சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama on Iran: The specter of World War III

ஈரான் குறித்து ஒபாமா: மூன்றாம் உலக போர் பேராபத்து

Bill Van Auken
7 August 2015

Use this version to printSend feedback

புதனன்று வழங்கிய ஓர் அசாதாரண உரையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, காங்கிரஸ் மற்றும் அரசு எந்திரத்தினுள் இருக்கும் சக்திவாய்ந்த கன்னைகள் ஈரானுக்கு எதிராக கணக்கிடவியலா விளைவுகளைக் கொண்ட போர் ஒன்றினை தொடுக்க தீர்மானகரமாக உள்ளன என்று எச்சரித்து விபரங்களைப் பகிரங்கப்படுத்தினார்.

அவர் ஹிரோஷிமா அணுகுண்டுவீச்சின் 70ஆம் நினைவுதினத்தின் தறுவாயில் உரையாற்றுகையில், கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையைத் தோற்கடிப்பதென்பது, ஈரானுடனான போரைக் குறிக்கும் என்றார். ஈரான், ஈராக்கை விட அண்ணளவாக நான்கு மடங்கு பெரியதும், அதைவிட ஏறத்தாழ மூன்று மடங்கு மக்கள்தொகை கொண்டதுமாகும். இரண்டாம் உலக போர் மற்றும் பனிப்போர் வரலாற்றைப் பலமுறை கூறி, அவர் மேற்கொண்டு அறிவுறுத்துகையில், ஈரானுடனான ஒரு போர் மூன்றாம் உலக போருக்கு கதவுகளைத் திறந்துவிடும் என்றார்.

இத்தகையதொரு நிலைமையில், ஈரானுக்கும் P5+1க்கும் (அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி) இடையில் பேரம்பேசப்பட்டு, ஐக்கிய நாடுகள் சபையால் ஒப்புக்கொள்ளப்பட்ட அணுசக்தி உடன்படிக்கை மீது காங்கிரஸ் வாக்களிப்பு எவ்வாறு திரும்பும் என்பது தெளிவாக தெரியவில்லை. அந்த உடன்படிக்கையை அமெரிக்கா நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கு எதிராகவும் அவர் வீட்டோ அதிகாரத்தைப் பிரயோகிக்க இருப்பதாக ஒபாமா அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஒரு வீட்டோ அதிகாரத்தைக் கவிழ்க்க அவசியப்படும் மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு, காங்கிரஸின் இரு அவைகளிலும் போதிய வாக்குகள் கிடைக்குமா என்பதும் இப்போதைக்கு தீர்மானிக்க முடியாததாக உள்ளது.

சர்ச்சைக்கு அப்பாற்பட்டது என்னவென்றால், அமெரிக்க இராணுவவாதத்தின் ஒரு பேரழிவுகரமான தீவிரப்படுத்தலை கருத்தில் கொண்ட ஒரு கொள்கைக்கு, அமெரிக்க காங்கிரஸில் மிகப்பெரும் பெரும்பான்மை வாக்குகள் வழங்கப்படும் என்பதேயாகும்.

பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை அவரது வீட்டோ அதிகாரத்தைக் கவிழ்த்தால், போர் ஏற்படுமென்றும், அதுவும் "உடனடியாக" ஏற்படுமென்றும் ஒபாமா எச்சரித்தார். போரை நோக்கிய நகர்வு மீதான கட்டுப்பாடு அவரது கைகளிலிருந்து நழுவி வருகிறதென்று தலைமை தளபதி தவறுக்கிடமற்ற அவரது கருத்தை வழங்கினார்.

