சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

World capitalism “toboggans toward catastrophe”

உலக முதலாளித்துவம் "பேரழிவை நோக்கி சரிகிறது"

Barry Grey
19 August 2015

Use this version to printSend feedback

செப்டம்பர் 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவின் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், உலக முதலாளித்துவ பொருளாதாரம், மீட்சியடைவதற்கு மாறாக, மந்தநிலைமைக்குள் வீழ்ந்து வருகிறது என்ற அச்சங்கள், சர்வதேச அளவில் ஆளும் வட்டாரங்களுக்குள் அதிகரித்து வருகிறது. வியாபாரம் மற்றும் உற்பத்தியில் ஒரு பொறிவைத் தூண்டிவிட்டு, அடுத்த நிதியியல் நிலைமுறிவு எங்கே ஏற்படும் என்ற அனுமானம் அதிகரித்து வருகிறது.

அதுபோன்றவொரு சம்பவங்களின் திருப்பத்தை எவ்வாறு தடுப்பதென்பதன் மீது அங்கே பொதுவான குழப்பம் நிலவுகிறது.

2008 மந்தநிலைக்குப் பின்னர் உலக பொருளாதார வளர்ச்சியின் "உந்துசக்திகளாக" முன்னர் போற்றப்பட்ட, சீனாவும் மற்றும் "எழுச்சிபெற்று வரும் சந்தை" பொருளாதாரங்கள் என்றழைக்கப்பட்ட நாடுகளுமே, ஒரு புதிய உலகளாவிய நிலைமுறிவைத் தூண்டிவிடும் இடங்களாகி விடுமோ என்று இப்போது பார்க்கப்படுகின்றன.

சீனப் பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்குறைவு மற்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் அதன் பங்குச்சந்தை கொந்தளிப்புக்கு இடையே வந்திருக்கும் அதன் ஆச்சரியமூட்டும் செலாவணி மதிப்பிறக்கம், முன்னர் நினைத்ததை விடவும் அதன் நெருக்கடி மிகவும் ஆழமாக இருக்குமோ என்ற அச்சங்களைத் தீவிரபடுத்தி உள்ளது. இலத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் எழுச்சிபெற்றுவரும் பொருளாதாரங்கள், அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வால் பங்கு பத்திர சந்தைகள் வீழ்ச்சி, செலாவணி வீழ்ச்சி, மற்றும் கடன் சுமைகள் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ள நிலையில், அவை பாரியளவிலான மூலதன வெளியேற்றத்தையும் முகங்கொடுக்கின்றன.

இத்தகைய அபிவிருத்திகள் அனைத்தையும் உலகளாவிய பணச்சுருக்க அழுத்தங்களின் அதிகரிப்பு உந்திச் செல்கிறது, இது எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் தொடங்கி தாமிரம், இரும்பு மற்றும் ஏனைய உலோகங்கள் வரையில், அடிப்படை பண்டங்களது விலை வீழ்ச்சிகளில் பிரதிபலிக்கிறது.

ஐரோப்பா மற்றும் ஜப்பானும் மந்தநிலையில் சிக்கியுள்ளன, அத்துடன் சேர்ந்து அமெரிக்க "மீட்சியோ" பலவீனம் மற்றும் வெறுமை என இரண்டு சேர்ந்திருப்பதை நிரூபித்து வருகின்ற நிலையில், உலக முதலாளித்துவத்தைப் பேரிடரில் இருந்து காப்பாற்றும் வெளிப்படையான நிலைமையில் ஒரு நாடோ அல்லது நாடுகளின் குழுக்களோ இருப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை.

உலக பொருளாதாரம் உயிர்காக்கும் படகுகள் இல்லாமல் ஒரு பெருங்கடல்கப்பலைப் போலுள்ளது,” என்று உலகின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியான HSBC இன் தலைமை பொருளாதார நிபுணர் ஸ்டீபன் கிங் ஒரு சமீபத்திய ஆய்வுக்குறிப்பில் தெரிவித்தார். அவர், பங்குச் சந்தை பொறிவின் அபாயம், ஓய்வூதிய நிதியங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் அவற்றின் கடமைப்பாடுகளைப் பூர்த்தி செய்ய தவறுதல், மற்றும் சீனாவின் மந்தநிலைமை அமெரிக்காவைப் பின்னடைவுக்குள்ளோ அல்லது மந்தநிலைமைக்குள்ளோ இழுக்கும் சாத்தியக்கூறு என அதிகரித்துவரும் மூன்று அபாயங்களைச் சுட்டிக்காட்டுகிறார்.

