சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

China’s president visits India in bid to counter USpivot”

அமெரிக்க "முன்னெடுப்பை" எதிர்கொள்ளும் முயற்சியில் சீன ஜனாதிபதி இந்தியா விஜயம் செய்கிறார்

By Deepal Jayasekera
24 September 2014

Use this version to printSend feedback

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், சீனோ-இந்திய உறவுகளை ஒரு "புதிய மட்டத்திற்கு" எடுத்துச் செல்ல அவருடன் இணைந்து வேலைசெய்யுமாறு, இந்தியாவிற்கான கடந்த வார அவரது மூன்று நாட்கள் விஜயத்தின் போது, இந்தியாவின் புதிய பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

ஆனால் இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி மேலதிக இருதரப்பு கூட்டுறவுக்கான சீன வாய்ப்புகளை ஏற்றுக் கொள்வதில் மிக கவனமாக இருந்தார். மோடி மற்றும் அவரது அரசாங்கத்தினர் மூன்று பிரச்சினைகளின் மீது பேச்சுவார்த்தைகளை மையப்படுத்தி இருந்தனர்: அதாவது இந்தியாவில் புதிய சீன முதலீடுகளை, குறிப்பாக உள்கட்டமைப்பு திட்டங்களில் பாதுகாப்பதன் மீது; சீனாவின் இந்திய இறக்குமதிகளை அதிகரிக்கும் முறைமைகள் மீது, அதன் மூலமாக வடக்கின் அதன் அண்டைநாடுடன் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை இடைவெளியைக் குறைப்பதற்காக; மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையே அவற்றின் நீண்டகால எல்லை பிரச்சினையைத் தீர்ப்பதன் மீதான அவசரம் குறித்தது.

இந்திய வடக்கு மற்றும் சீனாவின் தெற்மேற்கு எல்லையைப் பகிர்ந்து கொண்டிருக்கும் பிரச்சினைக்குரிய லடாக்/அக்சாய் சின் பிராந்தியத்தில், ஹூமாருக்கு அருகில் சீன இராணுவம் அத்துமீறியது என்ற இந்திய அரசாங்க வாதத்தை இந்திய ஊடகங்கள் பெரிதாக்கிக் காட்டிய போது, ஜி மற்றும் அவரது பரிவாரத்தின் ஊக்கத்தைக் கெடுக்கும் வகையில், அந்த இறுதி பிரச்சினை சீன ஜனாதிபதியின் விஜயத்தின் மீது ஒரு பெரிய நிழல்போல் சூழ்ந்திருந்தது.

ஜி'இன் இந்திய விஜயம், இந்திய பிரதம மந்திரி மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அவரது 64வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஜி சேர்ந்து கொண்டதுடன் தொடங்கியது. அவரது இந்திய பயணம், தெற்காசிய சுற்றுபயணத்தின் கடைசி இடமாக இருந்தது. முன்னதாக ஜி மாலத்தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு மூலோபாய இந்திய மகாசமுத்திர அரசுகளுக்கு சென்று வந்திருந்தார்.

ஜி'இன் தெற்காசிய சுற்றுப்பயணம் மற்றும் குறிப்பாக செப்டம்பர் 17-19இல் இந்தியாவிற்கான அவரது விஜயம், சீனாவை மூலோபாயரீதியில் தனிமைப்படுத்தும் மற்றும் சுற்றி வளைக்கும் அமெரிக்க-ஜப்பானிய முனைப்பை எதிர்கொள்வதை நோக்கமாக கொண்டிருந்தது. மே மாதம் மோடி பதவியேற்றதற்குப் பின்னர், வாஷிங்டனும் டோக்கியோவும் அவற்றின் சீன-விரோத மூலோபாய நிகழ்ச்சிநிரலுடன் இந்தியாவைப் பிணைக்கும் அவற்றின் முயற்சிகளை அதிகரித்துள்ளன.

