சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தோனேசியா

New Indonesian government faces slowing economy, rising social tensions

புதிய இந்தோனேசிய அரசாங்கம் மெதுவாகிவரும் பொருளாதாரத்தையும் அதிகரிக்கும் சமூக பதட்டங்களையும் சந்திக்கிறது

By John Roberts
18 September 2014

Use this version to printSend feedback

இந்தோனேசிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோகோ விடோடோ, அல்லது "ஜோகோவி" அக்டோபர் 20 ம் தேதி பதவியேற்கையில் அவருடைய நிர்வாகம் ஒரு மெதுவாகிவரும் பொருளாதார வளர்ச்சி, அதிகரிக்கும் சமூக பதட்டங்களையும் மற்றும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியிடமிருந்து "ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கான நிபந்தனைகளை எதிர் கொள்ளும்.

தன்னை ஒரு இலஞ்ச ஊழலற்ற மக்களின் மனிதராக, ஏழைகளின் நண்பனாக காட்டிக்கொண்டும், அரசாங்க நிதியளிக்கும் பன்னிரெண்டு வருட கல்வி மற்றும் இலவச உடல் நல பராமரிப்பு போன்ற வாக்குறுதிகளைக் கூறியும் விடோடோ தேர்தலை வென்றார். எவ்வாறிருப்பினும், சர்வதேச நிதி மூலதனம் கோரும் சிக்கன நடவடிக்கைகளை புதிய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்ல அழுத்தம் கொடுப்பதால் இந்த வாக்குறுதிகள் அனைத்தும் மிக விரைவாக கைவிடப்படும் அல்லது முழுமையாக புதைக்கப்படும்.

அதிகரிக்கும் சர்வதேச நிதியியலின் நிச்சயமற்ற தன்மை மற்றும் உலகலாவிய வீழ்ச்சி, குறிப்பாக சீன பொருளாதார வளர்ச்சியில் காணப்படும் மந்தம் ஆகியவற்றால் இந்தோனேஷிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலக வங்கியின் அறிக்கையின்படி சுசிலோ பாம்பாங் யுதோயோனோவின் பத்தாண்டு கால ஆட்சியில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2005இல் $256.84 பில்லியன் டாலர்களிலிருந்து 2013இல் $878.04 பில்லியன் டாலர்களுடன் மும்மடங்குக்கும் அதிகமாகியது.

2008 உலக நிதியியல் நெருக்கடிக்கு பின்னர், சீனாவிடமிருந்து பால்ம் எண்ணெய், ரப்பர், நிலக்கரி மற்றும் இதர கனிமங்களுக்கு ஏற்பட்ட அதிகரித்த தேவையின் விளைவாக இந்தோனேஷிய பொருளாதாரம் தொடர்ந்து விரிவடைந்தது. அது இதனால் உள்நாட்டு நுகர்வையும் அதிகரித்தது. நாட்டின் மத்திய வங்கியின் மதிப்பீட்டின் படி 2010-2012 காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.3 சதவிகிதமாக இருந்தது ஆனால் 2013-ல் 5.8 சதவிகதமாக குறைந்துவிட்டது மேலும் இந்த ஆண்டு 5.2 சதவிகிதத்திற்கு வீழ்ச்சியடையும் என்ற கணிக்கப்பட்டிருக்கிறது.

ஜூலையில் $124 மில்லியன் டாலர் ஒரு சிறிய வர்த்தக உபரி இருந்த போதிலும் 2014 ஆண்டுக்கான ஒட்டு மொத்த வர்த்தக பற்றாக்குறை சுமார் 1 பில்லியன் டாலரை அண்மித்து இருந்தது. ஏற்றுமதி ஆண்டுக்காண்டு 6 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. வர்த்தக பற்றாக்குறை இறக்குமதி 19 சதவிகிதத்திற்கு சற்று அதிகமான வீழ்ச்சியினால் ஓரளவிற்கு கட்டுப்படுத்த  கூடியதாக இருந்தாலும், இந்தோனேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் முக்கிய உந்து சக்தியான நுகர்வு மற்றும் உள்நாட்டு முதலீடு குறிப்பிட்டளவு வீழ்ச்சியை சந்தித்தது.

