சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா

US defence secretary warns China over Asian maritime disputes

ஆசிய கடல்போக்குவரத்து பிரச்சினைகள் மீது அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் சீனாவை எச்சரிக்கிறார்

By Peter Symonds
9 April 2015

Use this version to printSend feedback

பதவியில் நியமிக்கப்பட்டதற்குப் பிந்தைய அவரது ஆசியாவிற்கான முதல் பயணத்தில், அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஆஷ்டன் கார்ட்டர், தெற்கு சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல்கள் மீது பற்றியெறிந்துவரும் கடல்பிராந்திய பிரச்சினைகளைக் குறித்து சீனாவை எச்சரித்தார். ஜப்பானிய பாதுகாப்பு மந்திரி ஜென் நகாடனியுடன் இணைந்து டோக்கியோவில் நேற்று கார்ட்டர் பேசுகையில், “இத்தகைய பிரச்சினைகளை இராணுமயமாக்குவதற்கு எதிராக ஒரு பலமான நிலைப்பாட்டை" அமெரிக்கா எடுத்து வருவதாக அறிவித்தார்.

கார்ட்டரின் கருத்துக்கள், அமெரிக்க பசிபிக் படைப்பிரிவின் தளபதி அட்மிரல் ஹாரி ஹாரீஸ் கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் வெளியிட்ட கருத்துக்களோடு ஒத்திருந்தன. இராணுவ வசதிகளைக் கட்டமைப்பதற்காக தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய தீவுக்கூட்டம் மற்றும் கடல்குன்றுகளின் மீது செயற்கையான தீவுகளைக் கட்டிவருவதற்காக ஹாரீஸ் சீனாவைக் கண்டித்தார். "சீனா தூர்வாரும் இயந்திரங்கள் மற்றும் புல்டோசர்களுடன் ஒரு பெரும் மண்சுவரை உருவாக்கி வருவதாக" ஹாரீஸ் முறையிட்டார்.

Yomiuri Shimbun இல் நேற்று பிரசுரிக்கப்பட்ட ஒரு பேட்டியில் கார்ட்டர் அறிவிக்கையில், சீனாவின் நிலத்தைச் சீர்படுத்தும் நடவடிக்கைகள் "பதட்டங்களைத் தீவிரமாக அதிகரிப்பதாகவும், இராஜாங்க தீர்வுகளுக்கான சாத்தியக்கூறுகளைக் குறைத்து வருவதாகவும்" அறிவித்தார். “அதன் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறும் மற்றும் நடைமுறைகளை நிதானத்துடன் வைத்திருக்குமாறும்" அவர் பெய்ஜிங்கிற்கு அழைப்புவிடுத்தார்.

கார்ட்டரினது கருத்துக்கள் முற்றிலும் போலித்தனமானவை. அதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாக, ஒபாமா நிர்வாகம், நிதானமான நடைமுறைகளில் இருந்து வெகுதூரம் விலகி, சீனாவின் அண்டைநாடுகளான ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் அவற்றின் கடல்சார் உரிமைகோரல்களைக் கூடுதல் ஆக்ரோஷத்துடன் வலியுறுத்துவதற்கு அவற்றை வேண்டுமென்றே தூண்டிவிட்டுள்ளது.

கடல்பிராந்திய பிரச்சினைகளில் அது நடுநிலை வகிப்பதாக பிரகடனப்படுத்திக் கொள்கின்ற அதேவேளையில், வாஷிங்டன் தெளிவாக சீனாவின் விரோதிகளை ஆதரித்து வருகிறது. கிழக்கு சீனக் கடலின் சர்ச்சைக்குரிய சென்காயு/தியாயு தீவுகள் மீது சீனா உடனான ஜப்பானின் எந்தவொரு போரிலும் அமெரிக்கா ஜப்பானை ஆதரிக்குமென ஒபாமா கடந்த ஆண்டு டோக்கியோவில் குழப்பத்திற்கிடமின்றி வாக்குறுதி அளித்தார்.

