சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

பாரிசில் ஆகஸ்ட் 15 ம் தேதி பொது கூட்டம்

இலங்கை தேர்தலின் சர்வதேச முக்கியத்துவம் குறித்து பிரான்சில் உள்ள இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்கள் ஆகஸ்ட் 15ம் திகதி பாரிசில் கூட்டமொன்றை நடத்தவுள்ளனர். சோசலிச சமத்துவக் கட்சி பொதுச் செயலாளர் விஜே டயஸ், மற்றும் நுவரெலியா, யாழ்ப்பாண வேட்பாளர்களுக்கு தலைமை தாங்கும் . தேவராஜா, . திருஞானசம்பந்தர் இணையவழி இணைப்பு மூலம் பேசுவர்.

இலங்கை நிகழ்வுகள் அனைத்து தொழிலாளர்களுக்கும் முக்கியமான அரசியல் படிப்பினைகளை கொண்டுள்ளது.

சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் வெளியுறவுக் கொள்கையை பெய்ஜிங்கில் இருந்து தூர விலக்கி வாஷிங்டனை நோக்கித் திருப்பினர். இப்போது, தென் சீனக் கடல் சம்பந்தமாக சீனாவிற்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் இராணுவத் தயாரிப்புகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலைமையில், வாஷிங்டன் பெய்ஜிங்கிற்கு எதிரான தனது மூலோபாய திட்டங்களில் கொழும்பை இன்னும் நெருக்கமாக ஒருங்கிணைக்க செயற்பட்டு வருகின்றது.

ஆளும் தட்டுக்களின் கசப்பான பூசல்களுக்குப் பின்னால், ஆழமடைந்து வரும் பொருளாதார வீழ்ச்சி, எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகளின் போராட்டங்களில் வெடித்துள்ள சமூக கொந்தளிப்பான நிலைமைகள் பற்றிய பீதி காணப்படுகின்றது. ஒட்டு மொத்த ஆளும் வர்க்கமும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளின் பேரில், உழைக்கும் மக்கள் மீது மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை சுமத்த முயற்சிக்கின்றது.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி, தேசியவாதம் மற்றும் ஏகாதிபத்திய யுத்தங்களுக்கு எதிராக ட்ரொட்ஸ்கிச முன்னோக்கில், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கும் அரசியல் சுயாதீனத்திற்கும் பல தசாப்தங்களாக போராடி வந்துள்ளது. இந்த முக்கியமான கூட்டத்தில் பங்கேற்க தொழிலாளர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள், மற்றும் எமது வாசகர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

சனிக்கிழமை, ஆகஸ்ட் 15

ஐரோப்பிய நேரம் :15.00h

இலங்கை   நேரம் :18.30h

Auberge de jeunesse Yves Robert

Esplanade Nathalie Sarraute

Salle Bastille

20 Rue Pajol, 75018 Paris

Métro: La Chapelle (2) ou Marx Dormoy (12)