சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

One year of Obama’s Iraq-Syria war

ஒபாமாவின் ஈராக்-சிரியா போரின் ஓராண்டு

Bill Van Auken
5 August 2015

Use this version to printSend feedback

மத்திய கிழக்கில் மற்றொரு அமெரிக்க போரின் தொடக்கமாக, ஈராக்கில் வான்வழி தாக்குதல்கள் தொடங்கியதன் முதல் ஆண்டை இவ்வாரம் குறிக்கிறது.

சிரியாவினுள் ஒரு சிறிய எண்ணிக்கையிலான கூலிப்படையினருக்கு அமெரிக்க இராணுவம் பயிற்சியளித்து, ஆயுதமளித்து, நிதியுதவிகள் அளித்த பின்னர், அவர்களுக்கு வான்வழி பாதுகாப்பு கவசம் வழங்குவதற்காக அமெரிக்க போர் விமானங்களை வழங்க அங்கீகரிக்க வேண்டுமென்ற பெண்டகனின் ஒரு பரிந்துரைக்கு ஒப்புதல் முத்திரை குத்திய ஒபாமா நிர்வாகம், ஓர் பலமான புதிய போர் தீவிரப்படுத்தலுடன் இந்த கொடூரமான மைல்கல்லை அடையாளப்படுத்துகிறது.

சிரிய அரசாங்க படைகளிடமிருந்து வரும் எந்தவொரு வார்த்தையளவிலான அச்சுறுத்தலுக்கு எதிராகவே கூட, அக்கூலிப்படையின் சார்பாக வான்வழி தாக்குதல்கள் நடத்தப்படுமென்பதை சண்டைக்கான இந்த புதிய விதிமுறைகள் குறிப்பிடுகின்றன. அதன் தளபதிகளும் மற்றும் அதன் பல அங்கத்தவர்களும் கடந்த வாரம் பிடிக்கப்பட்டு, ஏனைய சிலர் கொல்லப்பட்ட நிலையில் அதற்கு முன்னரே அதில் 60க்கும் குறைவானவர்களே இருந்தனர்.

சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்காக, இஸ்லாமிய பிரிவினைவாத போராளிகள் குழுக்களைப் பினாமிகளாக பயன்படுத்தி வாஷிங்டனால் மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளால் ஆதரிக்கப்பட்ட இரத்தந்தோய்ந்த நான்காண்டுகால போருக்குள் அமெரிக்க இராணுவத்தை நேரடியாக அனுப்புவதற்கு, இந்த உத்தரவுகள் ஒரு வெளிப்படையான தந்திரமாகும். வெறுமனே ஓர் அமெரிக்க கால்பந்தாட்ட குழு அளவிற்கு மட்டுமே பணிமுறைப் பட்டியலைக் கொண்டுள்ள, புதிய சிரிய படை" என்று கூறப்படும் இதன் கருதத்தக்க செயல்பாடு என்னவென்றால், சிரியாவின் இராணுவத்தைச் சண்டைக்குள் இழுப்பதற்கு ஒரு சூழ்ச்சிப்பொறியாக சேவை செய்வதும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கத்தைத் தூக்கியெறிய முழுமையான அமெரிக்க தலையீட்டுக்கு சாக்குபோக்கை வழங்குவதும் மட்டுமேயாகும்.

ஆழ்ந்த தலையீட்டை நோக்கிய மற்றும் முன்பினும் அதிகமாக இரத்தக்களரிக்குள் இறங்கும் இந்த திருப்பம், ஒரு போர் கொள்கையின் சமீபத்திய அத்தியாயம் மட்டுமேயாகும், மேலும் மலைப்பூட்டும் பல முரண்பாடுகளால் சூழப்பட்டுள்ள இக்கொள்கைக்கு ஒருமித்த பாதுகாப்பு சாத்தியமில்லை என்பதால், ஒபாமா நிர்வாகம், அமெரிக்க மக்கள் மீது போரைத் திணிக்க பொய்கள் மற்றும் சூது நடவடிக்கைகளின் மீதே தங்கியுள்ளது.