கடந்த ஆகஸ்டில் மோடியின் ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது, புது டெல்லியும் டோக்கியோவும் ஒரு "சிறப்பு பூகோள மூலோபாய நட்புறவை" பிரகடனப்படுத்தின.

அடுத்த வாரம், மோடியின் வாஷிங்டன் விஜயத்தின் போது ஒபாமா நிர்வாகம் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கும். கடந்த தசாப்தத்தைப் பொறுத்த வரையில், அமெரிக்கா சீனாவை அடக்கி வைக்கும் மற்றும் அதன் உடனான ஒரு இராணுவ மோதலுக்கு தயாரிப்பு செய்யும் அதன் முனைவில், ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து, இந்தியாவை அதன் மூன்றாவது தூணாக தீவிரமாக புகழ்பாடி வந்துள்ளது. இந்த முடிவை நோக்கி, வாஷிங்டன் இந்திய மகாசமுத்திரம், தென்சீன ஆசியா, தென்சீனக் கடல் மற்றும் மத்திய ஆசியாவில் அதன் இராணுவ-மூலோபாய பிரசன்னத்தை விரிவாக்குவதில் இந்தியாவிற்கு உதவ முன்வந்ததுடன், அதைத் தூண்டிவிட்டும் உள்ளது. மோடியின் வாஷிங்டன் விஜயத்திற்கு முன்னதாக, அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவுடன் அதிநவீன ஆயுத உபகரணங்களை இணைந்து-தயாரிக்கும் மற்றும் இணைந்து-அபிவிருத்தி செய்யும் உடன்படிக்கைகளை மூடிமுத்திரையிட முனைந்து வந்திருக்கிறார்கள், அவ்விதத்தில் அவை அவ்விரு நாடுகளின் இராணுவங்களின் ஒருங்கிணைப்பை மேலும் ஊக்குவிக்கும்.

இந்தியாவிற்கான அமெரிக்க-ஜப்பானின் நிகழ்ச்சிநிரலைக் குறித்து பெய்ஜிங்கிற்குத் துல்லியமாக தெரியும் என்பதுடன் அதை தடுக்க அது பெரும்பிரயத்தனம் செய்கிறது. சீனாவுடன் ஒரு நெருங்கிய கூட்டுறவை ஜோடிக்க மோடி-தலைமையிலான பிஜேபி அரசாகத்திற்கு இருக்கும் சாத்தியக்கூறை வற்புறுத்தியமை உட்பட, சமீபத்திய மாதங்களில், பெய்ஜிங் இந்தியாவுடன் பல்வேறு நேச தொடர்புகளைக் காட்டியிருக்கிறது. மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள தேசபகிஷ்கரிப்பு செய்யப்பட்ட திபெத்திய அரசாங்கத்தின் தலைவரை வரவேற்றமை போன்ற ஆத்திரமூட்டும் சீன-விரோத நடவடிக்கைகளை பிஜேபி அரசாங்கம் எடுத்தபோது, அது முற்றிலுமாக "மற்றொரு பக்கத்தையும்" காட்டி இருக்கிறது.

பெய்ஜிங்குடன் இந்தியா அதன் உறவுகளை விரிவாக்குவதிலிருந்து அது கணிசமான இலாபங்களைப் பெற முடியுமென புது டெல்லியைச் சமாதானப்படுத்த, ஜி அவரது இந்திய விஜயத்தைப் பயன்படுத்த முனைந்தார்.

சீனா இந்திய உள்கட்டமைப்பில், குறிப்பாக இரயில்வே மற்றும் தொழில்துறை பூங்காக்களில், அடுத்த ஐந்தாண்டுகளில் 20 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யுமென்றும், 2013இல் 65.5 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இருதரப்பு வர்த்தகத்தை 2015இல் 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஊக்குவிக்க பணியாற்றுமெனவும் அவர் உறுதியளித்தார்.

