சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Bala Tamboe (1922-2014): Socialist revolutionary turned class traitor

பாலா தம்பு (1922-2014): சோசலிச புரட்சியாளர் வர்க்கத் துரோகியானார்

By Nanda Wickremasinghe and Wije Dias
13 September 2014

Use this version to printSend feedback

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், தொழில்துறை மற்றும் வணிக அதிபர்கள் மற்றும் போலி இடதுகள் உட்பட இலங்கை அரசியல் ஸ்தாபகத்தை சேர்ந்தவர்கள், செப்டம்பர் 1 அன்று தனது 92வது வயதில் மரணமடைந்த பாலா தம்புவின் புகழ் பாட அணிசேர்ந்துள்ளனர். தம்பு ஒரு சோசலிச புரட்சியாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய போதிலும், தொழிலாள வர்க்கத்தை ஒடுக்கி முதலாளித்துவ ஆட்சிக்கு முண்டு கொடுப்பதை இலக்காகக் கொண்ட ஒரு தொழிற்சங்க அதிகாரத்துவவாதியாகவும் அரசியல் ஏமாற்று வித்தைக்காரனாகவும் அதை முடிவுக்கு கொண்டுவந்தார்.

அவரது மரணத்தின் பின்னரான புகழுரைகள், கடந்த ஐந்து தசாப்தங்களாக ஆளும் வர்க்கத்துக்கு அவர் செய்த சேவைகளை பாராட்டுபவையாக இருந்தனவே அன்றி, அவரது புரட்சிகர பதிவுகளை பாராட்டவில்லை. அவர் தனது மரணம் வரை 66 ஆண்டுகள் இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தின் (சிஎம்யு) செயலாளராக பதவி வகித்தார். சமீப காலத்தில், அவர் தீவில் மிகவும் உத்தியோகபூர்வமாக வேண்டப்படும் தொழிற்சங்க அதிகாரத்துவவாதியாக இருந்தார். முதலாளிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு, வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை விற்றுத்தள்ளுவதற்கு அவரது நிபுணத்துவம் தேவைப்பட்டது.

தீவின் மிகப்பெரிய தனியார் துறை வணிக அமைப்பான இலங்கை முதலாளிமார் சம்மேளனம், தனது "ஆழ்ந்த அனுதாபங்களை" தெரிவித்து அறிவித்ததாவது: "முதலாளிமார் சம்மேளனமானது பல ஆண்டுகளாக சிஎம்யு உடன் கூட்டாக செயற்படும் அதிர்ஷ்டத்தைக் கொண்டிருந்தது. உண்மையில், முறிவின்றி தொடர்ந்த ஒரே பழைய கூட்டு ஒப்பந்தம், முதலாளிமார் சம்மேளனம் 1961ல் சிஎம்யு உடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தமே ஆகும். பாலா தம்பு இந்த காலம் முழுவதும் சிஎம்யுவை பிரதிநிதித்துவம் செய்தார்."

ஜனாதிபதி இராஜபக்ஷவும் தனது இரங்கல் செய்தியில், தொழிற்துறை அமைதியை பராமரிப்பதற்கான ஒரு பங்களிப்பாக, தம்பு கையெழுத்திட்ட அதே அழுகிய ஒப்பந்தங்களையே பாராட்டினார். "வர்த்தக ஊழியர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான மிக சிறந்த பங்களிப்பு, சிஎம்யுவுக்கும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தமே ஆகும். அது ஒரு மைல்கல் ஒப்பந்தமாகவும் தொழிற்சங்கத் துறையில் உள்ள ஏனைய பலருக்கும் ஒரு பெறுமதியான வழிகாட்டியுமாக உள்ளது," என்று அவர் கூறினார்.

