சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Tamil National Alliance presents pro-imperialist manifesto in Sri Lankan elections

இலங்கை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏகாதிபத்திய-ஆதரவு விஞ்ஞாபனத்தை முன்வைக்கிறது

By K. Nesan
5 August 2015

Use this version to printSend feedback

இலங்கையின் தமிழ்பேசும் மேல்தட்டுக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்  தேசியக் கூட்டமைப்பு (TNA) ஜூலை 25 அன்று தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் வடபகுதி நகரமான யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஒரு பிற்போக்குத்தனமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

இலங்கையின் தமிழ்மக்கள் வாழும் பகுதிகளில் அதிகரித்துச் செல்லும் சமூக எதிர்ப்பினை முகம் கொடுக்கும் நிலையில் .தே.கூ., ஜனவரியில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்கா பொறியமைவு செய்த ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையின் மூலமாக ஆட்சியில் அமர்த்தப்பட்ட, கொழும்பிலிருக்கும் இப்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கிறது. தமிழ் மக்களுக்கு ஆதாயமளிக்கக் கூடிய ஒரு அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டிற்கான ஒரு வாய்ப்பை இந்த அரசாங்கம் வழங்கும் என .தே.கூ. வலியுறுத்துகிறது.

இந்தத் தேர்தல் அறிக்கையானது, மே மாதத்தில் அமெரிக்க வெளியுறவுச் செயலரான ஜோன் கெர்ரி இலங்கைக்கு விஜயம் செய்தபோது அளித்த, வழிகாட்டல்களுக்கு விடுத்த வேண்டுகோள்களுடன் முழுமையாகப் பொருந்திப் போகிறது. “தேசத்தின் நலன்களின் பேரில் ஒரு சுமூகத் தீர்வினை நோக்கிய புதிய அரசாங்கத்தின் முன்முயற்சியுடன்.தே.கூ. இணைந்து வேலைசெய்வது அவசியம் என்று .தே.கூ. குழு ஒன்றுடனான சந்திப்புக்குப் பின்னர் கெர்ரி கூறியிருந்தார்.

தமிழ் மக்கள் கவலை கொள்கின்ற பிரச்சினைகளில் அவர்கள் தமது நிலைப்பாட்டைக் கைவிட வேண்டும் என்று அவர் கேட்கவில்லை, மாறாக சிங்களப் பெரும்பான்மையினருடன் பரஸ்பரம் ஏற்கத்தக்கதொரு உடன்பாட்டை எட்டுவதை நோக்கி உழைப்பதற்கே அவர் கேட்டார்என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் கெர்ரியை சந்தித்த குழுவில் இடம்பெற்றிருந்த ஒரு அங்கத்தவரான எம்..சுமந்திரன் கூறியிருந்தார்.

ஜனவரியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தேர்ந்தெக்கப்படுவதை உத்தரவாதப்படுத்திய அமெரிக்க-ஏற்பாட்டிலான அரசியல் அணிவரிசையில் தான் ஆற்றிய பாத்திரம் குறித்து .தே.கூ. வெளிப்படையாகவே பெருமையடித்துக் கொள்கிறது. அது எழுதுகிறது: “2015 ஜனவரி 8 அன்று இந்த நோக்க்கங்களை சாதிப்பதை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை நாங்கள் செய்தோம்.” அந்த நடவடிக்கையின் போது, சீனாவுடன் நெருக்கமாக அணிவகுத்திருந்த ஜனாதிபதி மஹிந்த இராஜபக் அமெரிக்காவின்ஆசியாவை நோக்கிய திருப்பம்மற்றும் சீனாவுக்கு எதிரான அதன் போர்த் தயாரிப்புகளுக்கு ஏற்றபடி மைத்ரிபால சிறிசேனாவைக் கொண்டு பிரதியிடப்பட்டார்.

.தே.கூ. தலைவரான சம்பந்தன்: “ஒரு அரசியல் தீர்வை நோக்கிய எங்களது பயணம் நிற்காது. ஜனவரி 8 அன்று மைத்ரிபால சிறிசேன வெற்றிபெற்றதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் அதனை ஒத்தே இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அவ்வாறு நடக்கவில்லை என்றால், நாடாளுமன்றத்தில் மைத்ரிபால ஒரு வலிமையான அரசாங்கத்தை உருவாக்க நாங்கள் ஆதரவு தருவோம்எனக் கூறினார்.