இந்திய-சீன வர்த்தகம் 2000இல் இருந்து 20 மடங்குக்கு அதிகமாக வளர்ந்துள்ளது, மேலும் இப்போது சீனா இந்தியாவின் ஒரே மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருக்கிறது, ஆனால் வர்த்தக ஓட்டங்கள் சீனாவிற்கு சாதகமாக பலமாக இருக்கின்றன. 2013இல் இந்தியா சீனாவுடனான அதன் வர்த்தகத்தில் 30 பில்லியன் அமெரிக்க டாலர் பற்றாக்குறையைக் கொண்டிருந்தது.

இந்தியாவுடனான இறக்குமதிகளில், குறிப்பாக இந்தியா உலகின் முதலிடத்தில் இருக்கும் தொழில்துறைகளான வேளாண் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் மீதான தடைகளை நீக்க பெய்ஜிங் வேலை செய்யுமென ஜி வாக்குறுதி அளித்தார்.

அடுத்த ஐந்தாண்டுகளில் உள்கட்டமைப்பு முதலீடுகளில் அது வாக்குறுதி அளித்ததைப் போல 20 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்ய முடிந்ததென்றால், அது சீன-இந்தோ பொருளாதார உறவுகளில் ஒரு பெரும் மாற்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் என்பதுடன், இந்தியாவின் தள்ளாடும் பொருளாதாரத்தை ஊக்குவிக்குவிப்பதில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கான இந்திய மேற்தட்டின் பிரயத்தனத்திற்குக் கரம் கொடுப்பதில் ஒரு முக்கிய வீச்சாக இருக்கும். ஆனால் இந்திய ஊடகங்களின் பிரிவுகள், கடந்த மாதம் ஜப்பான் உறுதியளித்ததைவிடவும் (அடுத்த ஐந்தாண்டுகளில் 35 பில்லியன் அமெரிக்க டாலர்) இது குறைவு என்றும், ஜி விஜயம் செய்வதற்கு முந்தைய வாரங்களில் சில சீன அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்ட அறிவிப்புகளையும் விட கணிசமான அளவுக்கு குறைந்ததென்றும் குறை கூறின.

2000க்குப் பின்னர், சீன நிறுவனங்கள் இந்தியாவில் வெறும் 400 மில்லியன் அமெரிக்க டாலரே முதலீடு செய்துள்ளன. இந்திய அதிகாரிகள், பாதுகாப்பு சிக்கல்களைக் காரணங்காட்டி, சீன முதலீட்டின் வழியில், குறிப்பாக உள்கட்டமைப்பு திட்டங்களில் முட்டுக்கட்டைகளை நிறுத்தி இருப்பதாக பெய்ஜிங் வாதிடுகிறது. ஜப்பானிய முதலீடுகளைத் துரிதப்படுத்த மோடியின் பிரதம மந்திரி அலுவலகத்தின் சிறப்பு பிரிவில் இரண்டு ஜப்பானிய அதிகாரிகள் இருத்தப்பட்டு, ஜப்பானுக்காக அது செய்தளித்துள்ள ஏற்பாடுகளைப் போல எதுவும் அங்கே செய்யப்படவில்லை என்றபோதினும், மோடி அரசாங்கம் சீன முதலீட்டிற்கு உதவி செய்ய இப்போது வாக்குறுதி அளித்துள்ளது.

அதன் "கடல்சார் பட்டு பாதை" திட்டத்தில் முன்னணி பாத்திரம் வகிக்குமாறு ஜி இந்தியாவுக்கு அழைப்புவிடுத்தார்இது பெய்ஜிங் அதற்கான எரிசக்தி மற்றும் ஏனைய மூலப்பொருட்களை மூலோபாயரீதியில் அணுகுவதைப் பாதுகாக்க மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் துறைமுகம் மற்றும் ஏனைய போக்குவரத்து வசதிகளை அதுவே கட்டமைப்பதை அல்லது அவற்றிற்கு உதவுவதை உள்ளடக்கிய ஒரு திட்டமாகும்.

