சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The 70th anniversary of the bombing of Hiroshima

ஹிரோஷிமா குண்டுவீச்சின் 70ஆம் நினைவாண்டு

Peter Symonds
6 August 2015

Use this version to printSend feedback

இன்றிலிருந்து எழுபது ஆண்டுகளுக்கு முன்னர், ஓர் அமெரிக்க B-29 குண்டுவீச்சு விமானம் ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது அணுகுண்டை வீசியது. சுமார் 13,000 டன் TNTக்கு சமமான மிகப்பெரிய அந்த குண்டுவீச்சில், உடனடியாகவோ அல்லது ஒருசில மணி நேரங்களிலேயோ 80,000 பேர் அல்லது மக்கள்தொகையில் 30 சதவீதத்தினர் கொல்லப்பட்டனர், அந்நகரின் பெரும்பகுதிகள் வெறும் இடிபாடுகளாக மாறிப்போயின. மூன்று நாட்களுக்குப் பின்னர், ஆகஸ்ட் 9, 1945 அன்று, நாகசாகி நகரம் மீது அமெரிக்கா மற்றொரு அணுகுண்டை வீசியது, அதில் ஒரேயடியாக மேலும் 40,000 மக்கள் கொல்லப்பட்டார்கள்.

அதற்குப்பின்னரும் கதிரியக்க பாதிப்புகள் உட்பட பல்வேறு காயங்களால் மேலும் பலர் உயிரிழந்தனர். அவ்விரு குண்டுகளால் கொல்லப்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் மொத்த எண்ணிக்கையின் மதிப்பீடு, வெறும் முதல் நான்கு மாதங்களிலேயே 200,000இல் இருந்து 350,000 வரையில் இருந்தது. அதற்கடுத்து வந்த ஆண்டுகளில், கடுமையான கதிரியக்க பரவலின் விளைவாக நிறைய பேர் இரத்தப்புற்றுநோய் மற்றும் ஏனைய காசநோய்களால் உயிரிழந்தார்கள். உயிர் பிழைத்திருந்தவர்களும், கொடூரமான மரணம் மற்றும் உயிரிழப்பு காட்சிகளால் ஆழமாக உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்தார்கள்.

அமெரிக்கா, ஜனநாயகம் மற்றும் கண்ணியத்திற்கான ஒரு சக்தியாகும் என்ற எப்போதும் இருந்துவரும் மாயை உடைக்கும் வகையில், அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக வாஷிங்டன் வீசிய அணுகுண்டுகள் முதலாவதாக ஒரு குற்ற நடவடிக்கையாக இருந்தது. மனித உயிர்களைக் குறித்து அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் ஜப்பானிய போட்டியாளர்களைப் போலவே அதேயளவிற்கு ஈவிரக்கமற்றத்தன்மையோடும், வெறுப்போடும் ஆசியாவில் அதன் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தி வைப்பதற்காக ஜப்பானுக்கு எதிராக அதன் போர் நோக்கங்களைப் பின்பற்றியது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது குண்டுவீசியதோடு, இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய சகாப்தத்தில் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு அது முயற்சிப்பதை அமெரிக்கா அறிவித்தது.

இத்தகைய அட்டூழியங்களின் அளவு, அவற்றை நியாயப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட பொய்களோடு சமாந்தரப்படுகிறது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஒவ்வொன்றும் சில இராணுவ ஆலைகள் மற்றும் தொழில்துறைகளைக் கொண்டிருந்த போதினும், பாரியளவிற்கு அழிக்கும் அதுபோன்றவொரு கண்மூடித்தனமான ஆயுத பிரயோகம், வெறுமனே ஜப்பானிய இராணுவ ஆட்சிக்கு மட்டுமல்ல, உலகிற்கே "அதிரடி-அதிர்ச்சியை" கொடுப்பதற்காக திட்டமிடப்பட்டிருந்தது.

உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவே" அந்த அணுகுண்டுகள் வீசப்பட்டன என்பதே, இன்று வரையில் மீண்டும் மீண்டும் கட்டுப்பாடற்று எதிரொலிக்கப்பட்டுவரும், அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமென் ஆல் மேற்கொள்ளப்பட்ட பிரதான நியாயப்பாடாகும். ஜப்பானை உடனடியாக சரணடைய நிர்பந்தித்ததைக் குறித்து அது வாதிடுகையில், அவ்விரு நகரங்களும் சாம்பலாக்கப்பட்டமை, ஜப்பான் மீதான அமெரிக்க படையெடுப்பைத் தடுத்துவிட்டதாகவும், அந்த படையெடுப்பு இன்னும் நிறைய அமெரிக்க மற்றும் ஜப்பானிய உயிரிழப்புகளை ஏற்படுத்தி இருக்குமென்றும் அது வாதிடுகிறது.

