சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

After Le Pen’s pro-Nazi outburst, French media try to normalize neo-fascists

லு பென்னின் நாஜி-ஆதரவு வெடிப்புக்குப் பின்னர், பிரெஞ்சு ஊடகங்கள் நவ-பாசிசவாதிகளை சாதாரணமானவர்களாக காட்ட முயல்கின்றன

By Francis Dubois
13 April 2015

Use this version to printSend feedback

நவ-பாசிசவாத தேசிய முன்னனி கட்சியின் இப்போதைய தலைவர் மரீன் லு பென்னுக்கும், அவரது தந்தையும் அக்கட்சியின் ஸ்தாபகரும் கௌரவ தலைவருமான ஜோன்-ரி லு பென்னுக்கும் இடையிலான ஒரு பகிரங்க மோதல் வடிவத்தில், அக்கட்சிக்குள் கடந்த வாரம் ஒரு நெருக்கடி வெடித்தது.

ஊடகங்கள் செயலூக்கத்துடன் தலையீடு செய்துள்ள இந்த மோதல், மட்டுப்படுத்தப்பட்ட விற்பனையைக் கொண்ட ஒரு யூத-விரோத மற்றும் விச்சி-ஆதரவு பிரசுரமான வலதுசாரி Rivarol வாரயிதழில் ஏப்ரல் 9 அன்று பிரசுரிக்கப்பட்ட ஜோன்-மரி லு பென்னின் ஒரு நீண்ட பேட்டியால் தூண்டிவிடப்பட்டது. நாஜி-ஒத்துழைப்பாளரான விச்சி ஆட்சிக்கு ஆதரவளிப்பது, இனப்படுகொலையை மறுப்பது மற்றும் நாஜி ஆக்கிரமிப்பின் குற்றங்களைக் குறைத்துக் காட்டுவது ஆகியவற்றை பிரெஞ்சு வலதுசாரி அரசியலின் அடித்தளமாக உருவாக்குமாறு அவர் பெரும்பாலும் திரும்ப திரும்ப கூறி வந்திருப்பதாக, அந்த அடிப்படை கண்ணோட்டங்களின் ஒரு திரண்ட வடிவை அவர் (ஜோன்-மரி) வலியுறுத்தினார்.

நாஜி படுகொலை முகாம்களில் உள்ள விஷவாயு கூடங்கள் "வரலாற்றின் விபர புள்ளியாகும்" என்று அவரது முந்தைய கருத்துக்களை RMC ரேடியோவில் ஏப்ரல் 2 அன்று ஏற்கனவே அவர் வலியுறுத்தி இருந்தார்.

இத்தகைய கருத்துரைகளும் மற்றும் Rivarol பேட்டியும் மரீன் லு பென்னைச் சுற்றியுள்ள தேசிய முன்னணி தலைவர்களிடமிருந்து ஓர் ஆக்ரோஷமான பகிரங்க விடையிறுப்பைக் கொண்டு வந்தன. வரவிருக்கும் பிராந்திய தேர்தல்களில் அவர் தந்தையை வேட்பாளராக நிறுத்துவதை அப்பெண்மணி எதிர்க்க போவதாக ஏப்ரல் 9 அன்று மரீன் லு பென் பகிரங்கமாக அறிவித்தார். அதற்கடுத்த நாள், அப்பெண்மணி அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க போவதாக அறிவித்தார். அவரிடமிருந்து (ஜோன்-மரியிடமிருந்து) தங்களைத்தாங்களே பகிரங்கமாக தூர விலக்கிக் கொண்ட தேசிய முன்னணியின் மூத்த தலைவர்கள், அவரது இராஜினாமாவிற்கு அழைப்புவிடுத்தனர். அந்த விவகாரம் மீதான செய்திகள், அதை தேசிய முன்னணியின் தலைமைக்குள்ளே நடக்கும் ஒரு "மாற்றத்திற்கிடமில்லா முறிவாக" விவாதித்தன.