சீனாவை "மந்தநிலைமையின் அடிகளைத் தாங்கக் கூடிய ஒரு அடிதாங்கியாக, அவ்வாறில்லையென்றால் உலக வளர்ச்சியே மொத்தமாக கவிழ்த்துவிடும் என்பதால், உலகளாவிய பொருளாதாரத்திற்கான அதிர்வு தாங்கியாக,” குறிப்பிட்டு கிங் விவரிக்கிறார். “சீனா இப்போது அதன் உள்நாட்டு சமநிலையின்மையைச் சரிசெய்வதே ஐயத்திற்கிடமின்றி அர்த்தமுள்ளதாக இருக்கும். இருப்பினும், அவ்வாறு செய்கையில், உலகின் ஏனைய பகுதிகள் ஒரு புதிய அதிர்வு தாங்கியைத் தேட வேண்டியிருக்கும். உண்மையில் ஏதாவதொரு பொருளாதாரம் அந்த வேலைக்கு உகந்ததாக இருக்கிறதா என்பது நிச்சயமாக வெளிப்படையாக இல்லை,” என்பதையும் அவர் சேர்த்துக் கொள்கிறார்.

பெருமந்தநிலைமைக்குப் பின்னரில் இருந்து, உலக கடன் 40 சதவீத அளவிற்கு 200 ட்ரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது, இது ஏறத்தாழ உலக பொருளாதார அளவை விட மூன்று மடங்காகும். மேலே தொங்கிக் கொண்டிருக்கும் இந்த பாரிய கடன், அரசாங்கங்கள் மற்றும் மத்திய வங்கிகளது ஒரு புதிய நெருக்கடியைக் கையாள்வதற்குரிய தகைமையைக் கடுமையாக மட்டுப்படுத்துகிறது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், “அடுத்த நெருக்கடிக்கான தளவாடங்கள் அமெரிக்காவிடம் இல்லை" என்று தலைப்பிட்ட ஒரு முதல் பக்க கட்டுரையைப் பிரசுரித்தது. மற்றொரு நெருக்கடி சம்பவத்தில் பெடரல் ரிசர்வ் பொதுக்குழுவால் குறிப்பிடத்தக்களவில் வட்டிவிகிதங்களைக் குறைக்க முடியாது என்று அது குறிப்பிட்டதுடன், டிசம்பர் 2008 க்குப் பின்னரிலிருந்து பூஜ்ஜியத்திற்கு அது அண்மித்தளவில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அது கடன்களால் நிரம்பி இருப்பதாகவும், அதன் இருப்பு நிலை கணக்கு 4 ட்ரில்லியன் டாலருக்கு அதிகமாக நான்கு மடங்காகி இருப்பதையும் குறிப்பிட்டு, ஜேர்னல், அடுத்த மந்தநிலைமை தாக்கினால் அங்கே எந்த இடைமருவிகளும் (buffers) இருக்காது என்று கவலை வெளியிடுகிறது.

சமீபத்திய நாட்களது சம்பவங்களால் ஏதோ கேடு நடக்கவிருக்கிறது என்ற மனோபாவம் தீவிரப்பட்டுள்ளது. கடந்த வாரத்தின் சீன நாணய மதிப்பிறக்கம் போட்டி செலாவணி மதிப்பிறக்கங்கள் மற்றும் வர்த்தக போர் மீதான அச்சங்களைத் தூண்டிவிட்டு, உலக பங்குச் சந்தைகளை வீழ்ச்சிக்கு உந்தி சென்றது. சீனா அதன் செலாவணி விகிதத்தில் ஒரு மிதமான திருத்தம் மட்டுமே செய்ய முயன்றதாக பெய்ஜிங் உத்தரவாதங்கள் வெளியிட்ட பின்னர் தான் நிதியியல் சந்தைகள் ஒரு வாரத்திற்குப் பின் ஸ்திரமடைந்தன.

