சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French presidency has “kill list” of people targeted for assassination

பிரெஞ்சு ஜனாதிபதியிடம் படுகொலைக்கு இலக்கு வைக்கப்பட்டவர்களின் கொலைப் பட்டியல்

By Kumaran Ira
19 August 2015

Use this version to printSend feedback

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில், பிரெஞ்சு அரசு இலக்கு வைக்கப்பட்ட தனிநபர்களை சட்டவிசாரணையின்றி படுகொலை செய்ய அதன் இரகசிய நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் இலக்கு வைக்கப்படுபவர்களின் "கொலைப் பட்டியல்" ஒன்றை வைத்திருப்பதாகவும், உயர்மட்ட இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து படுகொலை திட்டங்களை மீளாய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

மரண தண்டனை சட்டவிரோதமானதாக உள்ள ஒரு நாட்டில், இந்த அரசின் படுகொலை திட்டம், அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளை மீறி பிரெஞ்சு முதலாளித்துவ ஜனநாயகத்தின் ஆழ்ந்த சீரழிவை எடுத்துக்காட்டுகிறது. பிரான்சின் முன்னாள் காலனித்துவ சாம்ராஜ்ஜியத்தில் ஏகாதிபத்திய போர்களை தீவிரப்படுத்தல் மற்றும் உள்நாட்டில் ஆழமடைந்துவரும் அரசியல் நெருக்கடி ஆகியவற்றிற்கிடையே, அந்த அரசானது அல்ஜீரிய சுதந்திரத்திற்கு எதிரான போர் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சின் விச்சி ஆட்சியுடன் தொடர்புடைய குற்றத்தன்மையின் மட்டங்களுக்கு செல்கிறது.

பத்திரிகை செய்திகளோ, குறிப்பாக பயங்கரவாதத்துடன் சண்டையிடுவதற்காக என்று கூறப்படும் இராணுவத் தலையீடுகளை தொடங்கியுள்ள ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் பிரெஞ்சு அரசு மேற்கொண்டுள்ள படுகொலை திட்டத்தை வெளியிட்டு, பாராட்டி உள்ளன.

பயங்கரவாதத்தின் மீதான போர், கொல்வதற்கான உரிமம்" என்று தலைப்பிட்ட ஆகஸ்ட் 8 கட்டுரை ஒன்றில், செய்தியிதழ் Le Point குறிப்பிடுகையில், குற்றம் நிரூபிக்கப்பட்டவரைக் கொல்வதற்குரிய உரிமை என்பது ஒருபுறம் இருக்கட்டும், குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தாலே அவரைக் கொல்வதற்குரிய உரிமை பிரெஞ்சு ஜனாதிபதிக்கு இருப்பதாக எடுத்துக்காட்டுகிறது. அது எழுதியது, “சட்டத்தின் ஆட்சிக்கு அதன் இருண்ட பக்கம் உள்ளது. மரண தண்டனை ஒழிப்பு ஒருபுறம் இருந்தாலும், இந்த குடியரசின் ஜனாதிபதி கொல்வதற்குரிய உரிமையைக் கொண்டுள்ளார். இராணுவத்தின் தலைமையான குடியரசு முடியாட்சி, ஒரு மனிதனை வாழும் மண்ணிலிருந்து இரக்கமின்றி கொடுமையானமுறையில் அகற்றவும், தனியே முடிவெடுக்கவும் கட்டைவிரலைக் கவிழ்த்துக்காட்ட முடியும்.

Le Point இதையும் சேர்த்துக் கொண்டது, இது எவ்விடத்திலும் எழுதப்படவில்லை என்பதால், இந்த உரிமை சவாலுக்கிடமின்றி உள்ளது. ஏனென்றால் அது விவாதமின்றி, மேற்பார்வையின்றி அல்லது கட்டுப்பாடின்றி பிரயோகிக்கப்படுகிறது.