அந்த வாதத்தின் ஒவ்வொரு அம்சமும் பிழையானது அல்லது மோசடியானது. அமெரிக்க படையெடுப்பினால் ஏற்பட்டிருக்கக்கூடிய மரண எண்ணிக்கை குறித்த மதிப்பீடு, அணுஆயுதங்களைப் பிரயோகிப்பதற்குரிய ஒரு விடயத்தை உருவாக்குவதற்காக வேண்டுமென்றே பெரிதாக்கிக் காட்டப்பட்டது. மக்கள் வாழாத பகுதியில் அதை வீசுவதன் மூலமாக ஜப்பானிய ஆட்சிக்கு அதன் பேரழிவுகரமான வீரியத்தை எடுத்துக்காட்ட முடியும் என்று அக்குண்டு சம்பந்தமாக வேலை செய்த சில விஞ்ஞானிகளது பரிந்துரைகளை ட்ரூமென் நிர்வாகம் நிராகரித்திருந்தது.

அனைத்திற்கும் மேலாக, டோக்கியோ அதற்கு முன்னரே சமாதான முன்முயற்சிகளை செய்திருந்தது. அதன் கடற்படை மற்றும் விமானப்படை பெரியளவில் அழிக்கப்பட்டிருந்தன என்பதோடு, அதன் தொழில்துறையின் பெரும்பகுதி தொடர்ச்சியான அமெரிக்க குண்டுவீச்சால் சிதைந்து போயிருந்தன. நெருப்பு பிரளயங்களை (fire storms) ஏற்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட கேடுவிளைவிக்கும் சாதனங்களைப் பிரயோகிப்பதன் மூலமாக ஜப்பானிய நகரங்களை மட்டந்தட்டுவதற்கான அதன் தகைமையை அமெரிக்கா எடுத்துக்காட்டி இருந்தது. மே 1945 இல் டோக்கியோ மீது வீசப்பட்ட நெருப்பு-குண்டுகளுக்கு (fire-bombing) இதுவே கூட ஒரு கொடூரமான போர் குற்றமாகும் என்ற நிலையில் ஒரேயிரவில் அதில் 87,000 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சோவியத் ஒன்றியம் கலந்துகொண்ட ஜூலை 1945 போட்ஸ்டாம் மாநாடு, நிபந்தனையின்றி சரணடையுமாறு" ஜப்பானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தது. ஹிரோஷிமா குண்டுவீச்சை அடுத்து, ஆகஸ்ட் 8 அன்று பசிபிக் போருக்குள் சோவியத் ஒன்றியம் இறங்கியமையும், ஜப்பானிய-ஆக்கிரமிப்பு மஞ்சூரியா மீது அது படையெடுத்ததும் டோக்கியோவிற்கு அதற்குமேல் தாங்கிக்கொள்ளவியலா நிலைமையை உண்டாக்கியது. நாகசாகிக்கு எதிராக ஒரு நாளுக்குப் பின்னர் இரண்டாவது அணுகுண்டை வீசுவதென்று ட்ரூமென் எடுத்த முடிவானது, ஜப்பானிய சரணடைவுக்கு அமெரிக்காவே மேலோங்கிய காரணம் என்பதை உறுதிப்படுத்தி வைக்க வேண்டுமென்று வாஷிங்டன் தீர்மானகரமாக இருந்ததால் உந்தப்பட்டதாகும் ஆகஸ்ட் 15 அன்று பேரரசர் ஹிரோஹிடோ நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் ஜப்பானிய சரணடைவு அறிவிக்கப்பட்டது.

அணுகுண்டுகளின் அமெரிக்க பிரயோகம், வெறுமனே ஜப்பானிய ஆட்சியை மட்டுமல்ல, மாறாக அனைத்திற்கும் மேலாக சோவியத் ஒன்றியத்தை பீதியூட்டி, போருக்குப் பிந்தைய உலகளாவிய அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தி வைப்பதற்காக செய்யப்பட்டதாகும். மக்கள் வசிக்காத பகுதிகளை இலக்கில் வைக்கும் பரிந்துரையை ட்ரூமென் நிர்வாகம் நிராகரித்தது, ஏனென்றால் ஓர் அணுகுண்டின் அளப்பரிய பேரழிவை மட்டுமல்ல, மாறாக வாஷிங்டன் நினைத்தால் அதை அப்பாவி பொதுமக்களுக்கு எதிராகவும் பிரயோகிக்கும் என்பதையும் அது உலகிற்கு எடுத்துக்காட்ட விரும்பியது.

2008 உலகளாவிய நிதியியல் நெருக்கடியை பின்தொடர்ந்து ஆழமடைந்துவரும் பொருளாதார உடைவுக்கு இடையே, எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர், புவிசார் அரசியல் பதட்டங்களும் ஒரு மூன்றாம் உலக போருக்கான அபாயமும் வேகமாக அதிகரித்து வருகின்றன. உலக பொருளாதாரத்திற்கும் காலங்கடந்த தேசிய அரசு முறைக்கும் இடையே, மற்றும் சமூகமயப்பட்ட உற்பத்திக்கும் உற்பத்தி கருவிகளின் தனியார் சொத்துடைமைக்கும் இடையே நிலவும் முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகள், இருபதாம் நூற்றாண்டில் இரண்டு உலக போர்களுக்கு இட்டுச் சென்றுள்ள நிலையில், மற்றொரு உலகளாவிய பேரழிவுக்கான நிலைமைகளை உருவாக்கி வருகிறது.

