சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

European Union plans more aggressive measures against refugees

ஐரோப்பிய ஒன்றியம் அகதிகளுக்கு எதிராக கூடுதல் ஆக்ரோஷ நடவடிக்கைகளைத் திட்டமிடுகிறது

By Johannes Stern
21 April 2015

Use this version to printSend feedback

வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து ஐரோப்பாவில் தஞ்சம் கோரி வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதை ஐரோப்பிய ஒன்றியம் நீண்டகாலத்திற்கு முன்பே எதிர்நோக்கி இருந்தது.

500,000 மற்றும் ஒரு மில்லியனுக்கு இடையிலான புலம்பெயர்வோர் லிபியாவிலிருந்து வெளியேற விரும்புவதாக எங்களது ஆதாரங்கள் தெரிவிக்கின்றன, என்று இழிபெயர்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பு அமைப்பு Frontex இன் இயக்குனர் Fabrice Leggeri இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தெரிவித்திருந்தார். ஐரோப்பிய ஒன்றியம் 2014ஐ விட இன்னும் கூடுதலாக "கடுமையான சூழ்நிலைக்கு" தயாரிப்பு செய்துகொள்ள வேண்டியிருக்கும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். அப்போது அது, 2013 இன் எண்ணிக்கையை விட 150 சதவீதம் அதிகமாக, மற்றும் 2011 ஐ விட ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகமாக, சுமார் 278,000 "சட்டவிரோத எல்லை தாண்டல்களைக்" கண்டது.

கடுமையான சூழ்நிலையை" சமாளிப்பதற்கும் மற்றும் "சட்டவிரோத எல்லை தாண்டல்களை" தடுப்பதற்கும், ஐரோப்பிய ஒன்றியம் மரணகதியிலான இரு-முனை மூலோபாய வழிவகைகளைக் கொண்டு அகதிகளை பீதியூட்ட முனைந்து வருகிறது:

முதலாவதாக, ஐரோப்பிய வெளி எல்லைகளை (நிலத்தில் சுமார் 12,000 கிலோமீட்டர்கள் மற்றும் கடலில் 45,000 கிலோமீட்டர்கள்) முள்கம்பி வடம், கண்காணிப்பு கேமிராக்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரோன்களைக் கொண்டு முழுமையாக அடைப்பது, இது அகதிகள் மத்தியதரைக் கடலை கடக்க மிக அபாயகரமான வழிகளைத் தேர்ந்தெடுக்க நிர்பந்திக்கிறது.

இரண்டாவதாக, கடந்த இலையுதிர் காலத்தில் Mare Nostrum (மத்தியதரைக் கடலுக்கான ரோமன் பெயர்) நடவடிக்கையை நிறுத்தியமை, இந்த முடிவு மத்தியதரைக் கடலில் அகதிகள் இறப்பதை அனுமதிக்கிறது.

2013 இல் லாம்பெடுசா விபத்திற்குப் பின்னர் இத்தாலிய கடற்படையால் தொடங்கப்பட்ட இந்த Mare Nostrum மீட்பு நடவடிக்கையின் பிரதான நோக்கம் அகதிகளை மீட்பதல்ல, மாறாக கடத்தல்காரர்களை வேட்டையாடுவதும் மற்றும் அகதி படகுகளை திருப்பி அனுப்புவதுமாகும். ஐரோப்பிய சக்திகளின் தரப்பை பெரிதும் உறுத்திக் கொண்டே இருந்த அந்நடவடிக்கையின் போக்கில், எவ்வாறிருந்த போதினும், 100,000க்கும் மேற்பட்ட அகதிகள் மீட்கப்பட்டனர்.

Mare Nostrum நடவடிக்கை "கடத்தல்காரர்களுக்கு" (trafficking) பங்களிப்பு செய்வதுடன், அகதிகளுக்கு ஒரு தூண்டுசக்தியாக இருப்பதாகவும், அது நிறுத்தப்பட வேண்டுமென்றும் ஜேர்மன் உள்துறை மந்திரி தோமஸ் டு மஸியர் அறிவித்தார்.

இப்போது ஐரோப்பிய ஒன்றியம், "Operation Triton நடவடிக்கைக்கு நிதியுதவிகளை இரண்டு மடங்கு ஆக்கியும் மற்றும் அதில் ஈடுபட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்தும், சமீபத்திய தொடர்ச்சியான அகதிகள் விபத்துக்கு விடையிறுப்பு காட்டி வருகிறது. திங்களன்று லூக்சம்பேர்க்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் உள்துறை மந்திரிகளின் ஒரு கூட்டத்திற்குப் பின்னர் டு மஸியர், ஐரோப்பிய கமிஷன் அந்த முயற்சியை இரட்டிப்பாக்க பரிந்துரைத்துள்ளதாக பெருமையோடு குறிப்பிட்டார்.

Triton நடவடிக்கையின் மிக முக்கியமான பணி அகதிகளை மீட்பதல்ல, மாறாக "ஐரோப்பா அரணைப்" பாதுகாப்பதாகும். அகதி படகுகளை மிக திறமையாக பிடிப்பது மற்றும் திருப்பி அனுப்புவதே ஆதாரவளங்களை இரட்டிப்பாக்கியதன் நோக்கமாகும்.

