சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Panic sell-off on world financial markets

உலக நிதியியல் சந்தைகளில் பீதியுடன் விற்றுத்தள்ளல்கள்

22 August 2015

Use this version to printSend feedback

நாணய மதிப்பிறக்கம் செய்வதென்ற சீனாவின் திடீர் முடிவுடன் கடந்த வாரம் தொடங்கிய உலக பங்குச்சந்தை விற்றுத்தள்ளல், வியாழன் மற்றும் வெள்ளியன்று, கிட்டத்தட்ட-பெரும் பீதியுடனான ஒரு விற்றுத்தள்ளல் அலையில் தீவிரமடைந்தது, ஆசியா மற்றும் ஐரோப்பாவிலிருந்து, அமெரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்கா வரையில் சந்தைகள் இந்த ஆண்டு எதிர்மறை பகுதிக்குள் மூழ்கின.

ஷாங்காய் காம்போசிட் குறியீடு வெள்ளியன்று 4.3 சதவீதம் வீழ்ந்த நிலையில், சீனாவிற்கு வெளியே அமெரிக்காவில் தான் அதிக சரிவுகள் இருந்தன. டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 531 புள்ளிகள், அல்லது 3.12 சதவீதம் குறைந்து, அதன் வாரயிழப்புகளை 1,000 புள்ளிகளுக்கும் அதிகமாக கொண்டு வந்தது. எஸ்&பி 500 மற்றும் நாஸ்டாக் குறியீடுகள் இரண்டுமே, முறையே 3.19 சதவீதம் மற்றும் 3.52 சதவீதம் என இன்னும் அதிக செங்குத்தாக சரிந்தன.

பங்குவிலை நிர்ணய சந்தைகளின் கரைவு (meltdown), உலக பொருளாதாரமே ஒரு புதிய பின்னடைவுக்குள்ளோ அல்லது ஒரேயடியாக மந்தநிலைமைக்குள்ளோ சரிந்து வருகிறது என்ற அறிகுறிகளால் உந்தப்பட்டுள்ளது. வளர்ச்சிக்குறைவின் குவிமையம், உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனாவாகும். அது இத்தசாப்தத்தில் உலக பொருளாதார விரிவாக்கத்தில் மூன்றாவதாக இருந்தது. ஏறத்தாழ அமெரிக்காவின் பங்களிப்பை விட அது இரண்டு மடங்கு, ஐரோப்பா மற்றும் ஜப்பானின் தாக்கங்களை விட அது மூன்று மடங்காகும்.

சீன அரசாங்கம் அந்நாட்டின் பங்குச்சந்தைகளை மீட்க சுமார் 90 பில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது. ஆனாலும் இது, ஜூனில் இருந்து 30 சதவீதத்திற்கு அதிகமான பங்கு விலை சரிவைக் கண்டுள்ள ஒரு நெருக்கடியைத் தடுத்துவிடவில்லை. சீனக் கொள்கை வகுப்பாளர்களின் வெளிப்படையான குழப்பம், தொழிலாளர் கிளர்ச்சிகளின் அதிகரிப்பு மற்றும் தியன்ஜின் கிடங்கு விபத்து போன்ற சம்பவங்களால் எரியூட்டப்பட்ட அதிருப்தி ஆகியவற்றுடன் சேர்ந்து, ஆட்சியின் அரசியல் ஸ்திரப்பாடு குறித்து பெருநிறுவன பொதுக்குழுக்களிலும், ஏகாதிபத்திய அரசாங்கங்களிலும் கவலைகளைத் தூண்டிவிட்டு வருகிறது. வறுமை-மட்டத்திலான கூலிகள் மற்றும் சீனத்தொழிலாளர்களை தீவிரமாகச் சுரண்டல் இவற்றின் அடிப்படையில்  மிகப்பெரும் இலாபங்களை உறுதிப்படுத்த இவர்கள் அந்த ஆட்சியைத் தான் நம்பியிருக்கிறார்கள்.