சிஎம்யு உறுப்பினர்கள் தொடர்பாக எடுத்துக்கொண்டால், தம்பு "தொழிற்துறை அமைதியை மட்டும் பராமரிக்கவில்லை", அவர் ஏனைய தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு அவற்றின் சொந்த மோசமான காட்டிக்கொடுப்புக்களை திட்டமிடவும் அவற்றை நியாயப்படுத்தவும் உதவினார். 1990களின் ஆரம்பத்தில், அரசாங்கம் அவரை கூட்டுத்தாபனங்கள் சார்ந்த தேசிய தொழிலாளர் ஆலோசனை சபைக்கு (என்எல்ஏசி) நியமித்தது. அவர் அதில் தொடர்ந்தும் பணியாற்றினார்.

அவரது மரணத்திற்கு சில வாரங்களுக்கு முன், தம்பு தொழிலாளர்களை ஏமாற்ற வடிவமைக்கப்பட்ட ஒரு கடைசி சாகசத்தை நிகழ்த்தினார். அவர், 1990களின் நடுப்பகுதியில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான சலுகையை அமுல்படுத்தத் தவறியமைக்கு "எதிர்ப்பு" தெரிவித்து என்எல்ஏசியில் இருந்து வெளியேறினார். இரு தசாப்த காலங்களாக, தம்புவும் பிற தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரும், போராட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக விற்றுத் தள்ளிய நிலையில், இந்த காகிதத் துண்டை தொழிலாளர்கள் முன்னால் ஒருவெற்றியாக மோசடியான முறையில் தூக்கிப்பிடித்து வந்துள்ளனர்.

எவ்வாறெனினும், தம்புவை மற்றொரு துரோக தொழிற்சங்க தலைவராக நோக்குவது தவறாகிவிடும். தனது இளமைக் காலத்தில், அவர் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக உத்வேகமாகவும் திறமையாகவும் போராடிய புரட்சிகர போராளி ஆவார். தம்பு மற்றும் அவரது தலைமுறையில் ஏனையவர்களின் அரசியல் சீரழிவானது 1964ல் ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை கைவிட்டு ஸ்ரீமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் சேர்ந்துகொண்ட லங்கா சமசமாஜக் கட்சியின் (லசசக) அரசியல் சீரழிவுடன் முழுமையாகப் பிணைந்துள்ளது.

வெறும் 17 வயதில், தம்பு ஒரு பல்கலைக்கழக மாணவராக, இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக 1939ல் லங்கா சமசமாஜ கட்சியில் சேர்ந்தார். யுத்தத்தினதும் மற்றும் பிரிட்டன் உட்பட ஜனநாயக ஏகாதிபத்திய சக்திகள் என்று அழைக்கப்பட்டவற்றுக்கான ஸ்ராலினின் ஆதரவினதும் தாக்கத்தின் கீழ், லசசக தலைமைத்துவம் ட்ரொட்ஸ்கிசத்தை நோக்கி தீர்க்கமாகத் திரும்பியதோடு, அதன் உறுப்பினர்களில் இருந்து ஸ்ராலினிஸ்டுகளை வெளியேற்றி, 1942ல் நான்காம் அகிலத்தின் அனைத்து இந்திய பிரிவாக இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியை (பிஎல்பீஐ) உருவாக்குவதில் மையப் பாத்திரம் ஆற்றியது.

தம்பு பிஎல்பீஐயின் ஸ்தாபக உறுப்பினராக இருந்ததோடு போர்க்கால சட்டவிரோத நிலைமைகளின் கீழ், இலங்கையில் தலைமறைவாக இருந்து கட்சி அமைப்பு வேலைகளை செய்வதில் தைரியமான செயலாற்றல் கொண்ட பாத்திரம் வகித்தார். அவர் ட்ரொட்ஸ்கிசம் பற்றி வகுப்பு நடத்தியதோடு கொழும்பு குதிரைத் திடலுக்கு அருகே தொழிலாளர்களுக்கு விரிவுரைகளும் நடத்தினார். புரட்சிகர தோற்கடிப்புவாத நிலைப்பாட்டை எடுத்த பிஎல்பீஐ, பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிராக இலங்கை மற்றும் இந்திய தொழிலாளர்களை அணிதிரட்ட போராடியது. தம்பு தீவில் நிலைகொண்டிருந்த பிரிட்டிஷ் படையினருக்கு கட்சி இலக்கியங்களை விநியோகித்து, அவர்களை ட்ரொட்ஸ்கிசத்திற்கு வெற்றிகொள்ள முற்பட்டார்.