ஐரோப்பிய ஒன்றிய கமிஷன் லுக்சம்பேர்க்கில் முன்வைத்த பத்து அம்ச திட்டத்தின் விபரங்கள், ஐரோப்பிய சக்திகள் அகதிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் இராணுவ வழிவகைகளை பிரயோகிக்க தயாராக உள்ளதென அறிவுறுத்துகின்றன.

டு மஸியரின் கருத்துப்படி, சோமாலி கடற்பகுதி கடற்கொள்ளையர்களுக்கு எதிரான அதன் நடவடிக்கைகளில் இருந்து எவ்வாறு அது பாடங்களைப் பெற முடியுமென கமிஷன் ஆராய்ந்து வருகிறது. "கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்பட்ட படகுகளை, மீண்டும் பயன்படுத்த முடியாதவாறு அழித்துவிடலாமா என்பதும்" அங்கே பரிசீலனைகள் இருப்பதாக Spiegel Online குறிப்பிட்டது. அதுபோன்றவொரு நடவடிக்கை "மிக வேகமாக, ஆனால் கவனத்துடன்" பரிசீலிக்கப்பட வேண்டுமென டு மஸியர் தெரிவித்தார்.

அகதிகள் படகுகளுக்கு எதிராக போர்க்கப்பல்களை அனுப்புவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் சிந்தித்து வருகிறது என்பதே இதன் அர்த்தமாகும். தற்போது, இரண்டு ஜேர்மன் சிறிய வேவுபார்ப்பு போர் கப்பல்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அட்லாண்டா நடவடிக்கையின் கீழ் ஆபிரிக்க முனைப்பிரதேசங்களில் செயல்பாட்டில் உள்ளன.

அதே நேரத்தில், ஐரோப்பிய சக்திகள் மத்தியதரைக் கடலில் நடந்த பாரிய இறப்புகளை புவிமூலோபாயரீதியில் முக்கியத்துவம் மிக்க மற்றும் ஆதாரவளமான அப்பிராந்தியத்தில் மீண்டுமொருமுறை இராணுவரீதியில் தலையீடு செய்து சுரண்டுவதற்கு தயாரிப்பு செய்து வருகின்றன. குறிப்பாக 2011 லிபியாவிற்கு எதிரான நேட்டோ போரை தவிர்த்துக் கொண்ட ஜேர்மன் ஆளும் மேற்தட்டு, அதன் பங்கைப் பாதுகாக்க அதையொரு வாய்ப்பாக பார்க்கிறது.

பேர்லினில் இருந்து அறிக்கை" எனும் ARD நிகழ்ச்சியில் பேசுகையில், வெளியுறவு மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் ஆட்கடத்தல்காரர்களை நிலத்திலேயே கையாள வேண்டுமென முறையிட்டார். நாம் "லிபியாவில் கூடுதல் ஸ்திரப்பாட்டை கொண்டு வர" வேண்டியுள்ளது மற்றும் "கடத்தல் நிறுவனங்களை தடுக்க" வேண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் சிக்மார் காப்ரியேல் அதே தொனியில் பேசி வருகிறார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல்களுக்கு எதிரான சண்டையை" முன்னெடுக்க, "ஐரோப்பிய பொலிஸ் மற்றும் எல்லையோர ஆணையங்கள் அனைத்திற்கும்" அவர் அழைப்பு விடுத்துள்ளார். அவர் சமீபத்தில் அறிவிக்கையில், கடத்தல்காரர்களுக்கு எதிராக ஒரு சர்வதேச நடவடிக்கை நமக்கு அவசியப்படுகிறது. மேலும் நாடுகள் குறிப்பாக லிபியா நிரந்தரமான கட்டமைப்புகளை கட்டுவதற்கும் மற்றும் அகதிகளின் உள்வரவைச் சமாளிப்பதற்கும் நாம் உதவ வேண்டும், என்றார்.

லிபிய கடற்கரையோரங்களிலும் மற்றும் "கடல்களிலும்" உள்ள கடத்தல்காரர்களுக்கு எதிராக ஒரு "சர்வதேச பொலிஸ் நடவடிக்கையை" தொடங்கும் ஒரு திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு இத்தாலிய உள்துறை மந்திரி ஏஞ்சலினோ அல்பனோ ஞாயிறன்று மதியம் அழைப்புவிடுத்தார். வெவ்வேறு நாடுகளின் சிறப்பு படைகளின் கூட்டு ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்க ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஓர் ஆணை வெளியிடுவதற்கு அவர் முறையிட்டார். இது இத்தாலியின் முன்னாள் காலனியான லிபியாவில் இராணுவ நடவடிக்கையை நோக்கி நகர்வதன் ஒரு தீவிரப்பாட்டைக் குறிக்கிறது.

ஆபிரிக்க நாடுகளில் அகதிகளின் முகாம்களைச் ஸ்தாபிப்பதன் மூலமாக அகதிகளை "அதைரியப்படுத்தும்" ஒரு திட்டத்தை ஐரோப்பிய ஒன்றிய உள்துறை மந்திரிகள் விவாதித்து வருகின்றனர். இத்தாலிய உள்துறை அமைச்சகத்தின் ஒரு செய்திதொடர்பாளரின் கருத்துப்படி, நைஜர், சூடான் மற்றும் துனிசியாவில் முகாம்களை அமைக்க அல்பனோ பரிந்துரைத்தார்.