சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan president pledges to block rival

இலங்கை ஜனாதிபதி எதிராளியை தடுக்க சூளுரைக்கிறார்

By Wasantha Rupasinghe
18 July 2015

Use this version to printSend feedback

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்கு முற்றிலும் எதிராக இருக்கிறார் என்ற விமர்சனங்களை செவ்வாயன்று மாலை அளித்த ஒரு நீண்ட உரையில் உறுதிப்படுத்தினார். ஆகஸ்ட் 17 நாடாளுமன்ற தேர்தல் மூலமாக பிரதம மந்திரியாவதற்கான இராஜபக்ஷவின் எந்தவொரு முயற்சியையும் தடுப்பதற்கு அவரது ஜனாதிபதி அதிகாரங்களைப் பிரயோகிக்க இருப்பதாக அவர் அறிவித்தார்.

சீனாவுடனான இராஜபக்ஷவின் நெருக்கமான தொடர்புகள் மீது கோபம் கொண்டுள்ள அமெரிக்கா மற்றும் இந்தியா ஆதரவிலான ஓர் ஆட்சி மாற்ற நடவடிக்கை என்று கருதக்கூடிய ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலில் சிறிசேன இராஜபக்ஷவை தோற்கடித்தார். வாஷிங்டன் உடன் நெருக்கமான தொடர்புகள் கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சி (.தே..) தலைவர் ரணில் விக்ரமசிங்க இருவரது ஆதரவுடன் ஜனாதிபதி பதவியில் போட்டியிடுவதற்காக, சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த சிறிசேன அவர் பதவியை இராஜினாமா செய்தார்.

சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (ஸ்ரீ..சு..) வெளியேற்றவில்லை, அந்நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதைப் போலவே, அவர் ஸ்ரீ..சு.. இன் தலைவர் பதவியிலும் இருந்து வருகிறார். ஆனால் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மோசமடையத் தொடங்கியுள்ளதுடன் சேர்ந்து, சிறுபான்மை .தே.. அரசாங்கம் வாக்குறுதிகளைக் கைவிட்டதன் மீது எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இராஜபக்ஷ ஆதரவாளர்களால் கட்சிக்குள் அவர் அதிகரித்தளவில் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

கல்வியாளர்கள், தாராளவாதிகள், அரசு-சாரா அமைப்புகள் மற்றும் நவ சம சமாஜ கட்சி (....) போன்ற போலி-இடது குழுக்களது ஓர் அடுக்கின் ஆதரவோடு தான் சிறிசேன ஜனவரி 8 தேர்தலில் வெற்றிபெற்றார். இராஜபக்ஷவை .... "சர்வாதிகாரி" என சாடியதோடு, சிறிசேனவை அது "ஜனநாயகவாதி" என்றும், தேர்தல் முடிவை ஒரு "ஜனநாயகப் புரட்சியாகவும்" புகழ்ந்துரைத்தது.

ஆகஸ்ட் 17 தேர்தலில் ஸ்ரீ..சு.. தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி (..சு.கூ.) இன் வேட்பாளராக இராஜபக்ஷ நிற்பதற்கு சிறிசேன உடன்பட்டார் என்ற ஜூலை 3 அறிவிப்பானது, இத்தகைய உயர்மட்ட மத்தியதர வர்க்க அடுக்குகளிடமிருந்து கடுமையான கண்டனங்களைத் தூண்டின.

பல்கலைக்கழ ஆசிரியர்கள் கூட்டணியின் ஒரு செய்தி தொடர்பாளரும் மக்கள் சக்தி (Purawesi Balaya) அமைப்பின் ஒரு தலைவருமான நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறுகையில், “மஹிந்த இராஜபக்ஷவைத் தோற்கடிக்க உதவியதன் மூலமாக நாங்கள் தான் மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்திற்குக் கொண்டு வந்தோம். அவரோ இப்போது மீண்டும் அவரை திரும்ப கொண்டு வருகிறார்தோற்கடிக்கப்பட்டவரும் வென்றவரும் சேர்ந்து வேலை செய்யவிருக்கிறார்கள்,” என்று அறிவித்தார்.

ஜூலை 5 அன்று சண்டே டைம்ஸில் வெளியான ஒரு தலையங்கம்ஜனாதிபதி சமாதானக் கொடி காட்டி சரணடைகிறார்,” என்று தலைப்பிடப்பட்டது. மக்கள் சக்தி அமைப்பின் ஒரு முக்கிய தலைவர் காமினி வியாங்கொட, “இராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு" சிறிசேன "வழிவகுப்பதாகவும்", அது "சுதந்திரத்திற்குப் பிந்தைய ஒரு ஸ்ரீலங்க அரச தலைவரது மிகப் பெரிய காட்டிக்கொடுப்பாகவும்" அவரைக் குற்றஞ்சாட்டினார்.

