சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Pseudo-left NSSP prepares to support US-backed “colour revolution”

இலங்கை: போலி இடது நவ சம சமாஜக் கட்சி அமெரிக்க ஆதரவுவண்ணப் புரட்சி யை ஆதரிக்க தயாராகி வருகிறது

By K. Ratnayake
8 August 2015

Use this version to printSend feedback

இலங்கையின் ஆகஸ்ட் 17 பொதுத்தேர்தலை நோக்கிய நகர்வில், போலி இடது நவ சம சமாஜக் கட்சியின் (நசசக) தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் வலதுசாரி அமெரிக்க ஆதரவு ஐக்கிய தேசிய கட்சிக்கான (ஐதேக) கொள்கை பரப்பாளராக, குறிப்பாக ஆபத்தான பாத்திரத்தை ஆற்றிக் கொண்டிருக்கிறார்.

கருணாரத்ன, ஜனவரி 8ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், “பாசிச இராஜபக்ஷவுக்குஎதிரானஜனநாயக புரட்சிஎன வழக்கமாய் அவர் அறிவித்த மகிந்த இராஜபக்ஷவை அகற்றுவதற்காக பின்புலத்தில் இருந்து ஊக்குவிக்கும் உரத்துக் கூச்சலிடும் தலைவராக இருந்தார்.

இதற்கு மேலும் உண்மை இருக்க முடியாது.

ஜனவரியில் இடம்பெற்றது, பல மாதங்களுக்கு முன்பே வாஷிங்டனுடன் நன்கு தொடர்புள்ள ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரால் திட்டமிடப்பட்ட அமெரிக்க ஆதரவு ஆட்சி மாற்ற நடவடிக்கை ஆகும். இராஜபக்ஷ தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததும், சிறிசேன சுகாதார அமைச்சர் பதவியைத் துறந்து, ஐதேக மற்றும் இதர கட்சிகள், அதேபோல உயர் நடுத்தர வர்க்கத் தட்டினரை அடிப்படையாகக் கொண்ட டசின்கணக்கான கல்வியாளர் குழுக்கள், மக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசுசாரா அமைப்புக்கள் ஆகியோரின் ஆதரவுடன் தனது கட்சித் தலைவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டார்.

கருணாரத்ன இந்த நடவடிக்கையின் முன்னணியில் சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவுடன் மேடைகளில் தோன்றி, அவர்களைஜனநாயகத்தின் பாதுகாவலர்கள்என காட்டியதன் மூலமும் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட அவர்களின் நீண்டகால வரலாற்றை மூடிமறைத்ததன் மூலமும் மக்களை ஏமாற்றினார். இராஜபக்ஷவினது எதேச்சாதிகார ஆட்சியாலும் அவரது அடிவருடிகளாலும் தங்களது நலன்கள் புறக்கணிக்கப்பட்டதாக விரக்தியுற்ற, மற்றும் சீனாவுடனான அவரது தொடர்பு அமெரிக்காவிடமிருந்து பதிலடிகளுக்கு வழிவகுக்கும் என கவலைப்பட்ட ஆளும் வர்க்கத்தின் தட்டுக்களை சிறிசேனவும் விக்கிரமசிங்கயும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவும் பெயரளவிலான தலைவராகவும் இருக்கும் ஒரு விசித்திரமான சூழ்நிலை இப்பொழுதும் நிலவுகிறது.

இராஜபக்ஷவின் மீதான வாஷிங்டனின் குரோதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அவரது அரசாங்கம் நடத்திய இராணுவ கொடூரங்களுக்கான பொறுப்புக்களுடன், அல்லது அவரது  போலீஸ் அரசு வழிமுறைகளுடன் ஒன்றும் சம்பந்தப்பட்டதல்ல. சீனாவிற்கு எதிரான ஒரு யுத்தத்திற்காக அது தயாரிக்கையில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருக்கும் இலங்கை தீவினை அதன் வளையத்தில் கொண்டு வருவதற்கு அமெரிக்கா உறுதியுடன் இருக்கிறது. ஜனவரியில் சிறிசேன தோற்றிருந்தால், அமெரிக்கா ஏற்பாடு செய்தவண்ணப் புரட்சி.... மற்றும் இதர இடது இயக்கங்கள் முன்னிலையில் நின்று முன்னனிப் பாத்திரம் ஆற்றும் வகையில்திருடப்பட்ட தேர்தல்ஆக திருப்புவது ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏழுமாதங்கள் கழித்து, கருணாரத்ன இதேபோன்ற செயல்திறன் தயாரிப்பில் இருந்ததுடன் அவரதுபுரட்சிகரபண்புகள் இன்னும் அபத்தமாக கூட ஆயின. அவரது ... ஐந்து தேரதல் மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது, ஆனால் இது .தே. வெற்றியையும் இராஜபக்ஷவின் தோல்வியையும் உறுதிப்படுத்தும் அவரது வேட்கைக்கான மறைப்புக்காட்சிக்கு சற்று அதிகமாக இருந்தது.