பிரெஞ்சு ஜனாதிபதியின் "கொலை பட்டியலைக்" குறித்து இணைய இதழ் Slate குறிப்பிடுகையில்: “இந்த பட்டியல் குடியரசின் ஜனாதிபதி வழக்குவிசாரணை இன்றி அகற்றுவதற்கு அங்கீகாரம் கொடுத்துள்ள பயங்கரவாதிகள் மற்றும் அறிவிக்கப்பட்ட பகைவர்களின் பெயர்களைக் கொண்டுள்ளது. இது, இரகசிய சேவைகளோ அல்லது இராணுவ உளவுப்பிரிவோ அவர்கள் இருக்குமிடத்தை அறிந்ததும் உடனே எந்நேரத்திலும் எச்சரிக்கையின்றி அவர்களை கொல்லலாம் என்பதை அர்த்தப்படுத்துகிறது.”

இந்த வெளியுறவு விவகாரம், பிரான்சில் ஓர் அரசியல் படுகொலை எந்திரத்தை நிறுவுவதில் மற்றும் மேலுயர்த்துவதில் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் உடந்தையாய் இருப்பதைக் குறிக்கிறது. பிரான்சின் வெளி உளவு முகமையான, வெளி பாதுகாப்புக்கான பொது இயக்குனரகத்தை (General Directorate for External Security - DGSE) சேர்ந்த ஒரு சிறப்பு கொலைப்படை இருப்பதை Le Point குறிப்பிடுகிறது.

அது எழுதியது, அதுபோன்ற நடவடிக்கைகளை தொடங்குவதற்குரிய மனித ஆதாரவளங்கள் உள்ளன. சிறப்பு நடவடிக்கைகள் ஆணையகம் (Special Operations Command - COS) போன்ற நுட்பமான படைகளையோ அல்லது DGSE இன் நடவடிக்கை சேவையினது இரகசிய பிரிவுகளையோ மேற்பார்வையிடுகின்ற அவை சங்கிலித்தொடராக அடையாளங்காணக்கூடிய மற்றும் நன்கு-பயிற்றுவிக்கப்பட்ட ஆணையகத்துடன் இணைந்துள்ளன. பிந்தைய அமைப்பிற்குள்ளே, ஏனையவற்றை விட அங்கே இன்னும் அதிக இரகசியமான, நன்கு-மறைக்கப்பட்ட பிரிவு ஒன்று உள்ளது.

ஆல்ஃபா ஏஜென்டுகள்" என்றறியப்படும் இந்த பிரிவை, 1980களில் DGSE இன் செயல்பாடுகளுக்கான அப்போதைய இயக்குனர் ஜெனரல் ஜோன் ஹென்றிச் உருவாக்கினார், முக்கிய நடவடிக்கைகளை நிழலுலகின் திரண்ட இருட்டுக்குள் புதைப்பதற்காக" இது உருவாக்கப்பட்டதாக Le Point குறிப்பிட்டது.

குடியரசின் கொலைகாரர்கள் (The Killers of the Republic) என்ற அவரது சமீபத்திய புலனாய்வு படைப்பில், இதழாளர் வன்சென்ட் நுசில், அடுத்தடுத்துவந்த பிரெஞ்சு அரசாங்கங்களின் படுகொலை திட்டங்களை அம்பலப்படுத்துகிறார். எலிசே ஜனாதிபதி மாளிகை, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் அதன் ஏகாதிபத்திய நலன்களை ஸ்திரப்படுத்துவதற்காக, இரகசியமாக ஓர் அரசு படுகொலை நடவடிக்கைகளை நடத்துகிறது. DGSEக்குள் ஒரு இரகசிய பிரிவு இருப்பதை நுசில் அம்பலப்படுத்துகிறார், அதன் ஏஜென்டுகளும் கமாண்டோக்களும் பெரும்பாலும் மோதல் பிரதேசங்களில் அல்லது அத்தகைய பிரதேசங்களுக்கு அருகில், இலக்கில் வைக்கப்பட்டவர்களை கொலை செய்வதற்கு அல்லது "ஆட்கொலை [Homo] நடவடிக்கைகளுக்காக" பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.

