சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

Blood on their hands: Libyas boat refugees and humanitarian imperialism

அவர்களது கரங்களில் இரத்தம்: லிபியாவின் படகு அகதிகளும் "மனிதாபிமான" ஏகாதிபத்தியமும்

By Johannes Stern and Bill Van Auken
21 April 2015

Use this version to printSend feedback

மத்தியதரைக் கடலில் இருந்து ஐரோப்பாவிற்கு கடந்து வர முயன்ற ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு அகதிகள் மற்றும் புலம்பெயர்வோரின் கோரமான சாவு எண்ணிக்கை, எல்லா பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் மீதான, மிக குறிப்பாக அமெரிக்காவின் மீதான, ஓர் அதிர்ச்சிகரமான குற்றப்பத்திரிகை ஆகும்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும், அவரது முன்னாள் வெளியுறவுத்துறை செயலரும் அனேகமாக ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளருமான, நாங்கள் வந்தோம், பார்த்தோம், அவர் இறந்து கிடந்தார்" என்று கூறியவருமான ஹிலாரி கிளிண்டனும், அவர்களது முழங்கை வரையில் இரத்தத்தைக் கொண்டுள்ளனர். மனித உரிமைகளின்" பாசாங்குத்தனமான மற்றும் மதிப்பிழந்த பதாகையின் கீழ் நடத்தப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கான மூர்க்கமான போர்கள் மூலமாக, அவர்கள் தற்போதைய பேரழிவை இயக்கத்திற்குக் கொண்டு வந்தனர்.

வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து குறைந்தபட்சம் மேலும் மூன்று படகுகள், குறைந்தபட்சம் 23 பேர் மூழ்கி போனதாக கூறப்படுவதுடன் சேர்ந்து, மத்தியதரைக் கடலில் ஆபத்தில் இருப்பதாக திங்களன்று செய்திகள் அறிவித்தன.

இதுவும் பல நூறு மக்களோடு சேர்கிறது, அனேகமாக 1,400 பேர், இவர்கள் அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளின் இராணுவ வன்முறை, வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தூண்டிவிடப்பட்ட உள்நாட்டு போர்கள், மற்றும் அப்பிராந்தியத்தில் ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகளால் அதிகரித்த பரந்த வறுமை ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் ஒரு பெரும்பிரயத்தன முயற்சியில் கடந்த வாரம் அவர்கள் வாழ்வை இழந்துள்ளனர்.

திங்களன்று, இத்தாலிய பிரதம மந்திரி மரியோ ரென்சி கூறுகையில், 100இல் இருந்து 150 புலம்பெயர்வோரைக் கொண்ட ஒரு காற்றுநிரப்பிய உயிர்காக்கும் மிதவை படகில் (inflatable life raft) இருந்தும் மற்றும் சுமார் 300 வெளிநாட்டவரைக் கொண்ட மற்றொரு படகிலிருந்தும் ஆபத்துகால அழைப்புகளைப் பெற்றிருந்ததாக தெரிவித்தார். அந்த படகுகளில் ஒன்று சர்வதேச கடலில் மூழ்கியதில் 20 பேர் இறந்து போனதாக ஓர் அழைப்பாளர் குறிப்பிட்டதை சர்வதேச புலம்பெயர்வோர் அமைப்பு (IOM) தெரிவித்தது.    

வேறொரு சம்பவத்தில், மிகத்தெளிவாக துருக்கியிலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு படகு, கிரேக்க ரோட்ஸ் தீவின் அருகில் தரைதட்டிய போது, ஒரு குழந்தை உட்பட குறைந்தபட்சம் மூன்று புலம்பெயர்வோர் உயிரிழந்தனர். அந்த மரப்படகு, அதன் மேல்தளத்தில் மக்கள் நெருக்கமாக குவிந்திருந்த நிலையில், அந்த தீவுக்கு சற்று அருகே ஏஜியன் கடலில் அளவுக்கதிகமாக மக்களை ஏற்றி வந்ததை காணொளி காட்சிகள் காட்டின. அதில் பல சிரியர்கள் இருந்ததாகவும், அத்துடன் எரித்திரியா மற்றும் சோமாலிய மக்களும் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் உள்ளூர் வானொலி நிலையத்திற்குத் தெரிவித்தனர்.