அமெரிக்க மூலோபாய பகுப்பாய்வாளர்கள், சீனா இந்த திட்டத்தின் மூலமாக இந்திய மகாசமுத்திரத்தில் ஒரு பெரிய இராணுவ பிரசன்னத்திற்கு அடித்தளமிட முனைந்து வருவதாக குற்றஞ்சாட்டி உள்ளனர், இதை அவர்கள் முன்னதாக "முத்துச்சரம்" என்ற சொல்லால் குறித்து வந்தார்கள். இந்த வாதங்களை, இந்தியாவின் இராணுவ-பாதுகாப்பு ஸ்தாபகத்தின் பெரும்பகுதிகள் எதிரொலித்துள்ளன.

ஐயத்திற்கிடமின்றி கடல்சார் பட்டு பாதைக்கு உதவுவதில், புது டெல்லியின் தயக்கத்திற்கு மூலோபாய பிரச்சினைகளும் ஒரு காரணியாக உள்ளன. ஆனால் ஒரு மிகப் பெரிய பொருளாதாரமாக மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு மூலதனத்தில் இந்தியாவை விட பெரிதும் முன்னேறிய சீனா, அந்த திட்டத்தால் பெரிதும் ஆதாயமடைகிறது என்ற கணக்கீடுகளும் அங்கே இருக்கின்றன.

ஒரு பலமான கூட்டணி, சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச அரங்கில் பெரும் செல்வாக்கை ஜெயிப்பது உட்பட உலக அரங்கில் இந்தியாவை உயர்த்துமென ஜி அவரது இந்திய இடைத்தரகர்களை உடன்பட செய்யவும் முயன்றார். “சீனா மற்றும் இந்தியா இரண்டுமே உலகில் செல்வாக்கு மிகுந்த நாடுகளாகும். இரண்டு தேசங்களும் ஒரே குரலில் பேசினால், ஒட்டுமொத்த உலகமும் மிக கவனமாக கேட்குமென" ஜி அறிவித்தார். ஜி ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில் (Shanghai Cooperation Organization - SCO) இந்தியா முழு உறுப்பினராக சீனா ஆதரவு வழங்குமென உறுதியளித்தார். SCO என்பது ஆசியாவில் பெய்ஜிங் மற்றும் மாஸ்கோவிற்கு எதிரான அமெரிக்காவின் ஆக்ரோஷமான நகர்வுகளை எதிர்கொள்ள அமைக்கப்பட்ட சீன மற்றும் ரஷ்ய தலைமையிலான ஒரு பிராந்திய கூட்டணியாகும். தற்போது, இந்தியா SCOஇல் பார்வையாளர் அந்தஸ்தைக் கொண்டிருக்கிறது.

ஜி'இனது விஜயத்தை பெய்ஜிங் ஒரு மிகப்பெரிய வெற்றியாக தம்பட்டமடித்தது, ஆனால், அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் இந்தியா இன்னும் நெருக்கமான மற்றும் முழுவதுமாக அணிசேர்வதைத் தடுக்கும் அதன் உண்மையான நோக்கம் ஒருபுறம் இருக்கட்டும், "சீன-இந்தோ உறவுகளை ஒரு புதிய மட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு" அது குறிப்பிட்டிருந்த நோக்கத்தை கூட தெளிவாக எட்ட தவறி உள்ளது.

புது டெல்லி பெய்ஜிங்கின் மூலோபாயரீதியில் இக்கட்டானநிலைமையை உணர்ந்துள்ளது. பெய்ஜிங் வழங்கும் ஊக்குவிப்புகளில் இருந்து எதையெல்லாம் அதனால் தேர்ந்தெடுத்து ஏற்றுக்கொள்ள முடியுமென்பதையும் மற்றும், அதன் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை ஆக்ரோஷமாக பின்பற்றுவதற்கு எதெல்லாம் அதற்கு கணிசமாக கட்டுப்பாடுகளைத் தளர்த்துகின்றன என்பதையும் அது கணக்கிடுவதையே, ஜி'இன் விஜயத்திற்கு இந்தியாவின் விடையிறுப்பு எடுத்துக்காட்டுகிறது.