தம்பு ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளில் தேர்ச்சி பெற்ற ஒரு சக்தி வாய்ந்த பேச்சாளராவார். 1960களில் இளம் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்ற வகையில், இந்த கட்டுரையின் ஆசிரியர்கள் அவரது முழு போராட்டத்தை நேரில் கண்டிருந்தார்கள். அவர் பரந்த விபரங்களைக் கூறக்கூடிய பேச்சுத் திறமை கொண்டவர். தனது எதிரிகளுக்கு எதிராக வசை பாடுவதிலும் கிண்டல் செய்வதிலும் அவர் திறமையானவராக இருந்ததோடு தனது வாதங்களை கேட்போருக்கு புரியவைப்பதற்காக நடனபாணியில் தனது முழு உடலையும் பயன்படுத்தக் கூடியவர். பல மணி நேரம் தம்மை ஒரே இடத்தில் வைத்திருக்கக் கூடிய அந்த மனிதனின் உரையைக் கேட்க ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூட்டங்களுக்கு திரண்டுவந்தனர்.

போருக்கு பின்னர், 1945ல் பழைய சமசமாஜவுக்கு புத்துயிரூட்டுவதற்காக பிரிந்து சென்ற என்.எம். பெரேரா மற்றும் பிலிப் குணவர்த்தன தலைமையிலான ஒரு தேசிய சந்தர்ப்பவாத கன்னைக்கு எதிராக, தம்பு பிஎல்பீஐ உடன் நின்றார். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்ட 1947 பொது வேலைநிறுத்தத்தில் பங்குபற்றியமைக்காக, அவர் விவசாய திணைக்கள பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் தொழிலை இழந்தார். அவர் பிஎல்பீஐயின் முழுநேர ஊழியராக ஆனதோடு 1948ல் சிஎம்யு செயலாளர் பொறுப்புக்கு கட்சியே அவரை நியமித்தது.

லசசகக்கு எதிராக, இலங்கை முதலாளித்துவத்திற்கு 1948ல் பிரிட்டனால் வழங்கப்பட்ட போலி சுதந்திரத்தை எதிர்த்த பிஎல்பீஐ, அதற்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டியது. எனினும், அரச இயந்திரம், பாராளுமன்றம் மற்றும் வணிகத் துறையிலும் இருந்த மத்தியதர வர்க்கத் தட்டினருக்கு இந்த உத்தியோகபூர்வ சுதந்திரம் வாய்ப்புகளை திறந்து விட்டதோடு, அது கட்சி மீதும் குறிப்பிடத்தக்க அழுத்தங்களை உருவாக்கியது. இது, முந்தைய அடிப்படை வேறுபாடுகளைப் பற்றி எந்தவொரு தெளிவுபடுத்தலும் இன்றி, 1950ல் லசசக உடன் பிஎல்பீஐயை கொள்கையற்ற மறு ஐக்கியப்படுத்தியதில் வெளிப்பாடாகியது.

இந்த மறு ஐக்கியமானது, மைக்கல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையில் நான்காம் அகிலத்திற்குள் வெளிப்பட்ட ஒரு பரந்த சந்தர்ப்பவாத போக்கின் அறிகுறியாக இருந்தது. போருக்கு பிந்தைய முதலாளித்துவத்தின் மறு-ஸ்திரமாக்கலுக்கு அடிபணிந்த பப்லோ மற்றும் மண்டேல், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தை கைவிட்டு, ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகத்தின் ஆதிக்கத்திலும் இலங்கை போன்ற நாடுகளில் பல்வேறு முதலாளித்துவ தேசியவாத அமைப்புகளின் ஆதிக்கத்திலும் இருந்த "வெகுஜன இயக்கங்களுக்குள்" நான்காம் அகிலத்தின் பிரிவுகளை கரைத்துவிட முயன்றனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு, மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்தின் கொள்கைகளை பாதுகாக்கவும் பப்லோவாதத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கவும் 1953ல் அமைக்கப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், லசசக தலைவர்கள், பப்லோவின் கோட்பாடுகளின் அம்சங்களை விமர்சித்த அதே வேளை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உருவாக்கத்தை எதிர்த்தனர். லசசக பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் இருந்தது. 1953 நடுப்பகுதியில், லசசக மத்திய குழுவின் அரசியல் குழுவுக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட தம்பு, இந்த முடிவுக்கு எதிராக எந்த நிலைப்பாட்டையும் எடுக்காமை, அடுத்த தசாப்தத்தில் லசசகயின் அரசியல் பின்னடைவுக்கு கதவை திறந்துவிட்டது.