உற்பத்தி, ஏற்றுமதி-இறக்குமதிகள், வியாபார முதலீடு மற்றும் உற்பத்தி விலைகளின் புள்ளிவிபரங்களில் பிரதிபலித்த சீன வளர்ச்சி சரிவு, மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்காக சீன சந்தையைச் சார்ந்திருந்த "எழுச்சிபெற்றுவரும் சந்தைகள்" என்றழைக்கப்படும் பொருளாதாரங்களில் ஓர் அண்மித்த-பொறிவுக்கு எரியூட்டி வருகிறது. கடந்த வாரம் ரஷ்யா, துருக்கி, பிரேசில், தென்னாபிரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் பங்கு விலைகள் மற்றும் நாணய விகிதங்களும் கூடுதல் வீழ்ச்சியைக் கண்டன. இந்த பொருளாதாரங்கள் ஒரு பாரிய மூலதன வெளியேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளன, இதனால் கடன் கடமைப்பாடுகளை அவற்றால் பூர்த்தி செய்யவியலுமா என்ற ஐயத்திற்கு ஆளாகியுள்ளன.

பணச்சுருக்க அழுத்த அதிகரிப்பினது திட்டவட்டமான வெளிப்பாடு, பண்டங்களது சந்தைகளில் நிகழ்ந்துவரும் வீழ்ச்சியில் தெரிகிறது. எண்ணெய், நிலக்கரி மற்றும் பல தொழில்துறை உலோக விலைகளிலிருந்த மாதக்கணக்கிலான வீழ்ச்சி வெள்ளியன்று தீவிரப்பட்டது. வீழ்ச்சியடைந்துவரும் பண்டங்களது விலைகள் தேவைகள் குறைவதில் பிரதிபலிக்கிறது, அது, மறுபுறம், மிதமிஞ்சிய சந்தைகளோடு சேர்ந்து, உற்பத்தி மற்றும் உற்பத்தி முதலீட்டில் வீழ்ச்சியை பிரதிபலிக்கிறது.       

முதலாளித்துவ சந்தையின் அராஜகத்தை, எரிசக்தித்துறை சந்தைகளது குழப்பநிலையில் தெள்ளந்தெளிவாக காணலாம். மந்தநிலை, பாரிய வேலைநீக்கங்கள், வர்த்தக மற்றும் செலாவணி போர்களுக்கு ஊட்டமளித்து, எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இருப்பினும் அமெரிக்கா உட்பட எல்லா பிரதான எண்ணெய் உற்பத்தியாளர்களும், தற்போதைய அளவிலேயே அல்லது இன்னும் அதிகமாகவே கூட எண்ணெய்களை தொடர்ந்து வெளியிலெடுத்து வருகிறார்கள், இது உலக சந்தைகளில் இன்னும் கூடுதலாக மிதமிஞ்சி உட்செலுத்தப்படுகிறது. சுருங்கிவரும் சந்தைக்குள் அதிகபட்ச விற்பனை மற்றும் இலாபங்களைப் பெறுவதற்காக அவை அவ்வாறு செய்கின்றன, அதுவும் வெறுமனே பெருநிறுவன இலாப விடயமாக மட்டுமின்றி, மாறாக போட்டி முதலாளித்துவ தேசிய அரசுகளின் வெவ்வேறு புவிசார் மூலோபாய நலன்களுக்காகவும் அவ்வாறு செய்கின்றன.

வெள்ளிக்கிழமை விற்றுத்தள்ளலுக்கான பிரதான தூண்டுபொருள், சீன உற்பத்தி கூடுதலாக குறையுமென்று குறிப்பிட்ட ஒரு செய்தியாகும். கெய்க்சின் சீன உற்பத்தித்துறை PMI  குறியீடு (Caixin China Manufacturing Purchasing Managers’ Index) ஆரம்பத்தில் மார்ச் 2009க்குப் பிந்தைய - அதாவது செப்டம்பர் 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவால் தூண்டிவிடப்பட்ட பொருளாதார நெருக்கடியின் உச்சத்தில் இருந்ததை விட — அதன் மிகக் குறைந்த அளவிற்கு சரிந்தது.

