சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP General Secretary Wije Dias interviewed on national election channel

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி பொது செயலாளர் விஜே டயஸ் தேசிய தேர்தல் ஒலிபரப்பில் நேர்காணல் செய்யப்பட்டார்

By our correspondent
30 July 2015

Use this version to printSend feedback

சோசலிச சமத்துவக் கட்சி (சோ...) பொது செயலாளர் விஜே டயஸ், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தால் (SLBC) கட்சியின் பொது தேர்தல் பிரச்சாரம் குறித்து இவ்வாரம் நேர்காணல் செய்யப்பட்டார். அத்தீவு முழுவதும் ஒலிபரப்பாகும் அந்த அரசு வானொலி சேவை வலையமைப்பில், மணிக்கணக்கில் நீண்ட அந்த பரந்த விவாதம் ஜூலை 26 அன்று காலை 7 மணியளவில் ஒலிபரப்பானது.

 
விஜே டயஸ்

சோசலிச சமத்துவக் கட்சி அதன் 43 வேட்பாளர்களை, தலைநகர் கொழும்பு, போரில் சீரழிக்கப்பட்ட யாழ்பாணம் மற்றும் நாட்டின் தேயிலை பெருந்தோட்டங்களின் மையமாக விளங்கும் நுவரேலியா ஆகிய மூன்று முக்கிய தேர்தல் மாவட்டங்களில் நிறுத்தி உள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி, சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடி வருவதைக் விவரித்து டயஸ் நேர்காணலைத் தொடங்கினார். 1964 இல் சிறிமா பண்டாரநாயக இன் முதலாளித்துவ அரசாங்கத்துடன் இணைந்த லங்கா சம சமாஜ கட்சியின் (....) காட்டிக்கொடுப்பை அடுத்து, சோ... புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகமாக (பு...) 1968 இல் ஸ்தாபிக்கப்பட்டதையும், பு... 1996 இல் சோசலிச சமத்துவக் கட்சியாக மாற்றப்பட்டதையும் டயஸ் விளங்கப்படுத்தினார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனத்தின் சார்பாக நேர்காணல் செய்த சாந்த குமார லியனகே கூறுகையில், ஸ்ரீலங்கா ஜனநாயக சோசலிச குடியரசு என்பதே ஸ்ரீலங்காவின் உத்தியோகபூர்வ பெயராகும் என்றுரைத்து, “ஏற்கனவே ஸ்ரீலங்கா ஒரு சோசலிச நாடல்லவா?” என்று வினவினார்.

டயஸ் பதிலுரைக்கையில், “ஆளும் வர்க்கம் ஒருபோதும் மக்களிடம் உண்மையைக் கூறுவதில்லை. இதுவும் அதில் ஒரு விடயமாகும். ஏகாதிபத்திய-சார்பு ஐக்கிய தேசிய கட்சியின் (.தே..) தலைவர் ஜே. ஆர். ஜெயவர்த்தன 1978 இல் அவரது எதேச்சதிகார கூடுதல் அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தலைமையிலான அரசியலமைப்பை தொடங்கியபோது, அவர் அத்தீவை ஒரு சோசலிச குடியரசாக அறிவித்து தொழிலாள வர்க்கத்தை குழப்ப முயன்றார். 'சோசலிஸ்ட்' என்ற அவரது வார்த்தை துஷ்பிரயோகத்திற்கு, லங்கா சம சமாஜ கட்சி மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை துரோகத்தனமான பாத்திரம் வகித்து உதவின. அவை 1970-76 இன் முதலாளித்துவ கூட்டணி அரசாங்க மந்திரிசபையில் பதவி வகித்து வந்தன. இத்தகைய சோசலிச பாசாங்குத்தனக்காரர்களை மக்கள் எந்தளவிற்கு வெறுத்தார்கள் என்பது, அவர்கள் 1977 பொது தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதில் எடுத்துக்காட்டப்பட்டது. அவர்கள் அவர்களது அத்தனை பாராளுமன்ற இடங்களையும் இழந்தார்கள், 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து அவர்கள் தக்க வைத்திருந்த சில இடங்களையுமே கூட இழந்தார்கள்.”