செவ்வாயன்று, ஷாங்காய் காம்போசிட் குறியீடு 6.2 சதவீத வீழ்ச்சியோடு, சீனப் பங்குச்சந்தை குறியீடுகள் வீழ்ச்சி அடைந்தன. அது ஜூலை 27 இல் ஏற்பட்ட 8.5 சதவீத வீழ்ச்சிக்குப் பிந்தைய மிகப்பெரிய விற்றுத்தள்ளலாக இருந்தது, இதனால், ஆட்சியால் பாரியளவில் நிதி உள்செலுத்தப்பட்டுமே கூட அது ஒரு பொறிவைத் தடுக்காதோ என்ற புதிய கவலைகள் அந்நாட்டின் பங்குச் சந்தைகளுக்குள் தூண்டிவிடப்பட்டன.

சீனாவில் இந்நெருக்கடியின் அரசியல் பரிமாணங்கள் இக்கவலைகளைச் சூழ்ந்திருந்தன. தியன்ஜின் சேமிப்புகிடங்கில் ஏற்பட்ட பயங்கர விபத்துக்குப் பின்னர், கூலிக்கான போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களது அதிகரித்துவரும் காலக்கட்டத்திற்கு இடையே (நான்காண்டுகளுக்கு முன்னரே இதன் விகிதம் அண்மித்தளவில் இருபது மடங்காக இருந்தது), முதலாளித்துவ அரசாங்கங்களும் வங்கியாளர்களும் சீனாவை உலகின் முதன்மை மலிவு-கூலி உற்பத்தி மையமாக மாற்றியதிலிருந்து மேலெழுந்த ஸ்ராலினிச ஆட்சி சிதறவிடுமோ என்று அஞ்சுகின்றனர்.

சீன நெருக்கடி, அதுவே உலக பொருளாதாரத்தின் ஒரு பொதுவான கீழ்நோக்கிய போக்கிற்கு ஒரு வெளிப்பாடாக உள்ளது. இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில், ஜப்பான் [பொருளாதாரம்] சுருங்கியது, ஐரோப்பா மேற்கொண்டும் மந்தநிலைமைக்குள் மூழ்கியது.

மீட்சி" வழங்க பெரிதும் பெருமைபேசிய அமெரிக்கா வெறுமையை நிரூபித்து வருகிறது. கடந்த இரண்டு தினங்களில், பெடரல் ரிசர்வ் நியூ யோர்க் பிராந்திய உற்பத்தி செயல்பாடுகளில் ஓர் கூர்மையான வீழ்ச்சியை அறிவித்துள்ளது, மற்றும் உலகின் மிகப்பெரிய சில்லரை விற்பனை நிறுவனமான வோல்-மார்ட் அதன் இரண்டாவது காலாண்டு இலாபத்தில் ஒரு கூர்மையான சரிவை அறிவித்துள்ளது, அதன் ஆண்டு வருவாய் எதிர்பார்ப்பை குறைத்துக் கொண்டுள்ளது. வோல்-மார்ட்டின் வீழ்ச்சி, சாதனையளவிலான பெருநிறுவன இலாபங்கள் மற்றும் பங்குவிலைகளுக்கு அடியிலிருக்கும் அமெரிக்க தொழிலாளர்களது மோசமடைந்துவரும் நிலைமைகளின் பிரதிபலிப்பை எடுத்துக் கூறுகிறது.

2007-2009 மந்தநிலைமையிலிருந்து "மீட்சி" என்றழைக்கப்படுவது அழுகிய அடித்தளங்களையே அடிப்படையாக கொண்டுள்ளது என்பதையே இத்தகைய அபிவிருத்திகள் எடுத்துக்காட்டுகிறது. நேரடியாக அரசு கையளிப்பு, மத்திய வங்கியின் பணம்-அச்சடிப்பு மற்றும் நடைமுறைரீதியில் இலவச கடன் வழங்கல் ஆகிய வடிவத்தில் முதலில் உலகளாவிய நிதியியல் பிரபுத்துவத்திற்கு பல ட்ரில்லியன் டாலர் பிணையெடுப்பு வழங்கப்பட்டது. இவை நிதியியல் சந்தைகள் உறைந்து போகாமல் வைத்திருந்துடன் ஒரு பாரிய ஊக்கப்பொதி திட்டத்தை நடைமுறைப்படுத்த சீனாவிற்கு உதவியது, அது உலக வர்த்தகத்தை மீட்டுயிர்பித்தது, மற்றும் முன்னேறிய நாடுகளில் உற்பத்திக்கு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட இயக்கத்தை சாத்தியமாக்கியது.