லிபியாவிற்கு அருகே ஞாயிறன்று ஒரு அகதிகள் படகு மூழ்கியதில், சுமார் 950 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து சமீபத்திய இந்த மூழ்கிய சம்பவம் நடந்தது. இத்தாலிய கடல் ரோந்துப்படையின் தகவல்படி, முற்றிலும் அளவுக்கதிகமாக சுமையேற்றிய அந்த படகு லிபிய கடற்கரையை ஒட்டி சுமார் 130 மைல்களில் கவிழ்ந்தது.

40இல் இருந்து 50 குழந்தைகள் மற்றும் 200 பெண்கள் உட்பட நாங்கள் 950 பேர் அதில் இருந்தோம், என உயிர்பிழைத்த பங்களதேஷை சேர்ந்த ஒருவர் இத்தாலிய செய்தி நிறுவனம் ANSAக்கு தெரிவித்தார். பலர் கப்பலின் பிடியில் சிக்கி, கொடூரமான சூழலில் மூழ்கி இறந்தனர். கடத்தி வந்தவர்கள் கதவுகளை மூடி, அவர்கள் வெளியேறுவதைத் தடுத்து விட்டதாக, அந்நபர் தெரிவித்தார்.  

மத்தியத்தரைக் கடலை கடந்து ஐரோப்பாவை எட்ட முயன்ற இரண்டு வெவ்வேறு படகு கவிழ்வுகளில் கடந்த வாரம் 500க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, குறைந்தபட்சம் 1,700 பேர் ஐரோப்பாவிற்கு புலம்பெயரும் முயற்சியில் வழியிலேயே இறந்துள்ளனர், இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தின் எண்ணிக்கையை விட 50 மடங்காகும். IOMஇன் தகவல்படி, ஐரோப்பாவின் கடற்கரைகளை எட்டும் முயற்சியில் இறந்து போகும் மக்களின் எண்ணிக்கை, 2011 மற்றும் 2014க்கு இடையே, 500 சதவீதத்திற்கு கூடுதலாக அதிகரித்தது.

சொல்லப்போனால், 2011ஆம் ஆண்டு தான் அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும், பிரதானமாக பிரான்ஸ் மற்றும் பிரிட்டனும், கிழக்கு நகரமான பெங்காசியில் மௌம்மர் கடாபி அரசாங்கத்தினது படுகொலைகளைத் தடுக்க அவை தலையீடு செய்வதாக ஜோடிக்கப்பட்ட சாக்குபோக்கின் கீழ், லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அவர்களது போரைத் தொடங்கின.

இந்த "மனிதாபிமான" திட்டம், ஆறு மாதகால அமெரிக்க-நேட்டோ குண்டுவீச்சு நடவடிக்கையை தொடங்கி வைத்தது, அது, அரசாங்க துருப்புகள் மற்றும் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களுக்கு இடையே அதற்கு முன்னர் அங்கே ஆங்காங்கே நடந்துவந்த சண்டையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகமானவர்களைக் கொன்றது. இந்த ஏகாதிபத்திய தலையீடு, அல் கொய்தாவுடன் தொடர்புபட்ட இஸ்லாமியவாத போராளிகள் குழுக்களை அதன் தரைப்படைகளாக பயன்படுத்தியதுடன், லிபியாவை வேகமாக பெருங்குழப்பம் மற்றும் சீரழிவுகளுக்குள் இழுத்துச் சென்றது.

ஒன்று திரிப்போலியிலும் மற்றொன்று கிழக்கு நகரமான தோப்ருக்கிலும் இருந்த இரண்டு போட்டிபோடும் அரசாங்கங்கள் மற்றும் எதிர்விரோத இஸ்லாமியவாத போராளிகளுக்கு இடையே நடந்த ஒரு முடிவில்லா உள்நாட்டு போரிலிருந்து தப்பிக்க, அண்மித்தளவில் இரண்டு மில்லியன் லிபிய அகதிகள்அதாவது மக்கள்தொகையில் ஒரு கால் பங்கிற்கும் அதிகமானவர்கள்துனிசியாவிற்கு தப்பிச்செல்ல நிர்பந்திக்கப்பட்டனர். Libya Body Count வலைத் தள தகவல்படி, வெறுமனே 2014 தொடக்கத்திலிருந்து அதாவது அமெரிக்க-நேட்டோ தலையீட்டுக்கு மூன்றாண்டுகளுக்குப் பின்னர் சுமார் 3,500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