Sud-Ouest க்கு அளித்த ஏப்ரல் பேட்டி ஒன்றில், அவர் விவரிக்கையில்: “1980களின் மத்தியில், அந்த நடவடிக்கை சேவைக்குள்ளே, ஒரு டஜன் அங்கத்தவர்களை கொண்ட ஆல்ஃபா செல் என்ற ஒரு சிறிய-பிரிவு நிறுவப்பட்டது. அவர்கள் கொலைகாரர்கள், 'குடியரசின் கொலைகாரர்கள்'. அவர்களது நடவடிக்கைகளைப் பிரெஞ்சு சேவைகளே திரும்ப கண்டறியவியலாத விதத்தில் அவர்கள் செயல்படுவார்கள். அதேநேரத்தில் அங்கே சிறப்பு படைகளும் அதிகரிக்கப்பட்டது, அவை மாலி போன்ற மோதல் பிரதேசங்களில் செயல்படுகிறது.… இந்த படைகளுக்குள், உயரடுக்கு துப்பாக்கிதாரிகளின் ஒரு சிறு-குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன, இவர்களால் ஒருவரை ஒருசில மணி நேரங்களுக்குள் கண்டறிந்து கொல்ல முடியும்.”

2011 இல் லிபியாவில் கேர்னல் மௌம்மர் கடாபி ஆட்சியைக் கவிழ்க்க நேட்டோ-தலைமையிலான போரின் போது, இத்தகைய சிறப்பு அதிரடிப்படைகள் தான், கடாபியை பிடித்து, சித்திரவதை செய்து, கேள்விமுறையின்றி படுகொலை செய்ய அல் கொய்தா-இணைப்பு கொண்ட இஸ்லாமிய சக்திகளுக்கு உதவின. இது லிபியா விடயத்தில் நடந்தது, சிறப்பு படைகள் பொதுமக்களைப் போல உடையணிந்து செயல்பட்டன. அவர்கள் கடாபி ஆட்சியைக் கவிழ்ப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தனர், என்று நுசில் தெரிவித்தார்.

1954-1962 அல்ஜீரிய போருக்குப் பின்னர், ஹோலாண்டின் சோசலிஸ்ட் கட்சியின் கீழ் தான் இந்த படுகொலை திட்டம் முன்னொருபோதும் இல்லாத மட்டத்திற்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த போரின் போது, பிரெஞ்சு கொலைப்படைகள் தேசிய விடுதலை முன்னணியின் (National Liberation Front - FLN) நூற்றுக் கணக்கான போராளிகளைக் கேள்விமுறையின்றி படுகொலை செய்தன.

ஹோலாண்டின் கீழ், 2012 மற்றும் 2014 க்கு இடையே ஒரு டஜனுக்கும் அதிகமான "ஆட்கொலை நடவடிக்கைகள்" நடத்தப்பட்டன. நுசில் தெரிவித்தார், இன்று போல இந்தளவிற்கு சிறப்பு படைகளும் மற்றும் நடவடிக்கை சேவைகளும் ஒருபோதும் பயன்படுத்தப்பட்டதில்லை. உண்மையில் இது அந்த சூழலின் காரணமாகத் தான். 2012 இல் தொடங்கி, அங்கே மிக ஆக்ரோஷமான கொள்கை இருந்து வருகிறது"