உலகின் மிகப் பெரிய ட்ரொட்ஸ்கிச கட்சியாக லசசகயை பெருமைப்படுத்திய சர்வதேச செயலகத்தின் ஆசியுடன், லசசக தனது பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் தொழிற்சங்க உறுப்பினர்களின் அளவின் அடிப்படையிலேயே அதன் வெற்றியை தீர்மானித்து வந்தது. அதன் அரசியல் போக்கு, முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (ஸ்ரீலசுக) உடன் கொடுக்கல் வாங்கல் செய்வதன் வடிவத்தில், மக்கள் முன்னணிவாதத்தை நோக்கி மேலும் நகர்ந்தது. அதிகளவில், லசசக அதன் வேலைத் திட்டத்தை, ஸ்ரீலசுகயின் சிங்கள ஜனரஞ்சகவாத மற்றும் தமிழர் விரோத இனவாத அரசியலுக்கு அடிபணியச் செய்தது.

தம்பு ஒரு முன்னணி தொழிற்சங்க தலைவராக, 1956 மற்றும் 1960 தேர்தல்களுக்கு பின்னர் பதவிக்கு வந்த ஸ்ரீலசுக அரசாங்கங்களுக்கு எதிராக உட்பட, போர்குணமிக்க வேலைநிறுத்த போராட்டங்களின் மத்தியில் இருந்தார். 1963ல் அரசாங்கத்தின் அவசரகால அறிவிப்பையும் மீறி அதை மதிப்பிழக்கச் செய்த துறைமுக தொழிலாளர்களின் நீடித்த வேலைநிறுத்தத்திற்கு அவர் தலைமை தாங்கினார். இந்த வேலை நிறுத்தம் சிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலசுக அரசாங்கத்தின் அரசியல் நெருக்கடியை அதிகரித்தது. பண்டாரநாயக்க, 21 அம்சக் கோரிக்கைகளின் அடிப்படையில் லசசக தலைமையிலான ஒரு பரந்த தொழிற்சங்க கூட்டை மையமாகக் கொண்ட ஒரு பிரமாண்டமான தொழிலாள வர்க்க இயக்கத்தை எதிர்கொண்டார்.

நாடு ஆட்சி செய்ய முடியாத நிலைக்கு வந்துள்ளது என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்ட பண்டாரநாயக்க, லசசகயின் ஆதரவு தேவை என்றும் அறிவித்தார். 1964ல், தனது அரசாங்கத்தில் சேருமாறு லசசக தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர்கள் அரசியல் கொள்கையின் எல்லா அடையாளங்களையும் கைவிட்டுவிட்டு, மூன்று அமைச்சர் பதவிகளுக்கு பதிலாக 21 கோரிக்கைகள் இயக்கத்தை விற்றுத் தள்ளினர்.

காட்டிக்கொடுப்புக்கு ஒப்புதல் அளித்த லசசக மாநாட்டில், அரசாங்கத்தில் இணைவதற்கு எதிராக வாக்களித்த 159 பிரதிநிதிகளில் தம்புவும் ஒருவராக இருந்ததோடு புரட்சிகர லசசகயை ஸ்தாபிக்க வெளியேறினார். அதே சமயம், முக்கிய புரட்சிகர லசசக தலைவர்களில் ஒருவரான தம்பு, லசசகயின் சீரழிவின் அரசியல் வேர்கள் பற்றி, குறிப்பாக அனைத்துலக குழுவுடன், எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படுவதை எதிர்த்தார்.

