சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் உரிமையாளர்களுக்கும் இடையில் புதியகூட்டு ஒப்பந்தத்துக்கானசதியை எதிர்த்திடு!

By Socialist Equality Party (Sri Lanka)
7 April 2015

Use this version to printSend feedback

தொழிலாளர்களின் சம்பளத்தை வறிய மட்டத்திலேயே வைத்து இலங்கையில் தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் உரிமையாளர்களுக்கும் இடையில் 2013ல் கைச்சாத்திடப்பட்ட துரோககூட்டு ஒப்பந்தத்தின் காலம் மார்ச் 31 அன்று முடிவுக்கு வந்ததன் காரணமாக, புதிய உடன்படிக்கைக்காக இரு தரப்பினருக்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. ஊதிய உயர்வு கோரி இலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வெடிக்கக்கூடிய எந்தவொரு போராட்டத்தையும் முன்கூட்டியே தோற்கடிக்கும் நோக்குடன் தொழிற்சங்கங்கள், உரிமையாளர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கமும் கூட்டாக புதிய ஒப்பந்தத்துக்காக மேற்கொள்ளும் இந்தச் சதியை, தோட்டத் தொழிலாளர்கள் உட்பட ஒடுட்டு மொத்த தொழிலாள வர்க்கமும் எதிர்க்க வேண்டும்.

தொழிலாளர்களுடன் எந்தவொரு கலந்துரையாடலும் இன்றி கைச்சாத்திடப்பட்ட 2013 உடன்படிக்கையின் படி, விலை உயர்வுக்கு ஏற்ப நாளொன்றுக்கு வழங்கப்பட்ட 30 ரூபாய் கொடுப்பனவு ஒரு சதமேனும் அதிகரிக்கப்படவில்லை. முழு நாள் சம்பளமும் 620 ரூபாவாக ஆக்கப்பட்ட போதிலும் 25 வேலை நாட்களில் 75 வீதம் வேலைக்குச் செல்லத் தவறும் தொழிலாளர்களுக்கு சகல கொடுப்பனவுகளையும் அபகரிக்கும் இந்த உடன்படிக்கையில், “உற்பத்தித் திறனை”, அதாவது வேலையை அதிகரிப்பதற்காகவும், தொழிற்சங்கத் தலைவர்கள் உடன்பட்டனர்.

வேகமாக அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுடன் எந்த வகையிலும் பொருந்தாத இந்த போலி சம்பள அதிகரிப்பு மற்றும் வேலை வேகப்படுத்தலுக்கான உடன்பாடு சம்பந்தமாக, தொழிற்சங்கத் தலைவர்கள் மீது தொழிலாளர்கள் மத்தியில் பலம் வாய்ந்த எதிர்ப்பு வெளிப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பல தோட்டங்களிலும் தொழிலாளர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் தடைகளை அலட்சியம் செய்து வேலை வேகப்படுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கினர்.

மிக அண்மையில் மஸ்கெலியா கிளனியூஜீ தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். நாளொன்றுக்கு பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவை 16 கிலோவில் இருந்து 18 கிலோ வரை அதிகரிப்பதற்கு நிர்வாகம் எடுத்த முடிவுக்கு எதிராக அந்த பெருந்தோட்டத்துக்குரிய டீசைட் பிரிவின் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக கடந்த மாதம் மூன்று நாள் வேலை நிறுத்தம் செய்தார்கள். ஜனாதிபதி சிறிசேன அரசாங்கத்தின் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி. திகாம்பரத்தின் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கமே (NUW) பிரதேச தலைவர் எஸ். நகுலேஸ்வரன் உரிமையாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் நாளொன்றுக்கு பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவை நிர்வாகம் 16 
கிலோ
 வரை குறைப்பதற்கு உடன்பட்டுள்ளதாக கூறியே 
தொழிலாளர்களை
மீண்டும் வேலைக்கு அனுப்பினார்
.

