் என்ற கருத்தை ஊக்குவிக்கிறது. அது கைது செய்வதற்கான ஒரு முன்நிபந்தனையாக எந்தவொரு உண்மையான குற்றகர நடத்தையையும் வரையறுக்கவில்லை."

செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குப் பின்னர் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" தொடங்கப்பட்டதைப் போலவே, இந்த அனைத்து நடவடிக்கைகளின் நிஜமான இலக்குகள் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்கள் அல்ல (ISIS விடயத்தில், அதுவே சிரியாவில் CIAஆல் தூண்டிவிடப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் ஒரு நேரடி விளைபொருளாக இருக்கிறது), மாறாக ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்களின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கொள்கைகளுக்கு எழும் எந்தவொரு எதிர்ப்பும் ஆகும்.

புதன்கிழமையின் மற்றைய அபிவிருத்திகளில், பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூனின் அறிவிப்பும் இருந்தது, ஈராக்கில் அமெரிக்க தலைமையிலான குண்டுவீச்சு நடவடிக்கையில் இங்கிலாந்து ஈடுபடுவதன் மீது வெள்ளியன்று வாக்களிக்க ஒரு சிறப்பு அமர்வாக நாடாளுமன்றத்தைக் கூட்ட அவர் அழைப்புவிடுத்திருந்தார். தொழிற்கட்சி தலைவர் எட் மிலிபாண்ட், அவரது கட்சி பழமைவாத-தாராளவாத ஜனநாயக அரசாங்கத்தை ஆதரிக்குமென உத்தரவாதங்கள் வழங்கிய பின்னர் அந்த நகர்வு வந்திருந்தது.