லியனகே வினவினார்: ஒரு சுயசார்பு தேசிய பொருளாதாரத்தை நிறுவியிருப்பதாக வாதிட்ட அந்த 1970 ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் "சோசலிச" கொள்கைகள் ஏன் 1977 இல் மக்களால் நிராகரிக்கப்பட்டு, அதன் விளைவாக .தே.. ஒரு மிகப்பெரிய பாராளுமன்ற பெரும்பான்மையை வென்றது?

1970 அரசாங்கம் சோசலிச அரசாங்கம் அல்ல, மாறாக முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ..சு..) தலைமையிலான ஒரு முதலாளித்துவ ஆட்சியாக இருந்தது என்பதை டயஸ் குறிப்பிட்டுக்காட்டினார். அந்த ஆட்சியில் இணைந்த ... கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் முதலாளித்துவ வர்க்க சேவகர்களாக இருந்தனர். அவர் தொடர்ந்து கூறுகையில், இலங்கையில் இருந்த முதலாளித்துவ ஆட்சி 1960களின் தொடக்கத்தில் ஓர் ஆழ்ந்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை முகங்கொடுத்தது. அதிகரித்துவந்த தொழிலாள வர்க்க போராட்ட அலையை நசுக்குவதற்காகவே, “இடது" தலைவர்கள் 1964 இல் சிறிமா பண்டாரநாயக்க இன் முதலாளித்துவ அரசாங்கத்தில் இணைந்தனர். இது 1965-70 இன் வலதுசாரி ஐக்கிய தேசிய கட்சிக்கு (.தே..) பாதை அமைத்து கொடுத்தது.

“1970 இல் இரண்டாவது கூட்டணி அரசாங்கம் பதவிக்கு வந்த நேரத்தில், உலக முதலாளித்துவ நெருக்கடி கூடுதலாக ஆழமடைந்திருந்தது. இது இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய உலக பொருளாதார ஒழுங்கமைப்பின் ஆதாரக்கல்லாக இருந்த டாலர்-தங்கம் உறவு முறிக்கப்பட்டதிலேயே எடுத்துக்காட்டப்பட்டது. ஆகஸ்ட் 1971 இல் டாலர் மதிப்பில் ஏற்பட்ட உயர்வு, உடனடியாக பல பிரதான உலக நாணயங்களை மறுமதிப்பீடு செய்ய இட்டுச் சென்றது, அதைத் தொடர்ந்து பண்டங்களின் விலைகள் அதிகரித்தன, குறிப்பாக எண்ணெய் விலை அதிகரித்ததால், அது இலங்கை பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது. இந்த அபிவிருத்தியானது, உலகப் பொருளாதாரம் ஒவ்வொரு நாட்டின் மீதும் மேலாதிக்கம் கொண்டிருந்ததை ஒளிவுமறைவின்றி எடுத்துக்காட்டியது.

மக்கள் முன்னணி அரசாங்கம் என்று கூறப்பட்டதன் கொள்கைகள், முதலாளித்துவ-தேசியவாத கொள்கைகளாகவும், உலக முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு பெரும்பிரயத்தன முயற்சியாகவும் இருந்தன. அரிசி இறக்குமதிகளைக் குறைப்பதன் மூலமாக அன்னிய செலாவணி கையிருப்பைப் பாதுகாப்பதற்காக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாட்டின் எல்லா பகுதிகளிலும் உணவுக்கு அத்தியாவசியமாக இருந்த அரிசி வழங்குவதை நிறுத்துவது என்பது போன்ற கொள்கைகள், ஆழமாக மக்கள் விரோதமாக இருந்தன. இந்த நிலைமை .தே.. 1977 இல் பதவிக்கு வருவதற்கும் மற்றும் உலகளாவிய முதலாளித்துவ பொருளாதாரத்திற்குள் அத்தீவை மேற்கொண்டு ஒருங்கிணைப்பதற்கும் அதனால் சுரண்டிக் கொள்ளப்பட்டது,” என்பதை டயஸ் விவரித்தார்.

சோசலிச சமத்துவக் கட்சி பொது செயலாளர், 2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடி மற்றும் இப்போது நடந்துவரும் உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் நீடித்த முறிவின் தோற்றுவாய்களை விவரிக்க நகர்ந்தார்.