மீண்டும் வேலைக்கு சென்ற டீசைட் தொழிலாளர்கள், கொடூரமான ஒடுக்குமுறைகளையும் மிகவும் கடுமையான வேலை வேகப்படுத்தலையும் எதிர்கொள்ள தள்ளப்பட்டுள்ளார்கள். போராட்டத்துக்கு தலைமைத்துவம் கொடுத்த தொழிலாளர்களுக்கு எதிராக, நிர்வாகமும் தொழிற்சங்கத் தலைவர்களும் கூட்டாக செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் எட்டு தொழிலாளர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மீதான வழக்கு விசாரணை மேலும் தொடர்கின்றது. இதற்கும் மேலாக, தோட்ட முகாமைத்துவத்தாலும் குற்றஞ் சாட்டப்பட்ட தொழிலாளர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதோடு அதில் அவர்கள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டால், அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்படும் அறிகுறிகள் காட்டப்பட்டுள்ளன. சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சரான பீ. திகாம்பரத்தின் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கமே (NUW), குற்றஞ் சாட்டப்பட்ட தொழிலாளர்களை தாமாகவே முன்வருமாறு ஆலோசனை கூறி நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் கைச்சாத்திடப்பட உள்ள புதிய உடன்படிக்கை தொழிலாளர்களுக்கு எதிரான மிகவும் கொடூரமான தாக்குதல்களுக்கான பதுங்கு குழியே என்பது ஊடகங்களில் கசியும் செய்திகள் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. எந்தவொரு சம்பள உயர்வும் கொடுக்க முடியாது என்றும் மிகவும் பரந்தளவிலான வேலைச் சுமையை சுமத்த வேண்டும் என்றும் தோட்ட கம்பனிகளால் பல வழிகளிலும் அறிவிக்கப்பட்டு வருகின்றது. மார்ச் 15 அன்று ஐலண்ட் பத்திரிகயில் வெளியான செய்தியின் படி, இலங்கையின் பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரொஷான் இராஜதுரை, உலக சந்தையில் காணப்படும் போட்டியின் எதிரில் இலங்கையின் தேயிலை தொழிற்துறையை காப்பாற்றுவது என்பது தொழிலாளர்கள் வழங்கும்ஒத்துழைப்பில் பலம்வாய்ந்த முறையில் தங்கியிருக்கின்றது, என்று குறிப்பிட்டுள்ளார். இராஜதுரை கூறியதாவது: “அவர்களுக்கு (தொழிலாளர்களுக்கு) இலகுவாக அன்றாட உற்பத்தியை அதிகரித்து உற்பத்திச் செலவைக் குறைக்க முடியும். அப்போது எம்மால் உலகச் சந்தையில் போட்டியிட முடியும்.” உலகின்மிகவும் குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட நாடு இலங்கையை குறிப்பிட்ட அவர், “தொழிலாளர்களின் ஊதியத்தை ஒரு ரூபாவால் அதிகரித்தால், ஒரு கிலோ தேயிலையின் உற்பத்திச் செலவு தானாகவே 52 சதத்தால் அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். “தேயிலை தொழிற்துறையை காப்பாற்றுவதற்காக அனைவரும்ஒன்றாக வேலை செய்ய வேண்டும் என சுட்டிக் காட்டிய இராஜதுரை, உலகச் சந்தையிலான போட்டியின் சகல சுமைகளையும் தொழிலாளர்கள் தமது தோள்களில் சுமக்க வேண்டும் என்றே நேரடியாக கூறுகின்றார்.

தோட்ட உரிமையாளர்களின் இந்த தொழிலாளர் விரோத தர்க்கத்தை 
முழுமையாக ஏற்றுக் கொண்டுள் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் (LJEWU) தலைவர் வேலாயுதம் தலைமையிலான  தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் தொழிலாளர்களின் முக்கிய மற்றும் நீண்ட கால கோரிக்கையான மாதச் சம்பளத்துக்கான கோரிக்கைக்கு எதிராக உள்ளனர். வீரகேசரி பத்திரிகைக்கு கொடுத்த பேட்டி ஒன்றில், அவர் கூறியதாவது: “இம்முறை நாங்கள் மாதச் சம்பளம் பற்றி பேசுவதில்லை. நாள் சம்பளம் பற்றியும் சேவை நிலைமைகள் பற்றி மட்டுமே நாம் பேசுவோம்
.”