ISIS இன் (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) கரங்களில் கருதத்தக்க விதத்தில் உடனடியாக கொல்லப்படவிருந்த வடக்கு ஈராக்கிய ஒரு சிறிய மதசமூகமான யாஜிதிகளை மீட்பதற்காக மட்டுமே, ஒரு சிறிய சிறப்பு நடவடிக்கை துருப்புகளை அனுப்புவதாகவும், அத்துடன் ஈராக் மீது வான்வழி தாக்குதல்கள் நடத்த உத்தரவிட்டிருப்பதாகவும் ஒரேயொரு ஆண்டுக்கு முன்னர் தான் ஒபாமா அமெரிக்க மக்களிடம் கூறினார்.

இந்த சுன்னி இஸ்லாமிய போராளிகள் குழு [ISIS], அமெரிக்காவினால் பயிற்சியளிக்கப்பட்ட நிலைகுலைந்து ஓடிய துருப்புகளை விரட்டியடித்து, அதற்கு முந்தைய மாதம் தான் சுமார் ஈராக்கின் மூன்றில் ஒரு பகுதியைக் கைப்பற்றியது. இத்தோல்வி அமெரிக்காவின் கடந்த தலையீடுகளின் விளைபொருளாகும், அது நூறு ஆயிரக் கணக்கான ஈராக்கியர்கள் கொன்றதோடு, வகுப்புவாத போக்குகளாக பிளவுபட்ட ஒரு சிதைந்த சமூகத்தையும் பின்னால் ஏற்படுத்திவிட்டது.

ISIS அமைப்பே "அமெரிக்காவின் தயாரிப்பு" எனும் முத்திரையை ஏந்தியுள்ளதுடன், அது சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போரில் சிஐஏ மற்றும் வாஷிங்டனின் முக்கிய பிராந்திய கூட்டாளிகளான துருக்கி, சவூதி அரேபியா மற்றும் கடார் ஆகியவற்றின் ஆதரவை அனுபவித்துள்ளது. அது லிபியாவின் மௌம்மர் கடாபியைப் பதவியிலிருந்து இறக்கி படுகொலை செய்த 2011 அமெரிக்க-நேட்டோ போரினாலும் பலப்படுத்தப்பட்டது. அந்த நவகாலனித்துவ முயற்சி, அதேபோன்ற அல் கொய்தா இணைப்பு கொண்ட இஸ்லாமிய போராளிகள் குழுகளையும் சார்ந்திருந்ததுடன், அவற்றினது பல அங்கத்தவர்கள், கைப்பற்றப்பட்ட பெரும் லிபிய ஆயுத குவியலுடன் சிரியாவிற்குள் திருப்பிவிடப்பட்டனர்.

யாஜிதிகளின் தலைவிதி நீண்டகாலத்திற்கு முன்னரே மறக்கடிக்கப்பட்டுவிட்டது. அதற்கடுத்த முயற்சிகள் புதிய போரை, தற்போதைய பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டமாக அதாவது, லிபியா மற்றும் சிரியாவில் அமெரிக்கா ஆதரித்து வந்திருந்த அதே பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டமாக விற்பனை செய்தன, இதில் ISIS ஆல் பிடிக்கப்பட்டு கழுத்தறுத்து கொல்லப்பட்ட அமெரிக்கர்களின் தலைவிதி சுரண்டிக்கொள்ளப்பட்டது.

அதன்பின்னர் சிரியாவின் கோபானி நகரைக் கைப்பற்றுவதை முறிக்கும் சண்டை வந்தது, இதில் ISIS உடன் போராடி வந்த குர்திஷ் போராளிகள் குழுக்களுக்கு நெருக்கமான வான்வழி ஆதரவை வழங்குவதற்காக அமெரிக்க விமானப்படை தலையீடு செய்தது. அனுமானிக்கூடிய விதத்திலேயே, பல்வேறு போலி-இடது அமைப்புகள், ஏகாதிபத்திய போரை ஆதரிப்பதற்காக, குர்திஷ்களை ஒரு காரண விளக்கமாக கண்டன.