ஒட்டுமொத்த உலக முதலாளித்துவ அமைப்புமுறையும் பொருளாதார கொந்தளிப்பால் சூழப்பட்டுள்ளது, அது ஏகாதிபத்திய விரோதங்களையும் மற்றும் முழுமையான ஏகாதிபத்திய போர் ஆபத்தையும் கூர்மைப்படுத்தி வருகிறது. இந்த பெருஞ்சுழலில்தான் இலங்கையும் சிக்கி உள்ளது. இது கடந்த ஜனாதிபதி தேர்தலில் எடுத்துக்காட்டப்பட்டது. மைத்திரிபால சிறிசேனவை கொண்டு மஹிந்த இராஜபக்ஷ பிரதியீடு செய்யப்பட்ட அந்த ஆட்சி-மாற்ற நடவடிக்கையில், வாஷிங்டன் செயலூக்கத்துடன் ஈடுபட்டது.

இது, சீனாவை சுற்றி வளைப்பதற்கும், இராஜபக்ஷ அவரது வகுப்புவாத போர் மற்றும் அதற்குப் பின்னர் பெய்ஜிங் உடன் அபிவிருத்தி செய்த உறவுகளை முறிப்பதற்கும் வாஷிங்டனின் "ஆசியாவை நோக்கி முன்னெடுப்பின்" பாகமாக இருந்தது. அமெரிக்கா அதன் ஒரு போட்டியாளராக பார்க்கும் சீனாவிற்கு எதிரான ஓர் இராணுவ தாக்குதலில் அதன் மூலோபாய போக்கையே கொழும்பு பின்தொடர வேண்டுமென விரும்புகிறது.”

கொழும்புவின் புறநகரான தளுகமவிலிருந்து நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர், டயஸிடம் பின்வரும் கேள்வியைக் கேட்க வானொலி நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்: “இராஜபக்ஷ சீனாவை நோக்கி வளைந்து கொடுத்த போதினும் கூட, அதன் பொருளாதார கொள்கைகள் ஏகாதிபத்திய-சார்பாக இருக்கவில்லையா? சோசலிச சீனாவும் மேற்கத்திய அபிவிருத்தி மாதிரியை பின்பற்றுகிறதல்லவா?”

டயஸ் விரிவாக பதிலுரைத்தார்: “சீனா ஒரு சோசலிச நாடல்ல. அதன் ஆட்சியாளர்கள் தங்களைத்தாங்களே ஸ்ராலினிசத்தின் மார்க்சிச-விரோத தேசியவாத வேலைத்திட்டத்தின் மீதுஅதாவது 'தனியொரு நாட்டில் சோசலிச' தத்துவத்தில்அமைத்துக் கொண்டிருந்தனர். சோவியத் தொழிலாள வர்க்கத்தினது ஒரு சக்திவாய்ந்த பிரிவின் ஆதரவைக் கொண்டிருந்த ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பு, இந்த தேசியவாத தத்துவம் முதன்முதலில் 1923 வாக்கில் சோவியத் ஒன்றியத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோதே அதற்கு எதிராக ஓர் உறுதியான போராட்டத்தை நடத்தினர். எதிர்புரட்சிகர ஸ்ராலினிசத்திற்கு எதிராக உலகளாவிய அளவில் போராடுவதற்கு ட்ரொட்ஸ்கி 1938 இல் நான்காம் அகிலத்தை ஸ்தாபித்தார். அதுதான் சோசலிச சமத்துவக் கட்சியின் மரபு.

“1949 சீன புரட்சிக்குப் பின்னர் அதிகாரத்திற்கு வந்த ஸ்ராலினிச அதிகாரத்துவம் சர்வதேச சோசலிசத்தை நிராகரித்ததுடன், 1970களின் போது ஏகாதிபத்திய அழுத்தங்களுக்கு அடிபணிந்தது. அந்த தசாப்தத்தின் இறுதி வாக்கில், அவர்கள் 'சீன இயல்பிலான சோசலிசம்' என்ற மதிப்பிழந்த வேலைத்திட்டத்தை அறிமுகம் செய்தனர், அதன் அர்த்தம் உலக முதலாளித்துவத்துடன் ஒருங்கிணைவது என்பதற்கு குறைவின்றி வேறொன்றுமாக இருக்கவில்லை.