ஜி'இன் விஜயத்திற்கு முந்தைய தினங்களில், ஹனாய்க்கு பயணித்திருந்த இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இந்தோ-வியட்நாமிய இராணுவ கூட்டுறவுக்கான மற்றும் சீனா அதன் பிராந்திய எல்லையாக உரிமைகோரும் தென்சீனக் கடல் பகுதியில் கடலோர எண்ணெய் ஆய்வுகளுக்கான பல உடன்படிக்கைகளை கையெழுத்திட்டார்.

ஜி உடனான அவரது சந்திப்புக்கு முன்னர் மோடி, கட்டம் கட்டும் விதமாக சீனா உடனான இந்தியாவின் எல்லை பிரச்சினையை நிகழ்ச்சிநிரலில் கொண்டு வந்திருந்தார்—பெய்ஜிங்கின் மூலோபாய சுற்றிவளைப்பு குறித்த அச்சங்களை அது பயன்படுத்திக் கொள்ள முடியுமென புது டெல்லி நம்புகிறது என்பதற்கு அதுவொரு அறிகுறியாகும்.

அவர்களது சந்திப்பின் முதல் நாளிலேயே, அவர் வலுக்கட்டாயமாக அந்த பிரச்சினையை எழுப்பினார். ஹூமாருக்கு அருகில் இந்திய வசமுள்ள எல்லைக்குள் எல்லைத் தாண்டி வந்திருந்த சீனத் துருப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென்ற இந்திய குற்றஞ்சாட்டுக்கு ஒரு உறுதிமொழியை ஜி இடமிருந்து அவர் பெற்றார்.

ஆனால் வியாழனன்று இந்தியாவின் ஊடகங்கள், பின்வாங்கியமை ஒரு தந்திரம் என்பதுடன் அவை விரைவிலேயே அவற்றின் நிலைப்பாடுகளுக்கு உடனடியாக திரும்பி இருந்தன என்று குற்றஞ்சாட்டினதெளிவாக, சீனாவுடன் எந்தவொரு மென்மையான உறவுகளையும் எதிர்க்கும் இராணுவ-பாதுகாப்பு ஸ்தாபகத்தின் பிரிவுகளிடமிருந்து வந்த கசிவுகளின் அடிப்படையில் அது அமைந்திருந்தது.

ஜி தெளிவாக அந்த பரபரப்பால் அதிர்ச்சியடைந்து, அந்த சம்பவத்தைக் குறைத்துக் காட்ட முனைந்தார். குற்றஞ்சாட்டப்படும் அந்த அத்துமீறல், தெளிவாக வரையறுக்கப்படாத எல்லைக்காட்டுப்பாட்டு கோடு பகுதியில் நடந்திருந்ததாக அறிவித்தார். எல்லை பிரச்சினை "நமது இருதரப்பு உறவுகளைப் பாதிக்க அனுமதிக்க" கூடாதென மன்றாடிய சீன ஜனாதிபதி, பெய்ஜிங்கும் புது டெல்லியும் அதை "குறுகிய காலத்தில்" தீர்த்துக் கொள்ள முடியுமென வலியுறுத்தினார். இறுதியாக மோடி மற்றும் ஜி, எல்லை பிரச்சினையைத் தீர்க்க அவர்கள் ஏற்பாடு செய்வதாக சூளுரைத்தனர், இப்பிரச்சினை தான் 1962இல் ஒரு சிறிய எல்லை யுத்தத்திற்கு, ஒரு "மூலோபாய பிரச்சினைக்கு" இட்டுச் சென்றது.

ஹூமார் அத்துமீறல் மீதான சர்ச்சை இந்த வாரம் வரையில் தொடர்ந்துள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் இந்திய-சீன ஊடக பேச்சுவார்த்தைகளில் பங்கெடுக்க இந்த வாரம் டெல்லிக்கு பயணிப்பதாக இருந்த சீன பத்திரிகை ஆசிரியர்களுக்கு அளித்திருந்த அனுமதியை திங்களன்று இந்திய அரசாங்கம் திரும்ப பெற்றதால், அந்த நிகழ்வே இரத்து செய்யப்பட்டது.