இந்த வீழ்ச்சி நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையான சீனாவிற்கான ஏற்றுமதியில் ஏற்பட்ட சரிவினால் குறிப்பிட்டளவு எடுத்துக்காட்டப்படுகின்றது. தேவைக்குறைவு மற்றும் பொருள்களின் சர்வதேச விலை வீழ்ச்சி ஆகியவற்றின் விளைவாக சீனாவிற்கான ஏற்றுமதி மதிப்பு 2011இல் 204 பில்லியன் டாலரிலிருந்து 2013இல் 183 பில்லியன் டாலர்களாக வீழ்ச்சியடைந்தது.

உள்நாட்டு காரணிகளாலும் ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பொருளாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசாங்கம் பெருமளவில் செலவிட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கோருகின்றனர். கடந்த மாதம் "இடிந்துபோகும் துறைமுகங்கள், சாலைகள் மற்றும் மின் விநியோகம்" குறித்து தி எகானமிஸ்ட்  இதழ் புகார் தெரிவித்துள்ளது.

மூலப்பொருட்களை வெறுமனே ஏற்றுமதி செய்வதை காட்டிலும் பதப்படுத்தும் ஆலைகளை கட்ட கனிம நிறுவனங்களை கட்டாயப்படுத்த யுதோயோனோ நிர்வாகம் சட்டம் இயற்றியது. ஜனவரியில் பதப்படுத்தப்படாத கனிமங்களை ஏற்றுமதி செய்ய கட்டுப்பாடுகளை விதித்து, ஒட்டு மொத்த பற்றாக்குறையை அதிகரித்தது.

வர்த்தக மற்றும் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறைகள் இரண்டும் மூலதன உள்பாய்ச்சலால் சமாளிக்கப்பட்டது. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகளின் பணத்தை அச்சடித்து புழக்கத்தை அதிகரிக்கும் அதன் கொள்கைகளின் விளைவான நிலையற்ற  பணமே காரணமாக இருக்கின்றது. மூலதன உள்பாய்ச்சல் மற்றும் நாணய மதிப்பை பராமரிக்கவும் இந்தோனேஷிய வங்கி ஒரு உள்நாட்டு வியாபாரத்தை பாதிக்கும் வகையிலான 7.5 சதவிகித வட்டி என்ற ஒரு உயர்ந்த குறியீடை வைத்துள்ளது.

வரவு செலவு திட்ட பற்றாக்குறையை குறைப்பதற்கும் அதன்மூலம் உள்கட்டமைப்பிற்கு நிதி கிடைக்கச் செய்வதற்கு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் நீண்டகால எரிபொருள் மானியத்தை இலக்காக கொண்டு அவற்றை நீக்க கோரியுள்ளனர். ஒரு குறிப்பிட தகுந்த எண்ணெய் ஏற்றுமதியாளராக இருந்த இந்தோனேஷியா, அதிகரித்துக்கொண்டிருக்கும் அதன் தேவைகளின் விகிதத்திற்கு இப்பொழுது இறக்குமதி செய்துக் கொண்டிருக்கிறது. உள்ளூர் எரிபொருள் விலையான ஒரு லிட்டர் 55 அமெரிக்க சென்ட்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் விலை சுமார் 98 சென்ட்களுக்கு இடையே இருக்கும் வேறுபாட்டை மானியமாக வழங்கும் தொகை சரி செய்கிறது. இதற்கு இந்த ஆண்டு 21 பில்லியன் டாலர்கள் மற்றும் 2015இல் 25 பில்லியன் டாலர்கள் அளவுக்கும் செலவு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடோடோ எரிபொருள் மானிய தொகையை குறைக்கும் அவருடைய திட்டங்களின் மீது ஒரு ஒரு அச்சுறுத்தும் அரசியல் மோதலை எதிர்கொள்கிறார். மானிய தொகை குறைப்புகளின் மீது முந்தைய நிர்வாகங்கள் பரந்த சீற்றமான எதிர்ப்புக்களை தூண்டியுள்ளன. அவை போக்குவரத்து செலவினங்களை நேரடியாக பாதிக்கின்றன மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்கின்றன. 1998இல் எரிபொருள் மீது மானிய தொகையை குறைக்குமாறு சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் மீதான எதிர்ப்புக்கள் சுகார்ட்டோ சர்வாதிகாரத்தின் வீழ்ச்சிக்கு பங்களிப்பு செய்தது.