சிறிசேன ஜனாதிபதியாக அமர்த்தப்பட்டது முதலாக, இலங்கை வெளியுறவுக் கொள்கையானது இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ஆதிக்கத்தை வலுப்படுத்துவதை நோக்கி மிகத் துரிதமாக நகர்ந்திருக்கிறது. அமெரிக்கா இத்தேர்தலை நெருக்கமாகக் கண்காணித்து வருகிறது. ஜனவரியின் ஆட்சி-மாற்ற நடவடிக்கையின் மூலமாக அது பற்றிய பிடியை மேலும் தீவிரப்படுத்த அது நம்பிக்கை கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் தேசிய உளவுப் புரிவின் முன்னாள் இயக்குநரான டென்னிஸ் பிளேயர் சமீபத்தில் இவ்வாறு கருத்துக் கூறினார்: “ஆகஸ்ட் 17 அன்று நடைபெறவிருக்கும் இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் ஜனவரியில் அநேக பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்திய மைத்ரிபால சிறிசேனவின் தேர்வு, சீர்திருத்தங்கள் தொடருமா என்பதைத் தீர்மானிப்பதாக இருக்கும்.”

தமிழர்களை நோக்கிய சிறிசேன அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு .தே.கூ. இன் தேர்தல் அறிக்கை அங்கீகாரமளிக்கிறது. “2015 ஜனவரி முதலாக, நிலங்களை திருப்பிக் கொடுப்பதற்கும், இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்குமான முடிவுகள் புதிய ஆட்சியால் எடுக்கப்பட்டிருக்கின்றன.”

உண்மையில், இலங்கையின் தமிழ் சிறுபான்மையினரை ஒடுக்குவதற்காக அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் நடத்திய குருதிகொட்டும் உள்நாட்டுப் போரில் சொல்லொணாத் துயரத்தை முகம்கொடுத்த ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடக்கூடிய எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. சிற்சில அடையாள நடவடிக்கைகள் தவிர்த்து, புதிய ஆட்சியானது இராஜபக்ஷவின் இனவாத அரசியலையே தொடர்ந்து வந்திருக்கிறது.

ஒரு “100 நாள் வேலைத்திட்டத்தில்” “ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்துவது”, வாழ்க்கைத் தரங்களை உயர்த்துவது, மற்றும் பொதுத் துறை மற்றும் தனியார் துறை தொழிலாளர்களின் சம்பளங்களை உயர்த்துவது ஆகியவற்றை வாக்குறுதியளித்து சிறிசேன அதிகாரத்திற்கு வந்தார். அவரது வாக்குறுதிகள் தொழிலாள வர்க்கத்திற்கு எந்த கணிசமான அனுகூலத்தையும் உருவாக்கித் தரவில்லை என்பதோடு சிங்கள, தமிழ் உள்ளிட உழைக்கும் மக்கள் மீது புதிய தாக்குதல்களுக்கும் தயாரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

ஆட்சியானது தனது கொள்கைகளுக்கு மறுபெயர் கொடுக்கவும், அது அளித்திருக்கக் கூடிய குறைந்தபட்ச சலுகைகளையும் திரும்பப் பெறுவதற்கும், கிரீசில் போல, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக நிதி மூலதனத்தின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்கிறதான வலிமிகுந்த சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கும் அனுமதிக்கும் வகையில் நாடாளுமன்றத் தேர்தல்கள் வடிவமைக்கப்படுகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திக்கான ஒரு திறம்பட்டதொரு வேலைத்திட்டத்திற்குதுவக்கமளிக்க தேர்தலுக்குப் பின்னர் சிறிசேனாவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பதவியில் இருப்பர் என்று .தே.கூ. வின் தேர்தல் அறிக்கை திட்டவட்டமாய் தெரிவிக்கிறது.

.தே.கூ. முன்வைக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டம் - சர்வதேச விமான நிலையம், கடல் துறைமுகங்கள் மற்றும் மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளிட்டவைதமிழ் வெகுஜனங்களின் மலிவு உழைப்பைச் சுரண்டுவதை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 2009 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்தது முதலாக, பெரும்பாலும் ஏற்றுமதிக்கான ஆடைகள் உற்பத்தி செய்கின்ற குறுந்தொழில் பிரிவுகளை அரசாங்கம் ஸ்தாபித்திருக்கிறது. இந்தப் பிரிவுகளின் வடிவமைப்பு ஏறக்குறைய சிறைச்சாலைகளை ஒத்ததாய் இருக்கிறது. நாட்டின் பிற பகுதிகளில் அமைந்திருக்கும் சுதந்திர வர்த்தக வலயங்களைக் காட்டிலும் மலிவான ஊதியங்களுக்கு அவை தொழிலாளர்களைப் பணியமர்த்துகின்றன.