பிரிட்டிஷ் பத்திரிகைகள் அரச குடும்பத்தின் ஒரு நெருக்கடியை வர்ணிப்பது போல, பிரெஞ்சு ஊடகங்கள் நவ-பாசிச தலைவர்களது அறிக்கைகளை, அதே கவனத்துடன், குறைந்தபட்சம் சிலவற்றை பொறுத்த வரையில், அதே அக்கறையுடன் பின்தொடர்ந்து வருகின்றன. பல்வேறு தேசிய முன்னணி தலைவர்களும் எண்ணிலடங்கா கட்டுரைகள் மற்றும் காணொளிகளில் அவர்களது கண்ணோட்டத்தைத் தெரிவிக்க அழைக்கப்படுகின்றனர்.

மரீன் லு பென் நேரடியாகவும் வேகமாகவும் இந்த நெருக்கடியால் வழங்கப்பட்டிருக்கும் "சந்தர்ப்பத்தைக் பற்றி" அவரது தந்தையை, இவர் மிக அப்பட்டமாக அக்கட்சியின் உண்மையான இயல்பை எடுத்துக்காட்டுகின்ற நிலையில், அவரை தவிர்த்துக் கொள்ளுமாறும் மற்றும் தேசிய முன்னணியின் பிம்பத்தை ஒரு "ஜனநாயக" கட்சியாக மேற்கொண்டு பலப்படுத்துமாறும் பல பத்திரிகை விமர்சனங்கள் அவருக்கு அழுத்தம் அளித்து வருகின்றன.

ஜோன்-மரி லு பென்னும் தேசிய முன்னணி குறித்த உண்மையும்" என்ற தலைப்பின் கீழ் ஏப்ரல் 8 அன்று Le Monde எழுதுகையில், “அது இரண்டில் ஒன்றாக தான் இருக்க வேண்டும். ஒன்று தேசிய முன்னணி உண்மையில் என்ன நினைக்கிறது என்பதை தேசிய முன்னணியின் கௌரவ தலைவராக ஜோன்-மரி லு பென் உரக்க கூறி வருகிறார் … அல்லது ஜோன்-மரீன் லு பென் கடந்த நான்கு ஆண்டுகளாக தேசிய முன்னணியை "பூதாகரமாக காட்டாத" அனைத்து வேலைகளையும் தாக்கி கொண்டு, அவரது சொந்த கட்சிக்குள்ளேயே ஒரு அதிருப்தியாளராக மாறியுள்ளார் என்றாகிறது. இந்த விடயத்தில் பார்த்தால், அரசியல் வாரிசான அவரது மகள் அவரை கண்டித்து, அவரது உத்தியோகபூர்வ பதவிகள் மற்றும் வேட்பாளர் அந்தஸ்துகளைப் பறிக்க வேண்டும். அவரது தந்தையாருக்கும் மற்றும் அவரது கட்சிக்கும் இடையே மரீன் லு பென் ஏதேனும் ஒன்றை தேந்தெடுத்தாக வேண்டும். அவர் தேர்ந்தெடுப்பதை ஒவ்வொருவரும் மதிப்பிடுவார்கள்,” என்று எழுதியது.

பெரும்பாலும் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் "வரலாற்று ஆவண பத்திரிகையாக" கருதப்படும் Le Monde, மிகத் தெளிவாக, "பூதாகரமாக-காட்டாத" ஆனால் அதிகமாக நவ-பாசிசத்தை எடுத்துக்காட்டும் வழியை முன்னெடுக்க மரீன் லு பென்னுக்காக வாதிடுகிறது. தேசிய முன்னணி அதிகாரத்திற்கு உயர்வதை தடுக்கக்கூடிய, வெளிப்படையான சர்ச்சைக்குரிய, பகிரங்கமான பாசிச-ஆதரவு நிலைப்பாட்டை அது முன்னெடுப்பதை அப்பத்திரிகை பார்க்க விரும்பவில்லை. பாசிசத்தின் கடந்தகால அட்டூழியங்களில் இருந்து முறித்துக் கொண்டுவிட்டதாக பாசாங்குத்தனத்தைக் காட்ட இங்கே ஒரு பொன்னான வாய்ப்பு உள்ளது, அதை நீங்கள் கைப்பற்ற வேண்டுமென அவ்விதத்தில் அப்பத்திரிகை லு பென் இளவலுக்கு ஓர் உடன்படிக்கையை முன்மொழிகிறது. நீங்கள் அதிகாரத்திற்கு வந்ததும் அந்த முகமூடியை கழற்றி எறிந்து விடலாம் என்பதையும், ஐயத்திற்கிடமின்றி, முதலாளித்துவ வர்க்கத்தின் சில அடுக்குகள் சேர்த்துக் கொள்கின்றன.