'முறைசார்ந்த துறைகளில்' சீனாவின் சராசரி மாத வருமானம் 406 டாலருடன் ஒப்பிடும் போது இந்தோனேஷிய பொருளாதாரம் வெறும் 193 டாலர் மட்டுமே இருக்கிறது. நாட்டில் 240 மில்லியன் மக்களின் 40 சதவிகிதம் பெரும்பாலான கிராமப்புற மக்களை உள்ளடக்கி இருக்கும் 'முறைசாரா துறைகளில்' ஒரு நாளைக்கு 2 டாலர் அல்லது அதற்கும் குறைவான வருவாயில் வாழ்க்கை நடத்துகிறார்கள்.

ராய்ட்டர்ஸுக்கு அளித்த ஒரு நேர்காணலில் விடோடோ தனது முதலாளித்துவ சார்பு நிகழ்ச்சி நிரலை அறிவிப்பு செய்தார். ஜூலை 9 அன்று நடந்த அதிபர் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் ஜூலை 22ந்தேதி வரை தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கனிமங்கள் ஏற்றுமதி கொள்கைகளுக்கான மறுபேச்சுவார்த்தைகள் மற்றும் முதலீட்டாளர் ஆதரவான ஒழுங்குபடுத்தும் சீர்திருத்தங்களுடன் எரிபொருள் மானிய தொகை நீக்கம் ஆகியவை இதில் உள்ளடங்கி இருக்கின்றன.

அவருடைய வெற்றி மேற்கத்திய அரசாங்கங்கள் மற்றும் ஊடகங்களால் பரவலாக வரவேற்கப்பட்டது. அதாவது அவருடைய போட்டியாளர், முன்னாள் சுகார்ட்டோ காலத்து ஜெனரல் பிரபோவோ சுபியான்டோ நாட்டின் "சகபாடி முதலாளிகளுடன் மிகவும் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்ததாலும் மற்றும் பொருளாதார தேசியவாத கொள்கைகளுக்கு மிகவும் ஆதரவாளராக இருந்ததாலும் அவை கவலையடைந்தன. விடோடோ இராணுவ அமைப்பின் சக்திவாய்ந்த பிரிவுகளின் ஆதரவையும் பெற்றிருக்கிறார். ஆனால்  அவர் சர்வதேச நிதிய மூலதனத்தின் ஆணைகளை கடைப்பிடிப்பார் என்று அவர் தெளிவாக தெரிவித்திருக்கிறார்.

விடோடோ ஏற்கனவே பெட்ரோல் விலை மானிய தொகை மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்திருக்கிறார். ஆகஸ்ட் 27ந்தேதி பாலியில் யுதோயோனோவுடன் ஒரு இரண்டு மணி நேர சந்திப்புக்குப்பின் அவர் ஊடகங்களுக்கு கூறியதாவது: கடந்த இரவு குறிப்பாக எரிபொருள் விலையை உயர்த்துவதன் மூலம் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைக்க யுதோயோனோவை நான் கேட்டுக் கொண்டேன். ஆனால் யுதோயோனோ மறுத்துவிட்டார், அவர் மக்கள் மீது "இரக்கம் கொண்டுள்ளதாகபின்னர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

"நான் மக்கள் விரும்பாதவனாக இருக்க ஆயத்தமாக இருக்கிறேன். உற்பத்தி சார்ந்த திட்டங்களுக்கு அதிகமாக முதலீடு செய்ய எரிபொருள் மானிய தொகையை குறைப்பது நமக்கு தேவையாக இருக்கிறது.... பிற துறைகளுக்கும் அதிகமான மானிய தொகைகள் தேவைப்படுகின்றன. கண்டிப்பாக, இராணுவம் மற்றும் அரசு இயந்திரம் போன்ற "ஏனைய துறைகள்" பெருநிறுவனங்களுக்கு ஆதரவளிப்பவையாக இருக்கக்கூடும்.