ஒருசில மாதங்களுக்குப் பின்னர், வாஷிங்டனின் அதுவரையிலான குர்திஷ் கூட்டாளிகள் துருக்கிய குள்ளநரிகளிடம் தூக்கி வீசப்பட்டனர். சிரியா மீது குண்டுவீசுவதற்கு துருக்கிய இராணுவதளங்களைப் பயன்படுத்துவதற்கு கைமாறாக, வாஷிங்டன் "பயங்கரவாதத்திற்கு" எதிரான ஒரு போராட்டமாக அங்காராவில் இருந்த குர்திஷ் இடங்கள் மீதான குண்டுவீச்சை ஆமோதித்தது. அசாத்திற்கு எதிரான ஆட்சி மாற்றத்திற்கான போரை மேற்கொண்டு முன்னெடுப்பதற்காக, துருக்கியின் எல்லையை ஒட்டி சிரியாவின் பிராந்தியத்தையும் சேர்த்து ஒரு இடைத்தடை மண்டலத்தை அமைக்க வேண்டுமென்ற துருக்கியின் பரிந்துரையையும் ஒபாமா ஏற்றுக் கொண்டார்.

இதற்கிடையே, சமீபத்திய தோல்வியைக் குறித்து அதாவது அல்-நுஸ்ரா முன்னணியால் அமெரிக்காவின் சிரியாவிலுள்ள கூலிப்படையினர் பிடிக்கப்பட்டதைக் குறித்து வாஷிங்டனில் எழுந்த மலைப்பு மற்றும் ஏமாற்றத்தால் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, அல் கொய்தாவின் இந்த சிரிய இணை-அமைப்புடன் ஏற்படுத்திக் கொண்ட ஒரு "ஐக்கிய முன்னணி" இன் பாகமாக அமைந்த சண்டையின் மீது ஒபாமா நிர்வாகத்தின் மூலோபாயம் அடித்தளமிட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்காக" தான் இவ்வளவும்!

இந்த போரில் அடையாளங்காணத்தக்க விதத்தில் மாறாமல் இருப்பவை என்னவென்றால், சூறையாடும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களாகும், இவை இராணுவ வன்முறை பிரயோகத்துடன் கடந்த கால் நூற்றாண்டாக தடையின்றி பின்தொடரப்பட்டுள்ளன. போர்-எதிர்ப்புணர்வு அலையால் அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்ட ஒபாமா, அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்திற்காக இழிவார்ந்த ஊதுகுழலாக மட்டுமே சேவை செய்து வருகின்ற நிலையில், இவரால் தொடங்கப்பட்ட போர், 2003 இல் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் ஆல் பொய்களின் அடித்தளத்தில் தொடங்கப்பட்ட ஈராக்கிற்கு எதிரான குற்றகரமான ஆக்கிரமிப்பு போரின் தொடர்ச்சியையே பிரதிநிதித்துவம் செய்கிறது. அதேபோல அந்த போரானது, 1991 இல் புஷ் இன் தந்தையால் தொடங்கப்பட்ட வளைகுடா போரின் ஒரு தொடர்ச்சியாக இருந்தது.          

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த போர் தொடங்குதலின் ஒவ்வொரு கட்டமும், முந்தையதை விட மிகவும் அபாயகரமானதென்பதை நிரூபித்துள்ளன. மூலோபாயரீதியில் முக்கியமான மற்றும் எண்ணெய் வளம் மிகுந்த மத்திய கிழக்கின் மீது அமெரிக்க மேலாதிக்கத்தைப் பலப்படுத்துவதற்காக, சிரியாவில் இந்த சமீபத்திய தலையீடு, அசாத் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதையும் மற்றும் ஓர் அமெரிக்க கட்டுப்பாட்டிலான கைப்பாவை ஆட்சியை அங்கே நிறுவுவதையும் மட்டுமே நோக்கமாக கொண்டதல்ல, மாறாக டமாஸ்கஸின் பிரதான கூட்டாளிகளான ஈரான் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக முன்பினும் அதிக பேரழிவான போர்களுக்குத் தயாரிப்பு செய்தவதற்காகவும் ஆகும்.

உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உந்துதலில் இருக்கும் தர்க்கம், தவிர்க்கவியலாமல் ரஷ்யா மற்றும் சீனா உடன் போருக்கு இட்டுச் செல்வதுடன், வெளிப்பார்வைக்கும் தெரியும் வாஷிங்டனின் ஐரோப்பிய கூட்டாளிகளுடன் பதட்டங்களைத் தீவிரப்படுத்தி, மனிதயினம் ஒரு மூன்றாம் உலக போரெனும் ஆபத்தை எதிர்கொள்ள இட்டுச் செல்கிறது.

இந்த வாரம், ஒபாமாவின் ஈராக்-சிரியா போர் தொடங்கிய முதல் ஆண்டு என்பதற்கு கூடுதலாக, அமெரிக்க சோசலிச சமத்துவ கட்சி போருக்கு எதிரான போராட்டமும், சோசலிச சமத்துவ கட்சியின் அரசியல் பணிகளும்" என்ற தீர்மானத்தை ஒருமனதாக ஏற்றுக் கொண்ட மூன்றாவது தேசிய காங்கிரஸின் முதல் ஆண்டையும் குறிக்கிறது.

இந்த முக்கிய ஆவணம் அதன் ஒரு பகுதியில் குறிப்பிட்டது: உலக ஏகாதிபத்தியத்தின் மையமாக, சர்வதேச போர்த்திட்டமிடலின் கட்டளையகமாக மற்றும் எதிர்ப்புரட்சிகர மையமாக அமெரிக்கா இருப்பதால், இந்நாட்டில் ஒரு சக்திமிக்க போர் எதிர்ப்பு இயக்கம் தோன்றாமல் போருக்கு எதிரான உலக அளவிலான எதிர்ப்பை அணிதிரட்டப்பட முடியாது. ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ தேசிய அரசை ஒழிக்கும் சர்வதேச தொழிலாளர் போராட்டத்தில் அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் கட்டாயம் அதன் இடத்தை எடுத்தாக வேண்டும்.

அது தொடர்ந்து குறிப்பிட்டது: போருக்கு எதிரான புரட்சிகரப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை தலைமை ஏற்கும் தகுதிகொண்டதாக்க விழையும் அல்லது தொழிலாள வர்க்கத்திற்கு தலைமை ஏற்று நடத்தும் இயக்கம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி ஆகிய இவற்றுக்கு வெளியே ஒரு இயக்கமும் கிடையாது. அதற்கு, வெளிநாட்டில் யுத்தத்திற்கும் மற்றும் உள்நாட்டில் சுரண்டலுக்கும் இடையிலான அதாவது ஏகாதிபத்தியத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான தீர்வுகாண இயலாத தொடர்பைப் பற்றிய புரிதலில் தொழிலாள வர்க்கத்திலும் அதன் முன்னணிப்படையிலும் ஒரு அபிவிருத்தி தேவைப்படுகிறது.

கடந்த ஆண்டின் சம்பவங்களால், அதாவது மத்திய கிழக்கு போரை யேமன் வரையில் விரிவாக்கியமை, ஈராக் மற்றும் சிரியாவில் அதை தீவிரப்படுத்தியமை, கிழக்கு ஐரோப்பாவின் இராணுவமயமாக்கல், அணுஆயுதமேந்திய இரஷ்யாவிற்கு எதிராக போர் அச்சுறுத்தல், சீனாவிற்கு எதிராக முன்பினும் அதிக ஆக்ரோஷமான ஆத்திரமூட்டல்கள் ஆகியவற்றால், முன்பினும் அதிக அவசரத்துடன் இந்த முன்னோக்கு முன்னுக்கு கொண்டு வரப்படுகின்றன.

கட்டுரையாளரின் பரிந்துரைகள்:

சிரியா மீதான குண்டுவீச்சும், முடிவில்லா அமெரிக்க யுத்தமும்