சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

China invests $46 billion in strategic Pakistan-China Economic Corridor

மூலோபாயரீதியிலான பாகிஸ்தான்-சீன பொருளாதார வழித்தடத்தில் சீனா $46 பில்லியன் முதலீடு செய்கிறது

By Athiyan Silva
28 April 2015

Use this version to printSend feedback

பாகிஸ்தான்-சீன பொருளாதார வழித்தட திட்டத்தைத் (Economic Corridor project) தொடங்கி வைக்க, ஏப்ரல் 20 அன்று, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் முதலீட்டாளர்கள், வங்கியாளர்கள் மற்றும் வணிகர்களுடன் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தார். இந்த திட்டம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பெட்ரோலியம் போன்ற எரிசக்தி ஆதாரவளங்களை பாகிஸ்தான் வழியாக நிலத்தினூடாக சீனாவிற்கு கொண்டு செல்ல சீனாவை அனுமதிக்கும்.

சீனாவைத் தனிமைபடுத்த மற்றும் கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பால்" கட்டவிழ்த்துவிடப்பட்டு தீவிரமடைந்துவரும் இராணுவ பதட்டங்களுக்கு இடையே, குறிப்பாக இந்த உடன்படிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய கிழக்கிலிருந்து சீனாவின் எரிபொருள் இறக்குமதிகள், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி கடற்படைகளால் முற்றுகையிடப்படும் அச்சுறுத்தலை பெரிதும் தந்திரமாக வெல்வதற்கு இது சீனாவை அனுமதிக்கும். உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான சீனா, அதன் எண்ணெய் தேவையில் 60 சதவீதத்தை மத்திய கிழக்கிலிருந்து இறக்குமதி செய்வதுடன், அதில் 80 சதவீதத்தை இந்திய பெருங்கடல், மலாக்கா ஜலசந்தி, தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடல்கள் வழியாக கொண்டு செல்கிறது.

இந்த திட்டத்தின் பாகமாக சீனா பாகிஸ்தானுடன் 46 பில்லியன் டாலர் மதிப்பிலான 51 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டது. சீனாவின் தொழில்துறை மற்றும் வர்த்தக வங்கி, சீன எக்சிம் பேங்க் (ஏற்றுமதி-இறக்குமதி வங்கி), மற்றும் சீன அபிவிருத்தி வங்கி கார்ப்பரேஷன் போன்ற சீன வங்கிகளால் இவற்றிற்கு நிதி வழங்கப்பட உள்ளன.

பாகிஸ்தானின் மிகப்பெரிய ஆயுத வினியோகஸ்தரான சீனா, Type 039A அல்லது Type 041 ஆகிய டீசலில் செயல்படும் எட்டு யுவான் (Yuan) ரக தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களையும் பாகிஸ்தானுக்கு வழங்குகிறது. பாகிஸ்தானின் நீர்மூழ்கி கப்பல்படையை நவீனமயமாக்கும் ஒரு பரந்த முயற்சியின் பாகமாக மற்றும் அதற்கு அணுஆயுதமேந்தும் தகைமையை வழங்கும் பொருட்டு, பிரதம மந்திரி நவாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு குழுவும் அந்த உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

அந்த வழித்தட திட்டம், பாகிஸ்தானின் குவதார் (Gwadar) துறைமுகத்தில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளைக் கொண்டிருக்கும், அத்துடன் குவாதாரிலிருந்து, பாகிஸ்தான் வழியாக, நேரடியாக மலைப்பிரதேச பாகிஸ்தான்-சீன எல்லையினூடாக மேற்கு சீனாவின் காஸ்கர் வரையில், 3,000 கி.மீ தூரத்திற்கு குழாய்வழி, ரயில்வழி மற்றும் தரைவழி வலையமைப்பும் அதில் உள்ளடங்குகிறது. வான் போக்குவரத்து, ரயில் உள்கட்டமைப்பு, காற்றாலை மற்றும் நீர்மின் நிலையங்கள், மற்றும் ஒளியிழை தொலைதொடர்புகள் (fibre optic communicaiton) மீதான தொழில்நுட்ப கூட்டு-ஒத்துழைப்புகளும் அந்த உடன்படிக்கைகளில் சேர்ந்துள்ளன.

பாகிஸ்தானின் மிக வறியதும் மற்றும் மிகவும் கொந்தளிப்பான மாகாணங்களில் ஒன்றான பலுசிஸ்தான், எண்ணெய் வளம்மிக்க பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே, அரேபிய கடல் பகுதியின் மீது மூலோபாய முக்கியத்துவம் கொண்ட இடத்தில் குவதார் அமைந்துள்ளது. உலகில் சர்வதேச அளவில் வர்த்தகமாகும் எண்ணெய்களில் சுமார் நாற்பது சதவீதமளவிற்கு பாரசீக வளைகுடாவில் இருந்து ஏற்றுமதியாகின்ற நிலையில், அது இந்த ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகவே கடந்து செல்ல வேண்டும். அந்த உடன்படிக்கையின் வழிவகைகளின் கீழ், குவதார் துறைமுகம் இந்த ஆண்டு தொடங்கி 40 ஆண்டுகளுக்கு சீனாவிடம் ஒப்படைக்கப்படுவதால், சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் கட்டமைப்பு வேலைகளைத் தொடங்குகிறது.