இத்தகைய முறைமைகள், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளை நிரந்தரமாக வெட்டும் நோக்கில், ஈவிரக்கமற்ற சிக்கன நடவடிக்கைகள் மற்றும் கூலி-வெட்டுக்களை உள்ளடக்கி இருந்தன. ஜனாதிபதி ஒபாமாவின் கீழ், மாநிலம், உள்ளாட்சி மற்றும் பெடரல் அரசாங்கம் அனைத்தினது செலவுகளும், பணவீக்கத்திற்கேற்ப சரிசெய்யப்பட்டன, இது ஒப்பிடத்தக்களவில் போருக்கு-பிந்தைய கடந்த விரிவாக்க காலக்கட்டங்களில் செய்யப்பட்ட 23.5 சதவீத சராசரி உயர்வுடன் ஒப்பிடுகையில், 2009 இல் மீட்சி தொடங்கியதற்குப் பின்னரில் இருந்து 3.3 சதவீத அளவாக குறைக்கப்பட்டுள்ளது.

செல்வ வளம் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டத்திற்கு பரந்தளவில் பரிவர்த்தனை செய்யப்பட்டதன் விளைவாக, பெருநிறுவன இலாபங்கள், பங்கு விலைகள், பணக்காரர்கள் மற்றும் பெரும்-பணக்காரர்களின் சொத்துக்கள் அதிகரித்துள்ளன, சமூக சமத்துவமின்மை முன்னொருபோதும் இல்லாத மட்டங்களை எட்டியுள்ளது. ஆனால் இத்தகைய வர்க்க-போர் கொள்கைகள், நெருக்கடியைத் தீர்க்காமல், மந்தநிலையை நோக்கி போக்குகளைப் பலப்படுத்தி உள்ளதுடன், நெருக்கடியைத் தூண்டிய அதே முரண்பாடுகளையே அதிகரிக்க செய்துள்ளன.

இந்த நிகழ்முறை பெருநிறுவன-நிதியியல் உயரடுக்கிற்குள் நிதியியல் ஒட்டுண்ணித்தனம் மற்றும் நேரடியான குற்றங்கள் கூடுதலாக அதிகரிப்பதில் வெளிப்பாட்டைக் காண்கிறது. இந்த மந்தநிலைமையின் இதயதானத்தில் இருப்பது உற்பத்தி முதலீடு குறைந்திருப்பதாகும். கண்ணியமான சம்பளம் வழங்கும் வேலைகளை வழங்குவது ஒருபுறம் இருக்கட்டும், அவற்றினது பெரியளவிலான இலாபங்களை உற்பத்தி சக்திகளை விரிவாக்குவதற்கும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை செயல்படுத்துவதற்கும் பயன்படுத்தாமல், மாறாக, சாதனையளவிலான விகிதங்களில் ஒருங்கிணைப்புகள் மற்றும் பங்கு வாங்கி-விற்றல்களுக்குள் வங்கியாளர்களும் தலைமை செயலதிகாரிகளும் பில்லியன்களை செலவிட்டார்கள்இத்தகைய நிதியியல் தந்திரங்கள் நேரடியாக தொழிலாளர்களது வேலைகள் மற்றும் வாழ்க்கை தரங்களை விலையாக கொடுத்து நிதியியல் செல்வந்த தட்டுக்களின் தனிநபர் செல்வவளத்தை அதிகரிக்கிறது.

செப்டம்பர் 2008 நிதியியல் உடைவு வெறுமனே ஒரு இடைமுறிவு சம்பவமல்ல, மாறாக உலக முதலாளித்துவ அமைப்புமுறையில் ஓர் அடிப்படை உடைவின் தொடக்கம் என்று அந்த நேரத்திலேயே உலக சோசலிச வலைத்தளத்தால் வழங்கப்பட்ட பகுப்பாய்வை, உலக பொருளாதாரத்தின் முட்டுச்சந்தும் மற்றும் ஆளும் வர்க்கங்களது குழப்பங்களும் உறுதிப்படுத்துகின்றன.