இன்று உலக அரசியலை மிகவும் ஸ்திரமின்மைக்கு உட்படுத்தும் காரணியாக இருப்பது அமெரிக்காவாகும். 1991 இல் சோவியத் ஒன்றிய பொறிவுக்குப் பின்னரில் இருந்து, வாஷிங்டன் அதன் பொருளாதார வீழ்ச்சியை சரிகட்டும் ஒரு முயற்சியில், மத்திய கிழக்கு, பால்கன்கள் மற்றும் மத்திய ஆசியா உள்ளடங்கலாக, மீண்டும் மீண்டும் இராணுவ பலத்தில் தங்கி உள்ளது. கடந்த ஆண்டில், வாஷிங்டனின் இரகசிய சதிகளும் தலையீடுகளும் முன்பினும்-அதிக ஈவிரக்கமற்ற குணாம்சத்தை எடுத்தன, அவை குறிப்பாக சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக திரும்பி இருந்தன.

கடந்த ஆண்டு உக்ரேனில், அமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் வடிவமைக்கப்பட்ட பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடர்ந்து, ரஷ்யாவிற்கு எதிராக கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் ஓர் ஆத்திரமூட்டும் இராணுவ ஆயத்தப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டது, அது அணுஆயுதமேந்திய சக்திகளுக்கு இடையே மோதல் அபாயத்தை மிக அதிகளவில் உயர்த்தியுள்ளது. யுரேஷியாவின் மறுபக்கத்தில், அமெரிக்காவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு", தென் சீனக்கடல் போன்ற பிராந்திய வெடிப்புப்புள்ளிகளை அபாயகரமாக எரியூட்டியுள்ளது, அதுவும் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே ஒரு போரைத் தூண்டிவிடக்கூடியதாகும்.

எல்லா பிரதான ஏகாதிபத்திய சக்திகளும் போருக்கு தயாரிப்பு செய்து வருகின்றன. ஜேர்மனியும் ஜப்பானும் அவற்றின் ஆயுதப்படைகள் மற்றும் மீள்இராணுவமயமாக்கல் மீதிருந்த போருக்குப் பிந்தைய கட்டுப்பாடுகளை வேகமாக நீக்கி வருகின்றன. ஜேர்மனி மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியம் இரண்டுமே இப்போதைக்கு ஓர் அமெரிக்க கூட்டணியின் கட்டமைப்பிற்குள் செயல்பட்டு வருகின்ற போதினும், வாஷிங்டனுடன் அவற்றை மோதலுக்குக் கொண்டு வரக்கூடிய பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைக் கொண்டுள்ளன. அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான கடைசிப் போர், சீனா மற்றும் ஆசியா மீது எந்த சக்தி மேலாதிக்கம் கொண்டிருக்க போகிறது என்பதற்காகவே சண்டையிடப்பட்டது என்பது நினைவுக்கூரத்தக்கதாகும்.

இரண்டாம் உலக போர் அணுகுண்டு வீச்சுடன் முடிவுக்கு வந்தது. மூன்றாவதொன்றோ தவிர்க்கவியலாதவாறு அணுஆயுதங்களின் பிரயோகத்திலிருந்தே தொடங்கும், அது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது பிரயோகிக்கப்பட்டதையும் விஞ்சிவிடக்கூடும். அதன் அணுசக்தி மேலாதிக்கத்தைப் பேணுவதற்கும் மற்றும் பெருக்குவதற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தீர்மானகரமாக இருப்பதென்பது, அடுத்த 30 ஆண்டுகளில் அதன் மிகப்பெரும் அணுஆயுத கிடங்குகள் மற்றும் செலுத்தும் அமைப்புமுறைகளை மேம்படுத்துவதில் 1 ட்ரில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்யும் அதன் திட்டங்களால் அடிக்கோடிடப்படுகிறது.

அமெரிக்கா, உண்மையில் எல்லா ஏகாதிபத்திய சக்திகளுமே, அவற்றின் நலன்களை ஈவிரக்கமின்றி பெறுவதற்காக எதற்கும் தயங்காது, அது மனிதயினத்தின் உயிர்வாழ்வையே அச்சுறுத்திகிறது என்றாலுமே கூட தயங்காது என்பதே 70 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டதிலிருந்து கிடைக்கும் படிப்பினையாகும். ஒரு புரட்சிகர போராட்டத்தின் மூலமாக இந்த இலாபகர அமைப்புமுறையை ஒழித்துக்கட்டி, ஓர் அணுசக்தி பேரழிவுக்குள் சரிவதிலிருந்து தடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தியாக இருப்பது சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமேயாகும். அது தான், சர்வதேச சோசலிசத்தின் அடிப்படையில் தொழிலாளர்களது ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதற்காக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் உலகெங்கிலும் உள்ள அதன் பிரிவுகளால் நடத்தப்பட்டு வருகின்ற பிரச்சாரத்தின் முக்கியத்துவமாகும். 

கட்டுரையாளரின் ஏனைய பரிந்துரைகள்:

Sixty years since the Hiroshima and Nagasaki bombings