ஒபாமா கூறுகையில், “ஈரானுக்கு அணுஆயுதம் கிடைப்பதிலிருந்து அதை தடுக்க முழுமையாக பொறுப்பேற்றுள்ள எந்தவொரு அமெரிக்க நிர்வாகத்திற்கும் ஒரு வாய்ப்பாக உள்ள இந்த உடன்படிக்கையை காங்கிரஸ் நிராகரிப்பதென்பது, மற்றொரு தேர்வாக மத்திய கிழக்கில் போரையே விட்டுவைக்கிறது. நான் இதை ஆத்திரமூட்டுவதற்காக கூறவில்லை; ஓர் உண்மை என்றவிதத்தில் குறிப்பிடுகிறேன்,” என்றார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றொரு வழிவகைகளைக் கொண்டு, அதுவும் மிகவும் அபாயகரமான, மத்திய கிழக்கில் போர் என்பதைக் கொண்டு அதன் உலகளாவிய நலன்களைப் பின்தொடர வேண்டுமா என்பதில் பரந்த இராணுவ மற்றும் உளவுத்துறை பிரிவுகள் உட்பட அமெரிக்க அரசியல் ஸ்தாபகம் மிகவும் ஆழமாக பிளவுபட்டுள்ளது என்பதையே இந்த உடன்படிக்கை மீதான சர்ச்சை எடுத்துக்காட்டுகிறது. இத்தகைய விவாதத்தில் இடம்பெறாமல் இருப்பது என்னவென்றால், அது தேர்ந்தெடுக்கும் எந்தவொரு நாடுகளுக்கு எதிராகவோ அல்லது மக்களுக்கு எதிராகவோ வாஷிங்டன் முன்கூட்டியே போர் தொடுக்க, அதாவது குற்றகரமாக வலிந்து போர் தொடுக்க அதற்கு தனியுரிமைகள் இருப்பதாக கூறப்படுவதன் மீது அங்கே எந்த விவாதமும் இல்லை என்பதுதான். அமெரிக்க ஜனாதிபதி அவரது சொந்த முன்நடவடிக்கைகளை மேற்கோளிட்டுக் காட்டி, அவரை இப்புள்ளியை அடிக்கோடிடுகிறார்.

முப்படைகளின் தளபதியாக, அவசியப்படும் போது படைகளை பிரயோகிப்பதற்கு நான் வெட்கப்பட்டதில்லை,” என்றவர் பெருமையடித்துக் கொண்டார். “நான் பத்து ஆயிரக்கணக்கான இளம் அமெரிக்கர்களை சண்டைக்கு செல்ல உத்தரவிட்டிருக்கிறேன்நான் ஏழு நாடுகளில் இராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளேன். படை அவசியப்பட்ட நேரங்களும் இருந்தன, இந்த உடன்படிக்கைக்கு ஈரான் அனுசரித்து வராமல் இருந்திருந்தால், நமக்கு வேறொரு மாற்றீடு இல்லை என்பது சாத்தியமாகி இருக்கும்,” என்றார்.

இருப்பினும், அவரது பல்வேறு தலையீடுகள், டிரோன் ஏவுகணை கொலைகள் மற்றும் படுகொலைகள், அனைத்தையும் விட, ஈரானுடனான போர் மிகவும் அபாயகரமான தேர்ந்தெடுப்பாக இருக்குமென ஒபாமா கருதுகிறார். ஈரானிய ஆட்சியை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குப் பின்னால் திருப்புவதற்குரிய நெம்புகோலாக அணுசக்தி உடன்படிக்கையை பயன்படுத்துவதன் மூலமாக, அதேவேளையில் இந்த மூலோபாயம் தோல்வியடைந்தால் "இராணுவ சாத்தியக்கூறையும் மேசையில்" வைத்துக்கொண்டே, வாஷிங்டன் அதன் நலன்களைப் பின்பற்ற முடியுமென்பதே அவரது வாதமாகும்.

தெஹ்ரான் உடனான ஒரு திடீர் மோதல் குறித்து ஒபாமா அச்சப்படுவதற்கான காரணங்கள், ஈரான் மீதான ஒரு போர் இரத்தக்களரியாக இருக்கும் என்பதற்கும் அப்பால் செல்கிறது. அணுசக்தி உடன்படிக்கையின் நிராகரிப்பு, ரஷ்யா மற்றும் சீனா உடன் ஓர் அபாயகரமான மோதலைத் தூண்டிவிடுமென அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்தார். அது ஐரோப்பாவில் உள்ள வாஷிங்டன் கூட்டாளிகளுடன், முதல் சான்றாக ஜேர்மனியுடன், அத்துடன் ஆசியாவில் உள்ளவர்களுடனும், உறவுகளை எரியூட்டுமென அவர் உறுதியாக தெரிவித்தார். ஏற்கனவே பில்லியன் பில்லியன் கணக்கான டாலர்களை அவற்றின் பொருளாதாரங்கள் விலையாக கொடுக்க செய்துள்ள ஒருதலைப்பட்சமான அமெரிக்க தடையாணைகளுக்கோ, "அமெரிக்க காங்கிரஸின் கட்டளைகளுக்கோ" அவர்களில் யாருமே மண்டியிட மாட்டார்கள் என்றும் அவர் அறிவித்தார்.

ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே ஆதாயமளிக்கும் ஒப்பந்தங்களைப் பேரம்பேச தெஹ்ரானுக்கு உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவை அனுப்பி உள்ளன. ஆகக்குறைந்த தடையாணைகளுக்காக கூட பேரம்பேசும் மேசைக்கு அவர்கள் திரும்ப போவதில்லை என்பதை அவர்கள் தெளிவுபடுத்தி உள்ளார்கள்.

அந்த அணுசக்தி உடன்படிக்கையை அமெரிக்கா நிராகரிப்பதென்பது, அமெரிக்கா எந்தவொரு பேரம்பேசும் உடன்படிக்கையையும் மதிக்காது என்ற கருத்துடன் ஈரானையும் மற்றும் சாத்தியமானளவிற்கு ஏனைய நாடுகளையும் வேகமாக அணுஆயுதங்கள் தயாரிக்க உந்திச் சென்று, "ஒரு பெருந்தொல்லையாகஒரு பேரழிவாக இருக்குமென" பேர்லினின் இரண்டாம்நிலை உயர்மட்ட தூதரக அதிகாரி வாஷிங்டனில் எச்சரித்தார்.

ஐரோப்பிய முதலாளித்துவம் அதன் சந்தையில் ஊடுருவ முயற்சிக்கின்ற வேளையில், அமெரிக்க இராணுவம் அதை தாக்கினால், இறுதி விளைவாக நேட்டோ கூட்டணியே கூட மரணிக்கலாம், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே இராணுவ பதட்டங்கள் வெடிக்கலாம்.

தடையாணை முறைக்கு திரும்புமாறு சீனாவை நிர்பந்திக்கும் எந்தவொரு முயற்சியின் விளைவுகளைக் குறித்து கவனம் செலுத்துமாறும் ஒபாமா கேட்டுக் கொண்டார். “அமெரிக்க நிதியியல் அமைப்புமுறையிலிருந்து சீனா போன்ற நாடுகளை நாம் வெட்ட வேண்டியுள்ளது,” என்றார். “நம்மிடமிருந்து கடன்களை வாங்கியவர்களில் பிரதானமானவர்களாக அவர்கள் இருப்பதால், அதுபோன்ற நடவடிக்கைகள் நமது சொந்த பொருளாதாரத்திற்குள்ளேயே கடுமையான சிரமங்களை ஏற்படுத்தும், பின் அதன் போக்கில், உலகின் கையிருப்பு செலாவணியாக டாலர் வகிக்கும் பாத்திரம் குறித்து சர்வதேச அளவில் கேள்விகள் எழும்,” என்றார்.

சீனா உடனான ஓர் இராணுவ மோதல் என்பதே அதுபோன்றவொரு விளைவில் பொருள்தொக்கி நிற்கிறது. அது அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரத்தையும் முழு அளவிலான மந்தநிலைமைக்குள் மூழ்கடிக்குமென ஒபாமா தெரிவித்தார்.

ஆனால் துல்லியமாக அதுபோன்ற போக்கு தான் அமெரிக்க ஆளும் உயரடுக்கின் சக்திவாய்ந்த பிரிவுகளால் திட்டமிடப்பட்டு வருகிறது. அவர்கள் அதை, அதிகரித்தளவில் போரை எதிர்க்கும் அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால் செய்து வருகிறார்கள். ஒபாமா எச்சரிக்கைகளின் உறையவைக்கும் விளைவுகள் வெளிப்படையாக இருந்தாலும், அமெரிக்க ஊடகங்களின் பிரதிபலிப்போ குறிப்பிடத்தக்க அளவிற்கு மௌனமாக இருக்கிறது.