வடமேற்கு சீனாவின் சின்ஜாங் உகுர் பிராந்தியத்தில் உள்ள பிரதான நகரங்களில் காஸ்கரும் ஒன்றாகும். அந்த உள்நாட்டு பகுதி சீனாவின் பசிபிக் கடற்கரையின் ஆர்ப்பரிக்கும் ஏற்றுமதி மையங்களை விட பெரிதும் வறியது என்பதுடன், சீன மக்களில் பெரும்பான்மையினராக உள்ள ஹன் சீனர்கள் மற்றும் உகுர் சீனர்களுக்கு இடையே அதிகரித்துவரும் இனவாத பதட்டங்களையும் முகங்கொடுக்கிறது. சின்ஜாங்கில் பொருளாதார வளர்ச்சியை ஓர் அரசியல் முன்னுரிமையாக பார்ப்பதாக சீன அரசாங்கம் மீண்டும் மீண்டும் அறிவித்துள்ளது.

அதேபோல முன்மொழியப்பட்ட பொருளாதார வழித்தடம் புதிய வர்த்தக பாதைகளைத் திறந்துவிடும், அது சீனா மற்றும் மத்திய கிழக்கிற்கு இடையே வர்த்தகமாகும் பண்டங்கள் 16,000 கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டிய தூரத்தைக் குறைக்கிறது.

எவ்வாறிருந்தபோதினும், மத்திய ஆசியாவைப் பொருளாதாரரீதியில் அபிவிருத்தி செய்யும் முயற்சிகளானது, ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய சக்திகளுக்கு இடையே இராணுவ பதட்டங்களைத் தூண்டுகிறது என்ற உலகளாவிய முதலாளித்துவத்தின் இதயத்தானத்தில் உள்ள முரண்பாடுகளை அந்த உடன்படிக்கை எடுத்துக் காட்டுகிறது. பில்லியன் கணக்கான மக்கள் வாழ்கின்ற அந்த முழுமையாக அபிவிருத்தி அடையாத பகுதிகள் இன்னமும் மோசமான வறுமை மற்றும் சமூக பின்தங்கிய நிலைமையைச் சகித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இங்கே அமெரிக்காவைக் கூறாமல் விடுத்தாலும் கூட, பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா உட்பட இந்த அணுஆயுதமேந்திய சக்திகளுக்கு இடையிலான மோதல் அச்சுறுத்தலை அவை முகங்கொடுக்கின்றன.

இத்தகைய பதட்டங்கள், அனைத்திற்கும் மேலாக, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூரை உள்ளடக்கிய ஒரு கூட்டணி உடன் சீனாவை சுற்றி வளைக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்ரோஷமான "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பால்" உந்தப்படுகிறது. அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய கடற்படைகள் கூட்டாக ஒன்றுசேர்ந்து இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் சீன எண்ணெய் வினியோகங்களை முற்றுகையிடக்கூடிய அச்சுறுத்தல்களே, இந்த நிகழ்ச்சிநிரலின் பிரதான பாகமாகும்.

சீன-பாகிஸ்தான் உடன்படிக்கை வாஷிங்டனுக்கு ஓர் அரசியல் அடியாகும், அது அண்டைநாடான ஆப்கானிஸ்தானிலிருந்து அதன் ஆக்கிரமிப்பு படைகளைப் பெரிதும் திரும்ப எடுத்துள்ளதுடன், அப்பிராந்தியத்தில் அது ஆழமாக மதிப்பிழந்துள்ளது. 2004க்கு பின்னரில் இருந்து இதுவரையில் ஒபாமாவின் கீழ் நடத்தப்பட்ட 330 தாக்குதல்கள் உட்பட பாகிஸ்தானில் நடத்தப்பட்ட சிஐஏ டிரோன் தாக்குதல்களில் ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஐநா அதிகாரிகள், பாகிஸ்தான் நீதிமன்றங்கள் மற்றும் சர்வதேச பொதுமன்னிப்பு சபை போன்ற மனித உரிமை குழுக்கள் அத்தகைய டிரோன் படுகொலைகளை சட்டவிரோதமானவையாக அறிவித்துள்ளன, ஆனால் பாகிஸ்தானில் பரந்த மக்கள் எதிர்ப்பை நசுக்கி, சிஐஏ ஏதேனும் வழியில் அவற்றை முன்னெடுத்துள்ளது.

அதன் பரந்த பெரும் நிதியியல் ஆதாரவளங்களைக் கொண்டிருந்த போதினும் அப்பிராந்திய மக்கள் மீது குண்டுவீசுவதிலும் பீதியூட்டுவதிலும் அதன் சக்திகளை ஒருங்குவித்திருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நாசப்படுத்திய பாத்திரத்திற்கு நேரெதிராக பாகிஸ்தானில் பெய்ஜிங்கின் தொழில்துறை முதலீடு அமைந்துள்ளது.