முதலாளித்துவ ஊடகங்கள் தேசிய முன்னணியைபூதாகரமாக-காட்டாத" பிரச்சாரத்தை தொடங்கியதில் இருந்தே, விச்சி ஆட்சிக்கும் மற்றும் அல்ஜீரியாவில் பிரான்சின் இரத்தந்தோய்ந்த காலனித்துவ ஆட்சிக்கும் தேசிய முன்னணி வழங்கும் பாரம்பரிய ஆதரவிலிருந்து தன்னைத்தானே அது விலக்கி வைத்துக் கொண்டதாக காட்ட முயலும் முயற்சிகளை முனைப்போடு ஊக்குவிக்க முயன்றுள்ளன. தேசிய முன்னணி "ஜனநாயக,” “வெகுஜனவாத,” அல்லது "மக்கள் விரும்பும்" கட்சியாக கூட சித்தரிக்கப்பட்டது, ஆனால் இதில் ஒவ்வொரு விடயமும் பாரம்பரிய முதலாளித்துவ அரசியலுக்கு நெருக்கமானதாகும்.

உண்மையில் இது, தேசிய முன்னணியை ஒரு பாசிச கட்சியாக மிகவும் கண்கூடாக காட்டும் உள்-அம்சங்களை மூடிமறைப்பதை நோக்கமாக கொண்ட ஓர் அரசியல் நடவடிக்கையாகும். உண்மையில் தேசிய முன்னணிக்குள் நிலவும் இரண்டு போக்குகள், மரீன் லு பென் மற்றும் அவரது தந்தையாருக்கு இடையில் உள்ள எதிர்ப்பானது, தந்திரோபாயமே தவிர, அடிப்படையானதல்ல.

அவரது மகளின் அரசியல் குழு இப்போது விமர்சித்து வருகிறது, அதுவும் குறிப்பாக விச்சி ஆட்சியை அவர் நியாயப்படுத்துவதை விமர்சிக்கிறது என்ற மூத்த லு பென்னின் கருத்துக்கள், ஒட்டுமொத்த தேசிய முன்னணியின் பொதுவான மரபியத்தின் பாகமாகும். தீவிர வலது பதிப்பாளர் எரிக் சிமோர் பிரான்சின் தற்கொலை என்ற அவரது நூலை பிரசுரித்த போது, அதில் அவர் விச்சி ஆட்சி மற்றும் அதன் அரசு தலைவர் மார்ஷல் பிலிப் பெத்தனுக்கு மறுவாழ்வளிக்க முயன்றிருந்தார். அவர் தேசிய முன்னணியின் கூட்டங்களில் மிக பரந்தளவில் பேச அழைக்கப்பட்டார். அந்த நூல் பிலிப் மார்டெலால் பிரசுரிக்கப்படுவதற்கு முன்னரே மரீன் லு பென்னின் தலைமை நிர்வாகியால் மீளாய்வு செய்யப்பட்டது.

அக்கட்சியின் ஸ்தாபகரது யூத-விரோத கருத்துக்களால் அதிர்ச்சி அடைந்ததாக தேசிய முன்னணி தலைமை இப்போது பாசாங்குத்தனம் செய்வது, ஒரு எரிச்சலூட்டும் தந்திரமாகும். தேசிய முன்னணி விச்சி ஆட்சிக்கான அல்லது "பிரெஞ்சு அல்ஜீரியாவிற்கான" அதன் வரலாற்றுரீதியிலான அனுதாபங்களைக் கைவிட்டுவிடவில்லை.

மரீன் லு பென் வெறுமனே பிரெஞ்சு குடியரசின் வர்ணங்களில் போர்த்தப்பட்ட ஓர் இஸ்லாமோபோபியா (Islamophobia) வடிவத்தை மேலே போர்த்துகிறார், உண்மையில் இதில் அவர் ஒட்டுமொத்த பிரெஞ்சு ஆளும் மேற்தட்டுடன் சேர்ந்து அவரது கட்சியின் விச்சியிச மரபியத்தைப் பகிர்ந்து கொள்கிறார். விச்சி ஆட்சி மற்றும் இனப்படுகொலையை பகிரங்கமாக நியாயப்படுத்தி வெல்வதினும் கூட இஸ்லாம் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிர்ப்பு காட்டுவதன் மூலமாக நிறைய வெல்ல முடியுமென அவர் நடைமுறைரீதியில் கணக்கிடுகிறார்.