லிபியாவில் தீவிரமடைந்துவரும் காட்டுமிராண்டித்தனத்தில் பாரிய படுகொலைகளும் உள்ளடங்குகின்றன. இதில் சமீபத்தியது, சுமார் 30 எதியோப்பிய புலம்பெயர்வோர் மீதான சம்பவமாகும், அது ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிக் அரசால் (ISIS) ஞாயிறன்று பகிரங்கமாக ஒரு காணொளியில் வெளியிடப்பட்டது. இந்த சம்பவம், அதேபோன்று ISIS இன் 21 எகிப்திய கோப்திக் கிறிஸ்துவர்களின் பாரிய தலைதுண்டிப்பு நடந்து வெறும் இரண்டு மாதங்களுக்கு குறைந்த காலத்தில் வருகிறது. அது (ISIS) லிபியாவின் கிழக்கு துறைமுக நகரமான டெர்னா அத்துடன் சிர்ட்டே நகரின் சில பாகங்களையும் கைப்பற்றி உள்ளது.

ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க-நேட்டோ போருக்கு முன்னரோ, அல்லது அந்த நடவடிக்கைக்காக அல் கொய்தா தொடர்புபட்ட இஸ்லாமியவாத போராளி குழுக்கள் ஓர் ஓரங்கட்டப்பட்ட சக்தி என்பதற்கும் கூடுதலாக உருவாக்கப்படுவற்கு முன்னரோ, அங்கே லிபியாவில் இந்தளவிற்கு பாரிய பிரிவினைவாத படுகொலைகள் இருந்திருக்கவில்லை. பிரதான ஏகாதிபத்திய சக்திகள், கடாபியை பதவி கவிழ்த்து படுகொலை செய்து, லிபியா மீது ஒரு புதிய சூறையாடலை நடத்துவதற்கு முடிவெடுத்த பின்னரே, இத்தகைய உட்கூறுகள் ஊக்குவிக்கப்பட்டு, ஆயுதமேந்த செய்யப்பட்டு, பாரிய வான்வழி பலத்தைக் கொண்டு ஆதரவு வழங்கப்பட்டன.

இந்த கொள்ளையிடும் நவகாலனித்துவ தலையீட்டின் நாசகரமான விளைவுகள் இப்போது மறுக்க முடியாதவையாகும். ஒட்டுமொத்த சமூகங்களை அழித்துள்ள மற்றும் மில்லியன் கணக்கானவர்களை அகதிகளாக மாற்றியுள்ள, எண்ணெய் வளம்மிக்க மத்தியகிழக்கு மற்றும் வட ஆபிரிக்க தலையீடுகள் மற்றும் ஏகாதிபத்திய போர்களின் அதிகரித்து வரும் எண்ணிக்கையில், இது வெறுமனே ஒன்று மட்டுமே ஆகும். இதில் ஈராக், சிரியா, இப்போது ஏமன் போர்கள், அத்துடன் மாலி, சோமாலியா மற்றும் சூடானில் ஏகாதிபத்திய சக்திகள் அல்லது அவற்றின் பிராந்திய பினாமிகளின் தலையீடுகள் ஆகியவையும் உள்ளடங்கும்.

சர்வதேச பொது மன்னிப்பு சபையின் (Amnesty International) கருத்துப்படி, ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கில் தீவிரமடைந்துவரும் மோதல்கள் "இரண்டாம் உலக போருக்குப் பின்னர், அகதிகளை மிகப்பெரிய பேரிடர்களுக்கு இட்டுச்" சென்றுள்ளன. 2012ஐ விட 6 மில்லியன் கூடுதலாக, கடந்த ஆண்டு மட்டும் உலகெங்கிலும் 57 மில்லியன் மக்கள் நாடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதாக சர்வதேச பொது மன்னிப்பு சபை மதிப்பிடுகிறது.

நியூ யோர்க் டைம்ஸ் தலைமையிலான அமெரிக்க பத்திரிகைகள், இந்த மனிதயின பேரழிவுகளை உண்டாக்கி உள்ள அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளின் நடவடிக்கைகளைப் பெரிதும் குறிப்பிடாமல், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் வறுமை மற்றும் வன்முறையிலிருந்து அகதிகள் தப்பியோடி வருவதாக எழுதுகின்றன. மத்தியத்தரைகடலில் என்ன கட்டவிழ்ந்து வருகிறதோ, அதுவொரு துன்பியல் அல்ல; அதுவொரு ஏகாதிபத்திய போர் குற்றமாகும்.