சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The police murder in Baltimore

பால்டிமோரில் பொலிஸ் படுகொலை

By Andre Damon
24 April 2015

Use this version to printSend feedback

ஏப்ரல் 12 அன்று, 25 வயதான ஃப்ரெட்டி க்ரே, பால்டிமோர் பொலிஸ் அதிகாரி ஒருவரை "நேருக்குநேராக பார்த்தார்"; ஒரு வாரத்திற்குப் பின்னர் ஒரு காட்டுமிராண்டித்தனம் மற்றும் சித்திரவதைச் சம்பவத்தில், அவரது இடதுபுற மூன்று முதுகெலும்புகள் உடைந்து, அவரது முதுகு தண்டுவடம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் இறந்து போனார்.

அந்த மனிதர் அனுபவித்த வலிநிறைந்த கொடூர அனுபவத்தின் வெறும் ஒரு பாகமாக மட்டுமே கருதக்கூடிய, ஒரு பார்வையாளரின் காணொளி, இறுகிய-முகத்துடன் பொலிஸ் அதிகாரிகளின் ஒரு குழு பொலிஸ் வேனின் பின்னாலிருந்த ஒரு சிறிய இரும்பு கூண்டுக்குள் க்ரேயை உதைத்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது, காயப்பட்டிருந்த அவர் கண்கூடாக வலியால் கதறுகிறார். முப்பது நிமிடங்களுக்குப் பின்னர், மரணத்தின் விளிம்பில் அவர் ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.       

ஒரு கொடூரமான சித்திரவதை வடிவம் என்று மட்டுமே கூறக்கூடிய நடவடிக்கைக்கு பொலிஸ் அதிகாரிகள் க்ரேயை உட்படுத்தினர், அவரது குதிங்கால்களைப் பின்பக்கமாக மடக்கி, "காகிதத்தை மடிப்பதை போல அவர் மடிக்கப்பட்டார், நடக்க இயலாமல் அவர் மருத்துவ உதவி கோரி கெஞ்சுமளவிற்கு விடப்பட்டார், என்று அந்த பார்வையாளர், அந்த காணொளி தொடங்குவதற்கு முன்னதாக, கூறுகிறார்.

சிறிய இரும்பு கூண்டு பொலிஸ் வேன்களுக்குள் கட்டிப்போடப்பட்ட கைதிகளைத் "தாறுமாறாக அடிப்பது" என்பது பால்டிமோர், பிலடெல்பியா மற்றும் ஏனைய நகரங்களில் பொலிஸால் பயன்படுத்தப்படும் "தொடாமல் சித்திரவதை" செய்யும் வடிவமாக உள்ளது என்பதை அடுத்தடுத்து வெளியான பத்திரிகை செய்திகள் குறிப்பிட்டன.

பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்தின் ஒரு நீண்ட வரலாறை பால்டிமோர் கொண்டுள்ளது, இது 2011க்கு பின்னரில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு 5.7 மில்லியன் டாலர் பணம் செலுத்துவதில் போய் முடிந்துள்ளது. The Baltimore Sun பத்திரிகை குறிப்பிட்டது, கரடுமுரடான பகுதியில் ஓட்டும் ஒரு பைக்கை ஓட்டிக்கொண்டிருந்த 15 வயது சிறுவன் ஒருவன், அடிப்பதை நேரில் பார்த்த ஒரு 26 வயது கர்ப்பிணி பெண் கணக்காயர், தேவாலய குலுக்குச் சீட்டுக்கள் (raffle tickets) விற்று கொண்டிருந்த 50 வயதான பெண் ஒருவர், சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த 65 வயது தேவாலய மணியக்காரர் மற்றும் காயப்பட்ட அவரது பேரனுக்கு உதவி கொண்டிருந்த 87 வயதான பாட்டி ஒருவர் என இவர்களும் பாதிக்கப்பட்டவர்களில் உள்ளடங்குவர்.