காட்டிக்கொடுப்புக்கான முழு பொறுப்பும், லசசக தலைமைத்துவத்தில் தங்கியிருக்கவில்லை, மாறாக, முந்தைய தசாப்தத்தில் தேசிய முதலாளித்துவ ஆட்சிக்கு லசசக சந்தர்ப்பவாத முறையில் அடிபணிந்தமைக்கு உடந்தையாய் இருந்து உதவி செய்த பப்லோவாத சர்வதேசத்திலேயே தங்கியிருக்கின்றது என்று அனைத்துலகக் குழு வலியுறுத்தியது. 1953 பிளவின் அடிப்படை வேறுபாடுகள் விலகிவிட்டன எனக் கூறிக்கொண்டு, 1963ல் அனைத்துலகக் குழுவில் இருந்து பிரிந்து, பப்லோவாதிகளுடன் மீண்டும் இணைந்துகொண்ட அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சிக்கு எதிராக, பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகம் முன்னெடுத்த போராட்டத்தை இந்த காட்டிக்கொடுப்பு வெளிப்படையாக உறுதிப்படுத்துகின்றது.

பண்டாரநாயக்க அரசாங்கத்துக்குள் லசசக நுழைந்தமை, பப்லோவாத திருத்தல்வாதம் நேரடியாக ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யச் சென்றுள்ளதை குறிக்கின்றது என அனைத்துலகக் குழு வலியுறுத்தியது. இதன் விளைவாக, அனைத்துலகக் குழுவின் போராட்டத்தின் வரலாற்று படிப்பினைகளின் அடிப்படையில் பப்லோவாதத்தில் இருந்து முழுமையாக பிரிவதன் மூலமே, இலங்கையில் ட்ரொட்ஸ்கிசத்தை மீண்டும் புத்துயிர் பெறச் செய்ய முடியும்.

லசசக தலைவர்களின் தொடரும் சந்தர்ப்பவாதத்துக்கு ஒப்புதல் கொடுத்த பப்லோவாத ஐக்கிய செயலகத்திலேயே புரட்சிகர லசசக தலைவர்களும் இருந்துகொண்டனர். தம்பு விடயத்தில், இது தொழிற்சங்க அரசியலுக்கு அடிபணிவதையும் முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கான எந்தவொரு அரசியல் போராட்டத்தையும் நிராகரிப்பதையும் குறிக்கின்றது. தம்பு ஒரு தொழிற்சங்க அதிகாரத்துவவாதியாக, தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கும் அவர்களது போராட்டங்களை விற்கவும் தனது திறமை மற்றும் புரட்சிகர கடந்த காலத்தையும் பயன்படுத்தினார். தனது தலைமையின் கீழ், புரட்சிகர லசசக சிஎம்யு உடைய ஒரு துணைப்பகுதியாகவும் தொழிற்சங்கவாதத்தின் ஊதுகுழலாகவும் ஆகியது. இருப்பினும், இறுதியாக 1981ல் அது கலைக்கப்படும் வரை, பப்லோவாதிகள் புரட்சிகர லசசகயை இலங்கையில் தமது அதிகாரபூர்வ பகுதியாக தொடர்ந்தும் அங்கீகரித்தனர்.

மேலும் மேலும் தம்பு முழுமையாக வலதுபக்கம் திரும்பினார். 1967ல், தம்பு தலைமையிலான தொழிற்சங்க கூட்டணியின் பாகமாக இருந்த ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரசை சேர்ந்த, வேலைநிறுத்தம் செய்துவந்த 300,000 தொழிலாளர்களுடன் இணைய மறுத்த அதேவேளை, முன்னாள் நாசியான சான்சலர் குர்ட் கீசிங்கரை கௌரவிப்பதற்காக ஜேர்மன் தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு அவர் ஒரு பகிரங்க சதியை அரங்கேற்றினார்.

