சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

National Guard deployed in Baltimore after anger erupts over police killing

பொலிஸ் படுகொலை மீது கோபம் வெடித்ததும் பால்டிமோரில் தேசிய பாதுகாப்பு படை நிலைநிறுத்தப்பட்டது

By Jerry White
28 April 2015

Use this version to printSend feedback

பொலிஸ் வன்முறை மற்றும் வறுமை குறித்து அந்நகர மக்கள் கோபகரமாக வெடித்ததை அடுத்து, மேரிலாந்து ஆளுநர் லேரி ஹோகன் பால்டிமோரில் அவசரகால நெருக்கடியை அறிவித்ததுடன், திங்களன்று மாலை 5,000 தேசிய பாதுகாப்புப்படை துருப்புகளையும் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தார். 620,000 மக்கள்தொகையைக் கொண்ட பால்டிமோர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி. இல் இருந்து வெறும் 40 மைல் தூரத்தில் அமைந்துள்ளது.

நூற்றுக் கணக்கான உயர்நிலை பள்ளி இளைஞர்கள் திங்களன்று பள்ளியிலிருந்து வெளிநடப்பு செய்ததுடன், பொலிஸ் கரங்களில் பேராபத்தான முதுகுதண்டுவட காயங்களில் பாதிக்கப்பட்டு ஏப்ரல் 19 அன்று உயிரிழந்த 25 வயது நிரம்பிய ஃப்ரெட்டி க்ரேயின் பொலிஸ் படுகொலை மீதான போராட்டங்களில் இணைந்தனர். ஒரு பொலிஸ் அதிகாரியின் கண்களை நேருக்கு நேர் சந்தித்ததற்காக ஏப்ரல் 12 அன்று கைது செய்யப்பட்ட அந்த நிராயுதபாணியான மனிதர், தப்பியோட முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டார். ஆறு அதிகாரிகளைத் தாக்குப்பிடித்த பின்னர், ஒரு பொலிஸ் வாகனத்திற்குள் தூக்கிவீசப்பட்டு, மருத்துவ உதவி வழங்கப்படாமல், உடல் செயலற்ற நிலையில் ஒரு வாரத்திற்குப் பின்னர் உயிரிழந்தார்.

திங்களன்று காலையில் நடத்தப்பட்ட க்ரேயின் இறுதிசடங்கிற்குப் பின்னர் இளைஞர்கள் மற்றும் ஏனையவர்கள் கோபத்தால் கொந்தளித்தனர்.

குடியரசு கட்சியைச் சேர்ந்த ஆளுநர் ஹோகன் அவசரகால சட்டத்தை அறிவிக்கையில், ஜனாதிபதி ஒபாமாவுடன் அவர் பேசி இருந்ததாகவும், துருப்புகள் நிலைநிறுத்துவதை அவர் பலமாக ஆமோதித்ததாகவும் மற்றும் "நமது வீதிகளை நாம் முற்றிலுமாக கட்டுப்பாட்டில் கொண்டிருக்க வேண்டும்" என்பதில் உடன்பட்டதாகவும் தெரிவித்தார்.

அன்றைய மாலைப்பொழுதுக்கு முன்னதாக, பால்டிமோரின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஆபிரிக்க-அமெரிக்க மேயர் ஸ்டீபன் ராலிங்ஸ்-பிளேக், போராட்டக்காரர்களை "இவர்கள் வெறுமனே வன்முறையைத் தூண்டிவிடவும் மற்றும் அந்நகரை அழிக்கவும் விரும்பும் குண்டர்கள்" என்று குற்றஞ்சாட்டினார். பொலிஸ் மற்றும் ஊடகங்களது காணொளி ஒலிநாடாக்கள் மீளாய்வு செய்யப்பட்டு, அந்த வன்முறைக்கு பொறுப்பானவர்கள் "கணக்கில் கொண்டு" வரப்படுவார்கள் என அப்பெண்மணி உறுதியளித்தார்.

தேசிய பாதுகாப்பு படை துருப்புகளை நிலைநிறுத்துவதற்கு அவர் கோரியிருப்பதாக தெரிவித்த ராலிங்ஸ்-பிளேக், செவ்வாய்கிழமை தொடங்கி நகரம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.

