சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

As EU commissioner, former Socialist Party minister demands more austerity in France

ஐரோப்பிய ஒன்றிய கமிஷனரான, சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் மந்திரி பிரான்சில் கூடுதல் சிக்கன நடவடிக்கைகளை கோருகிறார்

By Antoine Lerougetel
28 March 2014

Use this version to printSend feedback

மார்ச் 11 இல் France Info இல் வழங்கிய வானொலி நேர்காணலில், தற்போது பொருளாதார மற்றும் நிதிய விவகாரங்கள் மற்றும் வரிவிதிப்புக்கான ஐரோப்பிய கமிஷனராக உள்ள சோசலிஸ்ட் கட்சியின் (PS) முன்னாள் நிதி மந்திரி பியர் மொஸ்கோவிச்சி, பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தை ஆழமான புதிய வெட்டுக்களை நடைமுறைப்படுத்துமாறு முறையிட்டார். கிரீஸில் புதிய சிரிசா அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டுமென்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் முறையீடுகளையும் அவர் நியாயப்படுத்தினார்.

ஏற்கனவே 50 பில்லியன் யூரோ வெட்டுக்களை திணித்துள்ள ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட், 2015 வாக்கில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வரவு-செலவு திட்ட பற்றாக்குறையை 3 சதவீதத்திற்கு கொண்டு வரும் அவரது வாக்குறுதியை பூர்த்தி செய்யத் தவறியுள்ளார். அது GDP இல் 4.1 சதவீதமாக உள்ளது, ஆகவே பாரீஸ் இந்த ஆண்டிற்கான துணை வரவு-செலவு திட்ட வெட்டில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட 4 பில்லியன் யூரோவிற்குக் கூடுதலாக குறைந்தபட்சம் 26 பில்லியன் யூரோவைச் சேர்க்க வேண்டியிருக்கும்.

ஐரோப்பிய கமிஷன் அதற்கு வழங்கியிருந்த இரண்டு ஆண்டுகால அவகாசத்திற்கு கைமாறாக, பிரான்ஸ், ஏப்ரல் இறுதி வாக்கில், கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கான விரிவார்ந்த முன்மொழிவுகளைஅதாவது அது தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கவும் மற்றும் அவர்களது ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வெட்டவும் தொழில்வழங்குனர்களுக்கு வசதி செய்து கொடுக்கும் முன்மொழிவுகளைகமிஷனுக்கு வழங்க வேண்டி உள்ளது என்பதை மொஸ்கோவிச்சி பாரீஸிற்கு நினைவூட்டினார். ஜூன் இறுதிவாக்கில், வரவு-செலவு திட்ட வெட்டுக்கள் எங்கே விழும் என்பதை பாரீஸ் விவரித்தாக வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றிய கடும் கட்டுப்பாடுகள், கிரீஸில் உருவாக்கியதைப் போன்ற ஒருவிதமான பொருளாதார மற்றும் சமூக பேரழிவை நோக்கி இத்தகைய கொள்கைகள் இட்டு செல்கின்றன. மொத்தம் உள்ள 28.6 மில்லியன் தொழிலாளர் சக்தியில் 5.5 மில்லியன் மக்களைப் பாதித்து கொண்டு, பிரான்சின் வேலைவாய்ப்பின்மை உத்தியோகபூர்வமாக 10 சதவீதத்திற்கு அதிகமாகஉண்மையில் 19.2 சதவீதமாக உள்ளது. உள்ளாட்சி அரசாங்க செலவின வெட்டுக்கள் சுகாதார மற்றும் கட்டுமானத்துறை இரண்டிலும் பத்தாயிரக் கணக்கான வேலைகளை வெட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து எந்தவொரு அவகாச காலமும் வழங்கப்படாத கிரீஸூடன் ஒப்பிடுகையில், பிரான்ஸ் ஒப்பீட்டளவில் சாதகமாக கையாளப்பட்டிருந்ததாக, அவரை நேர்காணல் செய்த ஜோன்-பிரான்சுவா அஷ்ஷிலி கருதிய போது, மோஸ்கோவிச்சி தெரிவித்தார், “நான் முற்றிலுமாக இந்த ஒப்பீட்டை நிராகரிக்கிறேன், இது முற்றிலும் இழிவுபடுத்துவதாக நான் காண்கிறேன்,” என்றார். பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவதும் மற்றும் உலகின் ஐந்தாவதும் மிகப்பெரிய பொருளாதாரம் என்று கூறிய அவர், அதேவேளையில் கிரீஸோ ஐரோப்பிய பொருளாதாரத்தில் வெறும் 2 சதவீதமாக மட்டுமே இருக்கிறதென்றும், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 175 சதவீத தேசிய கடனை அது கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