அதே ஆண்டில், தனது செலவுகளுக்கு பணம் கொடுத்த, சிஐஏ நிதியிலான ஆசியா மன்றத்தின் அழைப்பில், தம்பு அமெரிக்கா பயணமானார். இந்த விஜயத்தின் போது, வியட்நாம் போரைக் கொடூரமாக முன்னெடுத்ததில் இழிபுகழ்பெற்றிருந்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ரொபேர்ட் மக்னமாரா உடன் ஒரு தனிக் குழுவை அவர் சதந்தித்தார். சிஐஏ உடனான தம்புவின் தொடர்பு எனக் கூறப்படுபவை பற்றி விசாரிக்க ஒரு சிறப்பு குழுவை நியமிக்க ஐக்கிய செயலகம் நிர்ப்பந்திக்கப்பட்ட போதிலும், பின்னர் அதன் கண்டுபிடிப்புகளை தரைவிரிப்பின் கீழ் கூட்டித்தள்ளியது.

தம்பு குறிப்பாக 1976 பொது வேலை நிறுத்தத்தை தடம்புரளச் செய்வதில் துரோக வகிபாகம் ஆற்றினார். "அரசியல் அல்லாத தொழிற்சங்கவாதம்," என்ற பதாகையின் கீழ், அவர் ஸ்ரீலசுக தலைமையிலான கூட்டணி அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு அரசியல் போராட்டத்தையும் எதிர்த்ததோடு, திறந்த சந்தை கொள்கைகளை துரிதமாக நடைமுறைப்படுத்திய வலதுசாரி ஐக்கிய தேசிய கட்சி (யூஎன்பி) மீண்டும் ஆட்சிக்கு வர கதவை திறந்துவிட்டார். 1980ல் வாழ்க்கைத் தரங்கள் சீரழிக்கப்படுவதற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு, அரசாங்கத்துறை தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தமாக வெடித்தபோது, தம்பு அதை ஆதரிக்க மறுத்து, 100,000 தொழிலாளர்கள் வேலை நீக்கம்செய்யப்பட வழிவகுத்தார்.

தம்பு, அனைத்துலகக் குழுவின் இலங்கை பகுதியான, சோசலிச சமத்துவக் கட்சியின் (சோசக)​​ முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தையும் (புகக), மற்றும் குறிப்பாக ட்ரொட்ஸ்கிசத்துக்கான அதன் கொள்கை ரீதியான போராட்டத்தையும் எதிர்த்திருந்தார். புகக./ சோசக வேலைத் திட்டம் சம்பந்தமாகவும் கொள்கைகள் மற்றும் வரலாறு பற்றியும் தொழிற்சங்க உறுப்பினர்கள் மத்தியில் புகக அங்கத்தவர்கள் கலந்துரையாடல்களை ஆரம்பித்த போதெல்லாம், தம்பு சிஎம்யுவில் இருந்த புகக அங்கத்தவர்களை வெளியேற்றினார்.

கொழும்பு அரசியல் ஸ்தாபனம் தம்புவுக்கு அஞ்சலி செலுத்துவதோடு சாகும் முதலாளித்துவத்திற்கு கேடுகெட்ட தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் முட்டு கொடுத்து உதவும் அதே வேளை, நாம் ஏகாதிபத்திய போர், காலனித்துவம் மற்றும் தேசிய முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான இளம் புரட்சிகர போராளியை நினைவூட்ட விரும்புகிறோம். அத்துடன் வேலைத் திட்டம் மற்றும் கொள்கைகளுக்கான போராட்டத்தை அவர் நிராகரித்த பின்னர் வந்த துன்பகரமான விளைவுகளையும் சுட்டிக் காட்டுகின்றோம். அவருடைய பரிணாமமானது புதிய தலைமுறை புரட்சியாளர்கள் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய படிப்பினைகளை அடித்தளமாக கொள்ள வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்தப் படிப்பினைகள் சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கமான அனைத்துலகக் குழுவிலேயே உள்ளடங்கியுள்ளன.
பின்னினைப்பு
சோசலிச சமத்துவ கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)