இந்த கருத்துக்கள் எல்லாம் இத்தகைய சமூக அடுக்குகளின் முற்றிலும் ஜனநாயக-விரோத குணாம்சத்தை அடிக்கோடிடுகின்றன. நடைமுறையில், இராஜபக்ஷ மற்றும் அவரது ஆதரவாளர்களை நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்துவதிலிருந்து கட்சியை தடுப்பதற்காக சிறிசேன அவரது ஸ்ரீ..சு.. தலைவர் அந்தஸ்தை பயன்படுத்துமாறு அவர்கள் கோரி வருகின்றனர்.

வரவிருக்கின்ற அரசாங்கத்திற்கு இராஜபக்ஷ தலைமை கொடுக்க மாட்டார் என்று அவர்களுக்கு மறுஉத்திரவாதம் அளிப்பதே சிறிசேனவின் செவ்வாய்கிழமை உரையின் நோக்கமாக இருந்தது. “ஜனவரி 8 அன்று ஏற்பட்ட ஜனநாயகப் புரட்சியை" அவர் தம்பட்டமடித்துக் கொண்டதுடன், “ஜனவரி 8 அன்று நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் எனது கடமைகளைச் செய்வதிலேயே தேர்தலை அடுத்த ஐந்து ஆண்டுகளைச் செலவிடுவேன்" என சூளுரைத்தார்.

ஸ்ரீ..சு.. மீது கட்டுப்பாட்டை வைத்திருக்க அவர் பெரும்பிரயத்தனம் செய்ததாகவும் ஆனால் இறுதியில் அது தோற்றுவிட்டதென்றும், இராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்த நிர்பந்திக்கப்பட்டதாகவும் கூறி, சிறிசேன ஒரு நீண்ட சுய-விளக்கம் அளித்தார். தேர்தலுக்கு அழைப்புவிடுத்ததன் மூலமாக, சிறுபான்மை .தே.. அரசாங்கத்தை வெளியேற்றுவதற்காக ஸ்ரீ..சு.. அதன் நாடாளுமன்ற எண்ணிக்கைகளை பயன்படுத்தவும் மற்றும் இராஜபக்ஷவுக்கு ஒரு இடங்களின் தேசிய பட்டியலை வழங்கி அவரை பிரதம மந்திரியாக நியமிக்கவும் செய்யப்பட்ட சூழ்ச்சியை அவர் தடுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அவரது விமர்சகர்களுக்கு அவர் அளித்த பதிலில் சிறிசேன பின்வருமாறு அறிவித்தார்: “வரவிருக்கும் தேர்தலில் மஹிந்த இராஜபக்ஷ உடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை நான் மிகத் தெளிவாக குறிப்பிட்டாக வேண்டும்”, தொடர்ந்து அவர் கூறுகையில், இராஜபக்ஷவை நோக்கிய அவரது எதிர்ப்பு "அதேயளவிற்கு இருப்பதாக" தெரிவித்தார். தேர்தலில் ..சு.. வென்றாலும் கூட இராஜபக்ஷவைப் பிரதம மந்திரியாக நியமிக்க போவதில்லை என்று பின்னர் அவர் உறுதியாக தெரிவித்தார்.

இராஜபக்ஷவை போலவே, ஜனாதிபதியின் கூடுதல் அதிகாரங்களை எதிராளிகளுக்கு எதிராக பயன்படுத்துவதற்கான சிறிசேனவின் விருப்பம், ஜனவரி 8 இல் ஒரு "ஜனநாயக புரட்சி" நடந்தது என்ற வாதத்தின் அபத்தத்தையே அடிக்கோடிடுகிறது, அத்துடன் "வரவிருக்கும் தேர்தலில் நடுநிலையான நிலைப்பாட்டில்" இருக்கப் போவதாகவும் அவர் அறிவித்தார்.

சிறிசேனவின் உரை அனைத்திற்கும் மேலாக வாஷிங்டனுக்காக இருந்தது, ஜனவரியில் இராஜபக்ஷவை வெளியேற்றுவதற்கான சதிகளை ஆதரித்த அதற்கு, மீண்டும் அவரை பிரதம மந்திரியாக வர அனுமதிக்க விருப்பமில்லை. இராஜபக்ஷவை நீக்கியமை சீனாவைத் தனிமைப்படுத்தும், அதை இராணுவரீதியில் சுற்றி வளைக்கும் மற்றும் அப்பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிபடுத்தும் அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முனெடுப்பின்" பாகமாக இருந்தது.

இராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்துவதன் மீது வாஷிங்டனின் விருப்பமின்மை இராஜாங்க அதிகாரிகளிடமிருந்து வந்த எதிர்வினையில் பிரதிபலித்ததாக ஜூலை 5 சண்டே டைம்ஸின் அரசியல் கட்டுரையாளரால் குறிப்பிடப்பட்டது. “கொழும்புவை மையமாக கொண்ட இராஜாங்க வட்டாரங்களின் அங்கத்தவர்கள், குறிப்பாக மேற்கைச் சார்ந்தவர்கள், அதிர்ந்து போனார்கள், [இராஜபக்ஷ வேட்பாளராக நிறுத்தப்பட்டதைக் குறித்து] கதிகலங்கியுமே கூட போனார்கள்,” என்று எழுதினார்.