அண்மையில் இடம்பெறவுள்ள தேர்தல் சம்பந்தமாக கணக்கிட்டு அரசாங்கம் முன்வைத்த வரவு செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அற்ப விலைக் குறைப்புக்கள் சிலவற்றை சுட்டிக் காட்டி அதை மிகைப்படுத்தி வேலையுதம் பின்வருமாறு கூறினார்: “வரவு செலவுத் திட்டத்தில் தனியார் துறைக்கு பிரேரிக்கப்பட்டுள்ள 2,500 சம்பள உயர்வு தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கும்.” வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து இரண்டு மாதங்கள் கடந்திருந்தாலும், தனியார் துறையில் எந்தவொரு நிறுவனமும் அந்த அதிகரிப்பை கொடுக்காமல் இருப்பதன் மூலம், அரசாங்கத்தின் பிரேரணையின் மோசடி ஒப்புவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த ஒப்பந்தம் சம்பந்தமாக போலி எதிர்ப்புக் காட்டி வந்த, இப்போது சிறிசேன அரசாங்கத்தில் நுழைந்துகொண்டுள்ள திகாம்பரத்தின் தொழிலாளர் தேசிய சங்கமும் மனோ கனேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியும், இம்முறை அந்த தீவிரவாத ஆடைகளை களைந்துவிட்டு, வேலாயுதத்துடன் ஒரே அணியில் சேர்ந்துகொண்டு, 2,500 ரூபா மோசடியை தூக்கிப்பிடுத்துக்கொண்டுள்ளன. சிறிசேன அரசாங்கத்தின் இன்னொரு இராஜாங்க அமைச்சரான மலையக மக்கள் முன்னணியின் (மமமு) வி. இராதாகிருஷ்னனும் இந்த 2,500 ரூபா பொய்யையே உண்மையாக்க முயற்சிக்கின்றார்.

அரசாங்கத்தின் குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் படி, தோட்டத் தொழிலாளர் குடும்பம் ஒன்றுக்கு குறைந்தபட்ச வருமானம் 29,779 ரூபாவாக இருக்க வேண்டும். ஆயினும் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சாதாரண மாத வருமானம் 12,000 ரூபா என்ற அற்ப தொகையே ஆகும். இந்த நிலைமையினுள் மாதம் 2,500 ரூபா சம்பள அதிகரிப்பானது, அதாவது 100 ரூபா நாள் சம்பள அதிகரிப்பை திணிப்பதற்கான முயற்சி தொடர்பாக, தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பை காட்டுகின்றனர்.

சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபீ) அகில இலங்கை பெருந்தோட்டத் தொழிற்சங்கம் தனது போலி மாதச் சம்பளக் கோரிக்கையை கைவிட்டு, ஏனைய சங்கங்களுடன் கூட்டுச் சேர்ந்து 800 ரூபா நாள் சம்பள அதிகரிப்பை நோக்கி கீழிறங்கியுள்ளது. போலி தேசிய நிர்வாக சபையினுள் நுழைந்துகொண்டு சிறிசேன அரசாங்கத்துடன் கூட்டாகச் செயற்படும் ஜேவிபீ, தாம் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியை பிரதிநிதித்துவம் செய்வதாக மிகைப்படுத்திக்கொண்டு, தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கொடூரமான தாக்குதலுக்காக சகல முதலாளித்துவக் கட்சிகளையும் ஒன்றிணைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

பல தசாப்த காலங்களாக தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றிவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (இதொகா) ஆறுமுகம் தொண்டமான் சிறிசேன அரசாங்கத்தில் நுழைந்துகொள்வதற்கான பேரம் பேசலாக, தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா நாள் சம்பள அதிகரிப்புக் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. LJEWU மற்றும் இதொகா உடன் 2013 உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டியும் இதொகாவின் கோரிக்கையுடன் அணிசேர்ந்துள்ளது. துரோக லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியினதும் தொழிற்சங்கங்கள் உட்பட பல தொழிற்சங்கங்கள் இந்த தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியில் உள்ளடங்குகின்றன.