இராஜபக்ஷ வேட்பாளர் ஆனவுடன், அவர் பிரதமராக அதிகாரத்திற்கு வரும் சாத்தியம் எழும்புகையில், கடந்த மாதம் கருணாரத்ன அளவுக்கு அதிகமாகவே சென்றார். அரசாங்கத்தின் பிரச்சாரசாதனமான, அரசுக்கு சொந்தமான டெய்லி நியூஸ் இல்ஜனநாயக புரட்சிஎன்றழைக்கப்படுவதை பாதுகாப்பதற்குமீண்டும் உயிர்த்தெழுந்த பகைவர்உடனானஇரண்டாவது மோதலுக்குதயாராகும்படி வேண்டுகோள் விடுத்தார்.

முழு பத்தியும் முற்றிலும் பொய்யானதன் அடிப்படையில் இருந்தது, ஆயினும், ஸ்ரீலங்காவில் உள்ள நிலைமைக்கும் 1917ல் ரஷ்யாவில் நிகழ்ந்த நிகழ்வுகளுக்கும் இடையிலான மிகவும் வெளிப்படையான ஒப்பீடாக அது இருந்தது. ஜனவரி 8 தேர்தலுக்கும் ஜாரிச எதேச்சாதிகாரத்தை தூக்கி எறிந்த ரஷ்யாவில் நடந்த பிப்ரவரி புரட்சிக்கும் இடையிலான ஒத்ததன்மையை வரைந்து கொண்டு கருணாரத்ன, இப்பொழுதுநாம் கெரன்ஸ்கி காலகட்டத்தில் சென்று கொண்டிருக்கிறோம்மற்றும் தேர்தல் வேட்பாளராக நிற்க விரும்பும்  இராஜபக்ஷவின் முடிவு ஆகஸ்ட் 1917ல் தளபதி கோர்னிலாவ்-ஆல் முயற்சிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதி போல என்றும் அறிவித்தார்.

சில உண்மைகளை கூறுவது தேவைப்படுகிறது. ஜாரைத் தூக்கி வீசிய பிப்ரவரி புரட்சியில், புரட்சிகர தொழிலாளர் சபைகள் அல்லது சோவியத்துக்களை உருவாக்கிய, லெனின் மற்றும் போல்ஷிவிக் கட்சியால் பயிற்றுவிக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் மிகவும் நனவுடைய தொழிலாளர்களால் தலைமைதாங்கப்பட்ட உண்மையான வெகுஜன இயக்கம் சம்பந்தப்பட்டிருந்தது. ஜூலை 1917ல் இருந்து அலெக்சாண்டர் கெரன்ஸ்கியால் உருவாக்கப்பட்டு தலைமை தாங்கப்பட்ட முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம், முதலாம் உலக யுத்தத்தில் ரஷ்யாவின் தலையீட்டை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருந்தது மற்றும் வெகுஜனங்களின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற அப்பட்டமாக திராணியற்று இருந்தது. கோர்னிலோவின் எதிர்ப்புரட்சிகர நகர்வுகளில் கெரன்ஸ்கி குற்றப்பொறுப்புடையதாக இருந்ததன் பின்னர் கெரன்ஸ்கியின் ஆதரவு பொறிந்துபோனது. லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் தலைமையிலான அக்டோபர் புரட்சியானது இடைக்கால அரசாங்கத்தை தூக்கி வீசி, வரலாற்றில் முதல்தடவையாக தொழிலாளர் அரசை நிறுவியது.