க்ரேயின் படுகொலை, அந்நகரில் 2005 பொலிஸ் படுகொலையை நினைவூட்டுகிறது, அந்த சம்பவத்தில் டோண்டி ஜோன்சன், வரையறுக்கப்பட்ட வேகத்தில் ஓட்டி வந்திருந்தால் வந்திருக்கக்கூடிய நேரத்தைக் காட்டிலும் அரை மணிநேரத்திற்கு முன்னரே அவ்விடத்திற்கு வந்த ஒரு பொலிஸ் வாகனத்தில், உள்நோக்கத்துடன் அவர் "தாறுமாறாக அடிக்கப்பட்டதில்", அவரது முதுகு தண்டுவட எலும்பு முறிந்தது. அவரது குடும்பத்திற்கு 7.4 மில்லியன் டாலர் வழங்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது, அது பின்னர் 200,000 டாலராக குறைக்கப்பட்டது.

இவ்விரு விடயங்களிலுமே, வழிமுறைக்கு முரண்பட்ட விதத்தில், கைவிலங்கிடப்பட்டவர்களுக்கு இருக்கை பட்டைகள் அணிவிக்கப்படவில்லை என்று கூற பொலிஸ் நிர்பந்திக்கப்பட்டது. "தாறுமாறாக வாகனத்தை செலுத்தியதில்" இரண்டு பேர் முடமாயினர் என்ற குற்ற சட்டவழக்குகளை தீர்க்க பிலடெல்பியா நகரம் 2 மில்லியன் டாலருக்கும் கூடுதலாக செலவிட்டது.

பொலிஸ் அதிகாரிகளது நடவடிக்கைகளின் இந்த மனிதப்படுகொலை குணாம்சம் அமெரிக்க வாழ்வின் ஓர் அடிப்படை எதார்த்தத்தை அடிக்கோடிடுகிறது: அதாவது, அமெரிக்கா எங்கிலும் தொழிலாள வர்க்க வசிப்பிட பகுதிகளில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை ஏதோ ஆக்கிரமிப்பு செய்துவிட்ட மக்களாக பொலிஸ் கையாள்வதுடன், ஏதேச்சதிகார வன்முறை மற்றும் படுகொலையைக் கொண்டும் கூட அவர்களைத் தாக்க, நடைமுறையில் அது கொலைப் படைகளாக செயல்படுகிறது.

பெருகியளவில் இராணுவமயப்பட்ட பொலிஸ் மத்தியில் ஊக்குவிக்கப்படும் சமூக-விரோத கண்ணோட்டங்கள் இந்த வார வெளியீடுகளில் பிரதிபலித்தன, ஒடுக்குமுறையை மேற்பார்வையிட்டு வருகின்ற தேசிய பாதுகாப்புப்படை அதிகாரிகள், ஃபேர்குசன், மிசோரியில் அரசியலமைப்புரீதியில் பாதுகாக்கப்பட்ட பேச்சு சுதந்திர உரிமைக்காக அமைதியானரீதியில் ஈடுபட்டு வந்த அந்த போராட்டக்காரர்களை, உத்தியோகபூர்வ ஆவணங்களில் "எதிரிப் படைகளாக" குறிப்பிட்டனர்.

இத்தகைய நடவடிக்கைகளும், அவற்றில் உள்ளடங்கிய படுகொலை நடவடிக்கைகளும், வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மையின் பாரிய மட்டங்களால் ஆழமாக தாக்குண்ட ஒரு சமூகத்தின் வெளிப்பாடுகளாகும். அதில் பொலிஸ் அதிகளவில் தங்களைத்தாங்களே, மக்களை விலையாக கொடுத்து தன்னைத்தானே செழிப்பாக்கி கொண்டுள்ள நிதியியல் செல்வந்த தட்டுக்களிடமிருந்து வறிய மக்களைப் பிரிக்கும் "மெல்லிய நீல கோடுகளாக" காண்கின்றனர்.