முதலாளித்துவ உடைவு ஏகாதிபத்திய போர் உந்துதலை தீவிரப்படுத்துகிறது. திணறிநிற்கும் சந்தைகள் மற்றும் வீழ்ச்சியடைந்துவரும் தேவைகள் என இந்நிலைமைகளின் கீழ், ஒவ்வொரு தேசத்தின் முதலாளித்துவவாதிகளும் அவர்களது எதிர்போட்டியாளர்களை விலையாக கொடுத்து அவர்களது பங்கை அதிகரிக்க முனைகையில், அது மோதல்களைத் தீவிரப்படுத்துகிறது, இறுதியில் அது இராணுவ வன்முறையின் வழிவகைகளைக் கொண்டு தீர்க்கப்படுகின்றது. அதேநேரத்தில், ஆளும் வர்க்கங்கள் உள்நாட்டில் அதிகரித்துவரும் சமூக பதட்டங்களை தேசியவாத தேசவெறி மற்றும் இராணுவவாதத்தின் அடிப்படையில் தணிக்க அவற்றை திசைதிருப்பிவிட முனைகிறது.

இந்த நெருக்கடியை, காட்டுமிராண்டித்தனம் மற்றும் போரின் அடிப்படையில் அல்லாது, முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் தீர்க்க முடியாது. வரலாற்றில் முன்னெப்போதையும் விட மிகவும் ஒன்றோடொன்று பிணைந்துள்ள உலக பொருளாதாரத்தை, எதிர்விரோத தேசிய அரசுகள் மற்றும் உற்பத்தி கருவிகளின் தனிசொத்துடைமைக்குள் பகுத்தறிவார்ந்தரீதியில் அபிவிருத்தி செய்யவியலாது.

1938 இல், கடந்த பெருமந்தநிலைமையின் இடையில் மற்றும் இரண்டாம் உலக போருக்கு முன்னதாக, லியோன் டிரொட்ஸ்கி, இடைமருவு வேலைத்திட்டம் என்ற நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணத்தின் ஆரம்ப பந்திகளிலேயே, இந்த நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கு வழியில்லை என்று கண்டதும் முதலாளித்துவ வர்க்கம் "ஒரு பொருளாதார மற்றும் இராணுவ பேரழிவை நோக்கி கண்மூடிக்கொண்டு சரிகிறது" என்று எழுதினார். முதலாளித்துவத்தின் பாரம்பரிய கட்சிகள் "விருப்பம் முடமாகி போனதன் மீது எல்லைக்கட்டிக் கொண்டு குழம்பிய நிலையில்" இருக்கின்றன என்றவர் உரைத்தார்.

அந்த வார்த்தைகள் இன்றைய சூழலுக்கு முழு பலத்துடன் பொருந்துகிறது. அதேயளவிற்கு ஸ்தாபக வேலைத்திட்டத்தின் அடிப்படை கருத்துருவும் கூடத்தான், அதன் ஆரம்ப வரிகளிலேயே அது தொகுத்தளித்தது: “உலக அரசியல் நிலைமை பிரதானமாக ஒட்டுமொத்தமாக பாட்டாளி வர்க்க தலைமையின் ஒரு வரலாற்று நெருக்கடியால் குணாம்சப்பட்டுள்ளது.”

முதலாளித்துவ நெருக்கடி சர்வதேச தொழிலாள வர்க்கத்தை புரட்சிகர போராட்டத்தினுள் தள்ளுகிறது. தொழிலாள வர்க்கத்தை அரசியல் சுயாதீனத்திற்காக போராட கொண்டு வருவதிலும் மற்றும் அத்தகைய போராட்டங்களுக்குள் உலக சோசலிச புரட்சியின் வேலைத்திட்டத்தைக் கொண்டு வருவதிலும் முக்கிய பிரச்சினையாக இருப்பது, புரட்சிகர தலைமையை, அதாவது நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவை, கட்டமைப்பதேயாகும்.