கருணாரத்னவின் பத்தி பற்றிய அரசியல் விளைபயன்களைக் கவனிக்கையில், குறைந்த பட்சம் சுருக்கமாகவாவது, அவரது விசித்திரமான ஒப்புமைகளின் முக்கிய அம்சங்களை அம்பலப்படுத்துவது அவசியமானதாகும்.

* ஸ்ரீலங்காவில் “50 ஆண்டுகால பாராளுமன்ற ஜனநாயகம்நிலை கொண்டிருந்தாலும், “நாம் அந்த ஜனநாயகத்தை பெரும்பாலும் இழந்துவிட்டோம் மற்றும் ஜாரிச ஆட்சி! போன்ற சர்வாதிகார மற்றும் பிற்போக்கு (இராஜபக்ஷ) ஆட்சிக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தோம்.”

ஸ்ரீலங்காவில் பாராளுமன்ற ஜனநாயகத்தின் புறத்தோற்றம் எப்போதும் இற்றுப்போனதாக இருந்து வருகிறது. அடுத்தடுத்து வந்த .தே. மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கங்கள் தமிழ் சிறுபான்மையினருக்கு அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுப்பதற்காக மற்றும் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்படும் கிராமப்புற வெகுஜனங்களுக்கு எதிராக போலீஸ் அரசு நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட மீண்டும் மீண்டும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை தட்டிஎழுப்பின.

1980களின் பிற்பகுதியில், 60,000 கிராம்ப்புற இளைஞர்களை படுகொலை செய்த இராணுவ ஆதரவு கொலைக் குழுக்களை கட்டவிழ்த்துவிட்ட .தே. அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர்தான் விக்கிரமசிங்க. .தே. தேர்தலில் வெற்றிபெற்றால், இராஜபக்ஷ மற்றும் ஸ்ரீ..சு. போல, மூன்று தசாப்தகால இனவாத யுத்தத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட போலீஸ் அரசு எந்திரத்தை தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்கு பயன்படுத்த அது தயங்காது.

இராஜபக்ஷ அரசாங்கம் நிச்சயமாக எதேச்சாதிகாரமானதாக இருந்தது மற்றும் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான கொடூரமான ஒடுக்குமுறைக்கும் பொறுப்பு தான், ஆனால் மார்க்சிஸ்டுகளால் பயன்படுத்தப்படும் வார்த்தையின் அர்த்தத்தில்பாசிஸ்ட்அல்ல, அந்தப் பதம் தன்னிச்சையாக பயன்படுத்தப்படும் அடைமொழி அல்ல, அனைத்து தொழிலாளர் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை அழித்த நாஜி ஜேர்மனி போன்ற ஆட்சிகளை அது குறிக்கும். 2005 இலிருந்து நவம்பர் 2014 வரைக்கும் சிறிசேனஇராஜபக்ஷ ஆட்சியின்அங்கமாக இருந்தார் மற்றும் அதன் குற்றங்களுக்கு நேரடி பொறுப்பாளராகவும் இருந்தார் என்பதும் கூட கவனிக்கப்பட வேண்டும்.

* ஜனவரி 2015 இல்ஜனநாயகப் புரட்சியைகுறித்து, கருணாரத்ன அறிவித்தார்: “சோவியத்துகளை அமைக்க கேட்காதீர்; மாறாக சமூக நீதிக்கான இயக்கம், சமாஜிபாலய மற்றும் விபக்க்ஷயே விரோதயா (Samagi Balaya and Vipakshaye Virodhaya), ஜனதா ஹண்டா, வித்திய விரோதய, ஊழல் எதிர்ப்பு முன்னணி, மக்கள் தேசிய அவை, மக்கள் ஜனநாயக அவை, மக்கள் குரல், தேசிய தொழிற்சங்க மையம் மற்றும் இன்ன பிற… ”போன்ற வெகுஜன அமைப்புக்களுக்காக கேளுங்கள்.”