ஜப்பான் இரண்டாம் காலாண்டிற்கான அதன் பொருளாதார உற்பத்திஅளவு  சுருங்கியிருப்பதைச் சமீபத்திய நாட்களில் அறிவித்தது, யூரோ மண்டலம் நத்தை வேகத்தில் ஒரு வளர்ச்சியை அறிவித்துள்ளது.

உலக பொருளாதாரத்தில் "பிரகாச இடமாக" கூறப்படும் அமெரிக்காவின் நிலைமை அவ்விதத்தில் இல்லை என்பதோடு, அமெரிக்க வளர்ச்சி மூன்று தசாப்தங்களுக்கு அதிகமான காலத்தைவிட அதன் குறைந்தபட்ச மட்டத்தில் உள்ளது. 1980களுக்குப் பின்னர் கூலிகள் மிகமிக மெதுவான வேகத்தில் உயர்ந்துள்ளன, உற்பத்தித்திறனோ ஸ்தம்பித்துள்ளது. மில்லியன் கணக்கானவர்கள் வேலை தேடுவதையே நிறுத்திவிட்டனர், இன்னும் மில்லியன் கணக்கானவர்கள் பகுதிநேர வேலைகளை மேற்கொள்ள நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இன்று அமெரிக்காவில் முழுநேர வேலைகளின் எண்ணிக்கை 0.7 சதவீதம், அல்லது 822,000 ஆகும், இது எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விடவும் மிகமிக குறைவாகும்.

இத்தகைய அபிவிருத்திகள் 2007-2009 மந்தநிலைமையிலிருந்து மீட்சி என்று கூறப்பட்டதன் வெறுமையான குணாம்சத்தை அம்பலப்படுத்துகிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் பொதுக்குழுவும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் மற்றும் ஜப்பானின் மத்திய வங்கிகளும், வங்கியாளர்கள் மற்றும் நிதிய செல்வந்த தட்டுக்களது மீட்சிக்கும் மற்றும் அவர்களது செல்வவளத்தை அதிகரிப்பதற்கும் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை நிதியியல் சந்தைகளுக்குள் பாய்ச்சி இருந்தன, ஆனால் அதேவேளையில் முதலாளித்துவ அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மற்றும் ஊதிய வெட்டுக்களைத் திணித்தன.

இந்த பொருளாதார சூறையாடல் நிகழ்வுபோக்கிற்கான பிரதான இயங்குமுறை (mechanism) பங்குச்சந்தையாக இருந்துள்ளது. மார்ச் 2009 இல் அமெரிக்க பங்கு விலைகள் அவற்றின் மிகக்குறைந்த அளவிலிருந்து மூன்று மடங்காயின, ஐரோப்பாவிலோ உற்பத்தி முதலீடு வீழ்ச்சி மற்றும் நிஜமான பொருளாதார ஸ்தம்பிதம் ஆகிய உண்மைக்கு இடையிலும் பங்கு மதிப்புகளோ சாதனையளவிற்கு உயர்ந்தன.

பைனான்சியல் டைம்ஸில் செவ்வாயன்று வெளியான ஒரு கருத்துரையில், சுவிட்சர்லாந்தை மையமாக கொண்ட Pictet Wealth Management நிறுவனத்தின் சொத்து ஒதுக்கீட்டுத்துறை தலைவர் கிறிஸ்டோப் டோனே, அரசாங்கங்களும் மத்திய வங்கிகளும் எந்த வழிவகைகளைக் கொண்டு அவற்றின் பங்கு விலைகளை ஊதிப்பெரிதாக்கின, நிஜமான பொருளாதாரத்தில் மெதுவான வளர்ச்சி அல்லது வளர்ச்சியே இல்லாததற்கு இடையிலும், நடைமுறைரீதியில் பெருநிறுவனங்களின் உண்மையான வருவாய் வளர்ச்சியைக் குறிப்பிடாமல் (அது "மிக குறைவாக இருந்ததாக" அவர் குறிப்பிட்டார்), அசாதாரணமான விதத்தில் பங்கு விலைகளை எந்த வழிவகைகளைக் கொண்டு உயர்ந்த மட்டத்தில் வைத்திருந்தன என்பதை வர்ணித்தார்.