முக்கூட்டு (ஐரோப்பிய ஒன்றிய கமிஷன், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி) மீண்டும் ஏதென்ஸிற்குத் திரும்ப வந்திருப்பதாகவும், அது "கிரேக்க விவகாரங்களில் அவற்றின் மூக்கை நுழைப்பதாகவும்" அஷ்ஷிலி தெரிவித்த போது, மொஸ்கோவிச்சி அவற்றை நியாயப்படுத்த பாய்ந்தார். அவர் தெரிவித்தார், முக்கூட்டு அதிகாரிகள் வெறுமனே தொழில்நுட்ப விபரங்களையே சரிபார்த்தனர். சிக்கன நடவடிக்கைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முறையீடுகளுக்கு சிரிசா அடிபணிந்தமை குறித்து மொஸ்கோவிச்சி கூறுகையில், சர்வதேச அளவிலான சிரிசாவின் போலி-இடது அனுதாபிகளது கருத்துக்களையே எதிரொலிக்கும் வகையில், “அவர்கள் காட்டிக்கொடுக்கவில்லை,” என்றார்.

இது சிரிசாவின் வரலாற்று செயலை உதாசீனப்படுத்துவது என்பது மட்டுமல்ல, மாறாக சீரழிந்த கிரேக்க பொருளாதாரத்திடமிருந்து இரக்கமின்றி சிக்கன நடவடிக்கைகளை கோரும் மொஸ்கோவிச்சி உட்பட ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளின் கொள்கையை பொய்யாக பாதுகாப்பதும் ஆகும்.

அவர் தெரிவித்தார், “கிரேக்க அரசாங்கம் அதன் திட்டத்தை செயல்படுத்துவதை நாம் தடுக்க வேண்டுமா, அது ஜனநாயகத்தை மறுப்பதாக ஆகிவிடும்ஐரோப்பாவில் இன்னமும் தேசிய இறையாண்மை நிலவுகிறது,” என்றார். ஐரோப்பிய ஒன்றியம் ஒருங்கிணைந்து "இரண்டு அத்தியாவசிய விடயங்களுக்கு மதிப்பளிக்கிறது" —ஒன்று வாக்காளர்களின் வாக்குரிமை, ஆம், அடுத்தது சமூக மாற்றத்திற்கான தேவை, ஆம்மறுபுறம், திரும்ப செலுத்த வேண்டிய கடன் அங்கே உள்ளது என்பதில் அவர்கள் அவர்களது பங்காளிகளுக்கு பொறுப்புறுதிகளை அளித்துள்ளார்கள் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்,” என்றார்.

உண்மையில் மொஸ்கோவிச்சியும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் கிரேக்க மக்களுக்கு ஜனநாயகத்தை நேரடியாக நிராகரிப்பதில் பங்கெடுத்திருந்தனர். கிரீஸின் கடன்களைத் தள்ளுபடி செய்வது மற்றும் சிக்கன நடவடிக்கைகளை நிறுத்துவது என்ற சிரிசாவின் பிரச்சார வாக்குறுதிகளைக் கைவிட்டு, சிரிசாவும் ஐரோப்பிய ஒன்றியமும் கடந்த மாதம் உடன்பாடுகளில் கையெழுத்திட்டன. “திரும்ப செலுத்த வேண்டிய கடன் அங்கே இருக்கின்றன" என்ற மொஸ்கோவிச்சியின் கருத்தே எடுத்துக்காட்டுவதைப் போல, ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை உத்தரவுகளுக்கு சிரிசா மானக்கேடாக அடிபணிந்தது என்பதை அவரே ஒப்புக் கொண்டார்.