கடந்த பல தசாப்தங்களில் தொழிலாள வர்க்க வாழ்க்கை தரங்களின் பெரும் சீரழிவு மற்றும் வீழ்ச்சியில் பால்டிமோர் ஓர் சிறிய அடையாளமே ஆகும். இது அதன் மக்கள்தொகை மூன்று பங்கிற்கு அண்மித்தளவில் சரிவதற்கு இட்டுச் சென்றுள்ளது.

1970க்கு பின்னரில் இருந்து அந்நகரம் 84 சதவீதத்திற்கும் அதிகமான அதன் உற்பத்தித்துறை வேலைகளை இழந்துள்ளது, அதேவேளையில் உத்தியோகபூர்வ வறுமை விகிதம் 25 சதவீதத்திற்கும் கூடுதலை எட்டியுள்ளது. ஒரு நூற்றாண்டு கால போக்கில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்த Sparrows Point இல் பெத்லெஹம் எஃகு ஆலையின் இதயதானமாக ஒருகாலத்தில் விளங்கிய L Blast Furnace தூண்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அகற்றப்பட்டன.

உலக தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவமனை அமைப்புமுறையை கொண்ட பால்டிமோரின் செல்வாக்குமிக்க நகர மையம், மானக்கேடான விதத்தில் வறுமையின் காட்சிகளால் சூழப்பட்டுள்ளது; எரிந்து சாம்பலாகி கைவிடப்பட்ட வரிசையான வீடுகளைக் கொண்ட ஒட்டுமொத்த அண்டை சமூகங்களில் பத்து ஆயிரக் கணக்கானவர்கள் வறுமையில் உள்ளனர்.

அந்நகர வறுமைக்கு எதிராக திருப்பிவிடப்பட்ட அசாதாரணமான காட்டுமிராண்டித்தன மற்றும் ஒடுக்குமுறை கொள்கைகள், அந்த சமூக அவல நிலைமைகளைப் பின்தொடர்கின்றன. அந்நகரின் இரவு 9.00 மணிக்குப் பிந்தைய ஊரடங்கு உத்தரவை குழந்தைகள் மீறினால் அவர்களது பெற்றோர்களுக்கு 500 டாலர் அபராதம் விதிக்கும் ஒரு சட்டத்தை கடந்த ஆண்டு பால்டிமோர் அமல்படுத்தியது. அது அந்நகரின் 2,400 வீடற்ற இளம் "தந்தையரை ஒதுக்குப்புறமாக" தள்ளும் என்று கூறி, வீடற்றவர்களுக்கு அனுதாபம் காட்டியவர்கள் அந்த ஊரடங்கு உத்தரவைக் கண்டித்தனர், அந்த குறிப்பிட்ட மணி நேரத்திற்குப் பின்னர் வெளியே பிடிக்கப்படும் எந்தவொரு இளைஞரையும் பொலிஸ் கைது செய்ய அச்சட்டம் அனுமதிக்கிறது.

அனேகமாக அந்நகர மக்கள் மீதான மிகவும் கொடூர தாக்குதலாக இருக்கக்கூடிய விதத்தில், கடந்த மாதம் அந்நகர நிர்வாகம், ஏறத்தாழ 25,000 ஏழை குடிமக்களுக்கு தண்ணீர் வினியோகத்தை நிறுத்த இருப்பதாக அறிவித்தது, அது போராட்டங்களைத் தூண்டிவிட்டது.

மக்களின் சமூக உரிமைகள் மீதான இத்தகைய அதிர்ச்சியூட்டும் அளவிற்கு மோசமான தாக்குதல்கள், மேயர், பொலிஸ் கமிஷனர், மற்றும் நகரமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் ஆபிரிக்க அமெரிக்கர்களாக இருக்கும் ஒரு நகரில், மற்றும் தசாப்தங்களாக ஜனநாயகக் கட்சி நிர்வகிக்கும் ஒரு நகரில் நடக்கின்றன. பெருவணிக கட்சியின் சிறுபான்மையின வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது தொழிலாளர்கள் பெரும்பான்மையினரின் வாழ்க்கையை முன்னேற்றுவிக்கும் என்ற வாதத்தை இது தகர்க்கிறது.