நகரசபை தலைவர் ஜாக் யங், “இந்த குண்டர்கள் பொலிஸ் மீது கோபம் மற்றும் அவநம்பிக்கையைக் காட்டுவதற்கு இதையொரு சந்தர்ப்பமாக கைப்பற்றி உள்ளனர்,” என்பதை சேர்த்துக் கொண்டார்.

பத்திரிகைகளில் பேசும் ஒவ்வொரு உள்ளாட்சி மற்றும் மாநில அதிகாரிகளது பேச்சுக்களும் நடைமுறையில், ராலிங்ஸ்-பிளேக் மற்றும் யங்கின் உணர்ச்சியைக் கிளறிவிடும் பேச்சுக்களையே எதிரொலிக்கின்ற நிலையில், கறுப்பினம் வெள்ளையினம் என்ற பேதமின்றி அந்நகரின் தனிச்சலுகை கொண்ட மேற்தட்டுக்கும், பெருந்திரளான இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் இடையிலான ஆழ்ந்த இடைவெளியை அவை எடுத்துக்காட்டின. பொலிஸின் மரணகதியிலான நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்தை நோக்கிய வெறுப்பு மற்றும் அவமதிப்பை பிரதிபலிக்கிறது, அதைத்தான் அந்நகரின் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் உணர்கிறது என்பதை இத்தகைய கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன.

இந்த போராட்டங்கள் க்ரேயின் இறுதிசடங்கு நடத்தப்பட்ட மேற்கு பால்டிமோர் தேவாலயத்திலிருந்து சில வீதிகளுக்கு அப்பால் தொடங்கின. நினைத்துப்பார்த்தால் கடந்த ஆண்டு மிசோரியின் ஃபேர்குசனைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த காட்சிகளில், கலகம்-ஒடுக்கும் கவசங்களோடு இராணுவமயப்பட்ட பொலிஸ், தந்திரோபாய குண்டுதுளைக்காத வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் பின்புலத்துடன், கற்கள் மற்றும் கம்புகளோடு விடையிறுப்பு காட்டிய இளைஞர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகள் மற்றும் இரப்பர் குண்டுகளைக் வீசினர்.

கலகம்-ஒடுக்கும் பொலிஸின் வியூகங்கள் வீதிகளில் அணிவகுத்ததுடன், அந்நகரின் வறுமை நிறைந்த தொழிலாள வர்க்க சமூகங்களின் தலையீடுகளைச் சுற்றி வளைத்தது.

போராட்டக்காரர்களைக் "கொள்ளையர்களாகவும்" மற்றும் "வன்முறை கலகக்காரர்களாகவும்" முத்திரை குத்துவதற்கு, உள்ளூர் மற்றும் தேசிய செய்தி ஊடங்கள் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களைக் கைப்பற்றிக் கொண்டன, இன்னும் மேலதிகமாக கடுமையான ஒடுக்குமுறையை கோரின. CNN “சட்ட வல்லுனர்" ஜேஃப்ரி டூபின், மேயர் மற்றும் பொலிஸ் தலைமை அதிகாரியின் "திறமையற்ற" விடையிறுப்பைக் குற்றஞ்சாட்டினார். “பொலிஸ் பிரசன்னம் இல்லாததால் ஒவ்வொரு மணிநேரமும் கட்டுப்பாடில்லாத விதத்தில் தொடர்ந்து கொள்ளையிடுவதை அவர்கள் அனுமதிப்பதாக,” அவர் குறைபட்டுக் கொண்டார். தேசிய பாதுகாப்புப்படை பின்புலத்தில் நின்று கொண்டிருக்கக்கூடாது, மாறாக வீதிகளைக் கட்டுப்பாட்டில் எடுத்திருக்க வேண்டும் என்பதே ஃபேர்குசன் படிப்பினையாக இருந்தது என்று CNN அறிவிப்பாளர் டான் லெமன் வலியுறுத்தினார்.