இந்தப் பட்டியல், ... வின் வர்க்க நோக்குநிலையின் தெளிவான எடுத்துக்காட்டாகும். இந்த அமைப்புக்ள் அனைத்தும் உயர் நடுத்தர வர்க்க தட்டினரை அடித்தளமாகக் கொண்டவை மற்றும் கல்வியாளர்கள், புத்த துறவிகள், வழக்கறிஞர்கள், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், மற்றும் அரசுசாரா செயல்பாட்டாளர்களால் தலைமை தாங்கப்பட்டவையாகும். அவற்றுள் ஒன்று கூட பெருந்திரள் மக்களை உறுப்பினராக கொண்டது அல்ல. தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களின் உண்மையான ஜனநாயக அமைப்புக்களாக விளங்கிய, 1917ல் ரஷ்ய தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் படைவீரர்களால் கட்டியமைக்கப்பட்ட சோவியத்துக்களுடன் அவற்றுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

இக்குழுக்கள் அனைத்தும் ஜனவரி தேர்தலில் இராஜபக்ஷவின்சர்வாதிகார ஆட்சியை வெளிச்சம்போட்டுக்காட்ட கூட்டங்கள் மற்றும் எதிர்ப்புகள் நடத்துவதில் மற்றும் அமெரிக்க ஆதரவு ஆட்சிமாற்ற நடவடிக்கையின் உண்மை நோக்கத்தை மூடி மறைப்பதில் செயலூக்கத்துடன் இருந்தன. இதற்கு மிகப் பொருத்தமான ஒப்பீடு கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் அதேபோல 2009ல் ஈரானில் தோல்வி அடைந்த முயற்சியான வாஷிங்டனால் உருவாக்கப்பட்டவண்ண புரட்சிகள்இல் முக்கிய பாத்திரம் ஆற்றிய பல்வேறு நடுத்தர வர்க்க அமைப்புக்கள் ஆகும். இலங்கை குழுக்களின் அமெரிக்க ஆதரவுநிலை, அவற்றின் விமர்சனங்களில் இருந்து தெளிவாகும், அது வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ, பெய்ஜிங் இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு உதவியது ஆகும்.

* நிகழ்வுகளுக்குபுரட்சிகர வண்ணத்தைபூசும் தனது முயற்சியில், கருணாரத்ன சிறிசேனவாலும் விக்கிரமசிங்கவாலும் அமைக்கப்பட்ட, அரசாங்கத்தின் உயர்மட்ட ஆலோசனை அங்கமான, தேசிய நிறைவேற்று குழுவைஅது வரவிருக்கும் ஆகஸ்ட் 17 தேர்தலில் கலைக்கப்படவிருக்கிறது என்ற உண்மையை மறைத்து, அதனை ஸ்ரீலங்காவின்புரட்சிகர அவைஎன குறிப்பிட்டார்.

தேசிய நிறைவேற்று குழுவின் ஒரேபுரட்சிகரஅம்சம் .தே. தலைமையிலான அரசாங்கத்தின் 13 உறுப்பினர் கொண்ட ஆலோசனைக் குழுவில் ஒரு உறுப்பினரான கருணாரத்னவின் புரட்சிகர வாய்ச்சவடால் ஆகும். அது ஜனதாவிமுக்தி பெரமுன (JVP), தமிழ் செல்வந்த தட்டுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) உட்பட்ட இதர முதலாளித்துவ கட்சிகளிடமிருந்து ஆதரவைப் பெறுவதற்காக அமைக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்க மற்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசிக் கட்ட யுத்தத்தில் சாதாரண தமிழ் மக்களை படுகொலை செய்ததற்கு படைத்தளபதி என்ற வகையில் நேரடிப் பொறுப்பாளராக இருந்த  தளபதி சரத் பொன்சேகாவும் கூட அதன் உறுப்பினர்கள் ஆவர். கருணாரத்ன அவர்களின் பிரச்சாரத் தலைமையாக செயற்படுகிறார்.

* ரஷ்யாவில் 1917 உடன் ஒப்பிடலின் மிகவும் உரைக்கும் அம்சம், கோர்னிலோவின் வடிவத்தில் எதிர்ப்புரட்சிக்காக கதவு திறந்துவிட்ட கெரன்ஸ்கியை விமர்சிப்பதிலிருந்து விலகி, கருணாரத்ன கெரன்ஸ்கியை தாராளவாத ஜனநாயகத்தின் பாதுகாவலராக புகழ்கிறார். “பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஜார், மஹிந்தவின் இரண்டாவது வருகையைஎதிர்கொண்டு, இலங்கை ஒரே கெரன்ஸ்கியை அல்ல, மாறாக இருவரை! கொண்டிருக்கும் அனுகூலத்தைப் பெற்றிருக்கிறது என்று கருணாரத்ன அறிவித்தார். “ரஷ்யா போல் அல்லாமல், ஒருவருக்குப் பதிலாக, தாராளவாத ஜனநாயகத்திற்கான போராட்டத்திற்கு தலைமைதாங்க, மைத்ரி [சிறிசேன] மற்றும் ரணில் [விக்கிரமசிங்க] இரட்டையர் வடிவத்தில் ஒரு சேர்க்கையை நாம் பெற்றிருக்கிறோம்என்று அவர் எழுதுகிறார்.