கார்ட்டரின் கருத்துக்களுக்கு விடையிறுத்து, சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் Hua Chunying, அமெரிக்கா "கூடுதல் பொறுப்புடன்" நடந்து கொள்ளுமாறு அழைப்புவிடுத்தார். “அந்த பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க சீனாவின் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் விருப்பங்களை அமெரிக்க தரப்பு மதிக்குமென நாங்கள் நம்புகிறோம்" என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ஆசியாவிற்குப் புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், கார்ட்டர் அறிவிக்கையில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் "முன்னெடுப்பு" அல்லது "மறுசமன்படுத்தலுக்கு" அமெரிக்கா பொறுப்பேற்றுள்ளதை மறுஉறுதிப்படுத்தி, அரிஜோனாவில் ஒரு பிரதான உரையை வழங்கினார். சீனாவை இலக்கில் வைத்த ஒரு பரந்த இராஜாங்க, பொருளாதார மற்றும் இராணுவ மூலோபாயமான அந்த "முன்னெடுப்பு", உலகின் வேகமாக வளர்ந்துவரும் அந்த பொருளாதார பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வைப்பதை நோக்கமாக கொண்டதாகும்.

குறிப்பிடத்தக்க வகையில், ஆசியாவில் அமெரிக்க இராணுவ ஆயுதப்படுத்தலுடன் சேர்ந்து, அந்த "முன்னெடுப்பின்" பொருளாதார கொள்கை திட்டத்தின் மீது—அதாவது பசிபிக் நாடுகளுக்கு இடையிலான கூட்டு பங்காண்மை (TPP) மீது—கார்ட்டர் கவனத்தைக் குவித்தார். அது அமெரிக்க காங்கிரஸின் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது. “ஒரு பாதுகாப்பு செயலரிடம் இருந்து இதை செவியுறுவீர்கள் என்பதை நீங்கள் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால் ஒரு பரந்த அர்த்தத்தில் நமது மறுசமன்படுத்தலைப் பொறுத்த வரையில், TPP ஐ நிறைவெற்றுவது என்பது மற்றொரு விமானந்தாங்கிய கப்பலைப் போல எனக்கு மிகவும் முக்கியமானதாகும்… நமது நலன்கள் மற்றும் நமது மதிப்புகள் இரண்டையும் பிரதிபலிக்கும் ஓர் உலகளாவிய ஒழுங்கமைப்பை ஊக்குவிக்க அது நமக்கு உதவும்,” என்றார்.

இந்த கருத்து, வாஷிங்டனுக்கு TPP இன் முக்கியத்துவத்தையும் மற்றும் அதன் ஆக்ரோஷமான குணாம்சத்தையும் அடிக்கோடிடுகிறது. அமெரிக்க பெருநிறுவனங்களும் மற்றும் பொருளாதார நலன்களும் ஆதாயமடையும் வகையில், ஆசியா எங்கிலும் வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான வரையறைகளை உத்தரவிடுவதற்கு குறைவில்லாத எதையும் அது நோக்கமாக கொண்டிருக்கவில்லை. “இறுதியாக எங்களின் இராணுவ பலம், எங்களது துடிப்பான, ஈடுஇணையற்ற, அதிகரித்துவரும் பொருளாதார அடித்தளத்திலே தான் தங்கியுள்ளது,” என்பதை கார்ட்டர் வலியுறுத்தினார்.

அமெரிக்க மின்னணு, ஊடக மற்றும் மருந்துத்துறை நிறுவனங்கள் பெரிதும் சார்ந்துள்ள "அறிவுசார் சொத்துரிமைகளைப்" பாதுகாப்பதும், அமெரிக்க முதலீட்டிற்கு இருக்கும் அனைத்து சட்டரீதியான, நெறிமுறைரீதியான மற்றும் அரசாங்கரீதியான தடைகளை அகற்றுவதுமே TPP இன் மையத்தில் அமைந்துள்ளது. இந்த அரங்கில், பேரம்பேசும் தரப்பில் சீனா கிடையாது, ஆனால் அது அதன் சொந்த வர்த்தகம் மற்றும் பொருளாதார உடன்படிக்கைகளைப் பின்தொடர்ந்து வருகிறது.