க்ரே படுகொலையைத் தொடர்ந்து வெடித்துள்ள பாரிய போராட்டங்கள் குறிப்பாக மிகவும் முக்கியமானவை ஆகும், ஏனெனில் சிறுபான்மையின தொழிலாளர் மத்தியில் வறுமை அதிகரித்துள்ள அதேவேளையில் தங்களின் சொந்த செல்வவளம் மற்றும் அதிகாரத்தை அடுக்கிக் கொண்டே சென்றுள்ள இந்த செல்வாக்குமிகுந்த கறுப்பின மேற்தட்டுக்கு, தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளிடையே அதிகரித்துவரும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது.

பொலிஸ் மற்றும் அரசியல்வாதிகள் இரண்டினாலும், பால்டிமோர் மக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனம், நாடெங்கிலும் நடந்துள்ள தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலின் ஒரு ஒன்றுதிரண்ட வெளிப்பாடாகும். அது வாழ்க்கை தரங்கள் பெரிதும் பொறிந்து போனமை மற்றும் உற்பத்தி வேலைகளின் ஊதியங்கள் நடப்பில் பாதியாக குறைக்கப்பட்டமை என இவற்றில் போய் முடிந்துள்ளது.

ஒபாமா நிர்வாகத்தால் அரசின் உயர்மட்டளவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பொலிஸ் இராணுவமயமாக்கல் என்பது வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சியைப் பின்தொடர்ந்து வருகிறது. தேசியளவில் பொலிஸ் படுகொலைகளை கண்காணிப்பதைக் கூட ஆணித்தரமாக மறுத்துள்ள ஒபாமா வெள்ளை மாளிகை, அதேவேளையில், உள்ளூர் பொலிஸிற்காக இராணுவ தளவாடங்கள் வாங்க பில்லியன் கணக்கான டாலர்களை கைமாற்றுகிறது. நிராயுதபாணியான இளம் சிறுவர் மைக்கேல் பிரௌனைக் கொன்ற முன்னாள் ஃபேர்குசன் பொலிஸ் அதிகாரி டாரென் வில்சன் உட்பட, கொலைகார பொலிஸ்காரர்களுக்கு எதிராக பெடரல் குற்றச்சாட்டுக்களைக் கொண்டு வருவதற்கு, வெள்ளை மாளிகை மீண்டும் மீண்டும் மறுத்துள்ளது.

பொலிஸ் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் அனுதாபங்களைத் தெரிவித்ததற்கு இடையே, உச்சநீதிமன்றத்தில் [ஒபாமா நிர்வாகத்தின்] நீதித்துறை ஒவ்வொரு முறையும் அதன் வாதங்களில் படைகளைப் பயன்படுத்தும் விடயம் என்று கூறி பொலிஸ் அதிகாரிகளை ஆதரித்துள்ளது, என்று இந்த வாரத்தின் தொடக்கத்தில் Washington Post குறிப்பிட்டது.

கடந்த தசாப்தத்தில் பொலிஸ் கரங்களில் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ள போதினும், வெறும் 54 அதிகாரிகள் மட்டுமே பணியில் இருந்தபோது மக்களைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர், அவர்களில் 11 பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது, அதுவும் பெரிதும் மெதுவாக தட்டுவதைப் போன்ற தண்டனைகள்.

போர், சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகாரம் முதலாளித்துவ அமைப்புமுறையின் தவிர்க்கவியலாத விளைபொருள்களாகும். பொலிஸ் வன்முறையிலிருந்து சுதந்திரம் உட்பட ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு என்பது இந்த ஊழல்மிகுந்த மற்றும் காட்டுமிராண்டித்தனமான சமூக ஒழுங்கை தூக்கியெறிந்து, ஒரு நேர்மையான சமநோக்கு கொண்ட சமூக வடிவத்தை அதாவது சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாததாகும்.