செய்தி அறிக்கைகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பொலிஸ் அதிகாரிகள் காயப்பட்டதை வர்ணித்தன, ஆனால் பொலிஸின் மிளகுபொடி உருண்டைகள் மற்றும் கண்ணீர் புகைகுண்டு வீச்சு மற்றும் கைத்தடியைக் கொண்டு பொலிஸ் தாக்கியதில் பாதிக்கப்பட்ட போராட்டக்காரர்களைக் குறித்து அவை விவரிக்கவில்லை. திங்கட்கிழமை மாலை வரையில், குறைந்தபட்சம் 30 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மற்றொரு நீதித்துறை விசாரணை நடத்தப்படுமென்ற வாக்குறுதிகளோடு, அந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ஒபாமா நிர்வாகத்தின் கீழ்நிலை அதிகாரிகளாலும் மற்றும் ஜெஸ்ஸி ஜாக்சன் போன்ற மதிப்பிழந்த பிரபலங்களாலும் கூட, சமூக எதிர்ப்பு வெடிப்பதைத் தடுக்க முடியவில்லை.

பொலிஸ் காட்டுமிராண்டித்தனமே உடனடி வினையூக்கியாக இருந்தாலும், மக்கள் கோபம் பரந்த காரணங்களால், அனைத்திற்கும் மேலாக, பலமாக வேரோடிய வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மையால் எரியூட்டப்பட்டிருந்தது.

எஃகு ஆலைகள் மற்றும் வாகனத்துறை ஆலைகள் கலைக்கப்பட்டமை உள்ளடங்கலாக, தொழிற்சாலைகளை மூடும் தசாப்தகால நடவடிக்கைகளுக்குப் பின்னர், பெரும்பான்மை இளைஞர்களின் நிலைமைகள் மூன்றாம் உலக நாடுகளுக்கு இணையாக, அல்லது அவற்றை விட மோசமாக உள்ளன. குறைந்த-வருவாய் அண்டைசமூகங்களில் வாழும் இளம் குற்றவாளிகள் குறித்து ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் புளூம்பேர்க் பொது சுகாதார அமைப்பால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு குறிப்பிடுகையில், மனநல பிரச்சினைகளைப் பொறுத்த வரையில் பால்டிமோரின் இளைஞர்கள், நைஜீரியாவின் அவர்களது சமதரப்பினரை விட போதை பழக்கம், பாலியல் வன்முறை மற்றும் இளம்வயது கர்ப்பம் ஆகியவற்றால் மிகவும் மோசமாக இருப்பதாக கண்டறிந்தது.

பால்டிமோரின் சில குறிப்பிட்ட பகுதிகள் அந்நகரை நிர்வகித்துவரும் செல்வந்த மேற்தட்டுக்க்காகவே புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், ஜனநாயக கட்சி கட்டுப்பாட்டிலான நிர்வாகம் அந்நகரவாசிகளில் பெரும்பான்மையினருக்கு எதிராக சிக்கன நடவடிக்கைகளை நடத்தி வருகிறது. அவர்களது குடிநீர் கட்டணங்களைச் செலுத்தவியலாமல் இருந்த ஆயிரக் கணக்கான குடும்பங்களுக்கு தண்ணீரை நிறுத்த தொடங்குவதென்று எடுக்கப்பட்ட அந்நகரின் முடிவுக்கு எதிராக கடந்த மாதம் குடியிருப்போர் போராட்டம் நடத்தினர்.

பால்டிமோர் மற்றும் ஃபேர்குசன் நிகழ்வுகள் போன்ற சம்பவங்கள், இத்தகைய நகரங்களில் மட்டுமல்ல, மாறாக அமெரிக்கா எங்கிலும் நிலவும் வர்க்க உறவுகளின் நிஜமான நிலையை உடனடியாக எடுத்துக்காட்டுகின்றன. சமூக எதிர்ப்புகள் கலகங்களின் வடிவத்தை எடுக்கிறதென்றால், அதற்கு காரணம், இரு வலதுசாரி பெருநிறுவன கட்டுப்பாட்டு கட்சிகளால் மேலாதிக்கம் செலுத்தப்படும் அரசியல் அமைப்புமுறைக்குள் அங்கே அவற்றால் வெளிப்பாட்டைக் காண வழியில்லாமல் இருப்பதே ஆகும்.