இந்த தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் தலைவர்களின் நடவடிக்கைகள், அவர்கள் அனைவரும் அரசாங்கத்தினதும் தோட்டக் கம்பனிகளதும் நேரடி முகவர்களே என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. அவர்கள் சொத்துடமையாளர்கள், வியாபாரிகள் மற்றும் முதலாளித்துவ கட்சிகளுடன் இணைந்த அரசியல்வாதிகளாவர். இராஜபக்ஷ எந்திரத்தால் தமது வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக, தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சிகண்டு வந்த பலம் வாய்ந்த எதிர்ப்பை, சிறிசேன-விக்கிரமசிங்க முகாமுக்குப் பின்னால் முடிந்துவிட்டு அந்த பிற்போக்கு ஆட்சியை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதற்காக கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இந்த சகல தொழிற்சங்கங்களும் கூட்டாகச் செயற்பட்டன.

அமெரிக்காவின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி மாற்றத்தில் அதிகாரத்திற்கு வந்த சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தினால் கட்டளையிடப்படும் கடும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வெடிக்கவுள்ள தொழிலாள வர்க்க போராட்டங்களுக்கு விரோதமாக, சமூக எதிர் புரட்சிகர தாக்குதலை முன்னெடுப்பதன் பேரில், முழு முதலாளித்துவ வர்க்கத்தையும் ஐக்கியப்படுத்தும் நோக்குடனேயே கடந்த நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் சேர்த்துக்கொண்டுதேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துக்கொண்டது. எதிர்வரவுள்ள வர்க்க எழுச்சி தொடர்பாக விழிப்படைந்துள்ள தொழிற்சங்க அதிகாரத்துவம், இந்த தாக்குதலின் பொலிஸ்காரனாக அரசாங்கம் மற்றும் முதலாளிமாருடன் சேர்ந்துகொண்டுள்ளன.

உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை நசுக்கித் தள்ளும் வேலைத் திட்டத்தையே சர்வதேச நாணய நிதியம் பிரேரித்துள்ளது. இது உலகம் பூராவும் யுத்த வேலைத் திட்டத்தின் பக்கம் திரும்பியுள்ள, சர்வதேச வங்கியாளர்கள் முன்னெடுக்கும் கொள்ளையடிக்கும் வேலைத் திட்டமாகும். இராஜபக்ஷ அரசாங்கத்தில் தொடங்கி, மக்கள் மீது ஆழமான தாக்குதல்களை சுமத்துவதன் மூலம் வரவு-செலவு திட்ட பற்றாக்குறையை வெட்டிக் குறைக்கும் நடவடிக்கை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. கடந்த ஆண்டின் வரவு-செலவுத் திட்டம் மொத்த தேசிய உற்பத்தியின் நூற்றுக்கு 5.2 வீதம் வரை வெட்டிக் குறைப்பட்டதோடு அதை இந்த ஆண்டு 4.4 வீதம் வரை குறைக்கப் போவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 2016ல் இதை 3.8 வீதமாகக் குறைக்க வேண்டும்.

இந்த நிலைமையில், தேர்தலை எதிர்பார்த்து இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் கொடுத்தசலுகைகளை சுட்டிக் காட்டிய சர்வதேச நாணய நிதியம், தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிய 4 பில்லியன் டாலர் கடனை நிராகரித்துவிட்டது. விசேடமாக, அரசாங்க ஊழியர்களின்ஊதிய உயர்வு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்காக பிரேரிக்கப்பட்ட 2,500 ரூபா சம்பள உயர்வும் சர்வதேச நாணய நிதியத்தின் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியது. எதிர்காலத்தில் எந்தவொரு சம்பள உயர்வையும் சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொள்ளாது என்பதே இதில் இருந்து தெரியவருகின்றது.