அனைத்திற்கும் மேலாக சீனா உடனான ஒரு போருக்கு உந்துதல் வழங்கும், அமெரிக்காவின் ஆசிய-பசிபிக் இராணுவ படைகளின் மறுசீரமைப்பு மற்றும் பரந்த ஆயத்தப்படுத்தலை கார்ட்டர் விவரித்தார். இதில் உள்ளடங்குபவை:

* மேற்கு பசிபிக்கில் உள்ள அமெரிக்க இராணுவதளங்கள் மற்றும் கடற்படை உடைமைகளில் இருந்து சீன பெருநிலத்தின் மீது ஒரு பாரிய வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதலைத் தொடுக்க கருதுகின்ற, பெண்டகனின் AirSea Battle போர் திட்டத்திற்காக, சிறப்பார்ந்து வடிவமைக்கப்பட்ட புதிய இராணுவ தளவாடங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. “ஒரு புதிய, தொலைதூரம் சென்று தாக்கும் கண்டறியவியலா குண்டுவீசி மற்றும் ஒரு புதிய, தொலைதூரம் சென்று தாக்கும் கப்பலிருந்து ஏவப்படும் கப்பல் தகர்ப்பு ஏவுகணை" ஆகியவற்றுக்கு கூடுதலாக, மின்காந்த சக்திகளைப் பிரயோகிக்கும் "ஒளிக்கதிர்வீச்சு துப்பாக்கிகள் (rail gun) போன்ற புதிய ஆயுதங்கள்" மீதும், மற்றும் "வான்வழி, மின்னணு புதிய போர்முறை மற்றும் சில ஆச்சியமூட்டுபவை உள்ளடங்கலாக ஏனைய நவீன தகைமைகள்" மீதும் அமெரிக்கா வேலை செய்து வருவதாக கார்ட்டர் விவரித்தார்.

* சமீபத்திய வெர்ஜினீய ரக அணுஆயுத நீர்மூழ்கிக்கப்பல் மற்றும் P-8 உளவுபார்ப்பு விமானங்கள், அத்துடன் போர் விமானங்கள் மற்றும் குண்டுவீசிகள் உட்பட, அதன் அதிநவீன ஆயுத அமைப்புகள் சிலவற்றை பெண்டகன் ஏற்கனவே ஆசியாவிற்கு அனுப்பி உள்ளது. “சான்றாக, எங்களது புதிய கண்டறியவியலா அழிப்பான் Zumwalt உட்பட, எங்களின் அதிநவீன ஆயுதங்களை நாங்கள் தொடர்ந்து பசிபிக்கிற்கு அனுப்புவோம்,” என்றார்.

* ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் உடனான புதிய இராணுவதள ஏற்பாடுகள் உட்பட அப்பிராந்தியம் எங்கிலும் அமெரிக்கா அதன் இராணுவ படைகளைப் பரந்தளவில் மறுபங்கீடு செய்து வருகிறது. வடகிழக்கு ஆசியாவில், தென் கொரியா மற்றும் ஜப்பானில், அதுவும் குறிப்பாக ஒகினாவாவில், பெண்டகன் அதன் இராணுவத்தளங்களை மறுசீரமைப்பு செய்து வருவதுடன், குவாமை (Guam) அப்பிராந்தியத்திற்கான ஒரு "மூலோபாய மையமாக" மாற்றி வருகிறது. “ஜப்பான், கொரியா மற்றும் குவாமில், பனிப்போருக்குப் பின்னர் நாங்கள் நான்கு மிகப்பெரிய இராணுவ கட்டுமான திட்டங்களின் மத்தியில் உள்ளோம்,” என்று கார்ட்டர் பெருமை கொண்டார்.

* அமெரிக்கா அப்பிராந்தியத்தில் "எங்களின் கூட்டணிகளைத் தொடர்ந்து புதுப்பித்து வருகிறோம். “புத்தம் புதிய பங்காண்மைகளை ஸ்தாபிப்பது", "பயிற்சி மற்றும் ஒத்திகைகளின் அதிகரித்த வேகத்தைப்" பேணுவது ஆகியவை இதில் உள்ளடங்குமென கார்ட்டர் வலியுறுத்தினார். அமெரிக்காவும் பிலிப்பைன்ஸூம் ஆண்டுதோறும் நடத்தும் அவற்றின் Balikatan இராணுவ ஒத்திகைகளைத் தொடங்க உள்ளன, அது கடந்த ஆண்டை விட அதன் அளவில் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் ஆஸ்திரேலிய இராணுவ சிப்பாய்களையும் உள்ளடக்கி இருக்கும்.

அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள், தலையீடுகள் மற்றும் போர்களில் ஜப்பானிய ஆயுத படைகளை மேற்கொண்டு நேரடியாக ஒருங்கிணைக்கும் புதிய அமெரிக்க-ஜப்பான் பாதுகாப்பு வழிகாட்டிநெறிகளை இறுதி செய்வதே டோக்கியோவிற்கான கார்ட்டர் விஜயத்தின் பிரதான நோக்கமாக இருந்தது.

வாஷிங்டனின் ஊக்குவிப்புடன், ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே அந்நாட்டின் இராணுவ மற்றும் பாதுகாப்பு எந்திரங்களின் ஒரு விரிவாக்கத்துடன் முன்நகர அழுத்தமளிக்கிறார், அத்துடன் ஜப்பானிய அரசாங்க நடவடிக்கைகளுக்கு இருக்கும் அரசியலமைப்புரீதியிலான மற்றும் சட்டரீதியிலான தடைகளையும் முடிவுக்குக் கொண்டு வர நகர்ந்துள்ளார். கடந்த ஆண்டு, அவரது அரசாங்கம் "கூட்டாக சுய-பாதுகாப்பை" அனுமதிக்கும் வகையில்—அதாவது அமெரிக்க ஆக்கிரமிப்பு போர்களில் ஜப்பானிய இராணுவம் பங்கெடுக்க உதவும் வகையில்—அந்நாட்டின் அரசியலமைப்பிற்கு "மறுவிளக்கம்" அளித்தது.

மறுதிருத்தம் செய்து எழுதப்பட்ட இந்த இருதரப்பு பாதுகாப்பு வழிகாட்டிநெறிகள் இந்த "மறுவிளக்கத்தைத்" தான் பிரதிபலிக்கின்றன. ஜப்பானிய பாதுகாப்பிற்காக அமெரிக்கா செயல்படாத நேரத்திலும் கூட, ஜப்பான் அமெரிக்க படைகள் மீதான ஒரு தாக்குதலுக்கு—நிஜமாகவோ அல்லது சதிகள் மூலமாகவோ—விடையிறுப்பு காட்ட அந்த வழிகாட்டிநெறிமுறைகள் அனுமதிக்கும்.

புதிய விதிமுறைகள் "ஒரு பெரிய, பெரிய உடன்பாடாகும்" என்று பெயர் வெளியிட விரும்பாத மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உற்சாகத்தோடு வாஷிங்டன் போஸ்டிற்கு தெரிவித்தார். அவர் குறிப்பாக, தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் ஏவுகணை அமைப்புமுறைகளைப் பெரியளவில் ஒருங்கிணைப்பதன் மீது ஒருமுனைப்பட்டிருந்தார், அதற்கு அந்த வழிகாட்டி நெறிமுறைகள் உதவக்கூடும். “ஏவுகணை பாதுகாப்புடன், நிறைய ராடார்களை நீங்கள் கொண்டிருப்பீர்கள், நிறைய குண்டுகளை நீங்கள் கொண்டிருப்பீர்கள், ஒரு [ஏவுகணை] படுகொலைக்கு நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கும்,” என்றார்.

ஜப்பான் மற்றும் தென் கொரியா உடன் இணைந்து அமெரிக்கா அபிவிருத்தி செய்து வரும் தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் ஏவுகணை அமைப்புமுறையில் அங்கே "தற்காப்புக்கானது" எதுவும் கிடையாது. அனைத்திற்கும் மேலாக, அவை பெண்டகன் மூலோபாயத்தினது பாகமாக சீனா உடனான ஓர் அணுஆயுத போரில் சண்டையிடுவதற்கான உள்ளன. முதலில் அமெரிக்கா அணுஆயுத தாக்குதல் நடத்துகையில், ஏவுகணை தகர்ப்பு அமைப்புமுறைகள் மிஞ்சிய எந்தவொரு சீன ஏவுகணைகளையும் சுட்டுவீழ்த்த முனையும்.