கொழும்புவில் நடக்கும் இந்த கடுமையான அதிகார போட்டிக்கும் "ஜனநாயகத்தைப்" பாதுகாப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, மாறாக அது சீனாவிற்கு எதிராக வாஷிங்டனின் போர் தயாரிப்புகளை தீவிரப்படுத்துவதோடு மற்றும் அந்நாட்டின் ஆழமடைந்துவரும் பொருளாதார போராட்டத்துடன் பிணைந்துள்ளது.

2009 இல் பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளின் தோல்விக்குப் பின்னர் அந்நாட்டுக்குள் வெள்ளமென பாய்ந்த சீன முதலீடுகளில் இருந்து ஆதாயமடைந்த ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளை இராஜபக்ஷ பிரதிநிதித்துவம் செய்கிறார். இலங்கையில் சீனத் திட்டங்களை முடக்குவதாக இராஜபக்ஷ ஏற்கனவே அரசாங்கத்தை விமர்சித்துள்ளதுடன், அவர் பிரதம மந்திரியானால் அவற்றை மீட்டமைக்கவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

இராஜபக்ஷ தமிழ்-விரோத பேரினவாதத்தைத் தூண்டிவிட முனைந்து வருவதுடன், எல்.டி.டி.. புத்துயிர் பெறுவதை அனுமதிப்பதாக அரசாங்கத்தை விமர்சித்து வருகிறார், “தாய்மண்ணை காப்பாற்றுவதற்கும்" அழைப்புவிடுத்து வருகிறார்.

இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தைகளான அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளிடமிருந்து அன்னியப்படுவதன் விளைவுகளைக் குறித்து ஆழ்ந்து கவலை கொண்ட அரசியல் ஸ்தாபக அடுக்குகளை சிறிசேன மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். அமெரிக்க-சீன பதட்டங்கள் கூர்மையடைகையில், இலங்கை தன்னைத்தானே சீனாவிடமிருந்து விலக்கி வைக்கவில்லையென்றால் அமெரிக்காவின் பழிவாங்கும் இலக்கில் நிறுத்தப்படுமே என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

இராஜபக்ஷவால் அதிகாரத்திற்கு மற்றொருமுறை முயற்சிக்க முடிகிறது என்ற உண்மை, சிறிசேன மற்றும் அதன் .தே.. தலைமையிலான அரசாங்கத்திற்கு அதிகரித்துவரும் மக்கள் விரோதம் மற்றும் எதிர்ப்பையே பிரதிபலிக்கிறது. வாழ்க்கை தரங்கள் மீதான அழுத்தம் குறைக்கப்படுமென்ற ஒரு 100 நாள் செயல்திட்டத்திற்கு வாக்குறுதி அளித்தே சிறிசேன அதிகாரத்திற்கு வந்தது. சீனாவிடமிருந்து இலங்கையை விலக்கிவைத்தால் நிதியியல் உதவிகளுக்கான புதிய கதவு திறக்குமென அவர் கணக்கிட்டார், ஆனால் சர்வதேச நாணய நிதியமோ புதிய கடனுக்கான அரசாங்கத்தின் ஒரு விண்ணப்பத்தை நிராகரித்ததோடு, கூடுதல் சிக்கன நடவடிக்கைகளையும் வலியுறுத்தியது.

ஜனநாயகம் மலர்ந்து வருவதாக" அவரது உரையில் சிறிசேன அறிவித்தார், ஆனால் 47,000 சுகாதாரத்துறை தொழிலாளர்களின் ஒரு சமீபத்திய வேலைநிறுத்தத்தை உடைக்கும் முயற்சியில் மருத்துவமனைகளுக்குள் இராணுவத்தை அனுப்புவதில் அவருக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்களுக்கு எதிராக பொலிஸ் கமாண்டோக்கள் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளனர். தீவின் வடக்கில் நடந்துவரும் இராணுவ ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராடிய தமிழர்களுக்கு எதிராகவும் அதேபோன்ற ஒடுக்குமுறைகள் நடந்துள்ளன. கடந்த வாரம் சிறிசேன, பத்திரிகை கவுன்சிலை அவரது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தார், அது ஊடகங்கள் மற்றும் இதழாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பயன்படுத்தப்படக்கூடும்.

இராஜபக்ஷ மற்றும் அவரது கன்னையின் குரல்வளையை நெரிக்க அவர் தீர்மானகரமாக இருப்பதை அப்பட்டமாக அறிவிக்கும் சிறிசேன இன் உரை, ஸ்ரீ..சு.. உள்ளே மேற்கொண்டு மனக்கசப்பிற்கு மட்டுமே எரியூட்டும். ஆளும் உயரடுக்கின் அவ்விரு கன்னைகளில் எதுவுமே தொழிலாள வர்க்க நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. ஆகஸ்ட் 17 தேர்தலின் முடிவு என்னவாக இருந்தாலும், வரவிருக்கும் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச நிதியியல் மூலதனத்தின் சிக்கன முறையீடுகளைத் திணிப்பதற்காக எதேச்சதிகார முறைகளைப் பிரயோகிக்க சற்றும் தயங்கப்போவதில்லை.