.தே.கூ. இன் தேசியவாத முன்னோக்கின் முற்றிலும் தொழிலாள வர்க்க-விரோத குணாம்சமானது, நடப்புத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தின் அரசியல் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. போர் மற்றும் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் தமிழ் மற்றும் சிங்களத் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காகப் போராடுகின்ற ஒரேயொரு கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும். யாழ்ப்பாணம், நுவரேலியா மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் சோசலிச சமத்துவக் கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

2009 இல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது முதலாகவே நாளுக்குநாள் மேலும்மேலும் வெட்டவெளிச்சமாகி வந்திருக்கும் தமிழ் தேசியவாதத்தின் அரசியல் திவால்நிலைக்கே .தே.கூ. இன் வேலைத்திட்டம் சாட்சியமளிக்கிறது. தமிழ் தினசரியான வீரகேசரியில் வெளியாகியிருக்கும் செய்தியின் படி, .தே.கூ. தலைவரான சம்பந்தன் .தே.கூ. இன் அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களின் ஒரு குழுவிடம் பின்வருமாறு கூறினார்: “நாங்கள் எமது அரசியல் பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்க முடியாது, நாங்கள் அதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தாக வேண்டும். தமிழ் மக்கள் எங்களுக்கு ஒரு மிகப்பெரும் வெற்றியைக் கொடுத்து, எங்களில் 20 பேரையாவது நாடாளுமன்றத்திற்கு அனுப்புவார்களேயானால், 2016 முடிவதற்குள்ளாக எங்களால் அவர்களுக்கு ஒரு அரசியல் தீர்வினை வழங்க இயலும்.”

கொழும்பில் இருக்கும் அரசாங்கத்துடன் ஏகாதிபத்திய ஏற்பாட்டிலான ஒரு அதிகாரப் பகிர்வு உடன்படிக்கைக்குச் செல்வதே சம்பந்தன் கூறுகின்றஅரசியல் தீர்வுஆகும். அப்படியானதொரு உடன்பாடு தமிழ் முதலாளித்துவத்துக்கு அதன்சொந்தமக்களைச் சுரண்டுவதில் பெரும் பங்கினை வழங்கும். தமிழ் தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் எந்தவொன்றையும் வழங்க இயலாத இத்தகையதொரு ஒப்பந்தத்தை அவர்கள் நிராகரிக்க வேண்டும். அத்துடன் அனைத்து இனங்களையும் சேர்ந்த தமது சொந்த வர்க்க சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து சிக்கன நடவடிக்கை மற்றும் அதிகரிக்கும் போர் அபாயம் ஆகியவற்றுக்கு எதிரானதொரு போராட்டத்திற்கு அவர்கள் தயாரிப்பு செய்ய வேண்டும்.

1948 இல் உத்தியோகபூர்வ சுதந்திரம் கிட்டிய காலம் முதலாக அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்களுக்கும் தமிழ் தேசியவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் உடன்படிக்கைகளை நினைவுகூர்வதுடன் .தே.கூ.வின் தேர்தல் அறிக்கை தொடங்குகிறது. சிங்கள முதலாளித்துவத்துடன் அதிகாரப் பகிர்வு பேரங்களுக்கு முனைந்தபோதிலான ஏமாற்றங்கள், தோல்விகள் மற்றும் காட்டிக் கொடுப்புகளின் ஒரு வரிசையாகவே தமிழ் தேசியவாதத்தின் அரசியல் வரலாறு அமைந்திருக்கிறது.

1968 முதலாகவே, தமிழ் தேசியவாதக் கட்சிகள், இத்தகைய ஒப்பந்தங்களுக்குள் நுழைவதற்கு மறுத்ததாகக் காட்டிக் கொண்ட தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கு, பிரதான சிங்கள முதலாளித்துவக் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின்வாக்குறுதி மீறல்களையே காரணமாகக் காட்டி வந்திருக்கின்றன. கடந்த பத்து வருடங்களின் போது, அரசாங்கத்துடனான எந்தப் பேச்சுவார்த்தைகளுக்கும்சர்வதேச சமூகத்தின்”, அதாவது பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் மத்தியஸ்தத்தையே .தே.கூ. தலைமை வலியுறுத்தி வந்திருக்கிறது.

ஜனவரியில், சிறிசேனாவின் பிரச்சாரத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை நீட்டும் பொருட்டு, .தே.. மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைகளுடன், அமெரிக்க மத்தியஸ்தத்துடன் தான் என்பதை சொல்லவும் தேவையில்லை, திரைமறைவிலான பேச்சுவார்த்தைகளில் .தே.கூ. ஈடுபட்டது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது .தே.கூ.வின் ஒரு முன்னணி அங்கத்தவரான சுமந்திரன் அமைச்சரவையில் இடம் கோரியதாக ஜனவரியில் வெளியான பத்திரிகைச் செய்திகள் கூறின. ஆயினும் இந்த செய்திகளை உடனடியாக மறுத்த .தே.கூ. ஜனாதிபதித் தேர்தலிலான தனது நிலைப்பாட்டிற்குப் பின்னால் எந்த இரகசிய உடன்பாடுகளோ அல்லது வாக்குறுதிகளோ இல்லை என்பதாகக் கூறிக் கொண்டது.