“சமச்சீரற்ற சொத்து விலையை இலக்கில்வைத்தல்" என்ற துணை தலைப்பின் கீழ், அவர் பூஜ்ஜியத்திற்கு-அண்மித்த வட்டிவிகிதங்கள் மற்றும் மத்திய வங்கியின் "பணத்தை அச்சடிக்கும்" கொள்கை (quantitative easing) ஆகியவற்றையும் சேர்த்திருந்தார். இந்த கொள்கைகள் பங்கு விலைகளுக்கு ஒரு தளத்தைக் கொடுக்க அமைந்திருந்தனவே ஒழிய, ஒரு வரம்பை வழங்கவில்லை (இதனால் தான் சமச்சீரற்றத்தன்மை) என்றவர் விவரித்தார். அதன் நோக்கம் ஒரு "செல்வவள விளைவை", அதாவது பெருநிறுவன-நிதிய பிரபுத்துவத்தின் செல்வவளத்தை ஊதிப்பெரிதாக்குவதற்காக இருந்தது.

பெருநிறுவன பொதுக்குழுக்களில் தலைதூக்குகிற பீதி, பெரிதும், பூகோள மந்தநிலை அழுத்தங்களது தாக்கத்தின் கீழ் இந்த இயங்குமுறை உடைந்து விடக்கூடுமென்ற அச்சத்தில் வேரூன்றியுள்ளது.

2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவிற்குப் பின்னரிலிருந்து முதலாளித்துவ வர்க்கம் பின்பற்றிய எல்லா கொள்கைகளும், பொறிவுக்கும் இட்டுச் செல்கின்ற முரண்பாடுகளைக் கடந்துசெல்வதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தன, ஆனால் அவை பெருநிறுவன-நிதிய உயரடுக்கை மேற்கொண்டு செல்வசெழிப்பாக்க உதவின. இந்நெருக்கடி தொழிலாளர்களது வாழ்க்கை நிலைமைகள் மற்றும் வேலையிட நிலைமைகளைப் பாரியளவில் குறைப்பதற்காக பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது, அதற்காக ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்க எதிர்ப்பைத் தனிமைப்படுத்தி, சிதறடித்து, ஒடுக்க, தொழிற்சங்கங்கள் மற்றும் அவர்களது போலி-இடது கூட்டாளிகளைப் பயன்படுத்துகிறது. இருப்பினும் இக்கொள்கைகள் பொருளாதார நெருக்கடியின் அடியிலுள்ள முரண்பாடுகளைத் தான் தீவிரப்படுத்தி உள்ளது.

பங்குச்சந்தையில் என்ன தான் குறுகியகால திருப்பம் இருந்தாலும் — இவ்வார விற்றுத்தள்ளல் ஒரு முழு அளவிலான பொறிவைத் தொடங்கி வைத்தாலும் சரி அல்லது நிதியாளர்களது அரசாங்கங்கள் ஒரு தற்காலிக மீள்-உயர்வைக் கொண்டு வந்தாலும் சரி — உலக சோசலிச புரட்சியின் வெற்றிக்கு அப்பாற்பட்டு அங்கே இந்நெருக்கடிக்கு எந்தவித முற்போக்கான தீர்வும் இல்லை. இத்திருப்பம், தொழிலாள வர்க்கம் அதன் புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதற்குரியதாகும்.