மே மாதம், பிரான்ஸ் மாலியில் இஸ்லாமிக் மஹ்ரெபின் அல் கொய்தா (AQMI) தலைவர் மற்றும் ஒரு துவாரெக் (Tuareg) Abdelkrim al-Targui படுகொலை செய்தது, அவர் வடக்கு மாலியில் நவம்பர் 2013 இல் இரண்டு பிரெஞ்சு இதழாளர்கள் கொல்லப்பட்டதில் சம்பந்தப்பட்டவராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். Le Point க்கு ஒரு அதிகாரி தெரிவித்தார்: “நாம் AQMI துவாரெக் பிரிவின் இதயதானத்தில் படைகளை அபிவிருத்தி செய்ய வேண்டியிருந்தது. அவர்களைப் புரிந்து கொள்ள, சரியான பாதையைக் கண்டறிய, சாதகமான தருணத்திற்காக காத்திருக்க, நமக்கு ஐந்து மாதங்கள் தேவைப்பட்டன அவசியப்படுகிறது.”

ஹோலாண்டின் படுகொலை திட்டம் சோசலிஸ்ட் கட்சியின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தை எடுத்துக்காட்டுவதுடன், 2012 ஜனாதிபதி தேர்தல்களின் இரண்டாவது சுற்றில் ஹோலாண்டுக்கு வாக்களிக்குமாறு அழைப்புவிடுத்த புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) போன்ற போலி-இடது அமைப்புகளின் திவால்நிலைமையையும் அம்பலப்படுத்துகிறது. லிபிய போரை ஆதரித்த அவர்கள், பிரெஞ்சு அரசின் படுகொலை திட்டம் குறித்து முற்றிலுமாக மவுனமாக உள்ளனர்.

பிரான்சில் பரந்தளவிலான இரகசிய அரச படுகொலையின் முக்கியத்துவத்தை, ஆபிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கில் நேட்டோ சக்திகளின் தீவிரமடைந்துவரும் ஏகாதிபத்திய தலையீடுகள் மற்றும் பிரான்சிற்கு உள்ளேயே அதிகரித்துவரும் சமூக பதட்டங்களின் உள்ளடக்கத்தில் மட்டுந்தான் புரிந்து கொள்ள முடியும். பிரெஞ்சு ஆளும் வர்க்கம் அதன் முன்னாள் காலனித்துவ சாம்ராஜ்ஜியத்தை அப்பட்டமான பயங்கரத்துடன் மீள்காலனித்துவப்படுத்த முயற்சிக்கின்ற வேளையில், அது ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்திற்குள் அதிகரித்துவரும் அதிருப்தியைக் கண்டும் அஞ்சுகிறது. இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய பிரெஞ்சு வரலாற்றிலேயே ஹோலாண்ட் நிர்வாகம் தான் மிகவும் மதிப்பிழந்ததாக உள்ளது.

இத்தகைய நிலைமைகளில், அங்கே ஒரு பாரியளவிலான படுகொலை ஒடுக்குமுறை அதிகாரத்துவம் உள்ளது. அதன் இலக்குகள் இஸ்லாமிய சக்திகளை மட்டும் இலக்கில் வைக்காது, லிபிய போர் தெளிவுபடுத்தியதைப் போல அத்தகைய இஸ்லாமிய சக்திகளில் பல, DGSE உட்பட, மேற்கத்திய உளவுத்துறை சேவைகளுடன் நெருக்கமாக தொடர்பு வைத்துள்ளன. அவை பிரெஞ்சு மக்களையும், அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தில் உள்ள எதிர்ப்புக்களையும் எதிர்ப்பை உள்ளடக்குகின்றன.

ஹோலாண்டின் "கொலைப்பட்டியல்" குறித்த செய்திகள், பிரான்சிற்குள்ளேயே அதிகரித்த பொலிஸ் அரசு நடவடிக்கைகளை திணிப்பதோடு பொருந்தி நிற்கிறது, ஒட்டுமொத்த மக்களையும் உளவு பார்க்க உளவுத்துறை மற்றும் பொலிஸிற்கு பாரிய அதிகாரங்களை வழங்கும் ஒரு கண்காணிப்பு சட்டமும் அதில் உள்ளடங்கும்.