ஏற்கனவே விடோடோ தன்னுடைய சொந்த இந்தோனேசிய ஜனநாயக போராட்ட கட்சிக்கு (PDI-P) உள்ளேயே எதிர்ப்பை எதிர் கொள்கிறார். கட்சி தலைமையின் அதாவது முன்னால் அதிபர் மேகவதி சுகார்னோபுத்ரி ஆதரவை அவர் பெற்றிருக்கிறார். ஆனால் எரிபொருள் விலை உயர்வு ஒரு கடைசி வழிமுறையாகத் தான் இருக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 30 ஆம் தேதி PDI-P இன் மத்திய செயற்குழு உறுப்பினர் மரூரார் சிராத் கூறினார்.

விடோடோவின் சந்தை ஆதரவு திட்டங்கள் மீதான வேறுபாடுகள் ஒரு அமைச்சரவையை அமைப்பதிலும் பாராளுமன்ற பெரும்பான்மையை பெறுவதிலும் அவருக்குள்ள சிக்கல்களை ஒன்றிணைக்கின்றன. மக்கள் பிரதிநிதித்துவ சபை (DRP) எனப்படும் இந்தோனேசிய பாராளுமன்றத்தின் கீழ்சபையில் இருக்கும் 560 இடங்களில் 207 இடங்களை மட்டும் வைத்திருக்கும் ஜனநாயக போராட்ட கட்சி (PDI-P), தேசிய முஸ்லீம் விழிப்புணர்வு கட்சி (PKB), தேசிய ஜனநாயக கட்சி மற்றும் ஹனுரா ஆகிய நான்கு கட்சி கூட்டணி துணை அதிபர் பதவிக்கான வேட்பாளர் ஜுசுப் கல்லாவுடன் விடொடொவின் வேட்பு மனுவையும் ஆதரித்தன.

மந்திரி சபையில் ஒரு இடத்தை கைப்பற்றுவதற்கான வாய்ப்பிற்காக பிரபோவோ முகாமிலிருந்து கட்சிகள் பிரிந்து வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அதில் சுகார்த்தோ சர்வாதிகாரத்தின் கட்சியான Golkar; பிரபோவோவின் Gerindra; யுதோயோனோவின் Democrat Party; Muslim National Mandate Party (PAN); Prosperous Justice Party and the United Development Party ஆகியவை உள்ளடக்கியது.

தேர்தல் முடிவு பற்றிய சட்டரீதியான எதிர்ப்பை பிரபோவோ இழந்தார். ஆகஸ்ட் 21 அன்று, அது அரசியலமைப்பு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டபோதிலும் தேர்தல் முடிவின் சட்டபூர்வதன்மையை அவர் தொடர்ந்து எதிர்த்தார். அவரும் அவருடைய கூட்டாளிகளும் தேர்தல் மோசடிக் குறித்த அவர்களின் கோரிக்கைகளை தாங்களே சொந்த விசாரணையை நடத்த தங்கள் நாடாளுமன்ற பெரும்பான்மையை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் பங்கு குறித்த உச்ச நீதிமன்றத்தின் ஒரு மறுஆய்வை விரும்புகிறார்கள். ஜகார்த்தா ஆளுனர் பதவியிலிருந்து விடோடோவின் விலகலை தடுக்கவும் அவர் அதிபராக பதவியேற்பதை தாமதப்படுத்த அல்லது தவிர்க்க பிரபோவோவின் ஆதரவாளர்கள் ஜகார்த்தா பிராந்திய அரசாங்கத்தில் தங்களுக்கு இருக்கும் எண்ணிக்கையை பயன்படுத்தப்போவதாகவும்  அச்சுறுத்தினர்.  

விடோடோவுக்கு எதிராக இத்தகைய தொடர்ச்சியான நகர்வுகள் இந்தோனேஷிய ஆளும் மேற்தட்டுகளுக்கு உள்ளேயே குறிப்பாக பொருளாதார கொள்கை குறித்த தீவிர வேறுபாடுகளை சுட்டிக்காட்டுகிறது. இக்கொள்கை  தொடரும் நாட்டின் பொருளாதார சரிவின் மூலமாக இன்னும் சிக்கலாகின்றது.