இத்தகைய அறிக்கைகள் எவ்வளவு அதிகம் சாத்தியமோ அவ்வளவு அரசியல் குழப்பத்தை உருவாக்குவதை மட்டும் கொண்டிருக்கவில்லை, மாறாக இலங்கையில் வளர்ந்து வரும் சமூகப் பதட்டங்களுக்கு மத்தியில், 1917ல் கெரன்ஸ்கி செய்ததைப் போல அடிப்படை பங்கை ... ஆற்றும், அதாவது இறுதிவரைக்கும் முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாப்பதற்கு ஆளும் வர்க்கத்திற்கு உத்திரவாதமாக இருக்கும். 1917 பற்றிய அவரது குறிப்பில், சோவியத்துகளுக்குள்ளே கெரன்ஸ்கி, இடைக்கால அரசாங்கம் மற்றும் ஆட்சி ஆதரவுக்கு தங்கி இருந்த மென்ஷிவிக்குகள் மற்றும் சமூகப் புரட்சியாளர்கள் ஆகிய அனைவரையும் ஈவிரக்கமற்று அரசியல்ரீதியாய் அம்பலப்படுத்துவதில் ஏப்பிரலில் இருந்து அக்டோபர் புரட்சி வரை ஈடுபட்டிருந்த லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் போல்ஷிவிக்குகளின் பாத்திரம் பற்றி கருணாரத்ன குறிப்பிடவே இல்லை.

அது வெறுமனே பெரும் தத்துவார்த்த அறியாமையால் ஏற்படும் பிழைகள் மற்றும் வரலாற்று பொய்கள் பற்றிய விஷயமாக இருந்தால், கருணாரத்னவை அவரது முட்டாள்தனமான சிந்தனைகளுக்குள் விட்டுவிடமுடியும். ஆனால் சிறிசேனவிற்கும் விக்கிரமசிங்கவுக்கும் புரட்சிகர உடை உடுத்தும் அவரது முயற்சிகளுக்கு ஒரு திட்டவட்டமான தர்க்கம் இருக்கிறது. அவரது பத்தியானது, ஆகஸ்ட் 17 தேர்தலில் இராஜபக்ஷவிடம் .தே. தோற்றுவிட்டால், ஜனவரியில் சிறிசேனவிற்கு பின்னால் அணிதிரண்ட உயர் நடுத்தர வர்க்க தட்டினருக்கு நடவடிக்கைக்கு தயாராக இருக்குமாறு வேண்டுகோள் விடுப்பதாகும். “ஜனவரி புரட்சியில் பங்கேற்ற அனைத்து வெகுஜன அமைப்புக்களும் உயிரோடும் செயலூக்கத்துடனும் உள்ளனஎன்று அவர் விவரிக்கிறார்.

கருணாரத்ன தலைமை தாங்குவதற்கு தயாரிப்பு செய்யும் ஒரே புரட்சிவண்ண புரட்சிஆகும்வாஷிங்டன் சமிக்கை காட்டுமாயின் அது இதுதான். ஜனவரியில் இராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் இருந்து இறக்க கணிசமான முயற்சிகளை செய்திருந்து, ஆகஸ்டில் அவரை பிரதமராக திரும்ப வருவதற்கும், கொழும்பு திரும்பவும் பெய்ஜிங் பக்கம் ஊசலாடிச்செல்லவும் அமெரிக்கா அனுமதிக்கப்போவது இல்லை. கொழும்பில் ஒருவண்ண புரட்சியை வடிவமைப்பது வாஷிங்டனின் விருப்பத் தேர்வுகளுள் ஒன்றாக இருக்கிறது.