சீனா ஒரு சோசலிச நாடல்ல என்ற அதேவழியில், சீனா உடனான இராஜபக்ஷ இன் உறவுகளும் அவரை ஏகாதிபத்திய-எதிர்பாளராக ஆக்கவில்லை. இந்த உறவுகளின் இரண்டு பக்கங்களும் சுய-சேவைக்குரிய சந்தர்ப்பவாதமாக இருந்தன. ஆனால் சீனாவை மறு-காலனியாக்க விரும்புகின்ற வாஷிங்டன், உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரயத்தன நகர்வுகளில், சீனாவுடனான இராஜபக்ஷவின் உறவுகளைச் சகித்துக் கொள்ள தயாராக இல்லை. இதனால்தான் அமெரிக்கா இராஜபக்ஷவை பதவியிலிருந்து நீக்குவதற்காக இயங்கியது.”

இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனத்தின் பேட்டியாளர் சாந்தா குமார லியனகே டயஸிடம், பாராளுமன்றத்தில் சோ... ஏதேனும் ஒரு இடம் வென்றால், அரசாங்கம் அமைக்க இரண்டு பிரதான கட்சிகளில் ஏதேனும் ஒன்றுக்கு உதவுவதற்காக அதை பயன்படுத்துமா? என்றார்.

எங்களின் நோக்கம், ஒரு சோசலிச புரட்சியைக் கொண்டு முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கியெறிவதற்கான எமது வேலைத்திட்டத்தைக் குறித்து தொழிலாள வர்க்கத்திற்கும் ஒடுக்கப்படுவோருக்கும் கல்வியூட்டுவதற்கு பாராளுமன்றத்தை மற்றொரு களமாக பயன்படுத்துவதே. சோசலிசத்திற்கு அங்கே பாராளுமன்றத்தின் வழியாக பாதை கிடையாது,” என்று டயஸ் தெரிவித்தார்.

"இத்தகைய கொள்கையை ஊக்குவித்தவர்கள், 1973 இல் சிலியின் மீது திணிக்கப்பட்ட ஒரு விதமான முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு தான் பாதை வகுத்தார்கள். இது ... கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டிக்கொடுப்பால் இலங்கையிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது, அவர்கள் வலதுசாரி .தே. கட்சிக்கு கதவைத் திறந்துவிட்டார்கள். இதே போலிவாதம் தான் நவ சம சமாஜ கட்சி, ஐக்கிய சோசலிச கட்சி மற்றும் முன்னிலை சோசலிஸ்ட் கட்சி (Frontline Socialist Party) போன்ற போலி-இடது குழுக்களால் இப்போது ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து வகுப்புவாதத்தை தூண்டிவிட்டு வருகின்ற இராஜபக்ஷ உடன் ... கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்துள்ளன, அதேவேளையில் சிறிசேன ஜனாதிபதியாவதற்கு உதவிய போலி-இடதுகள் இந்த பொது தேர்தலில் .தே. கட்சியை ஆதரித்து வருகின்றன.

"இந்த இரண்டு முதலாளித்துவ முகாம்களுக்கும் மற்றும் அவர்களது பரிவாரங்களுக்கும் எதிராக, சோசலிச சமத்துவ கட்சி முதலாளித்துவத்தை ஒழிக்கவும் மற்றும் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான எமது பிரச்சாரத்தை மற்றும் எமது போராட்டத்தை ஆதரிக்குமாறு நாங்கள் அனைத்து சமூகங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு அழைப்புவிடுக்கிறோம். ஏகாதிபத்திய போருக்கான தயாரிப்புகளை நிறுத்த, சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க இலங்கை மக்கள் எடுக்க வேண்டிய அவசியமான முதல் படி இதுவே ஆகும்.”

கட்டுரையாளரின் பரிந்துரைகள்:

தெற்காசியா, அமெரிக்காவின் "முன்னிலை" மற்றும் நிரந்தர புரட்சி முன்னோக்கு