மொஸ்கோவிச்சி சோசலிஸ்ட் கட்சியின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தை உவமையாக்குகிறார். 2012 இல் ஹோலாண்ட் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னதாக, எரிச்சலூட்டும் விதத்தில் அது ஜேர்மன் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய சிக்கன கொள்கைகளை எதிர்ப்பதாக காட்டிக் கொண்டது, அதேவேளையில் பிரான்சில் அதன் சிக்கன நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்த தயாரிப்பு செய்தது. ஆனால் மொஸ்கோவிச்சி போன்ற சோசலிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கு புரூசெல்ஸில் செல்வாக்கான பதவிகள் வழங்கப்பட்டதும், அவர்கள் சிரமமின்றி பிரான்ஸ் மற்றும் கிரீஸ், மற்றும் ஐரோப்பா எங்கிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன முறையீடுகளை நடைமுறைப்படுத்த திரும்பிவிட்டனர்.

இது, சோசலிஸ்ட் கட்சி எதிலிருந்து அதன் அங்கத்தவர்களை ஈர்த்ததோ, அந்த குட்டி-முதலாளித்துவ சமூக அடுக்குகளின் அரசியல்ரீதியில் ஊழல்மிகுந்த குணாம்சத்தைப் பிரதிபலிக்கிறது. மொஸ்கோவிச்சி, 1984 வரையில், புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சிக்கு (NPA) முன்னோடி அமைப்பான போலி-இடது புரட்சிகர கம்யூனிஸ்ட் லீக்கில் (LCR) ஒரு மாணவ உறுப்பினராக இருந்தவராவார்.

1984இல் மேற்தட்டினரின் தேசிய நிர்வாக பள்ளியிலிருந்து (ENA) பட்டப்படிப்பை முடித்ததும், மொஸ்கோவிச்சி அவரது ஆசிரியர்களில் ஒருவரான டொமினிக் ஸ்ட்ரவுஸ்-கான் (பின்னர் இவர் IMF இன் தலைவரானார்) வழிகாட்டுதலின் கீழ், சோசலிஸ்ட் கட்சிக்காக LCR இல் இருந்து வெளியேறினார். ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனுக்காக வேலை செய்து வந்த சோசலிஸ்ட் கட்சியின் "வல்லுனர் குழுவில்" அவர் செயலாளராக ஆனார். லியோனல் ஜோஸ்பனின் பன்முக இடது அரசாங்கத்தின் கீழ் அமைச்சக பதவி வகித்த பின்னர், அவர் 2012 இல் பிரான்சுவா ஹோலாண்டின் ஜனாதிபதி பிரச்சாரத்தின் தலைவரானார்.

2005 பொது வாக்கெடுப்பில் பிரான்சில் நிராகரிக்கப்பட்ட ஐரோப்பிய அரசியலமைப்பை வரைய மொஸ்கோவிச்சி உதவி இருந்தார். கிரேக்க பொருளாதாரம் 25 சதவீதம் சுருங்குவதற்கும், ஓர் உத்தியோகப்பூர்வ வேலையின்மை விகிதம் 26.1 சதவீதத்திற்குஇளைஞர்களிடையே 60 சதவீதத்திற்குஅதிகமாவதற்கும், மற்றும் கூலிகள் 30 சதவீதத்திற்கும் கூடுதலாக வீழ்ச்சி அடைவதற்கும், இட்டுச் சென்றுள்ள மூர்க்கமான சிக்கன நிபந்தனைகளுடன் கூடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் கிரீஸ் பிணையெடுப்பை நெறிப்படுத்துவதில் ஈடுபட்டவராவார்.