அமெரிக்காவும் சர்வதேச ஊடகங்களும் தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருகின்றன என்ற உண்மையிலிருந்து வாஷிங்டனில் உள்ள அக்கறைகள் ஏற்கனவே வெளிப்படையாகி உள்ளன. அமெரிக்காவை தளமாகக் கொண்ட வலைத் தளமான, வெளியுறவுக் கொள்கை (Foreign Policy) இதழில், ஜூலை 31 அன்றுஎதிர்காலத்திற்கு திரும்புஎன்று தலைப்பிடப்பட்ட கட்டுரை ஒன்று பின்வருமாறு எச்சரித்தது: “அவர் பிரதமராக ஆகும் சாத்தியம் கேள்விக்கிடமில்லாதது அல்ல. முன்னாள் ஜனாதிபதி அதிகாரத்திற்கு திரும்ப வருவது போரால் சீரழிந்த நாட்டிற்குள்ளே ஜனநாயக சீர்திருத்தங்களில் மேலும் கூடிய முயற்சிகளை சிக்கலாக்கிவிடும்.”

கருணாரத்ன, ..., ஐக்கிய சோசலிசக் கட்சி, முன்னிலை சோசலிச கட்சி போன்ற இதர போலி இடது அமைப்புக்கள் ஆற்றப்போகும் பிற்போக்குப் பாத்திரத்தை இனங்காண, ஆகஸ்ட் 17 தேர்தலின் வெளிப்பாடுகளையும் அடுத்து வரவிருக்கும் நிகழ்வுகளையும் பற்றி ஊகம்கொள்வது தேவை இல்லாதது. இவை அனைத்தும் முன்மாதிரி என புகழ்ந்தேத்திய சிரிசா (Syriza) கிரேக்கத்தில் செய்ததைப் போல, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான இயக்கம் எதுவும் வராதவாறு தடுப்பதற்கும் உழைக்கும் மக்களை, இந்த எடுத்துக்காட்டில், ஆளும் வர்க்கத்தின் சிறிசேன-விக்கிரமசிங்க அணிக்கு கீழ்ப்படுத்தவும் தங்கள் சக்திகளை செலவழிக்கப் போகிறார்கள். இது இலங்கையில் ஒருவண்ண புரட்சியின்நோக்கத்திற்காக இருக்கும்.

ரஷ்ய புரட்சியிலிருந்து பெறும் முக்கிய படிப்பினை, அது லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அனைத்து அம்சங்களையும் உறுதிப்படுத்தியதாகும். வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு முதலாளித்துவ வர்க்கத்தின் எந்தப் பிரிவிற்கும் உள்ள திறனின்மையானது, ரஷ்யாவிலும் சர்வதேச ரீதியாகவும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக தொழிலாள வர்க்கத்திடம் ஜனநாயகப் புரட்சியின் கடமைகள் விழுந்தன என்பதை அர்த்தப்படுத்துவதாகும். இடைக்கால அரசாங்கத்தைத் தூக்கி வீசுவதற்கு 1917ன் போக்கில் ரஷ்யத் தொழிலாள வர்க்கமானது போல்ஷிவிக்குகளது தலைமையில் கிராமப்புற வெகுஜனங்களை அதன்பக்கம் வென்றெடுத்தது மற்றும் ஒரு தொழிலாளர் அரசை நிறுவியது.

இராஜபக்ஷ மற்றும் சிறிசேன-விக்கிரமசிங்கவால் அதுபோல அவர்களின் பல்வேறு அடிவருடிகளால்அவர்களுக்கு வக்காலத்துவாங்கும் போலி இடதுகளால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் எதிரான எதிர்ப்பில் தொழிலாளர்களை புரட்சிகரமாக அணிதிரட்ட போராடும், தேர்தலில் நிற்கக்கூடிய ஒரே கட்சி சோசலிச சமத்துவ கட்சி ஆகும். தெற்காசியா மற்றும் உலகம்  முழுமையும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா ஈழ சோசலிச குடியரசு பற்றிய எமது முன்னோக்கானது, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. நாம் தொழிலாளர்களையும், கிராமப்புற உழைக்கும் மக்களையும், இளைஞர்களையும் எமது வேலைத்திட்டத்தை படிக்குமாறும், எமது தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவு தருமாறும், வரவிருக்கும் புரட்சிகர போராட்டங்களுக்கு தலைமையேற்க சோசலிச சமத்துவ கட்சியில் சேருமாறும் அழைக்கிறோம்.