சீனாவின் 46 பில்லியன் டாலர் முதலீடு, கடந்த 7 ஆண்டுகளில் பாகிஸ்தான் பெற்றுள்ள மொத்த அன்னிய நேரடி முதலீட்டை விட ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகமாகும், அத்துடன் பாகிஸ்தானில் அமெரிக்கா செலவு செய்ததையும் இது பெரிதும் கடந்து செல்கிறது. வாஷிங்டன் 2002 இல் இருந்து பாகிஸ்தானுக்கு 31 பில்லியன் டாலர் வழங்கி இருப்பதாகவும், அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு நிதி "பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்காக" அர்ப்பணிக்கப்பட்டதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

ஏப்ரல் 19இல், நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது, அந்த முயற்சி 'மிகப்பெரும் தோல்வியானது', ஏனென்றால் அந்த ஆதாரவளங்கள் அதிகம் மறைப்பில்லாமல் ஆங்காங்கே சிதறின, அத்துடன் எந்தவித நடைமுறை தாக்கமோ அல்லது மூலோபாய தாக்கமோ கொண்டிருக்கவில்லை என்று பாகிஸ்தானுக்கு பொறுப்பான பெண்டகனில் இருந்த ஒரு முன்னாள் மூத்த அதிகாரி டேவிட் எஸ். செட்னெ அப்போதே தெரிவித்தார்.

ஏனைய பிராந்திய சக்திகளும்அனைத்திற்கும் மேலாக பாகிஸ்தானின் பாரம்பரிய எதிரியும், 1962 இல் சீனாவுடன் ஒரு போர் செய்துள்ளதுமான இந்தியா சமீபத்திய சீன-பாகிஸ்தான் உடன்படிக்கையின் இராணுவரீதியிலான தாக்கங்களைக் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது மற்றும் அதை எதிர்கொள்ள மூலோபாயங்களுக்கு தயாரிப்பு செய்து வருகிறது.

ஜி பாகிஸ்தானில் விஜயம் செய்வதற்கு முந்தைய நாள், இந்திய கடற்படை தலைமை தளபதி ரோபின் தோவன் Hindustan Times உடனான ஒரு பேட்டியில், கடற்படை எந்தவொரு அசம்பாவிதத்திற்கும் தயாராக உள்ளது, இந்திய பெருங்கடலை பலத்த கண்காணிப்பின் கீழ் நிறுத்தி உள்ளோம். எங்களைச் சுற்றியுள்ள கடல்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். கடற்படை பன்முக-பரிமாணத்தில் தாக்கும் படையாகும், அப்பிராந்தியத்தில் கட்டவிழும் அபிவிருத்திகளுக்கு இடையே கடலைக் கட்டுப்படுத்துவது மற்றும் கடலை அணுக நிராகரிப்பது ஆகியவை சம்பந்தமாக எல்லா அம்சங்களையும் நாங்கள் பார்த்து வருகிறோம், என்று எச்சரித்தார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில், பிரான்சிற்கு விஜயம் செய்திருந்த இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி இந்திய விமானப்படையை நவீனமயமாக்க டஜன் கணக்கான ரஃபால் போர் விமானங்கள் வாங்குவது குறித்தும், அத்துடன் ஆறு EPR (Evolutionary Power Reactor) அணுஆயுத உலைகள் மீதும் பேரம்பேசி இருந்தார்.

சீன மற்றும் பாகிஸ்தான் ஆட்சிகள் அந்த உடன்படிக்கை மீது முன்னோக்கி நகர்கின்ற போதினும், பலுசிஸ்தானுக்குள் சமூக மற்றும் இனவாத மோதல்களை பாகிஸ்தானின் தசாப்தகால முதலாளித்துவ ஆட்சி தீவிரப்படுத்த மட்டுமே செய்துள்ள நிலையில், அவை அவற்றையும் முங்கொடுக்கின்றன.

ஜனாதிபதி ஜி ஜின்பிங் அத்திட்டத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறித்து விவாதிக்க பாகிஸ்தானின் தலைமை தளபதியையும் மற்றும் ஆயுத படைகளின் தலைவர்களையும் சந்தித்தார். பிரதம மந்திரி நவாஸ் ஷெரீப் உட்பட பாகிஸ்தானிய அதிகாரிகள் பாகிஸ்தானில் சீன கட்டுமான தொழிலாளர்களைப் பாதுகாக்க மொத்தம் 10,000 பாகிஸ்தானிய துருப்புகளின் ஒரு புதிய சிறப்பு பிரிவை நிலைநிறுத்துவதற்கு ஒப்புக் கொண்டனர். அத்திட்டம் குறித்து விவாதிக்க ஜி இஸ்லாமாபாத்தின் வெவ்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்தார்.

ஏப்ரல் 11 அன்று, பலுசிஸ்தானின் துர்பட் அருகில் 20 சிந்த் மற்றும் பஞ்சாபி கட்டுமான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். பிரிவினைவாத பலுசிஸ் சுதந்திர முன்னணி (Baloch Liberation Front) அந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.