ஏற்கனவே 2016 தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகின்ற நிலையில், ஊழல்மிகுந்து திவாலாகி போய் என்னவாக ஆகிப் போயிருந்தாலும் அமெரிக்க அரசியல் அமைப்புமுறைக்குள் மக்களின் போர்எதிர்ப்பு உணர்வு எந்தவித வெளிப்பாட்டையும் காணவில்லை. செப்டம்பரில் ஈரான் உடன்படிக்கை மீதான காங்கிரஸ் வாக்கெடுப்புக்குச் சிலகாலத்திற்குப் பின்னர், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் இரண்டினது தலையீட்டை விட மிகப்பெரியளவில் இருக்கக்கூடிய போரில் அமெரிக்கா மீண்டுமொருமுறை இறங்குவதைக் காண்கையில் மில்லியன் கணக்கான மக்கள் ஒருவேளை விழித்தெழலாம். ஒட்டுமொத்த பூமியே ஒரு மூன்றாம் அணுஆயுத உலக போரின் விளிம்பில் இருக்கையில், அதனுடன் சேர்ந்து அவர்களது வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கை நிலைமைகளின் ஒரு பொறிவால் திடீரென சூழப்படலாம்.

இந்த பாதையில் உலகை கீழ்நோக்கி உந்திச்செல்ல தயாரிப்பு செய்பவர்களது கொள்கைகள், அமெரிக்க முதலாளித்துவ அமைப்புமுறையின் கடுமையான நெருக்கடியின் ஒரு பிரதிபலிப்பாகும், அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகளாவிய வீழ்ச்சியை இராணுவ வழிவகைகளைக் கொண்டு சரிக்கட்ட வேண்டுமென்ற ஆளும் வர்க்க தீர்மானத்தின் ஒரு பிரதிபலிப்பும் ஆகும். மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் எதிர்ப்பில்லா அமெரிக்க மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்காக ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் நடத்திய அமெரிக்க போர்களின் தோல்வியால் நிலைகுலைந்துபோன அவர்கள், இப்போது இரண்டு எரிசக்தி வளம்மிக்க பிராந்தியங்களை இணைக்கும் நாடான ஈரானை இராணுவரீதியில் கீழ்படிய செய்து அதனினும் மிகப்பெரிய பங்குகளைப் பெறுவதற்கு மற்றொரு பகடைக் காயை உருட்ட விரும்புகிறார்கள்.

அவரது உரையின் மிகவும் கோழைத்தனமான பகுதியில், ஒபாமா, ஈரான் உடன்படிக்கைக்கு அமெரிக்க ஸ்தாபகத்திற்குள் இருக்கும் வெறிபிடித்த எதிர்ப்பை, "நமது நண்பர்கள் மற்றும் கூட்டாளியான இஸ்ரேல் மீதான நேர்மையான உறவு, இந்த உறவைநானும் ஆழமாக பகிர்ந்து கொள்கிறேன்,” என்பதில் ஒப்படைத்தார். இந்த நச்சார்ந்த உறவில் அங்கே எந்த "நேர்மையும்" கிடையாது. அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான மற்றும் ஈவிரக்கமற்ற கூறுபாடுகள் இஸ்ரேல் ஆட்சியின் பக்கம் சாய்வது, அவர்களது பொதுவான போருக்கான ஆதரவுடன் பிணைந்துள்ளது.

இப்போது ஈரானுடன் போர் ஊக்குவிப்பு உள்ளடங்கலாக, ஒபாமாவிற்கு முன்பிருந்தவர் எதை "இருபதாம் நூற்றாண்டின் போர்கள்" என்று குறிப்பிட்டாரோ அதன் தொடர்ச்சி மற்றும் பரவல், அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மையால் தோற்றுவிக்கப்பட்ட உள்நாட்டு வர்க்க பதட்டங்களை அமெரிக்க இராணுவவாதத்தின் முன்பினும் அதிக வெடிப்பின் வடிவத்தில் வெளி நோக்கி திசைதிருப்பி விடுவதற்கான தேவையையே வெளிப்படுத்துகிறது.

இது அமெரிக்க இராணுவவாதம் மற்றும் மூன்றாம் உலக போர் அச்சுறுத்தலை தோற்கடிப்பற்கான ஒரே வழிவகைகளை அதாவது, அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் வர்க்க போராட்டம் மற்றும் சோசலிச புரட்சியின் நனவுபூர்வமான தயாரிப்பை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்பதை மட்டுமே எடுத்துக்காட்டுகிறது.