விடுதலைப் புலிகள் தனதுஆயுதப் போராட்டத்தை தொடர்ந்ததுஎன்ற சுருக்கமானதொரு குறிப்பைத் தவிர, ஒரு தனி அரசுக்கான விடுதலைப் புலிகளின் கோரிக்கையின் வரலாறு குறித்து அறிக்கை மவுனம் காக்கிறது. உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகள் இரத்தம் தோய்ந்தமுறையில் தோற்கடிக்கப்பட்டமையானது பிரதானமாக அதன் தமிழ் தேசியவாத முன்னோக்கின் திவால்நிலையின் ஒரு விளைபொருளாக இருந்தது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கிலான தமிழ்ப் பகுதிகளில், விடுதலைப் புலிகள் அமைப்பு தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை ஒடுக்கியதன் மூலமாகவும், அதன் அரசியல் எதிரிகளைக் கொலை செய்ததன் மூலமும் தன் அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்தியது.

அப்பாவி சிங்கள மக்கள் மீது அவ்வப்போது மிருகத்தனமான தாக்குதல்களை நடத்தியதன் மூலம் விடுதலைப் புலிகள் சிங்களத் தொழிலாளர்களை அந்நியப்படுத்தினர். அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியமும் மற்றும் இந்திய முதலாளித்துவ வர்க்கமும் இந்த அமைப்புக்கு தடைவிதித்ததோடு அந்த அமைப்புக்கு எதிராய் கொழும்புக்கு முழுமையான இராஜதந்திர மற்றும் இராணுவ உதவியை வழங்கியதற்கு பின்னரும் கூட சர்வதேச ஆதரவுக்கு விடுதலைப் புலிகள் அவற்றையே நம்பியிருந்தனர். இதன் விளைவாக உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகள் பெருந்துயரகரமான தோல்வியைச் சந்தித்தனர். அத்துடன் இலங்கை இராணுவம் நடத்திய ஒரு மிகப்பெரும் படுகொலை நடவடிக்கையில் தீவில் அந்த அமைப்பின் படைகள் ஏறக்குறைய முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டன, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும் உயிரிழந்தனர்.

போரினால் சிதைந்து கொண்டிருந்த நாட்டிற்குள் நீடித்தவொரு அமைதியை உத்தரவாதம் செய்கின்ற பேரில் இலங்கை அரசியலில் அமெரிக்காவும் மற்ற ஏகாதிபத்திய சக்திகளும் தலையீடு செய்ய விண்ணப்பம் செய்ததே .தே.கூ.வின் பதிலிறுப்பாக இருந்தது. இந்தத் தேர்தல் விஞ்ஞாபனம் கூறுகிறது: “உண்மையான நல்லிணக்கத்தின் மூலமாக நிரந்தர அமைதியை எட்டுவதற்கும், அதன்மூலமாய் இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் சம உரிமை படைத்த குடிமக்களாக வாழ வழிவகை செய்வதற்கும் சர்வதேச ஆதரவு அவசியமாக இருக்கிறது என்ற கண்ணோட்டத்தில் .தே.கூ. மிக உறுதியாக இருக்கிறது.”

உள்நாட்டுப் போரின் முடிவில் ஏகாதிபத்திய சக்திகளுக்கு அது விடுத்த விண்ணப்பங்கள் பதிலற்றுப் போன நிலையைக் கண்டிருந்த பிறகும் கூட, .தே.கூ. மறுபடியும் இலங்கை அரசியலில் ஏகாதிபத்தியத் தலையீட்டுக்கான திவாலாகிப் போன, அபாயகரமான விண்ணப்பங்களைச் செய்து கொண்டிருக்கிறது. ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் பாகிஸ்தானில் அமெரிக்கா செய்திருக்கக் கூடிய நவ-காலனித்துவ தலையீடுகளின் அனுபவமானதுசர்வதேச சமூகத்தின்மீதான .தே.கூ.வின் வழிபாட்டை பொய்யென ஆக்குகிறது. இந்த நாடுகளில் மேலாதிக்கம் செய்யும் பொருட்டு ஏகாதிபத்திய சக்திகள் இனவாதப் பிளவுகளையும் மற்றும் மதரீதியான மோதல்களையும்  சூழ்ச்சித் திறத்துடன் கையாண்டதால் நூறாயிரக்கணக்கிலான மக்கள் படுகொலை செய்யப்படுவதில் முடிந்தது.