முதலாளித்துவ இலாப அமைப்பு முறையை தூக்கிவீசுவதை இலக்காகக் கொண்ட அனைத்துலக சோசலிச வேலைத் திட்டத்தைச் சூழ கென்யா, இந்தியா மற்றும் மலேசியா போன்ற ஏனைய நாடுகளிலும் உள்ள சகோதர தோட்டத் தொழிலாளர்களுடனும் உலகம் பூராவும் பரந்துள்ள பிற தொழிலாளர்களுடனும் ஒன்றிணைவதன் மூலம் மட்டுமே, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் துன்பகரமான வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்படும் இடைவிடாத தாக்குதல்களையும் தோற்கடிக்க முடியும். தொழிலாளர்கள் மத்தியில் அத்தகைய ஐக்கியத்தை உருவாக்குவதற்கு, தொழிலாளர்களை பிளவுபடுத்துவதற்காக ஆட்சியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளும் சகல வடிவிலான தேசியவாதம் மற்றும் பேரினவாதங்களையும் எதிர்த்து அரசியல் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும்.

இதற்காக சிறிசேன விக்கிரமசிங்க அரசாங்கத்தினதும் சகல முதலாளித்துவ கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்தும் தொழிலாளர்கள் அரசியல் ரீதியில் சுயாதீமாக நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பி, சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் போராட்டத்தில் இறங்க வேண்டியது அவசியமாகும்.

தொழிற்சங்களில் இருந்து சுயாதீனமான அத்தகைய நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புமாறு சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. தொழிற்சங்க குண்டர்களுக்கும் கலகம் அடக்கும் பொலிஸ் மற்றும் இராணுவத்தின் தலையீடுகளுக்கும் எதிராக தொழிலாளர்களின் பாதுகாப்பு படைகளை கட்டியெழுப்புவதற்கு இந்த நடவடிக்கை குழு செயற்பட வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களின் அரசியல் போராட்டத்துக்கான அடித்தளமாக கீழ்வரும் கோரிக்கைகளை சோசக பிரேரிக்கின்றது.

* சகல தோட்டத் தொழிலாளர்களுக்கும் பிரஜா உரிமை

* வாழ்க்கை செலவுக்கு பொருத்தமான வகையில் 40,000 ரூபா மாதச் சம்பளம்.

* வேலை அளவை அதிகப்படுத்தாதே! சமமான ஊதியத்துடன் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கொடு!

* சிறந்த வீடு, சுகாதார மற்றும் கல்வி வசதிகளை அனைவருக்கும் வழங்கு!

முதலாளித்துவ உரிமையின் கீழ் தனியார் இலாபத்துக்காக நடத்தப்படும் பெருந்தோட்டத்துக்குள் இந்த அடிப்படை கோரிக்கைகளை பெற்றுக்கொள்ள முடியாது. தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக ஆட்சியின் கீழ், முழு பெருந்தோட்டத்தையும் மக்கள்மயப்படுத்த வேண்டும் என சோசக பிரேரிக்கின்றது.

சோசலிச வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் ஒன்றுக்காக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில், தமது வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதலை எதிர்கொள்ளும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பகுதியினர் மற்றும் கிராமப்புற ஏழைகளின் பக்கம் தோட்டத் தொழிலாளர்கள் திரும்ப வேண்டும். ஒரு சில முதலாளிகளின் இலாபத்துக்காக அன்றி, உழைக்கும் மக்களின் அடிப்படை சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மேலிருந்து கீழாக முழு பொருளாதார அமைப்பு முறையையும் மறு ஒழுங்கு செய்ய வேண்டும். தெற்காசியாவிலும் உலகம் பூராவும் சோசலிச குடியரசுகளின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிப்பதற்காக சோசக முன்னெடுக்கும் போராட்டத்துடன் ஒன்றிணையுமாறு அனைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.