எவ்வாறிருந்த போதினும் தொழிலாள வர்க்கத்திடமிருந்து வரும் ஒரு புரட்சிகர சவாலை முகங்கொடுக்கையில் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் பண்டைய எதிர்புரட்சிகர அனுபவமாக விச்சி ஆட்சி தங்கி நிற்கிறதுஅது அவ்வாறு செய்வதற்கு 1940 இன் நாஜி படையெடுப்பைப் பயன்படுத்திக் கொள்ள முனைந்த போதினும், அது பதவிக்கு வந்தது. தேசிய முன்னணியும் இதே பாரம்பரியத்தைத் தான் பின்தொடர்கிறது, அதன் அனைத்து கன்னைகளும் இதிலிருந்து தான் மேலெழுகின்றன. சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக அதிகரித்துவரும் தொழிலாள வர்க்கத்தின் கோபத்தால் பீதியுற்ற பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் அரசியல் மற்றும் ஊடக பிரதிநிதிகளுக்கு இது நன்கு தெரியும் என்பதோடு, இதனால் தான் அவர்கள் தேசிய முன்னணியை ஊக்குவிக்க முனைந்து வருகின்றனர்.

20ஆம் நூற்றாண்டில் பாசிச காட்டுமிராண்டித்தனத்தின் அனைத்து வரலாற்றுரீதியிலான அனுபங்களைப் பெற்றிருந்தாலும் கூட, தொழிலாள வர்க்கத்தின் வெடிப்பார்ந்த எதிர்ப்பைத் தூண்டிவிடாமல் தேசிய முன்னணியை எவ்வாறு ஊக்குவிப்பது என்பதே அவர்களது ஒரே பிரதான கவலையாக உள்ளது. ஆகவே அவர்கள் தேசிய முன்னணியின் இந்த பாசிசவாத மற்றும் ஒடுக்குமுறை குணாம்சத்தை ஏதோவொருவித வேஷத்தில் மூடிமறைத்து முன்னெடுக்க விரும்புகின்றனர்.

தேசிய முன்னணி அதன் ஜனநாயக நல்லெண்ணங்களை எடுத்துக்காட்டியுள்ளது என்று கூடுதலாக சமாதானப்படுத்தும்ரீதியில் வாதிடுவதற்கு அனுமதித்து, பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்திற்குள் உள்ள எந்தவொரு கட்சி உடனும் நடைமுறைரீதியில் கூட்டணிகளை மற்றும் அரசாங்கம் அமைக்கும் கூட்டணியை அமைக்க, Le Monde ஆல் முன்மொழியப்பட்டதைப் போன்ற ஒரு செயல்திட்டம் பாதையைத் திறந்துவிடும்.

இதேவிதத்தில் இனவாத SOS அமைப்பின் முன்னாள் தலைவரும் சோசலிஸ்ட் கட்சியின் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் ஆன Malek Boutih அறிவிக்கையில், “யூத-எதிர்ப்புவாதத்துடன், இனவாதத்துடன், மற்றும் பல ஆண்டுகளாக எதற்கு எதிராக நான் போராடி உள்ளேனோ அவை அனைத்துடனும் உடைத்துக் கொண்டு மக்கள் பரிணமிக்க முயன்றால் அதற்காக நான் மனமுடைந்து போக மாட்டேன்.” “இந்த வரலாற்றில் இருந்து மரீன் லு பென் உடைத்துக்கொள்ள முடியுமென்றால், அது அவருக்கும் நாட்டிற்கும் நல்லது தான், அது உண்மையிலேயே இன்னும் கூடுதலாக நம்பிக்கையை மீட்டமைக்கிறது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

தேசிய முன்னணியின் வளர்ச்சியில் பல்வேறு ஊழல்பீடித்த பிற்போக்குத்தனமான சக்திகள், அவை சமூக ஜனநாயகமாக இருக்கட்டும் அல்லது போலி-இடது ஆகட்டும், அவை உடந்தையாய் இருக்கின்றன என்பதையே பௌதிஹ் மற்றும் Le Monde இன் கருத்துக்கள் அடிக்கோடிடுகின்றன.